Acupuncture Healer

Acupuncture Healer அனைத்து நோய்களுக்கும் அக்குபஞ்சர் ம?

🍁🍁🍁 The Essence REIKI healing🌲🌲🌲🌲🍀🍀🍀🍀🍀🍀🌲🌲🌲🌲🏵🏵🏵Telegram app மூலமாக நடத்தப்படும்ஆன் லைன் வகுப்பு.🏵🏵🏵உங்கள் மருத்துவ செலவை ...
03/04/2021

🍁🍁🍁 The Essence REIKI healing
🌲🌲🌲🌲🍀🍀🍀🍀🍀🍀🌲🌲🌲🌲
🏵🏵🏵Telegram app மூலமாக நடத்தப்படும்
ஆன் லைன் வகுப்பு.🏵🏵🏵

உங்கள் மருத்துவ செலவை வெகுவாக குறைத்துக் கொள்ள
ரெய்கி சிகிக்சை முறையை கற்றுக் கொள்ளுங்கள்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மனநல கோளாறுகள்,
குடும்ப பிரச்சனைகள்,
உறவுகளில் சிக்கல்கள்,
கடன் பிரச்சனைகள்,
போதிய வருமானம் இன்மை,
பொருளாதார பிரச்சனை,
தீராத நாட்பட்ட நோய்கள்,
இனம் புரியாத பிரச்சனைகள்
டென்ஷன், மன அழுத்தம்,
தூக்கமின்மை, குறிக்கோளை அடைய முடியாமல் தவித்தல்
போன்றவற்றிற்கு இந்த எசன்ஸ் ரெய்கி ஹீலிங் பேருதவியாக இருக்கும்.....

🌻🌻🌻இது மற்ற ரெய்கி, ஹீலிங் முறையை காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்த சிறந்த ஒன்று.🌻🌻🌻

நீங்கள் கற்றுக் கொள்ள இருக்கின்றவைகளில் ஒரு சில:

🌷🌷1. Reiki level I & II
🌷🌷2. அடிப்படை பிராணிக் ஹீலிங் முறை.
🌷🌷3. ஆல்ஃபா மெடிடேஷன்
🌷🌷4. Shelf hypnotism
🌷🌷5. முக்கியமான சில முத்திரை பயிற்சி
🌷🌷6. யோகதாரணை முறை.
🌷🌷7. Psycho symbology
🌷🌷8. சக்ரா தியானம்.
🌷🌷9. ரெய்கி அக்குபங்சர்
🌷🌷10. பிரபஞ்ச ஈர்ப்பு விதியை மிக சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்.

🌴🌴🌴இது அக்குபங்சரிஸ்ட் அக்குஹீலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
பிறருக்கு சிகிக்சை அளிக்கும் போது அதன் பாதிப்பு வரா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறை....

🌴🌴🌴அக்குபங்சர் முறையில் சிகிக்சை அளிக்கும் போது அதன் தன்மை அதிகரிக்க.....
அக்குஹீலிங் பவர் அதிகரிக்க...
மிக எளிதில் ஒருவருக்கு இருக்கும் நோயின் மூலககாரணியை கண்டறிந்து சிகிக்சை செய்ய....

🌳🌳🌳சிகிக்சை மற்றும் ஹீலிங் செய்யும் இடம் சக்தி மிகுந்து இருக்க, பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்து இருக்க
நெக்டிவ் எனர்ஜி விலகி பாதுகாப்புடன் இருக்க வழிமுறைகள் சொல்லி தரப்படும்.....

🌳🌳🌳ஹீலிங் செய்பவர்கள்
மற்றும் அக்குபங்சர் சிகிக்சை செய்பவர்கள் தனது சுய தேவைகளையும்,
பொருளாத்தார நிறைவையும் பெற பயனுள்ள பயிற்சி.

