25/07/2022
ஸ்ரீவிவேகானந்த சேவாலயம், பூண்டியின் கிளை ஸ்தாபனம் " ஸ்ரீ சாரதா தேவி நிவாஸ் " என்ற பெயரில் ஒரு சேவா ஸ்தாபனம் மற்றும் சேவாலயத்தின் மத்திய அலுவலகம் கட்டிடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கோவை, பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண வித்யாலயத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி ஞானபூர்ணானந்தஜி மகராஜ் அவர்கள் கட்டிடத்தைத் திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார்.
ஸ்ரீ சாரதா நிவாஸில் ஏழை மாணவர்களுக்கு
இலவச ட்யூசன், யோகா வகுப்புகள், இசைப்பள்ளி, தேவாரம், திருவாசகம், திருமறை வகுப்புகள் போன்றவைகள் நடத்தப்படும் என்று சேவாலயத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில் நாதன் தெரிவித்தார்.