04/04/2025
அனைவருக்கும் வணக்கம்,
கால்சியம்
பற்களை வலுவாக்கவும், பற்சொத்தை வராமல் காக்கவும் உதவுகிறது.
பாஸ்பரஸ்
கால்சியமுடன் இணைந்து பற்களை மேலும் உறுதியாக்கும்.
பொட்டாசியம்
எலும்புகளையும்,
தாடையையும் வலுவாக்கும்.
மெக்னீசியம்
கால்சியம் உட்கிரகித்தலில் உதவுகிறது.
வைட்டமின்-டி
இவர் சரியான அளவு இருந்தால் மட்டுமே மற்ற தாதுக்களை நம்மால் உட்கிரகித்துக்கொள்ள இயலும்..இவரையும் நாம் சூரியக்குளியல் மூலம் பெறுகிறோம்.
வைட்டமின்-சி
நமக்கு ஈறுகள் வலுவாகவும், இரத்தக் கசிவு வராமல் தடுக்கவும் உதவுகிறது. நெல்லிக்கனி மூலம் இவற்றை நாம் பெறுகிறோம்..
இவை மட்டும் இல்லாமல் வைட்டமின் -A,K,அனைத்துமே பேலியோவில் இயற்கையாகவே நமக்கு காய்கறிகள்,கீரைகள்,
முட்டை மூலம் கிடைக்கிறது..
பற்களை பற்றிய பராமரிப்பு முன்னெச்சரிக்கை மற்ற உறுப்புகளை விட மக்களுக்கு குறைவாகவே உள்ளது.பற்களில் வலி மற்றும் வீக்கம் வந்தாலோ,ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்தாலோ,வீக்கம் வந்தால் மட்டுமே பல் மருத்துவரை அணுக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.பல் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறை சென்று பரிசோதித்து கொள்வது சாலச்சிறந்தது.
உதாரணதிற்கு பற்கள் மேற்புறம் ரொம்ப லேசான கரும்புள்ளி இருக்குன்னு வச்சுக்குவோம்,இந்த நிலையில் பல் மருத்துவரிடம் சென்றால்,சொத்தையை நீக்கி விட்டு அதற்கான பல் சிமெண்ட்(Dental cements)வைத்து அடைத்து விடுவார்.வலி வந்துவிட்டாலே சொத்தை எல்லையை கடந்து விட்டார்(சொத்தை வேர் வரை சென்று விட்டது) என்று அர்த்தம்.இதற்கு வேர் வரை சென்று சுத்தம் செய்யும் வேர்சிகிச்சை(Root canal Treatment) மட்டுமே செய்து, மேலே,
பற்குப்பி(cap) போட வேண்டும்(அ) பல்லை எடுக்கும் நிலையும் வரலாம்....இந்த நிலையை தடுக்கவே ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை அறிவுறுத்தப்படுகிறது.
ஆழமாக சொத்தை இருப்பின் நாம் சாப்பிடும் காய்கறிகள் உள்ளே சென்று மாட்டும் நிலை ஏற்படும்.பற்களில் அழுக்கு அதிகமாக இருப்பின்,ஈறு வீக்கமாகும்...இவை நாம் சாப்பிடும் மாவுச்சத்து உணவால் பற்களின் மேல் படலம் போல் உருவாகி பின்னர் நாளைடைவில் கடினமாக மாறி பற்களையும் ஈறுகளையும் பிரித்து பல்சூழ்திசு அழற்சி(periodontitis)ஏற்படும்.பற்களின் நடுவே இடைவெளி உருவாகி எழும்பு தேய்மானத்திற்கு வித்திடும்.இந்த இடைவெளியிலும் நாம் உண்ணும் காய்கறி,
மாமிசம்,தேங்காய், சிக்கிக்கொள்ளும்.இதை தடுப்பதற்கு வருடம் ஒரு முறை scaling( பல் சுத்தம் செய்யும்)முறை அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பது எப்படி:
1.காலை மாலை இருவேளையும் பல்துளக்குதல் அவசியம்.
2.எந்த உணவு எடுத்தாலும் வாயை நன்றாக 1-2 நிமிடம் தண்ணிர் கொண்டு கொப்பளிக்க வேண்டும்.
3.சரியான தூரிகையை பயன்படுத்த வேண்டும்.
4.2-3 மாதத்திற்கு ஒரு முறை தூரிகையை மாற்ற வேண்டும்
5.எவ்வாறு பல் துளக்க வேண்டும் என்ற முறையை தெரிந்து சரியாக பல்துளக்க வேண்டும்
6.பேலியோ உணவுகளை எடுக்க வேண்டும்.
7.பழச்சாறு,மாவுச்சத்து,
மற்றும் செயற்கை பானங்களை தவிர்க்கவும்.
8.பல் இடுக்குகளில் மாட்டும் உணவுகளை பல்லிழை (Dental floss)கொண்டு நீக்கவும்..இவை இடைவெளி மேலும் அதிகமாக்கமல் உதவும்.
9.பல்லில் ஒட்டும் வகையான உணவை(chocolate,biscuits) தவிர்க்கவும்.
10.வருடம் ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும்.
பல் போனால் சொல் மட்டுமில்லை,நம்மால் சரியாக மென்று சாப்பிட இயலாது,
முகத்தின் அமைப்பு மாறும்,தேவையான சத்துக்கள் கிடைக்காது,வளர்ச்சி தடையுறும்,எழும்பும் வலுவிழந்து போகும் என்பதை மனதில் வைத்து பற்களை காப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்...
நன்றி
மரு.ந.தமிழரசி
இனியா பல் மருத்துவமனை
ஓசூர்-635109.