குண்டலினி யோகம், வாசியோகம் போன்றவற்றின் அவசியம் தான் என்ன...
குண்டலினி சக்தி என்று உண்மையில் இருக்கிறதா...
அப்படி இருக்குமாயின் அதன் பயன்பாடுதான என்ன....
யோக, தந்த்ரா போன்றவற்றில்,
சக்தி வாய்ந்த சக்கரங்கள் என்ற சொல்லப்படுவை எதை குறிக்கிறது....
உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.....இருக்கிறது என்றால் அவற்றை நாம் அறிந்துக் கொள்வதினால் நமக்கு ஆகப் போவதென்ன.....

போன்ற பல்வேறு விதமான சந்தேகளுக்கு தெளிவான விளக்கம் பெற...

🌺🌺🌺இரண்டு மாதங்கள்
ஆன் லைனில் Telegram app மூலமாக நடத்தப்படும்....🌺🌺🌺

💐💐💐நேர்முக வகுப்பில் கலந்துகொள்ளவது போன்ற
உணர்வை கொடுக்கும் வகையில் தகுந்த விளக்கங்களுடன்,
வரை படம், வீடியோ, ஆடியோக்களுடன், உடனுக்குடன் சந்தேகங்களை தீர்க்கும் வழிமுறைகளுடன்....💐💐💐

🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹
ஒரு நாள் நேர்முக வகுப்பு சென்னையில் நடைபெறும் அதில் ரெய்கி தீட்சை வழங்கப்படும்
🌺🍂🌺🍂🌺🍂🌺🍂🌺🍂🌺🍂🌺🍂

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
🌏🌐கட்டணம் ரூபாய் 5,000/-🌏🌐
⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩⛩🌅

🌅🌅🌅
ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வகுப்புகள் துவங்க இருக்கிறது.....
🔊🔊🔊📢📢📢🎵🎶🎵🎶🎵🎷🎶

விருப்பம் உள்ளோர் கீழுள்ள வாட்சாப் லிங்க்கை தொட்டு இணையவும்.

தயவுசெய்து வகுப்பில் சேரும் நண்பர்கள் மட்டும் குழுவில் இணையவும்.

https://chat.whatsapp.com/BspbY69CvnvJncrikspPuO

11/07/2019

அக்குபஞ்சர் மகத்துவம்.

ஒரே சிகிச்சையிலேயே பல வருட தலைவலி மற்றும் தோள்பட்டை வலி குறைந்தது.

இதை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த வாரம் நான் சென்னை வந்திருந்த போது, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த இருவர் வந்திருந்தனர்,

நபர்.1.
வயது 40 பெண்.
இவர் கடந்த ஐந்து வருடங்களாக அடிக்கடி வரும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்,
தினமும் ஒரு வலி நிவாரணி மாத்திரை எடுத்தால் தான் தலை வலி இல்லாமல் நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும் கூறினார்,

இவருக்கு பாதசிகிச்சை மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை செய்த நாள் முதல் இன்றுவரை தலைவலி வரவே இல்லை என்றும், வலிநிவாரணி எடுக்காமலே நிம்மதியாக உறக்கம் வருவதாகவும் கூறினார்.

நபர்-2.

வயது 35 ஆண்.

ஆட்டோ டிரைவரான இவர் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலி மற்றும் கழுத்துவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆட்டோ ஓட்டவே சிரமமாக இருப்பதையும் சொன்னார்.
கடுமையான மலச்சிக்கல் இருப்பதாக கூறினார்.

இவருக்கு வர்ம சிகிச்சை மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது,
மறுநாள் பேதி மாத்திரை எடுக்கவும் பரிந்துரை செய்தேன்,
சிகிச்சை பெற்ற நான்கே தினங்களில் தோள்பட்டை வலி சிறிதுகூட இல்லை என்றும், கழுத்துவலியும் 50% சதவிகதத்திற்கு மேல் குறைந்ததாக கூறினார்.

இதுபோன்ற அதிசயங்கள் அக்குபஞ்சர் சிகிச்சையில் மட்டுமே சாத்தியம் என்றால் அது மிகையாகாது.

