Kayasiddhi siddha varma medical center

  • Home
  • Kayasiddhi siddha varma medical center

Kayasiddhi siddha varma medical center சித்தமருத்துவத்தின் மூலம் அனைத்து விதமான உடல் மற்றும் உயிர் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும் ....

நான் இளங்கலை சித்த மருத்துவத்தை 2004 முதல் 2010 பத்தாம் ஆண்டு வரை ,அகில திருவிதாங்கோர் சித்த மருத்துவ சங்கம் (ATSVS)
கன்னியாகுமாரி, நடத்தும் கல்லூரியில் பயின்றேன் ,பிறகு பட்ட மேற்படிப்பினை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 2010 முதல் 2013 வரை பயின்றேன், 2014 ஆம் ஆண்டு முதல் காய சித்தி சித்தா வர்மா மருத்துவ மையத்தை கருர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடத்தி வருகிறேன் .கடந்த 10 வருடங்களாக தங்கள் மருத்துவ மையத்தில் அனைத்து விதமான நாள்பட்ட நோய்களுக்கும் சித்த மருத்துவத்தின் அடிப்படையில் ..நாடியினை மையமாக வைத்து நோயினை கனித்து அதற்கான மருந்துகளையும் நாங்களே தயார் செய்து நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம் மேலும் கை, கால் மூட்டு தேய்மானம் முதுகெலும்பு தேய்மானம் போன்ற வாத நோய்களுக்கு வர்ம மருத்துவம் செய்து வருகிறோம்
நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் .
நன்றி வணக்கம்

காய் சித்தியின் வெண்புள்ளியை நீக்கும் காட்டுச் சீரகத் எண்ணெய் மற்றும் காட்டுச் சீரகம் மெழுகு; வணக்கம் சீரகத்தை பொருத்தவர...
10/07/2025

காய் சித்தியின் வெண்புள்ளியை நீக்கும் காட்டுச் சீரகத் எண்ணெய் மற்றும் காட்டுச் சீரகம் மெழுகு;

வணக்கம் சீரகத்தை பொருத்தவரை மூன்று வகையான சீரகம் இருக்கு அதுல ஒன்னு நம்ம பயன்படுத்தக்கூடிய நற்சீரகம் மற்றொன்று கருஞ்சீரகம் கடைசியாக காட்டுச் சீரகம், இதுல இந்த காட்டுச் சீரகத்தை வைத்து நம்ம பண்ணக்கூடிய காட்டுச் சீரகம் எண்ணெய் முக்கியமா வெண்புள்ளி மருத்துவத்திற்கு மிக சிறப்பான ஒரு மருந்தாக கையாளப்படுகிறது.

இந்த காட்டுச் சீரகத் எண்ணெய்யினை தினமும் வெளிப்புறமாக வெண்புள்ளி உள்ள இடத்துல் தடவிய பிறகு வெயிலில் ஒரு பத்து நிமிடம் காட்டவேண்டும், பிறகு குளித்து விடலாம்.

அதன்பிறகு இந்த காட்டுசீரக மெழுகினை உணவுக்குப் பிறகு ஒரு சுண்டைக்காய் அளவு காலை மாலை எடுத்து வர வெண்புள்ளி நோயில் இருந்து விடுபடலாம் ...

இந்த கூட்டு மருந்தான காட்டுச் சீரக எண்ணெயை வெளிப்புறமாகவும் காட்டுச் சீரகமெழுகை உட்புறமாகவும் , இரண்டு மண்டலம் பயன்படுத்தி வர வெண்புள்ளி நோயிலிருந்து நிரந்தர தீர்வினை கொடுக்கும் .
பத்தியத்தை கடுமையாக மேற்கொள்ள வேண்டும், சித்த மருத்துவத்தின் ஆலோசனைப்படி எடுக்க வேண்டும்
நன்றி வணக்கம் ..
வாழ்க சித்தர் புகழ் ...
வளர்க சித்த மருத்துவம்....
#வெண்புள்ளி #காட்டுசீரகம்

Dr karthikeyan samydurai
Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti, Karur
Message Kayasiddhi siddha Varma maruthuva Maiyam on WhatsApp. https://wa.me/919786962652

09/07/2025

அனைவருக்கும் வணக்கம் டாக்டர் கார்த்திகேயன் நிறுவனர் காய சித்தி சித்தா வர்மா மருத்துவ மையம் பள்ளப்பட்டி கரூர் கருப்பை தொடர்பான அனைத்து வியாதிகளுக்கும் நிலவாகை கொண்டு செய்யக்கூடிய நிலவாக சூரணம் அத பத்தி நான் போஸ்ட் பண்ணி இருந்தேன் இது என்னன்னா இதோட சிறப்பு என்னவென்றால் பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் அனைத்தையுமே நீக்க ஒரு சிறந்த சூரணம் சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட சூரணம் இது எப்படி சாப்பிடணும்னா மாதவிடாய் ஏற்படக்கூடிய முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் இரண்டு வேலை சுடுநீரில் கலந்து சூரணத்தை பயன்படுத்தி வர கருப்பையில் இருக்கக்கூடிய குற்றங்கள் அனைத்தும் கலையும் அதாவது கருப்பையா வந்து ஒரு சுத்திகரிப்பு பண்ணக்கூடிய ஒரு சூரணம் அதனால இந்த சூரணத்தை பெண்கள் தொடர்ந்து பயன்படுத்திட்டு வர மாதவிடாய் கோளாறு உள்ள அனைத்து பெண்களுக்கும் நல்ல ஒரு மருந்தாக இருக்கும் நன்றி வணக்கம்

காய சித்தியின் கருப்பை குற்றம் போக்கும் நிலவாகை சூரணம்: இதில் முதன்மையாக சேரக்கூடிய மூலிகையின் பெயர் நிலவாகை அனைவருக்கும...
09/07/2025

காய சித்தியின் கருப்பை குற்றம் போக்கும் நிலவாகை சூரணம்:

இதில் முதன்மையாக சேரக்கூடிய மூலிகையின் பெயர் நிலவாகை அனைவருக்கும் தெரியும் நிலவாகச் சூரணமானது மலமிளக்கிக்காக அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகை சூரணம் ஆகும்

நிலவகை மூலிகை ஆனது ஆணி, ஆடி ஆகிய மாதங்களில் வறண்ட பூமியில் அனைத்து தாவரங்களும் காய்ந்த சூழ்நிலையில் இத்த தாவரம் மற்றும் பசுமையாக காணக்கிடைக்கும் கோடைகால வசந்த மூலிகை...காய்ந்த பூமியின் மரகத முலிகை...

இக்கால கட்டத்தில் இம்மூலிகையை சேகரித்து, இதை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுகின்ற கருப்பை குற்றம் நீக்கும் நிலவாகைச் சூரணம் காய சுத்தி சித்தா வர்ம மருத்துவ மையத்தில் மருத்துவரின் மேற்பார்வையில் தயார் செய்யப்படுகிறது .

இச்சூரனமானது கருப்பையில் ஏற்படக்கூடிய குற்றங்களான கருப்பை கட்டி, நார் தசை கட்டி,நஞ்சு மறவை கட்டி ,கருப்பை எண்டோமெட்ரியம் அதில் ஏற்படக்கூடிய வளர்ச்சி ...போன்ற அனைத்துக்கும் இச் சூரணம் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியது.

இச்சூரணத்தை மாதவிடாய் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பத்தியத்துடன் எடுத்து வர மேற்கொண்ட நோய்களிலிருந்து... நீங்கி குழந்தையின்மை என்ற ஒரு பிரச்சினையிலிருந்து நல்ல தீர்வினை கொடுக்கும் ...
நன்றி வணக்கம்.
o***y syndrome Fibroids

வாழ்க சித்தர் புகழ்....
வளர்க சித்த மருத்துவம்....
Dr karthikeyan samydurai
Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti, Karur
Message Kayasiddhi siddha Varma maruthuva Maiyam on WhatsApp. https://wa.me/919786962652

காய் சித்தியின் கீழாநெல்லி  எண்ணெய்;கீழாநெல்லியை கொண்டு செய்யப்படுகின்ற இந்த கீழாநெல்லி எண்ணெய் ஆனது சித்த மருத்துவத்தில...
08/07/2025

