10/12/2023
டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும்.
காய்ச்சல், தலைவலி, தசை, எலும்பு அல்லது மூட்டு வலி,குமட்டல்,வாந்தி,
கண்களுக்குப் பின்னால் வலி,
வீங்கிய சுரப்பிகள்,
சொறி போன்ற அறிகுறிகளுடன் ஆரம்ப நிலையில் தோன்றி, நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க இரத்த நாளங்களில் இரத்த கசிவு என்று, பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்நோயால் பாதிக்கப்படும் மக்கள், பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் குணமடைவார்கள். சில சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் மோசமாகி மற்றும் உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது. இது கடுமையான டெங்கு, டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் அல்லது டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது.
டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கொசு கடிக்கும் போது, அந்த வைரஸ் கொசுவிற்குள் நுழைகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட கொசு மற்றொரு நபரைக் கடிக்கும்போது, வைரஸ் அந்த நபரின் இரத்த ஓட்டத்தில் நுழைந்து தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.
எனவே கொசு கடியில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். கொசு விரட்டிகள் பயன்படுத்துவது. மூலிகை புகை இடுவது. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்காமல் பார்த்துக்கொள்வது போன்ற நாட்வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைய ஆரம்பிக்கும். அந்த குறைந்த தட்டணுக்களை உயர்த்துவதே பெரிய சவாலாக இருக்கும்.
டெங்கு காய்ச்சல் என்று கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அலோபதி சிகிச்சையுடன் சேர்த்து ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவும் சிறந்தது.
அசைவ சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது. முக்கியமாக நண்டு சூப் சிறந்தது. மேலும் பப்பாளி இலை சாறு எடுப்பதன் மூலம் இரத்த தட்டணுக்கள் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சலால், மற்றவர்களும் ஆயுர்வேத மருந்துகளை தற்காப்பு நிவாரணியாக பயன்படுத்தலாம். அதாவது முன்கூட்டியே இரத்த தட்டணுக்களை அதிகரிக்கும் மூலிகைகளை உட்கொள்ளலாம் .
பப்பாளி,காட்டு வேம்பு,நில வேம்பு,
வெட்டி வேர், கொம்பு புடலை, கோரை கிழங்கு,மிளகு,பற்படக புல்,சீந்தில் கொடி போன்ற பல்வேறு மூலிகைகள் உள்ளடக்கிய ஆயுர்வேத மாத்திரைகளான, க்லைவேரா மாத்திரை, குழுச்சியாதி மாத்திரை, பஞ்ச நிம்பாதி மாத்திரை பயன்படுத்தி நிவாரணம் பெறுவது சிறந்தது. அலோபதி மருத்துவம் பார்பவர்களும் அதோடு சேர்த்து ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளலாம். **************** மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும். அறிவோம் ஆயுர்வேதம் Dr.D.SUBHA. BAMS, DMDPN. AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI. 7339008816. இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்.