அவர்கள் ஆரோக்கியம் பெற என்னை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்ட இறைவனுக்கு நன்றி.
என் குருமார்களுக்கும் நன்றி.

ஹீலர்.மகேந்திரன்.M Acu. DVM Varama
ஶ்ரீராம் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்.
காசியண்ணா தெரு.
நசியனூர் சாலை.
சம்பத்நகர் அருகே.
ஈரோடு.

cell -9597820861
7904848355

அக்குபஞ்சர் மகத்துவம்.nabothian cyst (நபோதியன் கட்டி) எனும் கருப்பை வாய் நீர்கட்டி பிரச்சனை அக்குபஞ்சர் சிகிச்சையில் குண...
19/06/2019

அக்குபஞ்சர் மகத்துவம்.

nabothian cyst (நபோதியன் கட்டி) எனும் கருப்பை வாய் நீர்கட்டி பிரச்சனை அக்குபஞ்சர் சிகிச்சையில் குணமானது.

33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனக்கு இந்த பிரச்சனை இருப்பதை ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்தார்.

நோய் அறிகுறிகள்:
தொடர் உதிரப்போக்கு,
மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி,

ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் 30 லிருந்து 45 நாட்கள் உதிரப்போக்கு நீடிக்கும்.

ஒவ்வொரு முறையும் ஆங்கில மாத்திரை எடுத்தால் தான் மாதவிடாய் நிற்கும்.

கடுமையான இடுப்பு வலி,
மன உளைச்சல்.
தைராய்டு,
இப்படி பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நிலையில்,
இரண்டு வருடமாக பல சிகிச்சைகள் செய்தும் பலன் இல்லாததால்,
கர்பப்பையை நீக்கிவிட சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கடைசி முயற்சியாக #அக்குபஞ்சர் சிகிச்சை பெற என்னிடம் வந்தார்,
தொடர்ந்து பத்து வாரங்கள் அக்குபஞ்சர் மற்றும் பாத சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் கட்டிகள் ஏதும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு மாதமாக முறையாக மாதவிடாய் சுழற்சி இருக்கிறது, உதிரப்போக்கும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கிறது.
இறைவன் அருளால் பரிபூரணமாக குணமாகிவிட்டார்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
நன்றி.

ஹீலர்.மகேந்திரன்.M Acu, DVM Varma.
ஸ்ரீராம் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்.
நசியனூர் சாலை
ஈரோடு.
cell-9597820861
7904848355

அக்குபஞ்சர் மகத்துவம்."சைனஸ்"பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் படுத்திஎடுத்துவிடும். தூசி இருக்...
11/03/2019

அக்குபஞ்சர் மகத்துவம்.

"சைனஸ்"

பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் படுத்திஎடுத்துவிடும். தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள்.
கேட்டால், ''சைனஸ் பிரச்னைங்க, தீரவே இல்ல'' எனக் கவலையோடு சொல்வார்கள்.
சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது?

சைனஸ் என்றால் என்ன?

நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.

சைனஸ் பிரச்னை எப்படி வருகிறது?

சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில் உள்ள சளி சவ்வுக்கு ( Mucous membarane) வரும். இந்த சளி சவ்வுதான், நாம் சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது. சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ் பகுதியில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு 'சைனசிட்டிஸ்’ (Sinusitis) என்று பெயர். மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன் காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் 'பாலிப்’ (Polyp) எனப்படும் மூக்கு சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்னை வருகிறது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்னை வருகிறது.

சைனசிடிஸ் அறிகுறிகள் என்ன?

கன்னம், நெற்றிப் பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.

தலையைக் கீழே கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி இருக்கும்.

அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலருக்கு சளி சிந்தும்போது, ரத்தமும் சேர்ந்து வரும். சளி, கடுமையான நாற்றத்துடன் இருக்கும்.

மூக்கைத் தொட்டாலே, கடுமையான வலி ஏற்படும்.

இரவு நேரத்தில் இருமல் வரும். காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வரும்.

பல் வலி, காது வலி ஏற்படும். வாசனை, சுவை உணர்வு குறையும்.

காய்ச்சல் வரலாம், உடல் சோர்வாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது.

இந்த பிரச்சனைக்கு ஆங்கில மருந்துகள் நிரந்தர நிவாரணம் தருவதில்லை, மேலும் அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு அக்குபஞ்சர், பாதசிகிச்சை, மற்றும் ஆயுர்வேதத்தில் நிரந்தர தீர்வு பெற முடியும்.

அக்குபஞ்சர் தத்துவப்படி சிறுநீரக சக்தி குறைபாடு மற்றும் பித்தப்பை சூடு தலைக்கு ஏறுவதாலும் சைனஸ் பிரச்சனை ஏற்படுகிறது.

நாடிப்பரிசோதனை மூலமும் நோய் அறிகுறிகள் மூலமும் நோயிற்கான காரணத்தை கண்டறிந்து அக்குபஞ்சர் சிகிச்சை மற்றும் பாதசிகிச்சை செய்துகொண்டால் சில வாரங்களிலேயே நிவாரணம் கிடைக்கும்.

நன்றி.

ஆரோக்கியம் நம் பிறப்புரிமை.

ஹீலர்.மகேந்திரன்.M Acu.., DVM Varma
ஸ்ரீராம் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்.
ஈரோடு.
cell.9597820861
7904848355

அக்குபஞ்சர் மகத்துவம்.பல வருடங்களாக இருக்கும் பிரச்சனைகள் சில நாட்களிலேயே நீங்கும் அதிசயத்தை அக்குபஞ்சர் சிகிச்சையில் மட...
01/03/2019

அக்குபஞ்சர் மகத்துவம்.

பல வருடங்களாக இருக்கும் பிரச்சனைகள் சில நாட்களிலேயே நீங்கும் அதிசயத்தை அக்குபஞ்சர் சிகிச்சையில் மட்டுமே பார்க்க முடியும் என்னும் கூற்றுக்கு சான்றுகள் இதோ.

கடந்த ஞாயிறு அன்று நான் சேலம் விஜயம் செய்திருந்த போது,
27 வயதுடைய ஆண் ஒருவர் சில வருடங்களாகவே கழுத்து வலி, முதுகுவலி, கைகால் நடுக்கம் ஆகிய பிரச்சனைகள் இருப்பதாக சொன்னார்,
நாடிப்பரிசோதனை செய்து அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை செய்யப்பட்டது,

மறுநாள் அவர் தனக்கு இருந்த வலி பாதிக்கும் மேல் குறைந்து விட்டதாகவும், கை கால் நடுக்கமும் குறைந்திருப்பதாக கூறினார்.

மற்றொரு சான்று,
21 வயதுடைய கர்பிணி பெண்,
தாங்க முடியாத இடுப்பு வலி இருப்பதாகவும், இரவில் உறங்கும் போது திரும்பி படுக்கும் சமயங்களில் பளீர் பளீர் என்று வலிப்பதாகவும் கூறினார்,

அவருக்கு மூன்று நாட்கள் தொடுசிகிச்சை செய்தேன்,
நான்காம் நாள் காலையில் எழும்போது வலி முற்றிலும் நீங்கிவிட்டதாக கூறினார்.

இது போன்ற அதிசயங்கள் அக்குபஞ்சர் சிகிச்சையில் மட்டுமே நடக்கும் என்றால் அது மிகையல்ல.

நன்றி.

ஹீலர்.மகேந்திரன், M Acu, DVM varma.
காசியண்ணா தெரு,
நசியனூர் சாலை
சம்பத்நகர் அருகே,
ஈரோடு.
9597820861.
7904848355.

அக்குபஞ்சர் மகத்துவம்.தீராத கழுத்து வலி - காரணங்களும், சிகிட்சை முறைகளும்இன்றைய சூழலில் 40 வயதுக்கு மேல் உள்ள பலருக்கு க...
31/01/2019

அக்குபஞ்சர் மகத்துவம்.

தீராத கழுத்து வலி - காரணங்களும், சிகிட்சை முறைகளும்

இன்றைய சூழலில் 40 வயதுக்கு மேல் உள்ள பலருக்கு கழுத்துவலி வந்து பாடாய் படுத்துகிறது,
கழுத்து வலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம்.
'செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' (Cervical Spondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.
இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. அந்த நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்போது தான் கழுத்து வலி ஏற்படுகிறது.

பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் காரணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். விரைவிலேயே தேய்ந்துவிடும்.

ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள்(Osteophytes) வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும்.
இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும்.

கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது வயது ஆக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில்தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.

இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போதுகழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும்.

இது போன்ற கழுத்து வலிகளுக்கு அக்குபஞ்சர் மற்றும் பாதசிகிச்சை மிக மிக நல்ல பலன் தருகிறது,
சேலம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் 6 வருடமாக கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலி பிரச்சனையால் அவதிபட்டு, ஆங்கில மருத்துவத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவழித்த பின்பும் நிவாரணம் கிடைக்காத நிலையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்,
அவருக்கு அக்குபஞ்சர் மற்றும் பாதசிகிச்சை அளிக்கப்பட்டது, மூன்று வாரத்திலேயே 50% வலி குறைந்த நிலையில், தொடர்ந்து 10 வார சிகிச்சைக்கு பிறகு கழுத்துவலி மற்றும் தோல்பட்டை வலி முற்றிலும் இல்லாமல் போனது.

கழுத்துவலி வராமல் பாதுகாக்க சில வழிமுறைகள்.

# எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

# பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாகசாய்த்துக்கொண்டு உறங்க வேண்டும்.

# கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

# கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

# மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள்.

# அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள்.

நன்றி.
ஆரோக்கியம் நம் பிறப்புரிமை.

ஹீலர்.மகேந்திரன். M.Acu,. DVM Varma.

ஸ்ரீராம் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்.
ஈரோடு.
9597820861.
7904848355

அக்குபங்சர் அதிசயம்.மைக்ரேன் தலைவலிக்கு குட் பை சொல்லுங்க..காலையிலிருந்து ஒரே தலைவலி, வேலையே செய்ய முடியலை, தலையே வெடிச்...
06/01/2019

அக்குபங்சர் அதிசயம்.
மைக்ரேன் தலைவலிக்கு குட் பை சொல்லுங்க..

காலையிலிருந்து ஒரே தலைவலி,
வேலையே செய்ய முடியலை,
தலையே வெடிச்சிடும்போலருக்கு.
அப்படி ஒரு தலைவலிப்பா’...
என்றெல்லாம் புலம்புபவர்களை நாம் பார்த்திருப்போம்.
நம்மில் பலரையும் கிறுகிறுக்கச் செய்வதில் தலைவலிக்கு முக்கிய இடமுண்டு.
உலகில், ஏறக்குறைய 50 சதவிகிதம் பேர் பல்வேறு தலைவலி சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். தலைவலிகளிலும் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது, `மைக்ரேன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத்தலைவலி.

பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலிப் பிரச்னை, 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. சாதாரண தலைவலியைப்போல இல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வரும்.
சிலருக்கு பசிக்கும் போது மட்டும் தலைவலி வரும்,
சிலர் சாப்பிட்ஞ உடனே தலை வலிப்பதாக கூறுவார்கள்,
இன்னும் சிலர் கோபப்படும் போது பயங்கரமாக தலை வலிப்பதாக கூறுவார்கள்,
இது ஒரு நரம்பியல் சார்ந்த நோயாக அலோபதி பறைசாற்றுகிறது,

