தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj

  • Home
  • India
  • Ramanathapuram
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj கீழக்கரையில்
இலக்கை நோக்கி இளைஞர்களின் எழுச்சி மாநாடு

12/11/2022
14/06/2022

இறைவனின் திருப்பெயரால்…….

#முக்கிய_அறிவிப்பு

ஃபாசிச பாஜக ஆட்சியாளர்களுக்கு எதிராக குனூத் நாஸிலா ஓதுவோம்

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இழிவாகப் பேசிய நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் தரக்குறைவான விமர்சனத்தை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி அப்பாவி முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை அநியாயமாக புல்டோசரை வைத்து இடித்தும் பாசிச பாஜக ஆட்சியாளர்கள் அநியாயம் செய்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் சொத்துக்களையும், வணிக நிறுவனங்களையம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்து அவர்கள் அநியாயமான தாக்குதல்களை பாசிச பாஜக வின் காவல்துறை செய்து வருகிறது. வட மாநிலங்களில் பாசிச ஆட்சியாளர்களால் முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல் சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாசிச பாஜக ஆட்சியாளர்கள் ஆளும் பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மற்றும் மாணவிகள் முக்காடு அணிவதற்கும் சட்டத்திற்கு புறம்பாக மறைமுகமான தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடகா போன்ற மாநிலங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக் கணக்கான மாணவிகள் தமது கல்வியை இழந்துள்ளனர்.

ஏராளமான இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை அபகரித்து இடிப்பதற்கான சதிச் செயல்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. இவற்றை சமூக ஊடகங்களும், பல செய்தி நிறுவனங்களும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.

நபியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து போராடிய எனது மகனை அநியாயமாகக் கொன்றுவிட்டார்களே என ஒரு தாய் கதறும் காட்சிகளால் நமது கண்களும் குளமாகின்றன.

இவைகளை கண்டிக்கும் விதமாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கிறோம். இது போன்ற அக்கிரமங்கள் அரங்கேறும் நேரத்தில் அல்லாஹ்விடம் முறையிடவும் அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டியுள்ளார்கள்.

இது போன்று அநியாயமான முறையில் மக்கள் கொல்லப்படும் போதும், பாதிப்பிற்குள்ளாகும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாகவும், அக்கிரமக்காரர்களுக்கு எதிராகவும் ஐவேளை தொழுகைகளில் குனூத் நாஸிலா எனும் பிரார்த்தனையை செய்வதற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

ஆகவே ஜனநாயக ரீதியில் போராடுவோரை வன்முறையாளர்களாகச் சித்தரித்து அப்பாவி முஸ்லிம்களை ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்கும் உ.பி முதல்வர் அக்கிரமக்கார யோகி ஆதித்யநாத்துக்கும். அவரது பரிவாரங்களுக்கும் எதிராக அல்லாஹ்வின் சாபத்தை வேண்டி குனூத் நாஸிலா ஓதும் படியும், பாதிக்கப்பட்ட மக்களின் மன அமைதிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

"கடமையான ஐவேளை தொழுகைகளிலும். அல்லது ஒரு சில கடமையான தொழுகைகளிலும் ஓதிக்கொள்ளலாம்"

குனூத் நாஸிலாவின் சட்டங்கள்.

🎤 ஐவேளே தொழுகையில்
🎤 கடைசி ரக்அத்தில்
🎤 ருகூவுக்கு பின்பு
🎤 இமாம் சப்தமாக
🎤 பின்பற்றி தொழுவோர் சப்தமில்லாமல்
🎤 ஆமின் இல்லாமல்
🎤 தாய் மொழியிலும் குனுத் ஓத வேண்டும்.

குனூத் நாஸிலா பற்றிய சட்டங்கள் பற்றி மேலும் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://onlinetntj.com/articles/kunuth-naasilah

இப்படிக்கு,
ஆர்.அப்துல்கரீம்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

https://youtu.be/YjNe8UM08P0
29/01/2022

https://youtu.be/YjNe8UM08P0

கீழக்கரையில் 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமந.....

ஏக இறைவனின் திருப்பெயரால்கீழக்கரையில் 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்.....தமிழ்நாடு தவ...
27/01/2022

ஏக இறைவனின் திருப்பெயரால்

கீழக்கரையில் 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாம்.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை அனைத்துகிளைகள் சார்பில் 73வது இந்திய குடியரசு தினத்தன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் J.Mஆரிப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.P.T.சுபாஷ் அவர்கள் துவங்கிவைத்தார்.

கீழக்கரை அனைத்துகிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பிறமத சகோதர,சகோதரிகள் உள்பட 45 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.

இந்த சிறப்பான முகாமின் ஏற்பாடுகளை மேற்குகிளைத் தலைவர் சாபிர் தலைமையில் அனைத்துக்கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்....

17/06/2021

A Massive Blood Donation Camp jointly Organised by TNTJ RAMANATHAPURAM South District and RAMANATHAPURAM Government Medical College Hospital on 19.06.2021 Morning 10 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் கொரோனா பேரிடர் கால மாபெரும் இரத்ததான முகாம் 19.06.2021 காலை 10 மணி முதல்






*கீழக்கரையில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை அனைத்துக...
12/06/2021

*கீழக்கரையில் கொரோனா பேரிடர் உதவி மையம் துவக்கம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை அனைத்துகிளைகள் சார்பாக கொரோனா பேரிடர் காலத்தில் ஆம்புலன்ஸ் சேவை(ஆக்ஸிஜன் வசதியுடன்),அவசர இரத்ததான உதவி,பசித்தோருக்கு உணவு வழங்குதல்,மருத்துவமனை குறித்த தகவல்கள்,மருத்துவ ஆலோசனைகள்,கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தல்,ஜனாஸாக்களை குளிப்பாட்டுதல்,வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு,உடல்வெப்ப அளவு ஆகியவற்றை பரிசோதித்தல்,கபசுர குடிநீர் வினியோகம்,உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவந்தோம் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பணிகள் தொடர்ந்து செய்யும் செயல்திட்டத்தின் அடிப்படையில் கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து சமுதாய மக்களும் மேற்கண்ட உதவிகளுக்கு 24 மணி நேரமும் அவசர உதவிக்கு அழைக்கும் விதத்தில் *கொரோனா பேரிடர் உதவி மையம்* இன்ஷாஅல்லாஹ்... வருகின்ற 12.6.21 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு புதுத்தெருவில் அமைந்துள்ள TNTJ தெற்குகிளை அலுவலகத்தில் துவங்கப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*24×7 ஹெல்ப்லைன்* *தொடர்புக்கு*
*8220070880*

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கீழக்கரை அனைத்து கிளைகள்.
இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்            தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடல் அருகில்  மாவட்ட தலைமையகத...
08/06/2021

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடல் அருகில் மாவட்ட தலைமையகத்தில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறப்பு.

கொரோனா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் 08−06−2021 அன்று செவ்வாய் கிழமை கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம்
திறக்கப்பட்டது.

காவல்துறை ஆய்வாளா் சரவண பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகளை பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.முகம்மது அயூப்கான் தலைமை ஏற்றார் மேலும் மாவட்ட துணை செயலாளர்கள் தஸ்தக்கீர்,ஜியாவுல் ஹக்,சுல்த்தான் மற்றும் பேரிடர் உதவி மைய பொருப்பாளர் யாசர் அரபாத் முன்னிலை வகுத்தனர்

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, நோய்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
நோய் தொற்று கண்டறியும் முகாம் ஏற்பாடு செய்தல், தடுப்பூசி முகாம், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் வசதி, தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல், நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல் வழங்குதல் நோய் எதிர்ப்பு சக்திக்கான கபசுர குடிநீர் வழங்குதல், கொரோனா நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்தல், மருந்து உபகரணங்கள் கிடைக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

*HELPLINE:9342387346*

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐம்பது மையங்கள் திறக்கப்படுவதாக தெரிவித்தனர்.

பத்திரிக்கை தொடர்பாளர்
ஆரிஃப்கான்
மாவட்ட செயலாளர்
9003399588

Address

Ramnad Road, Keelakarai, Ramanathapuram Sub-District
Ramanathapuram
623517

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை Tntj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram