Maayon PAIN Relief Clinique

Maayon PAIN Relief Clinique Ayushpathy Research Centre & Healthcare Training Institute
Located in Kattupakkam,Chennai. We offers

Maayon Pain Relief Clinique
(Its an unit of Sathya Clinic),

+ 91 98431 18402
+91 86955 45234
+91 63811 89796

 #வர்ம_மருத்துவம்_1வர்மம் என்ற சொல்லுக்கு உயிர் - ஆற்றல் பற்றிய அறிவியல் எனப்பொருள்.இது 5000 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவ...
01/02/2025

#வர்ம_மருத்துவம்_1

வர்மம் என்ற சொல்லுக்கு உயிர் - ஆற்றல் பற்றிய அறிவியல் எனப்பொருள்.
இது 5000 ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவ முறையாகும்.
லெமுரியா கண்டம் எனப்படும் குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மருத்துவமாகும்,
ஆதலால் வர்மமே மருத்துவ முறைகளுக்கு முன்னோடியாக உள்ளது எனக்கூறலாம்.

ஏனெனில் லெமுரியா கண்டத்திலேயே முதல் உயிர் தோன்றியதாக அறிவியலாளர்கள் சான்று பகர்கின்றனர்.
லெமுரியர்கள் எனும் தமிழர்கள் நாகரீகத்தின் உச்சத்திருந்த காலக்கட்டத்தில் கடற்கோளால் லெமுரியா எனும் குமரிக்கண்டம் அழிந்து மீதமுள்ள துணிக்கையான புதுக்குமரி மண்ணில் விட்டுச்செல்லப்பட்ட மருத்துவமே வர்ம மருத்துவமாகும்.

வர்ம மருத்துவ அறிவியல் தமிழ் மொழியிலேயே தோன்றியது.
வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த இந்திய முறை மருத்துவமாகும்.
இது ஆதிசித்தன் சிவனால் தோன்றுவிக்கப்பட்டு, அகத்தியர் மற்றும் போகர் போன்ற சித்தர்களால் வளர்க்கப்பட்டடு,
பின்னர் பல தமிழ் சான்றோர்களால் மருத்துவமாக கையாளப்பட்டுவந்ததுள்ளது. இவர்களெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்த லெமுரிய வழித்தோன்றல்களாக வந்த தமிழர்களாவர்.
தமிழ் பாரம்பரிய மருத்துவமான வர்ம மருத்துவத்தை தமிழர்கள் மருத்துவமாக மட்டுமன்றி, தற்காப்புக் கலையாகவும் பயன்படுத்தினர்

மனிதன் தாவர, வேதியியல் மற்றும் விலங்கின சரக்குகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்த காலத்துக்கு முன்னதாகவே, கை விரல்களால் பரிகாரம் தேடிக் கொண்ட ‘கை-மருத்துவம்’வர்மமேயாகும்.
வர்ம மருத்துவமே மிகப்பழமை வாய்ந்த மருத்துவம் எனக்கூற நமக்கு இதைப்போன்ற பல காரணங்கள் உண்டு.
காலப்போக்கில் வர்மமருத்துவமும் பல மூ,கை,தாது,சீவக மருந்துகளை தன்னகத்தே ஏற்றுக்கொண்டு, தனக்கே உரித்தான உறுதியான பல அடிப்படைக் கொள்கைகளையும் தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டது.

பின்னாட்களில் பல அக மற்றும் புற மருந்துகளை தனதாக்கி "வர்ம முறை மருத்துவம்" எனத்தனித்துவமாக வளர்ந்துள்ளது.

இந்திய முறை மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா மருத்துவங்களை காட்டிலும் காலத்தால் தொன்மையானதாகையால் இதுவே முதல் "இந்திய மருத்துவம்"எனக் கணிக்க இடமுண்டு.

மனித உடலில் 108 அழுத்துமிடங்கள் அல்லது வர்மங்கள் உள்ளன
அவைகளை முதலில்
தெரிந்துகொள்வோம் பிறகு மற்றதை படிப்படியாக தெரிந்துகொள்வோம்.

மனித உடல் பகுதியில்,

25 வர்மங்கள் தலை முதல் கழுத்து வரை உள்ளது.

45 வர்மங்கள் கழுத்து முதல் தொப்பூழ் வரை உள்ளது.

9 வர்மங்கள் தொப்பூழ் முதல் கை வரை.

14 வர்மங்கள் கைகளில் உள்ளது.

15 வர்மங்கள் கால்களில் உள்ளதென்று
சித்த வைத்தியம் குறிப்பிடுகிறது:

சரி இதில் வர்மங்கள் செயற்பாடுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

64 வாத வர்மங்களும்

24 பித்த வர்மங்களும்

6 கப வர்மங்களும்

6 உள் வர்மங்களும்

8 தட்டு வர்மங்களும் உண்டு இதை பற்றி வரும் பதிவுகளில்
தெளிவாக எழுதுகிறேன்,
பொதுவாக வர்மம் 96 தத்துவ கோட்பாட்டின் படி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றது,
மனித உடலின் உள்ள உயர்நிலை ஓட்டங்கள் சந்திக்கும் பாகங்களில் எண்ணெய் தேய்த்து தடவிக்கொடுத்தும் நீவிவிட்டும் நரம்புகள், எலும்புகள், தமணிகள் ஆகியவைகளை அழுத்தி சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவத்தின் மூலம் நோய்கள் குணமாகிறது.

இவ்வாறு செய்யும் போது உடல் சமநிலைப்பட்டு நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட வைக்கும் இந்த முறை வர்மமுறை என்பார்கள்
பாதிக்கப்பட்ட பாகங்களின் மீது மூலிகை மருந்து போடுதல், ஒத்தடம் கொடுத்தல், பற்றுப்போடுதல் போன்றவை கையாளப்படும்

மனித உடலில் உயர்நிலை ஓட்டம் உள்ள பகுதியை வர்மக்கலம் என்பார்கள்
அது
தசை, தமணி, நரம்பு,எலும்புசந்திகள் ஆகிய இடங்கள் உயர்நிலையாகும்
அதாவது பிராணன் எனும் வாயு இருக்கும் இடங்கள் ஆகும்
ஒரு மனித உடலில் 108 வர்ம புள்ளிகள் உள்ளது
அதை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்
12.வர்மங்களை படு வர்மங்கள் என்றும்,
96. வர்மங்களை கொடுவர்மங்கள் என்றும்,
இதிலும் 8வர்மங்களை தட்டு வர்மங்களாக பிரிக்கப்படுகிறது.

கை'கால் ஆகிய இடங்களில் 44.வர்மங்களும்,
தலையில் மட்டும் 23வர்மங்களும்,
நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் 33வர்மங்களும்
ஆக மொத்தம் 108 வர்மங்கள்
என நம் உடலில் இருக்கின்றது.

http://archti.wixsite.com/archti

https://chat.whatsapp.com/FdDmGVinnVdKLOJdrhpdLq

Welcome to the Ayushpathy Research Centre & Healthcare Training Institute Our Institute located in Kattupakkam, Chennai. Ayuspathy Research Center & Healthcare Training Institute (ARCHTI) offers Diploma & Master Diploma programs for individuals interested in pursuing , Acupuncture, Varmam,Bio-Energy...

Study BNYS & bcm Naturopathic Doctor
17/01/2025

Study BNYS & bcm Naturopathic Doctor

V.B.-13 Benshen Root of the Spirita) NatureYang Wei Mai PointMeeting Point of the Three Yang Muscle Tendon of the Arm.(b...
17/01/2025

V.B.-13 Benshen Root of the Spirit

a) Nature
Yang Wei Mai Point
Meeting Point of the Three Yang Muscle Tendon of the Arm.

(b) Actions
Calm the Mind (Shen) and settle the Ethereal Soul (Hun)
Submit the Liver Yang
Calm the Wind
Solve the Flea
Gather the Essence (jing) to the head
Clears the brain

(c) Indications

Manic behavior, darn it
Headache , dizziness
Epilepsia, hemiplejia, convulsiones
Clear saliva vomiting, epilepsy with frothy saliva in the mouth.

(d) Comments

V.B.-13 is a very important point for mental and emotional problems. It is widely used in psychiatry for schizophrenia and personality disorder in combination with C-5 Tongli and V.B.- 38 Yangfu.
It is also indicated when the person has persistent and unjustified feelings of jealousy and suspicion.

It has a very powerful effect to calm the Mind, settle the Ethereal Soul (Hun) and alleviate anxiety arising from constant worry and fixed thoughts. Its effect is expanded when combined with Du-24 Shenting.

Its profound effect on the mind and emotions is due to its action of "gathering" the Essence (Jing) in the head. Kidney Essence is the Root of our Qi from the Earlier Heaven and is the foundation of our mental and emotional life. A strong Essence is the fundamental prerequisite for a clear mind (Shen) and stable emotional life. This is the meaning of the name “Root of the Spirit”, that is that this point brings together the Essence which is in turn the Root of the Mind (Shen) and the Spirit. The Kidney Essence is the source of the Marrow that fills the Brain (called the Marrow Sea): V. B-13 is a point where the Essence and the Marrow “meet”.

The “Great Dictionary of Acupuncture” says that this point “makes the Mind [Shen] go back to its root”: The “root” of the Mind is the Essence, therefore this point “gathers” the Essence and the Brain and has an influence on the Mind. As it connects the Mind and Essence, it also treats the Heart and Kidneys, and therefore the Mind (Shen) and Willpower (Zhi): for this reason, it is an important point in the treatment of depression.

When combined with other points that nourish the Essence (such as Ren-4 Guangyuan), V.B.-13 draws the Essence to the head with a calming effect for the Mind and strengthening mind clarity, memory, and willpower. The connection between V.B.-13 and the Essence is confirmed by the text “An Enquiry into Chinese Acupuncture” which lists among other indications for this point: “excessive menstrual bleeding, impotence and seminal emissions. ”

V.B.-13 also subdues Liver Yang and can therefore be used as a local point in chronic headaches due to rise of Liver Yang. It also calms the Internal Wind and is effective in Wind Attacks and Epilepsy. Finally, Phlema resolves in the context of mental and emotional problems or epilepsy, that is, it opens the orifices of the mind when these are obstructed by Phlema. The book “Explanation of the Acupuncture Points” says: “The indications of V.B.-13 show that it eliminates the three pathogen factors Wind, Fire and Flea from Yang Minor, in which case this point should be dispersed.” ”

Thx
-Giovanni Maciocia-

ANXIETY - NO WORRIES TRY THIS ACU POINTS.
31/07/2022

ANXIETY - NO WORRIES TRY THIS ACU POINTS.

ANXIETY - NO WORRIES TRY THIS ACU POINTS. Pugazh புவி புகழ்

27/06/2022

Study BNYS & BECOME NATUROPATHY DOCTOR

04/06/2022
11/05/2022

சித்த வைத்திய வரலாறு

விருதை சிவஞான யோகி அவர்களால் தமிழ் வைத்திய கழகம் என்ற பெயரில் கோவில்பட்டியில் தொடங்கி இன்றுடன் 100 வருடங்கள் ஆகிறது.. சித்த மருத்துவ சங்கம் மட்டுமல்லாது முதன் முதலாக” திருவிடர் கழகம் “ , ”பத்திவிளை கழகம்” என்ற பெயர்களில் கோவில்பட்டியில் சங்கங்கள் அமைத்து இதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவச் சாலை ஒன்றை நிறுவி தீர்க்க முடியாத பல பெரு நோய்களை தமிழ் சித்த வைத்தியத்தின் மூலம் தீர்த்து வைத்தவர். இவரது சம காலத்தில் தமிழ் வைத்தியத்தை பேறு பெற வைத்தவர்கள் ஒரு பைசா தமிழன் இதழ் நடத்திய அயோத்தி தாச பண்டிதர், கருணாமிர்த சாகரம் ஆபிரகாம் பண்டிதர், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் போன்ற பலரை குறிப்பிடலாம்.
திரு.வி.க. அவர்கள் விபத்தில் வலது கை முடங்கியதற்கு பண்டிதர் அயோத்தி தாசரிடம் தைல சிகிச்சை முறையில் பண்டுவம் பார்த்த முறையையும் நலம் பெற்று திரும்பியதையும் வாழ்க்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிதர் ஆனந்தம் மறைமலை அடிகளுக்கு தமிழ் மருத்துவம் பார்த்தவர். பல தமிழ் புலவர்களுக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்தவர் ஆனந்தம் அவர்கள். இவரின் இல்லமே தென் இந்திய உரிமைகள் சங்கம் என்ற அமைப்பு உருவாக இருந்தது என்பது வரலாறு.

விருதை சிவஞான யோகியாரிடம் ஏழு ஆண்டுகள் தமிழ் சித்த மருத்துவம் பயின்றவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள் கால் மூட்டு வாதத்தினால் அவதியுற்று நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருந்தார். அச் சமயம் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை வ.உ.சி.க்கு சித்த மருத்துவ முறையில் கடுகை அரைத்து கொதிக்க வைத்து போட்டால் உடனடி பலனளிக்கும் என்று கூற வ.உ.சி. அதனை அப்படியே செய்து பூரண குணமடைந்தார்.

1927 சேலம் சுயமரியாதை மாநாட்டில் அரசியல் பெருஞ்சொல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய போது தமிழ் சித்த மருத்துவத்தை பரவலாக மக்களிடத்தில் பொது மருத்துவமாக்க செய்திட தீர்மானம் முன்மொழிய அறைகூவல் விடுத்தவர் வ.உ.சி. நாம் இன்று அனைத்து நோய்களுக்கும் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்தை நாடி சென்று விட்டோம். அன்றே வ.உ.சி. ஆங்கில மருத்துவத்தை மறுத்து சுதேசி மருத்துவம் உள்ளூர் தமிழ் சித்த மருத்துவ முறையை கையாள வலியுறுத்தியவர். வ.உ.சியிடம் பழகிய பல்வேறு தியாகிகள் ந. சோமயஜூலு உட்பட பல்வேறு தலைவர்கள் மூலம் சித்த மருத்துவத்தின் மீது வ.உ.சி கொண்ட அபிமானம் புரிய வருகிறது.

விருதை சிவஞான யோகி தமிழ் சித்த வைத்திய சங்கத்தைத் தொடங்கி மதுரை, நெல்லை, சென்னை போன்ற பெரு நகரங்களில், சித்த வைத்திய மாநாடுகள், கண்காட்சிகளை தொடர்ச்சியாக நடத்தி விழிப்புணர்வு ஏற்படச் செய்தவர்.

தமிழ் மருத்துவம் நாகரீகத்திலும், அறிவு நூல்களிலும் முதற் சங்க காலமாகிய பன்னீராயிரம் ஆண்டாகச் சிறப்பு பெற்றிருக்கிற இத் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நடை பெற்று வருகின்றது. திருமூலர் ‘அவிழுமன முமாதியறிவுந் – தமிழ் மண்டலமைந்துந் தத்த்வமாமே’ என்று தமிழ் நாட்டில் அறிவு நூல்களின் தொன்மையை சிறப்பித்துள்ளார்.

திருமூலர், போகர், கொங்கணர், பதஞ்சலி, தேரையர், அகத்தியர், கருவூரார், புலத்தியர், சட்டைமுனி, தன்வந்திரி, யூகிமுனி முதலியோர் இயற்றிய முதனூல், வழிநூல், சார்பு நூல் ஆகிய பல்வேறு நூல்கள் தமிழ் மருத்துவத்தை பறை சாற்றுகின்றன.

நோய் விலக்கு முறைகளான மூலிகை வகை, உப்பு வகை, தீநீர் வகை, உபரச வகை, உடற் பொருள் வகை, பாடாண வகை, உலோக (செந்தூரம் என்ற பஸ்பம்) வகை, சத்து வகை, இரச குளிகை (மாத்திரை) வகை, யோக (மூச்சுப்பயிற்சி) வகை என பத்து வகைகளாக திருமூலர் பிரிக்கிறார்.

மேற்கூறிய அனைத்தையும் தமிழ் சித்த நூல்கள் கூறுகிறது. மூலிகை வகை மருந்துகளை பிரதானமாக கொண்டுள்ளது சமஸ்கிருத ஆயூர்வேத மருத்துவம்.

’உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்
அப்பானாற் கூற்றே மருந்து. என்பார் வள்ளுவர்.

தமிழர்களின் முப்பத்திரண்டு அறங்களில் ஆதுலர்க்கு சாலை, ஓதுவார்க்கு உணவு, நோய்க்கு மருந்து என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் மருத்துவ சாலை பெரிய தருமமாக நடந்து வந்துள்ளது. இக் காலத்தில் தமிழ் மொழி பேசுவதையே கவுரவக் குறைச்சல் என்று கருதி வரும் வேளையில் தமிழ் சித்த மருத்துவத்துக்கும் அபிமானம் குறைந்து வருகிறது.

தமிழ் சித்த மருத்துவத்தை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 21.04.1920 அன்று தமிழ் வைத்திய சங்கம் என்ற பெயரில் கோவில்பட்டியில் தலைமை அலுவலகம் விருதை சிவஞான யோகி அவர்களால் துவக்கப்படுகிறது.

இச் சங்கம் மூலமாக தமிழ் மருத்துவ நூல்கள் சீர்படுத்தி அச்சிடுதல், மருத்துவத்தை கற்பிக்கும் சாலைகளை அமைத்தல், தமிழ் மருத்துவ பெருமைகளை பிரசங்கித்தல், தமிழ் மருந்துகளைக் கண்காட்சி வைத்தல், மருத்துவப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற் கொண்டார். இதன் ஒரு பகுதியாக சென்னையில் சித்த வைத்திய பாடசாலையை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டார். உலக மொழிகளுக்கும் மருத்துவத்துக்கும் தாயாக விளங்குவன ’தமிழும் தமிழ் மருத்துவமும் ’ என்ற நூல் மூலம் தமிழ் மருத்துவத்தை நிலை நாட்டியுள்ளார்.

வட சென்னையில் பொதிகை சித்தர் மரபு என்ற பெயரில் தமிழ் அத்வைத வேதாந்த மரபு நாராயண தேசிகர் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு வந்தது. மனதை பாதுகாக்க வேதாந்த நூலறிவும், உடம்பை அனுசரிக்க தமிழ் சித்த மருத்துவ பயிற்சியும், மொழிக்கு தமிழ் இலக்கிய நூலாரய்ச்சியும் இந்த மடத்தில் சீடர்களுக்கு பயிற்றுவித்தனர். இந்த மடத்தில் பயின்றவர்கள் அன்றைய நாளில் சென்னை நகரமெங்கும் இலவசமாக சித்த மருத்துவ சாலைகள் நடத்தி பொதுமக்களுக்கு தர்மத்தின் அடிப்படையில் மருந்துகளை பிணிஎன வந்தவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் இரா. முத்துநாகு அவர்களால் எழுதப்பட்டு ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழின் மிக முக்கிய நாவல் “சுளுந்தி’’. இந்த நாவல் 17 ம் நூற்றாண்டின் இறுதியில் அப்போது ஆளப்பட்ட அரசால் தமிழ் பண்டுவ சித்த மருத்துவ முறைக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும், சித்த மருத்துவ ஒலைசுவடி ஏடுகள் அழிக்கப்பட்ட விதமும், சித்த வைத்தியம் தெரிந்த பண்டுவர்கள் எதிர் கொண்ட மோசமான பின்விளைவுகளையும் கனகச்சிதமாக ஆவணப்படுத்தியுள்ள விவரண நாவல். இந்த நாவலில் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட மிக முக்கிய நோய்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் நோய் தீர்க்க வழிமுறை தந்துள்ளார். நாவலாசிரியர் சித்த மருத்துவ பரம்பரையில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பல்வேறு சித்த மருத்துவ குறிப்புகளை அருமையாக நாவலில் கையாண்டுள்ளார். பன்றிமலை, பழனிமலை, சுருளிமலை, குன்னுவராயன்கோட்டை போன்ற ஊர்கள் சித்த மருத்துவத்துடன் கொண்டுள்ள தொடர்பை நம் கண் முன் நிறுத்துகிறார். பண்டுவ மரபுடன் முடி திருத்தும் நாவிதர்களுக்கு தமிழ் சித்த மருத்துவ மரபில் காணப்பட்ட ஆழமான அறிவையும் விவரணப் படுத்தியுள்ளார் நாவலாசிரியர்.

சித்த மருத்துவ கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடம் முடிவடையும் பட்சத்தில் ஏன் பண்டுவம் என்ற சித்த மருத்துவம் அழிந்தது என்ற கேள்வி எழாமல் இருப்பது வேதனையானதே. முத்து நாகு எழுதிய நாவலிலிருந்தும் அவரிடம் பேசியதிலிருந்தும் சித்த மருத்துவத்தின் மிக முக்கியமான உப்பு சில விசயங்கள் கீழே காணுவோம்.

உப்பு
உப்பு இதுதான் பல நோய்களுக்கான அடிப்படை மருந்து.

'கடல் ஒட்டிய தேரியில் உப்பு தானா வெளஞ்சு கிடக்கும். அத கண்டுபிடிச்சு உப்பு காய்ச்சும் நுட்பத்த அறிஞ்சு, உப்பு வியாபாரம் செய்து வந்தாங்க குறவர்கள். இதனால் உப்புக்குறவர் என அவர்களுக்குப்பெயர். இந்த உப்பிலிருந்து வெடி தயாரிக்கும் நுட்பத்தைத் மனிதச் சமூகம் அறிந்தது. இதன் விளைவாக 18ஆம் நுற்றாண்டில் தடை போட்டு கடுமையாக்கினார்கள். அதே போல் வெடியுப்பு என்ற மருத்துவ உப்பு மலைகளில் தானாக விளைந்து கிடக்கும். இதை சுரண்டி அள்ளி வந்து காய்ச்சி வெடியுப்பு தயாரித்தார்கள். இதன் மூலம் வெடி தயாரிக்கும் நுட்பத்தை பிரெஞ்சில் கண்டுபிடித்தார்கள்.

தமிழகத்தில் குறிப்பாக சேலம் மதுரை தேனி மாவட்டத்தில் இயற்கையாக விளையும் வெடியுப்பினையும் தரங்கம்பாடி, திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த பிரஞ்சுக்காரர்கள் வெடியுப்பினை ஏற்றுமதி செய்தார்கள். வெடி தயாரிக்கும் நுட்பம் தமிழகத்தில் ஆண்ட நாயக்கர் அரசுக்கும் தெரியவந்ததால் வெடியுப்பு தயாரித்த குறவர்கள் மீது கைரேகை சட்டம் போட்டுத் தடுத்தார்கள். இதனால் வெடியுப்பு என்ற மருந்து சித்த வைத்திய மரபில் அழிந்தது.

இதன் மூலம் வெடி தயாரிக்க முடியுனெ நமது சித்தர்களுக்கும் பண்டுவர்களுக்கும் தெரிந்தாலும் அதை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். பண்டுவர்கள் மூலம் வெடிதயாரிக்க மன்னர்கள் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். குறிப்பாக கள்ளக்குறிச்சி, வேலூரில் இந்த வெற்றி கிடைத்தது. இதனால் கந்தகம் வெடிக்காக பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை மன்னர் ஆட்சியை எதிர்த்த மக்களும் கையாண்டார்கள். இதனை அறிந்த மன்னர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை தவிர மற்ற சித்த மருத்துவர்களை கொன்றார்கள்

அடுத்த முக்கியமானது செந்தூரம் என்ற பஸ்பம். இது தயாரிக்க பயன்படும் கந்தகம், பூதம், தாளகம், மனோசீலை, நாவி, கௌரி பாசானம், கல்நார், லிங்கம், வீரம், பூரம், கெருட பச்சை, சீனாக்காரம், வெண்காரம், துத்தம், துருசு, பச்சை துருசு, சாதிலிங்கம், குங்கிலியம், வெடியுப்பு, இந்துப்பு, வளையுப்பு, சவுட்டுப்பு, சாம்பிராணி, தொட்டிப் பாசானன், அபினி மருந்துகள். கந்தகம் : sulphur,தாளகம்: arisenit trisulphidum trisulphuret of arsenic, வீரம் : hydrargyrum subchloride, பூரம் hydrargyrum perchloride corrosive sublimate, பாதரசம் : hydrargyrum mercury quick silver கல்மதம் : asbestos,லிங்கம்: red sulphate, மனோசிலை: arsenic disulphidum bisulphuret of arsenic realgar or red orpiment, படிகாரம் : alumen alum ,துருசு : cupri sulphas அல்லது cuprum sulphar cupric sulphate இவை அனைத்தும் பண்டுவ மருந்துகள். இவைகள் தீ பிடிக்கும் வெடிக்கும் தன்மை கொண்டவை என்பதை அறிந்த பிரெஞ்சு இதில் வெடி தாயாரித்து உலகத்திற்கு ஏற்றுமதி செய்தது. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூல் எழுதிய ஆப்ரகாம் பண்டிதர் தேனி மாவட்டம் சுருளி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த சித்திரடம் செந்தூரம் தயாரிக்கும் முறையை கற்று அறிந்தார்.

மேல்குறிப்பிட்ட மருந்துகள் மூலம் செய்த செந்தூரத்தை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தார். பிரிட்டீஷ் அரசு இவரிடமே பாம்பு கடிக்கும், வயிற்றுப்போக்கிற்கும் மருந்து வாங்கியது என்ற பிரிட்டீஷார் குறிப்பிலிருந்து சித்த மருத்துவத்தின் பிரமிப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

சித்த மருந்துகளில் அலோபதி மருந்துகள் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்த பிரெஞ்சுக்காரர்கள் தமிழகத்தில் இருந்த மருத்துவ ஓலைச்சுவடிகளை பணம் கொடுத்து வாங்கி சென்றார்கள் என்பதை ஒரிசா பாலு, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முருகானந்தம் போன்ற அறிஞர்கள் வாயிலாக அறிய முடிகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள சித்த மருந்துகள் இல்லாத அலோபதி மருந்துகளே இல்லை. அப்படியானால் சித்தமருத்துவத்தை அழித்தது வியாபார நோக்கத்திற்கு மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

பிரிட்டீஷ் ஆட்சியில் சித்தமருத்துவத்தின் தேவையும் வெடியை கட்டுக்குள் வைக்கவும் தேவையிருந்ததால் சித்த மருந்து தயாரிப்பவர்கள் யார் யாரென அடையாளப்படுத்த வேண்டிய தேவைக்காக பதிவுச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

விருதை சிவஞான யோகியால் அன்று போட்ட விதை இன்று சென்னையில் சித்த மருத்துவ கல்லூரி, இம்ப்காப்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் ஆல் போல் தழைத்துள்ளது.
தமிழ் மொழியை பாதுகாப்பது போல் நாம் தமிழ் மருத்துவத்தையும் பாதுகாக்க முன் வர வேண்டும். இன்றைய தி.மு.க.வின் பல அடிப்படை சித்தாந்தங்கள் விருதை சிவஞான யோகியாருடைய தமிழக வொழுகு மக்கட் சட்டம் என்ற நூலில் இருந்து கையாண்டுள்ளார்கள் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. இரா.நெடுஞ்செழியன் எழுதிய தி.மு.க. வரலாறு நூலில் சிவஞான யோகியாருடைய திருவிடர் கழகம் குறித்து பதிவு செய்துள்ளார். எழுத்தாக்கம் ரெங்கையா முருகன்

27/03/2022

TAMIZH SIDDHA VARMAM THERAPY NATIONAL SEMINAR AT SRI JEYENDRA SARASWATHI AYURVEDA COLLEGE, NAZRATHPET,CHENNAI. ORGANIZED BY AYUSHPATHY RESEARCH CENTRE AND HE...

Address

Sathya Clinic, 11A, KARPAGAVINAYAGARKOIL 2ND Street, K. PUDUR, MADURAI
Madurai
625007

Alerts

Be the first to know and let us send you an email when Maayon PAIN Relief Clinique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maayon PAIN Relief Clinique:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

Maayon Pain Relief Clinique (Its an unit of Sathya Clinic), 352 PG Avenue first street extension, Katuppakkam,Chennai-600056 + 91 98431 18402 +91 86955 45234 +91 63811 89796