ஆனால் கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், இதயம், இரைப்பை, மண்ணீரல், போன்ற உள்ளுறுப்புகளின் சக்தி குறைபாடும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருவது அக்குபஞ்சர் மற்றும் சித்த மருத்துவர்கள் மட்டுமே அறிந்த உண்மை,
உதாரணமாக சிலருக்கு வெயில் காலங்களில் மட்டும் அல்லது பகல் நேரத்தில் மட்டும் இதுபோன்ற தலைவலி வரும், அப்படி என்றால் அவர்களின் இதயத்தில் சக்தி குறைபாடு இருக்கும் என்று பொருள்.
இதயத்தை சரி செய்வதை விடுத்து நாள்தோறும் வலி நிவாரணி மாத்திரைகள் விழுங்குவதால் எந்த பயனும் கிடைக்காது,

மைக்ரேன் தலைவலிக்கு அக்குபஞ்சர் மற்றும் பாத சிகிச்சை அளித்து முற்றிலும் குணமாக்க முடியும். நாடிப்பரிசோதனை மூலம் எந்த உள்ளுறுப்பு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நிரந்தரமாகவே குணமாக்க முடியும். என் அனுபவத்தில் 20 வருடங்களாக மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண்மணி மூன்று மாத சிகிச்சையில் ஆரோக்கியம் பெற்ற அனுபவம் இருக்கிறது.
மூன்று சிகிச்சைகளிலேயே வலியின் வீரியம் குறைவதை உணரமுடியும்.

மைக்ரேன் மட்டுமல்லாமல் நாட்பட்ட தலைவலி அனைத்திற்கும் அக்குபங்சர் மற்றும் பாதசிகிச்சை செய்து நிரந்தரமாக குனமாக்க முடியும்.

ஆரோக்கியம் நம் பிறப்புரிமை.
நன்றி.

ஹீலர்.மகேந்திரன். M (Acu), DVM(varma)
ஸ்ரீராம் அக்குபங்சர் சிகிச்சை மையம்.
காசியண்ணா தேரு.
நசியனூர் சாலை.
ஈரோடு.

9597820861
7904848355

20/09/2018

பல சிகிச்சைகள் செய்தும் நோய் குணமாகவில்லையா???
என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயன்படும்.

நம்மில் பலரும் பல வகையான நோய்களுக்காக பல மருத்துவரை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனாலும் நோய் மட்டும் குணமான பாடில்லை..

முதலில் நோய் என்றால் என்ன?
நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூட்டுக்கலைவையே நம் உடல் ஆகும்,

இதில் ஏதாவது ஒரு பூதத்தின் சக்தி குறையும் போது நம் உடல் நோயுறும்.

உதாரணமாக
நீர் சக்தி குறையும் போது, சிறுநீரக கல், ஹார்மோன், மூட்டுவலி, முதுகுத்தண்டு பிரச்சனை, பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

நோய் என்பது இரு காரணங்களால் ஏற்படலாம்.
1★பரு உடலில் ஏற்படும் நோய்.
2★பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைவால் ஏற்படும் நோய்.

அக்குபஞ்சர் தத்துவப்படி நமக்கு பருஉடல் மற்றும் பிராண உடல் ஆகிய இரு உடல் உள்ளது,
● பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைபாடானது நம் பரு உடலில் நோயாக பிரதிபலிக்கிறது.
மற்றும்,
●உணவுமுறை மாற்றத்தால் பரு உடலில் நோய் ஏற்பட்டு அது பிராண உடலில் சக்தி குறைவை உண்டாக்கும்.

ஆங்கில மருத்துவத்தில் நம் உடலுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல சமயங்களில் நம்மில் பலரது உடலில் கடுமையான வலி அல்லது வேறு பிரச்சனைகள் இருப்பதை நாம் உணர்வோம்,
ஆனால் வலி உள்ள இடத்தை "ஸ்கேன்" செய்து பார்த்தாலோ, வேறு பல சோதனைகளை செய்து பார்த்தாலும் நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது, டெஸ்ட் ரிப்போர்ட்டிலும் "நார்மல்" என்ற முடிவுதான் கிடைக்கும்..

வேறு வேறு வகையான சோதனைகளை செய்ய சொல்லி ஆங்கில மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுவோம்,
இந்த சோதனைகளுக்காக பல ஆயிரம், லட்சம் என செலவளித்த பின்பும் என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க முடியாமலே பலரும் தவித்து வருகின்றனர்.

நம் பரு உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் மட்டுமே சோதனைகளில் தெரியவரும்,

பிராண உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளை ஆங்கில மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் உண்மை.

இன்றைய சூழ்நிலையில் பலர் நரம்பு வலி, இடுப்பு வலி, முதுகுவலி, வயிற்றுவலி, கால்வலி, உடலின் வீக்கம், மற்றும் கட்டிகள் ஆகிய பிரச்சனைகளின் காரணம் கண்டறிய சோதனைகளுக்காக பணத்தை இழந்து வலி மற்றும் வேதனையுடன் காலம் கடத்தி வருகின்றனர்.

சரி, இது போன்ற பிரச்சனைகள் உள்ள நபருக்கு என்ன தான் தீர்வு?

இந்த கேள்விக்கு அக்குபஞ்சரில் பதில் உள்ளது.

அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலம் பிராண உடலில் உள்ள சக்தி குறைபாட்டை சமன் படுத்த முடியும்.
சொல்லப்போனால் அக்குபஞ்சர் சிகிச்சை என்பதே பிராண உடலுக்கு செய்யப்படும் சிகிச்சை தான் என்றால் அது மிகையாகாது..

நம் உடலில் மூன்று முக்கியமான காரணங்களால் நோய் உண்டாகிறது.

1- இரத்தத்தில் உள்ள பிரச்சினை.
2-நீர்மத்தில் உள்ள பிரச்சினை.
3-சக்தி ஓட்டத்தில் ஏற்படும் பிரச்சினை.

இரத்தம், நீர்மம், சக்தி இவை மூன்றில் ஏற்படும் "பற்றாக்குறை" அல்லது "உபரி" இவற்றின் காரணமாகவே நோய்கள் உருவாகிறது.

ஒருவரின் நோய் என்பது இரத்தம், நீர்மம், சக்தி, ஆகியவற்றின் பற்றாக்குறையால் எற்பட்டதா, அல்லது உபரியால் ஏற்பட்டதா? என்பதை நோயின் அறிகுறிகள் மூலமும் நாடிப்பரிசோதனை மூலமும் துள்ளியமாக கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும், இப்படி சிகிச்சை செய்தால் நோய்கள் பரிபூரணமாக குணமாகும்..

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர் அக்குபஞ்சர் சிகிச்சையால் குனமாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

●கழுத்து வலி,
●தோள்பட்டை வலி,
●ஆஸ்த்துமா,
●மூட்டு வலி,
●சர்க்கரை,
●இரத்தக்கொதிப்பு,
●இதயக்கோளாறு,
●இரத்தக்குழாய் அடைப்பு,
●ஆண்மைக்குறைவு,
●உயிரணுக்கள் குறைபாடு,
●கர்பப்பை கோளாறுகள்,
●மைக்ரேன் தலைவலி,
●சைனஸ்,
●நரம்பு தளர்ச்சி,
●வயிற்றுப்புண்(அல்சர்)
●கட்டிகள்,
●தோல் பிரச்சினை,
●மனம் சார்ந்த பிரச்சனைகள்,
●தொடைநரம்பு வாதம்(சயாட்டிகா),
●காது இரைச்சல்.

போன்ற நாட்பட்ட பல நோய்களை அக்குபஞ்சர் மற்றும் பாதசிகிச்சை மூலம் குணமாக்க முடியும்.

நன்றி

ஹீலர், வ.மகேந்திரன் M..Acu
ஸ்ரீராம் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்,
ஈரோடு.
9597820861

Address

காவல் நிலையம் எதிரில். , ஜேடர்பாளையம்
Namakkal
637213

Telephone

+919597820861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Acupuncture Healer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram