01/01/2026
' நான் ரஜினி பேசுறேன் ' இப்டி;
நேற்று மாலைல ஒரு போஃன் வந்தது.
சர்தான் யாரோ கலாய்க்கிறாங்கனு நினைச்சிட்டு. 'சொல்லுங்க நான் கமலகாசன்தான் பேசுறேன்' னு
சொன்னதும் ' ஹஹ் ஹஹ்ஹா
ஹா ஹா ' னு ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு உண்மையிலேயே நான் ரஜினிதான்
பேஸ்றேன்.ஆதிமருத்துவம் தானே,
நான் உங்க பேஜோட பெரிய பேஃன்.
நல்ல நல்ல அருமையான மருத்துவ
தகவல் எல்லாம் போடுறீங்க.
மக்களுக்கு பயன்படுற மாதிரி
நிறைய நிறைய டிப்சுல்லாம்
குடுக்றீங்க.யோகாசனம், தியானம் எல்லாம்
கூட போட்றீங்க ரெம்ப நல்லாருக்கு.இடைல மணிமேகலை காப்பியம் வீடியோ எதோ போட்டிங்க பாத்தேன்.ரெம்ப இன்ட்ரஸ்டிங்க இருந்தது.சூப்பர் சூப்பர் என்று அவர் பேசிக்கொண்டே போக எனக்கு நடக்குறது கனவா நிஜமான்னு ஒண்ணுமே புரியாம மலைச்சி போய் மகிழ்ச்சின்னு மட்டும் சொல்லிட்டே இருந்தேன்.அடுத்து
உடனே உங்ள பாக்கணும் எங்க வீட்டுக்கு வரமுடியுமா?ன்னு கேட்க நான் அப்டியே
ஷாக்காகி உடனே அவர் வீட்டுக்குப் போனேன்.
ஒரு அரைமணி நேரம் ஆன்மீகம் மற்றும் இப்ப நடிச்சிட்டிருக்குற படம் பற்றி பேசிட்டிருந்தார்.
விடை பெறும் நேரம் போட்டோ எடுத்துக்கிறீங்ளான்னுதயங்கியபடியே
கேட்டார்.நான் வேண்டாங்க. உங்களுக்கு
எதுக்கு சிரமம்னு இழுத்தேன்.
அட ,நீங்க வேற நான் உங்ளோட
ஒரு போட்டோ எடுத்தே தீரணும்னு
அடம் பிடிச்சிஅவர் எடுத்த போட்டோதான் இது.உங்க நண்பன் பக்கத்துல
நிக்றதால சூப்பர்ஸ்டார் முகத்துல
எவ்ளோ மகிழ்ச்சின்னு பாருங்க
நண்பர்களே பாருங்க.!
-ஏகப்பிரியன்.
#இயற்கை #ஆரோக்கியம்
#ஆன்மீகம் #ஆனந்தம்