04/04/2021
தாவரங்களுக்கும் அக்குபஞ்சரால் அதிக பலன் அதிக விளைச்சல் நிச்சயம் ! (கே.எம்.ஆர்)
இதுவரை மனிதர்களுக்கு தான் அக்குபஞ்சர் மருத்துவம் செய்யப்படுகிறது. அதனால் அனைத்து நோய்களும் குணமாகிறது என்பதை நாம் அறிவோம் .
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தாவரங்களுக்கும் அக்குபஞ்சர் மருத்துவம் பயன்படுகிறது. நல்ல பலன் கொடுக்கிறது. பழ மரங்களில் அதிக விளைச்சல் கொடுக்கிறது. 7-8 வருடம் வளர்ந்து பலன் கொடுக்கும் மரங்கள் 4-5 ஆண்டுகளிலேயே அதிக விளைச்சல் கொடுக்கிறது. விரைவாக உயரமாக மரங்கள் வளர்ந்து விடுகின்றன என்ற செய்திகள் நமக்கு புதிராக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை.
அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் கடந்த 25 ஆண்டுகளாக மனித இனத்துக்கு பெரியவர், சிறியவர், ஆண், பெண், குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவம் செய்து வருகிறார். சகல நோய்களுக்கும் வைத்தியம் செய்து குணமாக்குகிறார்.
இன்று டாக்டர் தாவரங்களுக்கும் குறிப்பாக பல செடிகளுக்கும் அக்குபஞ்சர் வைத்தியம் செய்து நல்ல விளைச்சல் கொடுக்கச் செய்துள்ளார். இந்த முறை அவர் வைத்துள்ள பெயர் அக்ரி பஞ்சர் எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா ?
அக்குபஞ்சர் தொழில்நுட்பத்தை கையாண்டால் பலவகை பழ மரங்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என்பதை டாக்டர் நிரூபித்துள்ளார். இந்த அக்கு தொழில்நுட்பத்தை செய்து பார்த்து பல விவசாயிகள் பல மரங்களில் அதிக விளைச்சல் எடுத்துள்ளார்கள். மரங்களை தாக்கும் நோய்களில் ஒன்று வாடல் நோய் அந்த நோய் தீர மரத்தின் மையப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அந்த நோய் தீருகிறது.
மனிதர்களுக்கு பெரிதும் பயன்படும் அக்குபஞ்சர் தற்போது விவசாயத்துக்கும் பயன்படுகிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது அல்லவா? எளிதான இந்த மருத்துவ முறையால் மகசூல் அதிகரிக்கிறது என்ற செய்தி ஒரு புதிய பசுமை புரட்சி ஊசியின் மறுமுனையில் உள்ள மெல்லிய காப்பர் காயில் ஒயர் மூலம் வான் வெளியில் உள்ள காந்த சக்தி (காஸ்மிக் எனர்ஜி) இயற்கையான முறையில் கிடைக்கப்பெற்று மரத்தின் வளர்ச்சி அபரிமிதமாக அதிகரிக்கிறது.
இதனால் மரம் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடைந்து காய்க்க தொடங்கி விடும். மேலும் அதன் பருவ காலங்களில் மட்டும் பூக்கும் பூக்கள் அனைத்து பருவ காலங்களிலும் பூத்து குலுங்கும். இதன் மூலம் அனைத்து பருவங்களிலும் பழ மகசூல் கிடைக்கிறது.
இயற்கையான முறையில் சக்தி பெறுவதால் பழங்கள் அனைத்தும் அதிக சத்து உள்ளதாக இருக்கும். விவசாயிகளுக்கும் அக்குபஞ்சர் ஊசி கிடைக்கவில்லை என்றால் இரண்டு அங்குலம் உள்ள இரும்பு அணியில் மெல்லிய காப்பர் காயில் ஒயரை ஒரு முனையில் சுற்றி மரங்களின் இரண்டு கிளைகள் பிரியும் இடங்களில் சொருக வேண்டும்.
இதன்மூலம் இயற்கையாக மரங்களுக்கு காந்த சக்தி கிடைத்து விடுகிறது. அக்ரிபஞ்சர் (அதாவது அக்குபஞ்சர்) மூலம் நல்ல பலன் அடைந்து ஒரு விவசாயி சொல்வதைக் கேட்போம்.
அவர் பெயர் கேசவன் வயது 23 திருக்கழுக்குன்றம் ஒன்றியம் விட்டிலாபுரம் ஊராட்சி இளையனாரா குப்பம் பகுதியில் வசிக்கிறார். இவர் தனது தோட்டத்தில் வளர்ந்துள்ள பல வகை மரங்களில் அக்குபஞ்சர் நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் அதிக பலன் பெற்றுள்ளார். அவர் மேலும் சொன்னது !..
பலவகை விவசாயத்தில் அதிக மகசூல் தரும் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ மரங்கள் அதன் பருவ காலங்களில் மட்டும் மகசூல் தரக்கூடியவை. அக்குபஞ்சர் முறையை பயன்படுத்துவதின் மூலம் அனைத்து பருவங்களிலும் மகசூல் பெறலாம்.
காஸ்மிக் எனர்ஜி:
உதாரணத்திற்கு சப்போட்டா மரத்தில் அக்குபஞ்சர் ஊசியை மரத்தில் இரண்டாகப் பிரியும் கிளைகளுக்கு இடையில் சொருக வேண்டும். மரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊசிகளை பயன்படுத்தலாம். அக்குபஞ்சர் தொழிலின் தொழில்நுட்பத்தை மா, சப்போட்டா, கொய்யா, சாத்துக்குடி மரங்களுக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு மரம் செடி கொடிகளுக்கும் அக்குபஞ்சர் ஊசிகளை பயன்படுத்தி அதிக காய்ப்பு அதிக விளைச்சல் அபரிமித மகசூல் பெறுவது உறுதி. இந்த இயற்கை மருத்துவமாம் அக்ரி பஞ்சரை விவசாயிகள் கடைபிடித்தால் சாகுபடி செலவு குறையும் குறுகிய காலத்தில் அதிக விளைச்சலும் வருமானமும் பெறலாம். இந்த அக்ரிபஞ்சரை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் ஓர் புதிய பசுமைப் புரட்சியை உருவாக்கும் டாக்டர் சங்கருக்கு விவசாயிகள் அனைவரும் மிகவும் கடமைப்பட்டவர்கள் ஆவர் .
10 லட்சம் மக்கள் நம்பும் பாரம்பரிய மருத்துவர் சங்கர் !
வலியின்றி, தரமான மருத்துவத்திற்கு அணுகவும்
Hi Cure Acupuncture Centre,
32, Thanikachalam Road,
Opp. Hindi Prachar Sabha,
T.Nagar, Chennai – 17.
044 2432 3899
9655009898