காய் சித்தியின் கீழாநெல்லி எண்ணெய்;
கீழாநெல்லியை கொண்டு செய்யப்படுகின்ற இந்த கீழாநெல்லி எண்ணெய் ஆனது சித்த மருத்துவத்தில் எவ்வகையான நோய்க்கு பயன்படுத்தப்படுகின்றது என்றால்,
அகத்தியர் சித்தர் பாடப்பட்ட பாடலின் படி கீழாநெல்லி எண்ணெய் ஆனது வெளிப்புறமாக பயன்படுத்தி வர பித்தம் தொடர்பான நோய்களான தலைசுற்றல், ரத்த அழுத்தம், வெள்ளை ,வெட்டை நோய்கள் சிறுநீர் எரிச்சல் ,சிறுநீர் கழிக்கும் போது ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் சிறுநீருடன் கலந்து செல்லும் ரத்தம் ,புரதம் போன்ற நோய்களிலிருந்து முழுமையான தீர்வினை தருகிறது .
இளநரைக்கு மிக சிறந்த எண்ணெய் ஆகும்,

இதனை வாரம் தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பெண்களும் தலை முதல் கால் வரை தேய்த்து குளித்து வர அகத்தியரின் அருளால் மேற்கொண்ட நோய்கள் நீங்கிவிடும் .
நன்றி, வணக்கம் .
வாழ்க சித்தர் புகழ் ...
வளர்க சித்த மருத்துவம்...
Dr.karthikeyan samidurai
Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti post,Karur dt
Message Kayasiddhi siddha Varma maruthuva Maiyam on WhatsApp. https://wa.me/919786962652

29/06/2025

காய சித்தியின் சீரகத் தைலம்; சீரகத்தினை மையமாக வைத்து நல்லெண்ணையை கொண்டு செய்யப்படுகின்ற வெளிப்பிரயோகமாக பயன்படுத்தக்கூடிய சீரகத் தைலம் சித்த மருத்துவத்தில் சித்தர்களால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வெளிப்புறமாக தைலம் ஆகும்.

இத் தைலத்தினை வாரம் இருமுறை தலை முதல் கால் வரை தேய்த்து குளித்து வர கீழ்க்கண்ட நோய்கள் நீங்கும் .

ஆண்களாக இருந்தால் வாரத்தின் புதன் மற்றும் சனிக்கிழமை தோறும் பெண்களாக இருந்தால் வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் தலை முதல் கால் வரை தேய்த்து குளித்து வர வேண்டும்.

இத்தயிலத்தினால் குன்மம் 8, வாதம் 10 ,கபால சூலை, போன்ற தலை நோய்கள் ,கிறுகிறுப்பு ,கழுத்து வலி மற்றும் தலையில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டு போன்ற நோய்களுக்கு வெளி மருந்து மூலமே தீர்வுதரும் உள்மருந்து ஏதும் இன்றி ....

சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி இத்தைலத்தினை உபயோகித்து வர வேண்டும் ..

நன்றி ,வணக்கம்.
வாழ்க சித்தர் புகழ் ....
வளர்க சித்த மருத்துவம்...

problem therapy

Dr.karthikeyan samidurai B.S.M.S, M.D
Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti, Karur
9786962652
Message Kayasiddhi siddha Varma maruthuva Maiyam on WhatsApp.

அனைவருக்கும் வணக்கம் முருங்கைப் பட்டை குடி எண்ணெய்; முருங்கைப்பட்டையினை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுகின்ற முருங்கைப் ப...
28/06/2025

அனைவருக்கும் வணக்கம்
முருங்கைப் பட்டை குடி எண்ணெய்;

முருங்கைப்பட்டையினை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுகின்ற முருங்கைப் பட்டை குடி எண்ணெய் சித்த மருத்துவத்தில் உள்ளுக்கு குடிக்க கொடுக்கப்படுகின்ற எண்ணெய் வகையாகும்.

இம் மருந்தானது சிற்றாமணக்கு எண்ணெயை கொண்டு தயார் செய்யப்படுகிறது இந்த முருங்கைப் பட்டை குடி எண்ணெய்யை மாதம் மூன்று முறை மட்டுமே எடுக்க வேண்டும் இம்மருந்தினை உள் மருந்தாக எடுக்கும் பொழுது பத்தியம் காக்கப்பட வேண்டும்.

மருந்தானது மிக சூடு தன்மையை உடையதாகியால் இம்மருந்தினை எடுக்கும் பொழுது பால், தயிர், வெண்ணெய் ,மோர் போன்ற குளிர்ச்சியான பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


இம்மருந்தானது இருதயம் ,நுரையீரல் போன்ற உறுப்புகளை வன்மை அடையச் செய்கின்றது,

மேலும் மண்ணீரல் ,கல்லீரல் வீக்கத்தை சரி செய்கின்றது ,இடுப்பு வலி போன்ற வாத நோய்களை நீக்குகிறது .

மருந்தினை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மட்டும் உபயோகித்து வர மேற்கொண்ட நோய்கள் நீங்கும், மேலும் இருதயம் மற்றும் நுரையீரல் வன்மையடையும்
நன்றி வணக்கம் ,
வாழ்க சித்தர் புகழ்...
வளர்க சித்த மருத்துவம....
#இருதயம் #நுரையீரல்
Dr karthikeyan samydurai B.S.M.S, M.D
Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti, Karur,
97869672652
Message Kayasiddhi siddha Varma maruthuva Maiyam on WhatsApp. https://wa.me/919786962652

சுண்டைவற்றல் சூரணம்; சுண்டைக்காய் வற்றல், கருவேப்பிலை, மாங்காய் பருப்பு, நிலவாகை ,இந்துப்பு, கருஞ்சீரகம், போன்ற சரக்குகள...
19/06/2025

சுண்டைவற்றல் சூரணம்;
சுண்டைக்காய் வற்றல்,
கருவேப்பிலை,
மாங்காய் பருப்பு,
நிலவாகை ,
இந்துப்பு,
கருஞ்சீரகம், போன்ற சரக்குகளை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுகின்ற சுண்டைவற்றல் சூரணம் சித்த மருத்துவத்தில் வயிறு தொடர்பான நோய்களுக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிறப்பாக கையாளப்படுகிறது.

மேலும் சூரணம் ஆனது சீதக்கழிச்சல், கடுப்பு கழிச்சல் ,பெருங்கழிச்சல் மற்றும் மாந்தக் கழிச்சல் போன்ற நோய்களுக்கு பசு தயிருடன் சேர்த்து கொடுத்து வர மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகக்கூடிய கீரிப்பூச்சி போன்ற வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதற்கு மாதம் மூன்று முறை இதை தொடர்ந்து கொடுத்து வர நல்ல உடல் பலத்தை பேணி காக்கும் .

நன்றி வணக்கம் ,
வளர்க சித்த மருத்துவம்
வாழ்க சித்தர் புகழ்

Dr.கார்த்திகேயன் சாமிதுரை MD
காயசித்தி சித்தா வர்மா மருத்துவ மையம் ,
பள்ளப்பட்டி ,
கரூர் மாவட்டம்.
தொடர்புக்கு;9786962652

Message Kayasiddhi siddha Varma Maruthuva Maiyam on WhatsApp. https://wa.me/919786962652

பள்ளபட்டி காயசித்தி சித்தா வர்மா மருத்துவ மையத்தின்  இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள்
07/06/2025

பள்ளபட்டி காயசித்தி சித்தா வர்மா மருத்துவ மையத்தின் இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள்

உடல் சூட்டை ஓட்டும் குளிர்தாமரை
07/02/2025

உடல் சூட்டை ஓட்டும் குளிர்தாமரை

மேனி தைலம்
07/02/2025

மேனி தைலம்

Dr.karthikeyan samidurai B.S.M.S, M.D Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti, Karur (dt)9786962652
02/02/2025

Dr.karthikeyan samidurai B.S.M.S, M.D
Kayasiddhi siddha Varma maruthuva Maiyam, Pallapatti, Karur (dt)
9786962652

Address


Opening Hours

10:00 - 14:00

Telephone

+919786962652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kayasiddhi siddha varma medical center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kayasiddhi siddha varma medical center:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram