Tenth sense health group

Tenth sense health group Diet Therapy, Home Remedies, Yoga & Naturopathic Consulting, Guidance and Counseling, Health Tips and Beauty Tips

26/06/2022

மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் சார்ந்த புற்று நோய் என்னும் பிரச்சினை வராது!!🐝🐝

புற்று நோயை தடுப்பதில் குடல் சுத்தமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது
அந்த காலத்தில் மாதமொருமுறை விளக்கெண்ணெயை குடித்து நச்சுக்களை வெளியேற்றினார்கள்.

இதனால் குடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் , ஆற்றல் மிக்கதாகவும் இருந்தது.

ஆனால் இன்றைய நாட்களில் குடல்களில் நச்சுக்கள் தேங்கி அதிகப்படியான ஃப்ரீ ரேடிகள்ஸ் உற்பத்தியாகி அவை சாதாரண செல்களை தாக்கி புற்று நோயை வரவழைக்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம் நாம் உண்ணும் கண்ட ரசாயன மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள்தான்.

அவற்றை நீங்கள் களைந்துவிட்டால் புற்று நோய் , அப்பண்டிஸ் போன்ற நோய்களை தடுக்கலாம்.

அவற்றை நீக்குவது பற்றிதான்இந்த கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்.

கற்றாழை மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அற்புத மூலிகை என சித்தர்கள் விவரிக்கிறார்கள்.

இதனை சாப்பிடும் முறை மிக முக்கியமானது .

அதன் இலையை கிழித்து உள்ளிருக்கும் ஜெல்லை அப்படியே சாப்பிடக் கூடாது.

அதன் பச்சை நிறம் போக, நன்றாக கழுவி அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.

கற்றாழையை பயன்படுத்தி எப்படி உங்கள் குடலை சுத்தப்படுத்தலாம் என பார்க்கலாம்.

இந்த ஜூஸை மாதம் ஒரு முறையென தொடர்ந்து 1வாரம் குடித்தால் உங்கள் குடல்கள் நன்றாக செயல்படும்.

இந்த காலத்தில் அதிகம் பயமுறுத்தும் புற்று நோய் உங்களை அண்டாது.

#தேவையானவை :🌳
கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
நீர் - 1/2 கப்

கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி அதனுடன் நீர் மற்றும் தேனை கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

இதனை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடிக்க வேண்டும்.

இது நச்சுக்களை மிக சுத்தமக வெளியேற்றுகிறது.

அதோடு அதிலுள்ள டயடிக் நார்ச்சத்துக்கள் வயிற்றிலுள்ள பாதிப்படைந்த செல்களுக்கி நிவாரணம் அளிக்கிறது.🌳

#தேவையானவை :
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு வடிக்கட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் 8- 10 நாட்கள் குடிக்க வேண்டும்.

இந்த கலவையிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல்களில் தங்கியிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து புற்று நோய் வராமல் காக்கும்.🌳

#தேவையானவை :
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழம் - 1
நீர் - 1 அப்
இஞ்சி - 1 டீஸ் பூன்

மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நீர் சேர்த்து விருப்பமிருந்தால் இஞ்சியை கலந்து மிக்ஸ்யில் சுழற்றவும்.

பின்னர் அதனை வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.

இப்படி செய்தால் பாதிக்கப்பட்ட குடல்களும் பலம் பெற்று புதிதாய் வேலை செய்யும்.🌳

#தேவையானவை
அன்னாசி - 3 துண்டுகள்
வெள்ளரிக்காய் - அரை
கற்றாழை - 3 டேபிள் ஸ்பூன்
நீர் - 1 கப்

முதலில் அன்னாசி மற்றும் வெள்ளர்க்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கற்றாழை மற்றும் நீர் கலந்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸை 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஆரோக்கியத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் .

26/06/2022

ஐரோப்பாவின் நிர்ப்பந்தமும், நமது முட்டாள்தனமும்.

1. எட்டு மாதக் குளிர் காரணமாக கோட் சூட் அணிவது அவர்களின் நிர்ப்பந்தம்,
கடும் வெப்ப காலத்திலும் திருமணம் நாளன்று கோட் சூட் அணிந்து, கோட் சூட்டோடு ஊர்வலமாக அழைத்துச் செல்லுவது,
-நமது முட்டாள்தனம்....

2. Fresh உணவு கிடைக்காததால், அழுகிய மாவில் இருந்து பீட்சா, பர்கர், நூடுல்ஸ் சாப்பிடுவது ஐரோப்பாவின் நிர்ப்பந்தம். கல்யாண விருந்து போல மெனு வைத்து கொண்டும் ₹ 400/-க்கு ரொட்டி (பீட்சா) சாப்பிடுவது,
- நமது முட்டாள்தனம்....

3. Fresh உணவு அனைவருக்கும் தினமும் கிடைக்காத காரணத்தாலும், ஃப்ரீசரைப் பயன்படுத்துவது ஐரோப்பிய நிர்ப்பந்தம்.
தினமும் மார்கெட்டில் ஃப்ரெஷ் காய்கறிகள் கிடைத்தும், அதை வாங்கி வந்து ஒரு வாரமாக ஃப்ரீசரில் அடுக்கிய காய்கறிகளைச் சாப்பிடுவது,
-நமது முட்டாள்தனம்....

4. மூலிகைகள் பற்றிய அறிவு இல்லாததால், மிருகங்களின் சதையில் இருந்து மருந்து தயாரிப்பது அவர்களின் நிர்ப்பந்தம்.
அதே வேளையில் சித்தமருத்துவம், ஆயுர்வேதம் போன்ற சிறந்த பின்விளைவற்ற பாரம்பரிய மருத்துவம் நம்மிடம் இருந்தும், இறைச்சி மருந்துகளை உபயோகிப்பது,
-நமது முட்டாள்தனம்....

5. லஸ்ஸி, பால், ஜூஸ் போன்றவை இல்லாததால், சர்க்கரை கரைசலை குளிர்பானம் என்ற பெயரில் குடிக்க வேண்டிய நிலை அவர்களின் நிர்ப்பந்தம்.
பலவகையான இயற்கை பானங்கள் இருந்தும், குளிர்பானம் என்ற விஷத்தைக் குடித்து நம்மை நாமே நவீனமாகக் கருதுவது சரியா?

உடல் நலம் காப்போம்.

25/05/2022

40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!!

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..

2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.

3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.

4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.

6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.

8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.

9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

10. பாடல்களின் வரிகள் புரிந்தன.

11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.

14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.

15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.

17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.

18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.

23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.

அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது

இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது என்பது நூறுதச உண்மை...

25/05/2022

இந்த உலகில் நம் அனுமதியின்றி யாராலும் நம்மை காயப்படுத்தவோ மகிழ்விக்கவோ இயலாது...

உங்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் கைகளில் தான் உள்ளது...

எது நடந்தாலும் உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள் வாழ்க்கை வரமாகும்....

நம் பலம் என்னவென்று நமக்குத் தெரிந்திருந்தால் போதும். தோல்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

வாழ்வில் தோல்வியடைந்தால் "நான் பலசாலி ஆனால் தோற்று விட்டேன்" என்று யாரிடமும் நீங்கள் நிரூபிக்க தேவையில்லை.
அதனால் எந்த பயனும் இல்லை.

வெளியுலகத்தில் தோற்றாலும் உள்ளே சிரிக்க முடிந்தால் நாம் என்றும் வெற்றியாளர்களே...

அப்பொழுது நாம் தான் உலகிலேயே பலசாலி.. நம்மை வெல்ல யாருமில்லை.

25/05/2022

இல்லறம்_நன்றானால் துறவறம் தேவையில்லை .

இல்லற வாழ்விற்கு தேவையான சில அடிப்படை தகுதிகள்...

1) இரண்டு வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர்கள், இணைந்து ஏற்படுத்தும் மிக முக்கியமான சமூக கட்டமைப்பு, குடும்பம்.

2) மனபொருத்தம் அமையாவிட்டால், எத்தனை பொருத்தங்கள் பார்த்தும் பிரயோசனமில்லை.

3) வேறு வழியில்லை என்பதாலோ, விருப்பத்தை மீறியோ, கட்டாயப் படுத்தி, நிர்பந்தத்தால் நடக்கும் திருமணம் வெறும் சடங்கு மட்டுமே.

4) கணவன் மனைவி உறவு என்பது நட்பின் உச்சம் மட்டுமல்ல தியாகத்தின் உச்சமும் கூட.

5) உங்கள் வாழ்கையில் ஒரு பகுதியை வாழ்கை துணைக்கு ஒதுக்க முடியாவிட்டால், அல்லது நீங்கள் அதற்கு தயாராக இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

6) பணம், பொருள், சுகபோக வாழ்கை என்பதை மட்டும் எதிர்பார்த்து நடக்கும் திருமணம் கடைசியில் சங்கடத்தில் தான் கொண்டு சென்று நிறுத்தும்.

7) குடும்பம் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின், தனிப்பட்ட சுக துக்கம் என்பதை, தேவைகளை தானாக குறைத்துக் கொள்ள தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.

உங்களது தனிப்பட்ட சுகங்களை, நட்புகளை, உறவுகளை, வாழ்கை துணையால், ஏற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

9) அவ்வாறு இல்லாத சுகங்களை, பழக்கங்களை, நட்புகளை, உறவுகளை நீங்கள் விட்டு கொடுக்க தேவையான மன உறுதி இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

10) எந்த நிலையிலும், சூழ்நிலையிலும் வாழ்கை துணையை விட்டுக்கொடுக்க, தரம்தாழ்த்த, அனுமதிக்கவே கூடாது. எனக்கு எனது வாழ்கை துணை எப்போதும் துணை நிற்க்கும், போராடும், என்ற நம்பிக்கை தான் குடும்பத்தின் ஆணிவேர்.

11) எக்காரணம் கொண்டும் சந்தேகம் என்ற அரக்கனை மட்டும் குடும்ப உறவுக்குள் அனுமதிக்கவே கூடாது. “சந்தேகம்” என்ற இந்த நோய், மிக பெரிய குடும்ப கொலையாளி.

12) தவறு செய்வது மனித இயல்பு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தவறை கண்டிக்கும் உரிமையும் வாழ்கை துணைக்கு உண்டு.

13) குடும்பத்தின் நலன் கருதி, வாழ்கை துணை எடுத்து சொல்லும் யோசனைகளை, புறம்தள்ளாதீர்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்றோ, உனக்கு என்ன தெரியும் என்றோ, அகம்பாவம் வேண்டாம்.

14) தயவு செய்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை, யாரிடமும், எக்காரணம் கொண்டும் விளம்பர படுத்தாதீர்கள். உங்களுக்குள் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்றால், தகுதியான, பக்குவம் நிறைந்த குடும்ப பெரியவர்கள் அல்லது இதற்காகவே தகுதி பெற்ற நபர்களிடத்தில் மட்டுமே அறிவுறை கேட்க வேண்டும்.

15) புற அழகு மயக்கம், வெளி வேஷ மோகம், நானா அல்லது நீயா என்கிற போட்டி, சதி, சுயநலம், சுய கௌரவம் எல்லாம் வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட தெரிந்து இருக்க வேண்டும்.

16) உங்களை எப்படி உங்கள் வாழ்கை துணை நடத்த வேண்டும் என சொல்லி கொடுப்பதை விட நீங்கள் அதுபோல் வாழ்ந்து காட்டி உதாரணமாக இருந்து கற்றுக்கொடுங்கள்.

17) உங்கள் பெற்றோர்களையும், உடன்பிறந்தோரையும் உங்கள் வாழ்கை துணை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும், அதே போல் அவர்களது குடும்ப உறவுகளை நீங்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நடிப்பிற்க்கும், கள்ளத்தனத்திற்கும், நாடகத்திற்கும் குடும்பத்தில் இடமில்லை.

வாழ்கையில், குடும்ப பாரத்தை ஏற்க இருப்பவர்களும், ஏற்கனவே அதில் உழன்று கொண்டிருப்பவர்களும் என அனைவரும் இந்த பொறுப்புக்களை உணர்ந்து உண்மையாக, உறுதியாக, நிலையாக இருக்க தெரிந்தால், குடும்பத்தில் அமைதியும், இன்பமும், வருங்கால சந்ததியினருக்கு தேவையான அடிஸ்தானமும், அமைத்திட முடியும் என்பது உறுதி

25/05/2022

எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது.

ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கு எல்லோருடைய மனதிலும் உண்டு.

ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான்.

அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டணம் தான் அதிகம்.

சந்தோசத்தில் கை குலுக்கும் ஐந்து
விரல்களை விட, கஷ்டத்தில் கண் துடைக்கும் ஒரு விரலே மேலானது.

சில நேரம் கண்ணீரை துடைக்க யாரையோ தேடுகிறோம் நம்மிடம் விரல்கள் இருப்பதை மறந்து.

24/05/2022

*மிகவும் அருமையான பதிவு*

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்கு பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன்
நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்,
இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.

சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக் கொள்கிறார்கள்.

ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்”
என்றான் அந்த சிறுவன்.

ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக

“மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.

முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.

ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம்,
மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.

அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.

இப்போது கொஞ்சம் பயப்பட தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப்போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பது போல் இருக்கிறது.

ஜன்னலோர இருக்கையில் தலையை தாழ்த்தி, மூலையில் பதுங்கிக்கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.

அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.

நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில்,

*“பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.*

கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.

பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.

பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.

இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.

மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.

நோயை விட, அது குறித்த அச்சம் தான் பலரை கொல்கிறது.

எல்லோரும் இறைவனை நம்புகிறோம். நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான் என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.

இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, ​நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை
வைத்திருக்கிறான். அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன், என்று எழுதி இருக்கிறது.*

கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று நம் இறைவன் நம்பிக்கை தருகிறான்.

எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

உலகம் பிழைக்கப் போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம்.

Address

Santhai Road
Dindigul
624003

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919443676719

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenth sense health group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tenth sense health group:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram