Siththariyal Foundation.Trichy

  • Home
  • Siththariyal Foundation.Trichy

Siththariyal Foundation.Trichy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siththariyal Foundation.Trichy, Yoga studio, Healer Palanisamy, 33/A, North Street, Elandaikudam, Ariyalur District., .

புதுவுடல் பெறலாம். வாங்க !************************************அனைவருக்கும் வணக்கம் வீட்டில் இருந்தபடியே எளிமையான முறையில...
06/12/2022

புதுவுடல் பெறலாம். வாங்க !
************************************

அனைவருக்கும் வணக்கம் வீட்டில் இருந்தபடியே எளிமையான முறையில் பத்தியம் கடைப்பிடித்து உடல் எடையை குறைத்துக் கொள்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பு. பத்தியம் என்ற உடனே பயப்படாதீர்கள் ! உடலுக்கு ஒவ்வாத காரணிகளை விளக்கிக் கொண்டால்தான் உடல் இயல்புக்கு வரும்.

உடல் மனம் உயிர் சிந்தனை இவற்றில் பெரிய மாற்றம் ஏற்படாமல் உடல் எடையை குறைத்துக் கொள்வதற்கு வாய்ப்பில்லை பல்லாயிரக்கணக்கில் செலவு செய்த முதல் எடை குறையவில்லை என்றால் அதற்கு பின்பு பெரிய காரணம் இருக்கிறது என்று பொருள்.

நமது திருமூலர் மருத்துவ நிலையம் இதுவரை நடத்திய பல வகுப்புகளில் பல அன்புள்ளங்கள் உடல் எடையை குறைத்திருக்கிறார்கள். அதற்கான சான்று உங்களுடைய வகுப்பிலும் பகிர்ந்து அளிக்கப்படும். 2023 ஆம் ஆண்டு உடல் எடையை குறைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள் மட்டும் இணைந்து கொள்ளவும்.

இந்த வகுப்பில் கலந்து கொள்வதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளை பின்பற்றக் கூடியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளவும். இந்த 48 நாள் பத்திய முறைகளில் வீட்டு மருந்துகள் மட்டுமே பரிந்துரை செய்யப்படும்.

விற்பனைக்கு இருக்கும் டப்பா மருந்துகளை ஒழிக்க வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம் அப்படி இருக்கும்போது நாம் தயாரிக்க மருந்துகளை மட்டுமே நாம் உட்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய கொள்கை ஆகும். மேலும் விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.

வருகை தரும் அனைத்து நல் உள்ளங்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன். நன்றி

என்றும் அன்புடன்
ஹீலர் பழனிச்சாமி
தொடர்பு எண் : 6382857668
திருமூலர் மருத்துவ நிலையம். திருச்சி
சித்தரியல் விளக்கவுரை அறக்கட்டளை

நெற்றிக்கடவுள்*********************சுடரேற்றி வழிபடுவது தமிழர் மரபு. அதன்படி நாளைய தினம் இல்லத்தில் தமிழ் பதிகங்களை மனதில...
05/12/2022

நெற்றிக்கடவுள்
*********************

சுடரேற்றி வழிபடுவது தமிழர் மரபு. அதன்படி நாளைய தினம் இல்லத்தில் தமிழ் பதிகங்களை மனதில் பாடிக்கொண்டே சுடரேற்றி வழிபடுங்கள். " இல்லக விளக்கது இருள் கெடுப்பது " என்ற ஆசான் திருநாவுக்கரசரின் பதிகம் உங்களை மனதளவில் வழிநடத்தும்.

" விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின் " என்று வரும் திருமந்திர பாடல் உள்முகத் தெளிவை வழங்கும் தன்மையுடையது. இப்படிப்பட்ட பாடல்கள் இன்னும் நமது கைகளில் இருக்கிறது என்றால் அதுவே நம் முன்னோர்களால் நமக்கு கிடைக்கப் பெற்ற வரம் என்றே கருதுகிறேன்.

புறத்தில் செய்ய சொல்லும் எல்லா சடங்குகளுமே அகத்தில் இருக்கும் கருப்பொருளை நோக்கி பயணப்பட வேண்டும் என்பதற்காக தான். நெற்றியில் இயங்கும் நீளமான விளக்கினை பாரடா என்றுகூட ஒரு சித்தர் பாடல் கூறுகிறது. ‌

நெருப்பறை திறந்து விட்டால் நீயும் நானும் ஒன்றல்லோ என்பது ஆசான் சிவவாக்கியரின் அனுபவ ஞானம். இவ்வாறான ஞான கருத்துக்களை எல்லாம் இந்த பிறவியில் தவற விட்டு விடாதீர்கள். ஆன்மீக கருத்தெல்லாம் கடைசில பாத்துக்கலாம் என்று இருந்து விடாதீர்கள்.

இன்றைய சிந்தனை தான் நாளைய தெளிவு என்று கருதி செயல்படுங்கள். இல்லத்தில் விளக்கு ஏற்றுவது மனதில் இருக்கும் இருளை அகற்றும் என்று முன்னோர்களும் வலியுறுத்தி இருக்கின்றனர். நானும் பல தருணங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்கிறேன்.

மனநல சிக்கல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வதே இயற்கையான இறையின் அரவணைப்பு என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஆரவாரங்களும் மகிழ்ச்சி கொந்தளிப்பும் இறைவேட்டல் இல்லை. அமைதியும் சாந்தமுமே ஆழமான இறை சிந்தனை மற்றும் இறைவேண்டல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உள்ளொளி கண்டுவிட்டால் இந்த ஒளியெல்லாம் தேவையில்லை என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். உள்ளொளி கண்டவர்களுக்கு புறத்தில் பிரகாசிக்கும் விளக்கு ஒளி இன்பத்தை மட்டுமே வழங்கும்.

ஆடாது ஆசையாது நின்று சுடர்விடும் விளக்குபோல் உன்மனமும் ஆடாது அசையாது நின்று இறைவனை உணர வேண்டும் எனவே தியானத்தின் போது இந்த கருத்தை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

வெளியில் பார்த்த சுடரினை கற்பனையாக மனதில் நினைத்துக் கொண்டு உண்மையான உள்மன சுடரினை கண்டேன் என்று சொல்பவர்களும் ஏராளம்.

அகத்தின் உள்ளே பிரகாசிக்கும் அருட்பெரும் சுடரினை காணுவது யாருக்கும் எளிது. அதை அரிதாக்கி கொண்டு அல்லல் படும் மனித இனம் இன்னும் எவ்வளவு நாள் துன்புறுமோ தெரியவில்லை.

சுடரினைக் காணும் சூக்குமம் அறிவாய்
சுடரினைக் கண்டு சூக்குமம் தெளிவாய்
சூக்குமம் இல்லா சுடரினை - யானும்
சூக்குமமாய் சொல்ல விளைகிறேன்.

திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்

அறக்கட்டளை திறப்பு விழா அழைப்பு ********************************************நம்முடைய உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்...
04/12/2022

அறக்கட்டளை திறப்பு விழா அழைப்பு
********************************************

நம்முடைய உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கம். பெரும் பயணத்தின் தொடக்கமாக இந்த சித்தரியல் விளக்கவுரை அறக்கட்டளை துவங்கப்படுகிறது.

பல விஷயங்களை முறையாக ஆவண படுத்த வேண்டும் என்றால் இப்படி ஒரு வழிமுறை தேவைப்படுகிறது என்பதைக் கருத்தில் உணர்ந்து தங்களின் பேராதரவோடு இதனை தொடங்குகிறோம்.

அப்படியே தத்தி தவழ்ந்து ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று உணர்கிறேன். வருகின்ற 09/12/2022 வெள்ளிக்கிழமை அன்று அறக்கட்டளை திறப்பு விழா நடைபெற இருப்பதால் நம்முடைய உறவுகள் அனைவருமே குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவே நமது குடிலுக்கு வந்து தங்கி விடுங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

எதிர்காலத்தில் அதிகரிக்கப் போகும் தீவினை கண்டு அச்சப்படாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மனதில் கொண்டு ( ஓதுதல் ஓதுவித்தல் ) என்ற தலைப்பில் தொல்காப்பியம் கூறும் ஆழமான கருத்துக்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். என்ற விருப்பத்தாலும் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு எதிர்வரும் காலங்களில் சூழல் நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் அதிலிருந்து விலகுவதற்கும் நிறைய புரிதல் தேவைப்படுகிறது. எனவே இந்த தலைப்பில் பல்வேறு கருத்துக்களை உள்வாங்க வேண்டிய தேவை இருக்கிறது.

தொல்காப்பியருக்கு பிறகு வந்த தமிழ்ச் சித்தர்கள் விட்டுச் சென்ற ஆழமான வாழ்வியல் நுட்பங்கள் செறிந்த கருத்துக்களை சித்தரியல் விளக்கவுரை அறக்கட்டளை முறையாக ஆவணப்படுத்தி பாடமாகவும் நூலாகவும் வெளிப்படுத்த இருக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஆவலோடு இருக்கிறது. இதுவரை வெளி வராத தமிழ்ச் சித்தர்கள் அருளிச் செய்த அரியபல இரகசியங்களை தகுதி உள்ளவருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கற்பிக்க இருக்கிறோம். நமது அறக்கட்டளையின் முதல் நோக்கமே மரபுவழி மருத்துவம் செய்பவர்களுக்கு பின்புலமாக இருப்பதுதான்

இரண்டாவது தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 5,000 வர்ம மருத்துவம் செய்யக்கூடிய சிகிச்சையாளர்களை உருவாக்க வேண்டும் என்பது எதிர்காலத்தில் இறைவன் எமக்கு கொடுத்துள்ள பெரும்பணி. அதனை சிறப்போடு செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்த திறப்பு விழா துவங்குறது.

நம் முன்னோர்கள் அருளிய எல்லா நூல்களுமே தமிழர்களாகிய நாம் கற்று உணர வேண்டிய அரியபல நுட்பங்கள் அடங்கிய பணுவல்தான் அப்படி இருக்கும்போது நாம் சித்தரியல் நூல்களை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சித்தர்களின் கருத்து நடைமுறையில் இருந்திருக்கிறது. அதற்கு சான்றும் இருக்கிறது என்பதுதான் சிறப்புச் செய்தி

தமிழ்ச் சித்தர்களின் அரிய பெரிய கருத்துக்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையிலிருந்து விலகி மழுங்கி மங்கி போய் விட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த காலத்தில் சித்தர்கள் அருள் செய்த கருத்துக்களின் எச்சங்கள் கூட எங்குமே இல்லை என்பது தான் வருந்தக்கூடிய செய்தி

நம்முடைய முன்னோர்களான தமிழ்ச் சித்தர்களாகிய பேரறிஞர்களின் சிந்தனையில் இருந்து வெளிப்பட்ட பல அறிவியல் கருத்துக்கள் மூடநம்பிக்கை வளர்த்தெடுக்கும் ஆன்மீக கருத்து போல ஆகிவிட்டது. சித்தர்களை சாமியார்கள் போல பார்க்கும் மூட நம்பிக்கை வாதிகள் அதிகரித்து விட்டனர்.

சித்தர்கள் பாடல்களில் வைத்திருக்கும் ஒவ்வொரு சொல்லின் ஆழத்தை எடுத்து விவரிக்கும் ஆற்றல் மிகுந்த மனிதர்கள் இந்த காலத்தில் இல்லை என்பதை அவ்வப்போது புரிந்து கொள்ள முடிகிறது. இனியாவது அப்படிப்பட்ட மனிதர்களை அல்லது குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பது நம்முடைய எதிர்கால கொள்கை

நம்முடைய சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்ற இயற்கை தொழில்நுட்பம் தான் நமக்கான மரபுக் கல்வி என்பதை பல்வேறு இடங்களில் நான் பதிவு செய்து கொண்டே வருகிறோம். இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதற்கான பல்வேறு நோக்கங்களும் கொள்கைகளும் இருக்கின்றன அவற்றை எடுத்து விவரிக்கும் ஒரு நாளாக இந்த நிகழ்வு விளங்கும்.

நாம் அடிக்கடி தமிழ்ச சித்தர்கள் தமிழ்ச் சித்தர்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் அயல் தேசங்களில் இருந்து கல்வி கற்பதற்காக நம்முடைய சித்தர்களிடம் வந்து தங்கி படித்தவர்கள் எத்தனையோ பேர் அவர்களிலும் பின் நாட்களில் சித்தர்கள் என்றே அறியப்பட்டனர். அவர்களை தமிழ்ச் சித்தர்கள் என்ற பட்டியலில் சேர்க்கக்கூடாது.

இங்கு ஒரு பெரிய குழப்பம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லா சித்தர் பெருமக்களையும் இணைத்து ஒரே நோக்கில் அடையாளம் காட்டப்படுகிறது அது பெரும்பிழையாகும். அயல் தேசத்திலிருந்து வந்த தங்கி படித்தவர்களை நாம் குற்றம் சொல்லவில்லை. ஆனால் எல்லாம் ஒன்று தான் என்பதுபோல சித்தரிப்பது பெரும் குற்றமாகும்.

தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழிலேயே தன்னுடைய கருத்துக்களை இந்த உலகத்திற்கு பதிவு செய்த சித்தர் பெருமக்களின் பெருங்கருத்துக்களை வாழ்வியல் பாடமாக நடத்துகிறோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொள்ளுங்கள்.

தமிழ் மொழியில் எத்தனை இயல்கள் இருந்தாலும் சித்தரியல் என்று ஒன்று இருக்கிறது. எத்தனை தமிழர்கள் இதனை அறிவர். தெரியப்படுத்தவோம்.

இறையின் திருவருள் உங்களுக்கு வழிகாட்டும். தமிழ்ச் சித்தர்களின் சித்தம் உங்களை வாழவைக்கும். நன்றி

என்றும் அன்புடன்.
அனைவரும் வருக !
ஹீலர் பழனிச்சாமி
திருமூலர் மருத்துவ நிலையம். திருச்சி

Address

Healer Palanisamy, 33/A, North Street, Elandaikudam, Ariyalur District.

621851

Telephone

+916382857668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siththariyal Foundation.Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram