Sharan AYUSH Herbal Clinic

  • Home
  • Sharan AYUSH Herbal Clinic

Sharan AYUSH Herbal Clinic ' உணவே மருந்து : மருந்தே உணவு '

17/06/2013

வாரமொரு மருந்துவகை_த்ரிகடு சூர்ணம்- Trikatu choornam

த்ரிகடு சூர்ணம்-Trikatu choornam
( ref-பாவப்ரகாச நிகண்டு – மத்யம கண்டம்)

தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்டீ - 10 கிராம்
2. மிளகு – மரீச்ச - 10 “
3. திப்பிலி – பிப்பலீ - 10 “

குறிப்பு -சுக்குக்கு புற நஞ்சு எனவே -சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

செய்முறை:
இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:
½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம்:
தேன், நெய், தண்ணீர்.

தீரும் நோய்கள்:
விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை -
திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக -அனுபானமாக உபயோகப்பதுண்டு

திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி , ஜலதோஷத்தை நீக்கும் ..நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும்
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும்
இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும் ,பெண்களின் கரு முட்டை வெடித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்தல் சிறந்தது ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள் ,அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள் ,Thyroid குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்
செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும் .

வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்
பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்.ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்

திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்

17/06/2013

மலர்களும் மருந்தாகும்........!!!

1.)இலுப்பைப் பூ
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

2.)ஆவாரம் பூ
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

3.)அகத்திப்பூ
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

4.)நெல்லிப்பூ
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

5.)மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

6.)தாழம்பூ
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

7.)செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

8.)ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

9.)வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

10.)முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

11.)மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

12.)கருஞ்செம்பை பூ
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

13.)குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

வாரமொரு மருந்துவகை_வழுக்கையை தள்ளிபோடும் - பிருங்காமலக தைலம் பிருங்காமலக தைலம் (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)தேவையான மரு...
03/06/2013

வாரமொரு மருந்துவகை_வழுக்கையை தள்ளிபோடும் - பிருங்காமலக தைலம்

பிருங்காமலக தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ 800 கிராம்
2. நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ 800 “
3. நல்லெண்ணெய் – திலாதைல 800 “
4. பசுவின் பால் – கோக்ஷீர 3.200 கிலோ கிராம்

இவைகளை ஒன்று சேர்த்து அத்துடன் 50 கிராம் அதிமதுரத்தை (யஷ்டீ) அறைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு: எண்ணெய்யின் அளவில் 24-ல் 1 பங்கு அதிமதுரத்தைக் கல்கமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.

பயன்படுத்தும் முறை:
தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் (சிரோப்பயங்க), மூக்கிலிடவும் (நஸ்யம்) பயன்படுகிறது. வெளியுபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:
குரம் கம்மல் (ஸ்வரக்ஷய), கண் பார்வை மங்கல் (அந்தத்வ), செவிட்டுத்தன்மை (பாதி ரத்வ), பல்லாட்டம் (தந்த சலன), முடிகொட்டல் (கேஸ ஸத), நரைமுடி (பாலித), வழுக்கை, தூக்கமின்மை (அநித்ரா), தலைவலி (சிரோருக்), ஒற்றைத் தலைவலி (அர்த்தாவபேதக), தலைச்சுற்றல் (ப்ரம) போன்ற கண், காது, பற்கள், தலை சம்பந்தமான நோய்கள்.
தலைவலி, ஒற்றை தலைவலியில் இதனை நசியமிடவும். கண்ணோய்களில் உள்ளங்கால்களில் தடவ்வும். தூக்கமின்மையில் இதனை தலைமுழுக உபயோகிக்கவும். தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர கண் பார்வையும், ஞாபக சக்தியும் மேம்படுகிறது. நல்ல தூக்கத்தைத் தருகிறது. தலை வலியைக் குறைக்கிறது.முடியுதிர்ந்து வழுக்கையாவதைத் தள்ளிப் போடுவதுடன் நரையையும் ஓரளவுக்கு தடுக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
கரிசாலங்கண்ணி தைலம் என்றும் இதை அழைக்கலாம்
வழுக்கை விழுதலை இந்த தைலம் தேய்ப்பதன் மூலம் தவிர்க்கலாம் ..
இளநரை வராமலும் ,இளநரை வந்தாலும் -சீக்கிரமே நரைக்க விடாமல் முடியை கருப்பாக வைத்திருக்க உதவும்
புலன் உறுப்புகளுக்கு நல்ல ஆற்றல் தரும்
தலைவலி குறைக்கும் (பித்த தலை வலி )
தூக்கமின்மைக்கும் பயன்படுத்தலாம் ..
உடல் சூட்டை குறைக்கும் ..
குறிப்பு -தலையில் தேய்க்கும் தைலங்கள் -இது போன்று பலவகை உள்ளது ,வரக்கூடிய பதிவுகளில் அதை பார்த்து எது உங்களுக்கு ஏற்றதோ அதை நல்ல மருத்துவரின் மேற்பார்வையின் பெயரில் உபயோகிப்பது நல்லது .

யோகாசனம்_பிரணாயாமம்          பிராணன் என்றால் உயிர். உயிர் வாழ உயிர் காற்று தேவை. நமது உடலில் ஒரு நாளைக்கு 21600-தடவை சுவ...
03/06/2013

யோகாசனம்_பிரணாயாமம்

பிராணன் என்றால் உயிர். உயிர் வாழ உயிர் காற்று தேவை. நமது உடலில் ஒரு நாளைக்கு 21600-தடவை சுவாசத்தை இழுத்து விடுகின்றோம். இந்த சுவாசத்தை அறிந்து அதை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை பிராணாயாமம் என்கின்றோம். இதற்கு வாசியோகம் என்ற பெயரும் உண்டு. இந்த வாசியை வசப்படுத்தி இயங்கச் செய்வதே வாசியோகம் ஆகும். உயிர் என்பதை விவரிக்க முடியாது. உயிரே ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவை வசப்படுத்தினால் எல்லாக் காரியங்களையும் சாதிக்கலாம். இவ்வாறு வசப்படுத்துவதற்கு பல யோகமுறைகள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் பிராணாயாமம்.
பிரணாயாமம் ஒரு சுவாச உறுப்புகளுக்குரிய பயிற்சியாக செய்யலாம் அல்லது அதிதீவிர பயிற்சியைப் பெறுவதற்கு உணர்வுபூர்வமாக மந்திரங்கள் சொல்லி அதிதீவிர சக்தியைப் பெறலாம். பிரணா என்றால் உயிர் என்று அர்த்தம். பரித்ரஷ்டா என்றால் கண்டு இயக்குபவன் என்று பெயர். இந்த பிரணா பிரதிஷ்டையை பிரச்ன உபநீதம் சிறப்பாக கூறுகிறது.
*** பிராணாயாமத்திற்கு ஒரு சரியான இடத்தை தேர்ந்து எடுங்கள். அது உங்களுக்கு மன அமைதியையும், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்கட்டும். அதன் பின் அந்த இடத்தில் ஒரு அமரும் இருக்கையை அமையுங்கள். அந்த இருக்கை வெள்ளை அல்லது மஞ்சள் துணியாக இருக்கலாம். அல்லது தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட ஆசனமாக இருந்தால் மிகச் சிறப்பாகும். உயிர் பொருள்களைக் கொன்று அதன் மூலம் பெறப்படும் ஆசனங்களாகிய சிம்மாசனம், புலித்தோல், மான் தோல், பட்டுப்புழுவினால் ஆன பட்டாசனம் உங்களுக்கு தேவை இல்லை.****
பிராணாயாமம் இராஜயோகத்தின் எட்டுப் படிகளின் ஒன்றாகக் கூறப்பட்டாலும் சித்தர்கள் பிராணாயாமத்தின் மூலம் குண்டலினி சக்தியை எழச் செய்து அதிதீவிர சக்தியைப் பெறமுடியும் என்று கூறுகின்றனர். இதைச் சார்ந்து முரண்பாடான விவாதங்கள் உண்டு.
பிராணாயாமத்தின் மூலம் குண்டலினி பயிற்சியை வெற்றிகரமாகச் செய்யலாம். இந்த பிராணாயாமத்தின் மூலம் பின்கலையாகிய நெருப்புத் தத்துவமும், ஆண் தத்துவத்தையும், இடகலையாகிய பெண் தத்துவமாகிய நீர் தத்துவமும், ஒன்றைஓன்று அழியவிடாமல் ஓன்று சேர்ப்பதைத்தான் சாகாக்கலை ஆகும். அதாவது நீரினால் நெருப்பு அழியாமலும், நெருப்பினால் நீர் அழியாமலும் காப்பதே ஆகும்.
பிரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி நான்கு நிலைகளை உடையதாக இருக்கிறது. ஒன்று சுவாசத்தை இழுப்பது, இதை பூரகம் என்பர். இவ்வாறு உள்ளே இழுத்த சுவாசத்தை நிறுத்தி வைப்பதற்கு கும்பகம் என்று பெயர். இவ்வாறு உள்ளே நிறுத்தி வைத்த சுவாசத்தை வெளியிடுதலை ரேசகம் என்று பெயர். அவ்வாறு சுவாசத்தை வெளியிட்ட பின்னர் அடுத்து சுவாசத்தை இழுக்காது வெளியே நிறுத்தி வைப்பதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று பெயர்.
மனிதன் வாழ்க்கையில் எப்பொழுதும் சுவாசம் செய்து கொண்டிருக்கிறான். இந்த சுவாசத்தை ஒரு யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தை ஹம்ஸம் யோகம் என்பர். ஒரு மனிதன் ஸம் என்று சுவாசத்தை இழுக்கிறான். ஹம் என்று மூச்சுக் காற்றை வெளியிடுகிறான். இவ்வாறு இயற்கையாக நடைபெறும் சுவாசத்தை ஒரு மந்திர பூர்வமான யோகமாக ஹம்ஸ உபநீதம் கூறுகிறது.
**** பிராணாயாமத்திற்கு உகந்த ஆசனம் பத்மாசனம் அல்லது சுகாசனம். இவ்வாறு ஆசனத்தில் உட்காரும்பொழுது முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்காருங்கள். இரு கைகளையும் உங்கள் வசதிக்கு ஏற்ப முழங்கால் மீதோ அல்லது மடியின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப நிலையில் பிராணாயாமத்தை முதலில் பயிற்சி செய்யுங்கள். பின்னர் தியானம் செய்ய செல்லலாம்.****
பிராணாயாமத்திற்கு காலை ஆறு மணி வரையும், மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் உகந்த நேரமாகும். பிராணாயாமம் தேகம், மனம், உயிர், ஆன்மா, ஆகியவைகளை சீராக இயக்கம் சக்தி கொண்டவை. பிராணாயாமம் செய்யும்பொழுது சுவாசத்தை முதுகு எலும்பின் அடிப்பாகத்தில் உள்ள மூலாதாரத்தில் இருந்து முதுகு எலும்பின் அடிவழியாக செலுத்தி அங்கிருந்து அண்ணாக்கின் வழியாக புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து தலையின் உச்சிக்கு செல்லவேண்டும். இவ்விதமாக சுவாசத்தை ஏற்றி இறக்கும் மூச்சுப் பயிற்சியே பிராணாயாமம் ஆகும்.

இடகலை:- நமது மூக்கின் இடது பக்கம் ஓடும் சுவாசத்திற்கு இடகலை என்று பெயர். இது சந்திரன் அம்சம் கொண்டது. ஆகவே இதற்கு சந்திரகலை என்ற பெயரும் உண்டு. இது உடம்பின் இடது காலில் தொடங்கி உடம்பு முழுவதும் ஓடி இடது நாசியில் முடிகிறது. இது பெண் தத்துவத்திற்கு உரியது. ஆகவே உணர்வின் பிறப்பிடம் மனம். இதனால் மனதை சார்ந்த கோபங்கள், தாபங்கள். எண்ணங்கள் ஆகியவற்றை சமம் செய்ய முடியும்.

பிங்கலை:- வலது பக்க நாசியின் வழியாக சுவாசத்தை இயக்குவதற்கு பிங்கலை என்று பெயர். இதற்கு சூரியகலை என்ற பெயரும் உண்டு. இது ஆண் தத்துவம் ஆகும். இது வலது காலில் தொடங்கி உடல் எல்லாம் பரவி பின்னர் வலது நாசியில் முடிவதாகும். இது பகுத்தறியும் சக்தியைக் கொண்டதாகும்.

சுழிமுனை:- இது மூலாதாரத்தில் இருந்து தொடங்கி தலையின் மேல் உள்ள சகஸ்ராரதளத்தில் முடிகிறது. இந்த இடத்தில் வாசி மேலும், கீழுமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இடது மூக்கின் வழியாக சுவாசத்தை எடுப்பது இடகலை என்றும், சந்திரகலை என்றும் கூறுவர். வலது மூக்கின் வழியாக சுவாசத்தை இழுப்பது பிங்கலை அல்லது சூரியகலை என்பர். சுவாசத்தை நிறுத்துவதற்கு சுழிமுனை அல்லது சுசுமனா என்பர். சுவாச பயிற்சி செய்வதற்கு கையில் உள்ள சுட்டுவிரலையும், நடுவிரலையும் மடித்து வைத்து அப்பியாசம் செய்யவேண்டும்.

பிராண சக்தி ஐந்து வகையாக செயல்படுகிறது.

1.)பிராணன்:- மஞ்சள் நிறம், வேலை – இரத்த ஓட்டம், சுவாசம்
2.)அபானன்:- கிச்சலி நிறம், வேலை – மலம் ஜலம்
3.)சமானன்:- பச்சை, வேலை – ஜீரணம்.
4.)உதானன்:- கருநீலம், வேலை – நரம்பு, மூளை.
5.)வியானன்- மனநிலை

உதானன்:- உச்சந்தலையில் இருந்து கழுத்தின் நடுப்பகுதிவரை உதானன் செயல்படுகிறது. இதை சூரியகிரகம் ஆட்சி செய்கிறது. ஆகவே இதற்கு நெருப்பு போன்ற உஸ்ணசக்தி உண்டு. இதனால் தான் கோவப்படும் பொழுதும், உணர்ச்சிவசப்படும் பொழுதும் தலைப்பகுதி சூடாகிறது. இது உதானனின் எதிர்மறைச் செயலாகும்.

பிராணன்:- கழுத்து நடுப்பகுதியில் இருந்து மார்ப்பு பகுதிவரை பிராணன் இருக்கிறான். பிராணன் சுவாசம் அல்ல.பிராணன் சுவாசத்தை தனக்கு வாகனமாக உபயோகித்துக் கொள்கிறது. ஒருவர் இறந்தால் பிராணன் வெளியே சென்றுவிடும். இது நவகிரகத்தில் சந்திரனையும், புதனையும் குறிக்கிறது.பிராண சக்தி அதிகம் உள்ளவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பர்.

சமானன்:- மார்பின் மையப்பகுதியில் இருந்து நாவி வரை சமானனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. சமானன் பஞ்ச பூதத்தில் நீர் அம்சம் கொண்டதாகும். இது ஜீரணம், சுவாசம் இனப்பெருக்கம் போன்ற எல்லா செயல்களும் சிறப்புற நடைபெறுவதற்கு இது உதவியாக இருக்கிறது. இது உடலில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்கிறது. சனி பகவான் இந்த கிரகத்தின் ஆதிக்கம் பெற்றவர். பொதுவாக சமானன் ஆதிக்கம் பெற்றவர்கள் நேர்மையானவர்களாகவும், எல்லோரிடமும் அன்பு செலுத்துபவராகவும் இருப்பர்.

அபானன்:- நாவி பகுதியில் இருந்து மர்ம ஸ்தானத்திற்கும், ஆசன வாயுக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்வதாகும். இது பஞ்ச பூதத்தில் மண் தன்மை உடையது. இது நவகிரகத்தில் செவ்வாய் அம்சமும், சுக்கிர அம்சமும் கொண்டது. இந்த வாயு மலம், சிறுநீர் போன்ற கழிவுப் பொருள்களை வெளியேற்றுகிறது. மேலும் இனப்பெருக்கத்துக்குரிய விந்து, சுரோணிதம் ஆகியவற்றை உருவாக்குவதும் இந்த அபானன் ஆவார்.மனிதனின் வளர்ச்சி பெருக்கம், சிந்தனை, சிற்றின்ப நாட்டம், கலை கவிதைகளில் நாட்டம் உருவாக்குவது அபானன் ஆகும்.

வியானன்:- வியானன் உடலெங்கும் பரவி உள்ளதால் இதற்கு வியானன் என்று பெயர் வந்தது. வியானன் உடலில் தலை முதல் பாதம் வரை செயல்படுகிறது. இது உடலில் பிராண சக்தியை சம நிலைப்படுத்துவதே இதன் வேலை. இது ஆகாய தன்மை கொண்டதாகும். நவகிரகத்தில் குருவின் அம்சமாகும். இறக்கும் தருவாயில் பிராணன் வெளியேறிய பின்னர் 48 மணிநேரம் கழித்து வெளியேறும். வியானன் ஆதிக்கம் கொண்டவர்கள் அமைதியான மனநிலை கொண்டவராக இருப்பர்.

சுவாசபயிற்சி என்றால் கற்றை மூக்கின் வழியாக சுவாசத்தை இழுத்து விடுவதாகும். வலது நாசியில் சுவாசம் செயல்படுவதை சூரியகலை என்பர். அப்பொழுது வலது நாசியில் 90 சதவிகிதமும், இடது நாசியில் 10 சதவிகிதமும் நடைபெறும். அதேபோல் இடது நாசியில் சுவாசம் வெளிவரும் பொழுது சந்திரகலை என்பர். அப்பொழுது இடது நாசியில் 90 சதவிகிதமும், வலது நாசியில் 10 சதவிகிதமும் நடைபெறும். இந்த சுவாசத்தைக் கட்டுப்படுத்தி 2-நாசியிலும் சரிசமமாக நடைபெறும். சுவாசத்தை சுழிமுனை சுவாசம் என்று பெயர்.

பிராணாயாமம் செய்யும்பொழுது சுவாசத்தை உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து நெற்றிப் பொட்டில் கொண்டு வந்து அதன்பின் உள்நாக்கு வழியாக இழுத்து குறுக்கெழும்பின் நடுப்பகுதியின் வழியாக மூலாதாரத்திற்கு சுவாசத்தை எடுத்துச் செல்வது போல் சங்கல்பம் செய்து சுவாசத்தை மூலாதாரத்தில் தேக்கி வைத்து பின்னர் அதே பாதையாகிய முதுகெலும்பின் நடுவின் வழியாக உள்நாக்குப் பகுதியில் சேற்று அங்கிருந்து புருவ மத்திக்கு வந்து உச்சந்தலை வழியாக சுவாசத்தை விடும்பொழுது சங்கல்பம் செய்வதாகும்.

இந்த பயிற்சிக்கு உங்கள் மதம் சார்ந்த மந்திரங்கள் ஆன ஓம், அல்லேலுயா, அல்லா போன்ற மந்திரங்களை உபயோகப்படுத்தலாம். குண்டலினி யோகத்திலும், ஆக்கினையாகி புருவ மத்தியில் உள்ள சக்கரமும் பிராணாயாமத்தைச் சார்ந்ததாகும். இந்த சக்கரம் நடுவில் ஒரு வட்டமும், இரண்டு பக்கங்களிலும் இரண்டு இதழ்களைக் கொண்டதாகும். நடுவட்டத்தில் பிரணவமாகிய ஓம் என்ற மந்திரம் உள்ளது. வலப்பக்கம் தம் என்ற மந்திரம் உள்ளது. இடப்பக்கம் சம் என்ற மந்திரம் உள்ளது. சம் என்ற மந்திரத்தை சங்கல்பமாக எண்ணிக்கொண்டு சுவாசத்தை இதழ் வழியாக இழுத்து உள்நாக்குக்கு கொண்டு வந்து பின்பு முதுகுத் தண்டின் நடுவின் வழியாக மூலாதாரத்திற்குச் சென்று அங்கு சுவாசத்தை சிறிது நேரம் நிலை நிறுத்த வேண்டும். பின்னர் மேற்படி கூறிய வண்ணம் முதுகு எலும்பின் நடுவழியாக கம் என்ற மந்திரத்தை சங்கல்பித்து உள்நாக்கு வழியாக இடது இதழுக்கு வருவதாக சங்கல்பிக்க வேண்டும். பின்னர் நடுவில் உள்ள ஓம்யை தியானித்து சிறிது நேரம் சுவாசத்தை நிறுத்தி வைக்கவேண்டும்

03/06/2013
24/05/2013

வாரமொரு மருந்துவகை_முடி கொட்டுவதை நிறுத்தி -முடி அடர்த்தியாக வளர -திரிபலாதி தைலம்-Triphladhi thailam

திரிபலாதி தைலம்
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 90 கிராம்
2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 90 “
3. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 90 “
4. சீந்தில்கொடி – குடூசி 90 “
5. தாழம் விழுது – கேதகீ மூல 90 “
6. வேங்கை – அஸன 90 “
7. சித்தாமுட்டி வேர் – பலாமூல 90 “
8. ஆமணக்கு வேர் – எரண்ட மூல 90 “
9. முடக்கத்தான் வேர் – இந்த்ரவல்லி 90 “
10. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்

இவைகளைக் கொதிக்கவைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன

1. நல்லெண்ணெய் – திலதைல 800 கிராம்
2. கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ 800 “
3. நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ரஸ 800 “
4. பசுவின் பால் – கோக்ஷீர 1.600 கிலோ கிராம்

இவைகளைச் சேர்த்து அதில்

1. கோஷ்டம் – கோஷ்ட 6.750 கிராம்
2. அதிமதுரம் – யஷ்டீ 6.750 “
3. பதிமுகம் – பத்மக 6.750 “
4. விளாமிச்ச வேர் – உசீர 6.750 “
5. சந்தனம் – சந்தன 6.750 “
6. கோரைக்கிழங்கு – முஸ்தா 6.750 “
7. ஏலக்காய் – ஏலா 6.750 “
8. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர 6.750 “
9. சடாமாஞ்சில் – ஜடாமாம்ஸீ 6.750 “
10. அமுக்கராக்கிழங்கு – அஸ்வகந்தா 6.750 “
11. சித்தாமுட்டிவேர் – பலாமூல 6.750 “
12. சீந்தில்கொடி – குடூசி 6.750 “
13. நன்னாரி – ஸாரிவா 6.750 “
14. தேவதாரு – தேவதாரு 6.750 “
15. இலவங்கம் – லவங்க 6.750 “
16. கிரந்தி தகரம் – தகர 6.750 “
17. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ 6.750 “
18. நீல ஆம்பல் கிழங்கு மற்றும்
இது போன்ற கிழங்குகள் – பஞ்சகமலமூல 6.750 “
19. அஞ்சனக்கல் – அஞ்ஜன 6.750 “
20. அவுரிவேர் – நீலீமூல 6.750 “

இவைகளை அஞ்சனக்கல் நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். அஞ்சனக்கல்லைப் பொடித்துப் பாத்திர பாகமாகப் போட்டு பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:

முடக்கத்தானைக் கஷாயத்தில் உபயோகிப்பதற்கு பதிலாக அதன் பசுமையான சாறு 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.

பயன் படுத்தும் முறை:

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:
நரை (காலித்ய), வழுக்கை (பாலித்ய), முடியுதிரல் (அ) கொட்டுதல் (கேஸஸாத), ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), பீனிசம் (பீனஸ), தலைவலி (சிரோருஜா), தலை நோய்கள் (சிரோரோக), கண்நோய்கள் (நேத்ர ரோக) மற்றும் கழுத்திற்கு மேலுள்ள உறுப்பு நோய்கள் (ஊர்த்வ ஜத்ருகாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
முடி வளர -முடி அடர்த்தியாக வளர -இந்த தைலம் நன்றாக உதவும்
உஷ்ண உடம்பாய் இருந்தாலும் -அடிக்கடி சளி ஜலதோஷம் பிடிக்கும் உடம்பாய் இருந்தாலும் -கவலை இன்றி பயம் இன்றி தேய்க்கலாம் ..
குளிர்ச்சி தைலம் என்றாலும் இந்த தைலத்தால் சளி பிடிக்காது
திரிபலா தைலம் -கண்களுக்கு ஒளி கூட்டும் -கண்களுக்கு நல்லது
மண்டை பீனசதில் வேலை செய்யும் மருந்து -தலை முடி வளர செய்வதில் -ஆச்சிர்யம் ஆனால் உண்மை,இந்த தைலம் -ஏறு நெற்றி உள்ள வழுக்கை தடுப்பதில் நல்ல பலன் தரும்

தேவையான பொருட்கள்:மணத்தக்காளிக் கீரை – ஒரு கைப்பிடிவெங்காயம் – ஒரு ரூபாய் எடைவெந்தயம்- இரண்டு எடைஏல அரிசி – ஐந்து காசு எ...
24/05/2013

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளிக் கீரை – ஒரு கைப்பிடி
வெங்காயம் – ஒரு ரூபாய் எடை
வெந்தயம்- இரண்டு எடை
ஏல அரிசி – ஐந்து காசு எடை

செய்முறை:
மணத்தக்காளிக் கீரையை ஒரு சட்டியில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கீரையை நனறாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வெந்தயம், ஏல அரிசி ஆகியவற்றை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும்.
இப்போது வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இதனை மேலே சொன்ன கலவையிலே போடவேண்டும்.
வெங்காயம் சிவந்து வரும் வேளையில் தனியே வதக்கி எடுத்து வைத்திருக்கக் கூடிய மணத்தக்காளிக் கீரையுடன் போட வேண்டும்.
இப்பொழுது எல்லாவற்றையும் ஒனறாக கலந்து கிளற வேண்டும். இதில் இரண்டு ஆழாக்குத் தண்ணீரை விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கஷாயத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

உபயோகிக்கும் முறை:
காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்:
வாய் துர்நாற்றம்.

24/05/2013

சித்த மருந்துகள்- ஓர் அறிமுகம்

நமது உடல் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளின் கலவையே ஆகும். நமது முன்னோர்கள் இந்த விகிதங்களை கொண்டு ஒருவரின் உடலை வாதம் உடம்பு, பித்த உடம்பு, சிலேத்தும உடம்பு என மூன்றாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். மேலும் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு வலுவையும், நோயையும் தருகிறது. இந்த இரு தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் பழந்தமிழரின் மருத்துவம். இதனை வள்ளுவர் பின் வரும் இரண்டே வரிகளில் விளக்குவது சிறப்பு.

' மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று '

திருக்குறள் துவங்கி தொல்காப்பியம், புறநானூறு, கலித்தொகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திரிகடுகம் போன்ற நூல்கள் தமிழரின் மருத்துவம் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன. இவை தவிர அநேகமாய் எல்லா சித்தர் பெருமக்களும் மருத்துவம் பற்றிய தனித்துவமான நூல்களை அருளியிருக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தவரையில் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற கோட்பாட்டினை உடையவர்கள்.

இதனை இன்னமும் எளிமையாய் சொல்வதாயின் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத கூறுகளில் இரண்டு கூறுகள் இணைந்து ஒரு சுவையினை உருவாக்குகின்றன. இப்படி நமது உணவின் ஆறு சுவைகளும் ஏதேனும் இரு கூறுகளை பிரதிபலிக்கின்றன. நம் உடலின் தன்மைக்கேற்ப இந்த சுவை உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.

மேலே சொன்ன முறையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகள் தோன்றும் போது அது நோயாகிறது. இந்த நோய்க்கான மருத்துவம் என்பது கூட பஞ்சபூதங்களின் சமநிலையை உடலில் மீட்டெடுப்பதாகவே இருக்கிறது. நோய் என்பது என்ன?, நோயாளியின் தன்மை அல்லது பாதிப்பு எத்தகையது?, அதை தீர்க்கும் வகை என்ன என்பதை அறிந்தே அதற்கான மருந்தை தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். இதையே வள்ளுவரும்...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்கிறார். சித்த மருத்துவத்தில் மருந்துகள் இரண்டு பெரும் பிரிவினில் அடங்குகின்றன. அவை முறையே, "அக மருந்து", "புற மருந்து" எனப்படுகிறது. உள்ளுக்கு சாப்பிடக் கூடியவை அக மருந்துகள் என்றும், உடலின் மேலே உபயோகிக்கக் கூடியவைகள் புற மருந்து என வகை படுத்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவும் முப்பத்திரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு....

அக மருந்துகள்..

1.சாறு, 2.கரசம், 3.குடிநீர், 4.கற்கம், 5.உட்களி, 6.அடை, 7.சூரணம், 8.பிட்டு, 9.வடகம், 10.கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12.நெய், 13.இரசாயணம், 14.இளகம் இலேகியம், 15.எண்ணெய் அல்லது தைலம், 16.மாத்திரை, 17.கடுகு, 18.பக்குவம், 19.தேனூறல், 20.தீநீர், 21.மெழுகு, 22.குழம்பு, 23.பதங்கம், 24. செந்தூரம், 25. பற்பம், 26. கட்டு, 27. உருக்கு, 28. களங்கு, 29.சுண்ணம், 30.கற்பம், 31.சத்து, 32.குருகுளிகை.

புற மருந்துகள்...

1.கட்டு, 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடிதிமிர்தல், 11.கலிக்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15. களிம்பு, 16. சீலை, 17. நீர், 18. வர்த்தி, 19. சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டை விடல், 28. அறுவை, 29.கொம்பு வைத்துக் கட்டல், 30.உறிஞ்சல், 31.குருதி வாங்கல், 32. பீச்சு.

அக மருந்துகள்

சித்த மருத்துவத்தில் அக மருந்துகள் 32 இருப்பதாக நேற்றைய பதிவில் பார்த்தோம். அவை முறையே 1. சாறு, 2. கரசம், 3. குடிநீர், 4. கற்கம், 5. உட்களி, 6.அடை, 7. சூரணம், 8. பிட்டு, 9. வடகம், 10. கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12. நெய், 13. இரசாயணம், 14. இளகம் இலேகியம், 15. எண்ணெய் அல்லது தைலம், 16. மாத்திரை, 17. கடுகு, 18. பக்குவம், 19. தேனூறல், 20. தீநீர், 21. மெழுகு, 22. குழம்பு, 23. பதங்கம், 24. செந்தூரம், 25. பற்பம், 26. கட்டு, 27.உருக்கு, 28. களங்கு, 29. சுண்ணம், 30. கற்பம், 31. சத்து, 32. குருகுளிகை. என்பனவாகும்.

1. சாறு - இலை, வேர், பட்டை, பூ, காய், முதலிய ஏதாவது ஒன்றை அல்லது எல்லாவற்றையுமாவது பிழிந்து சாறு எடுப்பது. சிலவற்றை இடித்துப் பிழிவதும், சிலவற்றை அரைத்துப் பிழிவதும், சிலவற்றை அவித்துப் பிழிவதும் உண்டு.

2. கரசம் - காயந்து (சுக்கு போன்ற) வேர், காய் வகைகளை இடித்துப் பொடியாக்கி தண்ணீர்விட்டுக் கலக்கிப் பிழிந்த நீரையாவது, அல்லது அவற்றின் சாற்றையாவது கொதிக்க வைத்து எடுத்துக் கொள்வது.

3. குடிநீர் - மருந்து நீர், உண்ணீர், குடிநீர், புனல், கியாழம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.உலர்ந்த சருகுளயாவது, ஈரமாயுள்ள இலைகளையாவது இடித்து அதற்காகச் சொல்லப்பட்ட அளவுப்படி தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்வது. காய்ச்சத் தொடங்கும் போது இருந்த அளவில் நான்கில் ஒரு பங்கு, ஆறில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு, இருபத்தி நான்கில் ஒரு பங்கு என்று மருந்திற்க்குத் தக்கப்படி காய்ச்ச வேண்டும்.

4. கற்கம் - ஈரமான அல்லது உலர்ந்த சரக்குகளை, மருந்துச் சரக்குகள் சேர்தது கல்லோடு கல்லாக ஒட்ட அரைத்துகெட்டியாக எடுத்துக் கொள்வது, கல்கம் என்றும் சொல்வர்.

5. உட்களி - உண்பதற்குரிய களி கிண்டுவது போல் மருந்துக்கான இலைகள், சரக்குகள் முதலியன சேர்த்து கிண்டி உண்பது. உள்ளுக்கு சாப்பிடுவதால் உட்களி என்பர்.

6. அடை - உண்பதற்குரிய அடை என்ற பண்டம் செய்வது போல் மருந்துச் சரக்குகள் சேர்த்து செய்வது.

7.சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. மெல்லிய பொடி இது. இந்தப் பொடி அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்கும், வேறு மருந்துகளில் சேர்ப்பதற்கும் தூய்மைப்படுத்துவார்கள். மருந்திற்கு தேவையான பொடிகளைக் கலந்து கொண்ட பின்னர் பசும்பால் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். பசும்பாலும் தண்ணீரும் சேர்ந்த கலவையுள்ள பாத்திரத்தில் பிட்டுப்போல் வேக வைக்கவும். அல்லது இட்லிக் கொப்பரையில் இட்லித் தட்டின் மேல் நல்ல துணியைப் போட்டுப் பொடியைப் பரப்பி வேக வைக்கவும். அடியில் உள்ள பால் சுண்டும் வரை எரித்த பின்பு பொடிப் பிட்டை எடுத்து மறுபடியும் பொடியாககிச் சலித்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத முறையில் இப்படித் தூய்மை செய்யப்பட்ட பொருள் 'க்வாத சூரணம்' எனப்படுகிறது.

8. பிட்டு - முன்பு பொடியை தூய்மை செய்தது போல் செய்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து உண்ணக் கொடுப்பது.

நமது உடலானது 96 தத்துவங்களினால் ஆனது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இவற்றின் தன்மைகளை அறிந்தே மருந்துகளை தெரிந்தெடுக்க வேண்டுமாம். எனவே தேர்ந்த மருத்துவர்களினால் மட்டுமே சரியான மருந்தினை நோயாளிக்குத் தரமுடியும். எனவே சித்த மருந்துகளைப் பொறுத்தவரையில் நாமே கைவைத்தியமாய் எதனையும் மேற்கொள்ளக் கூடாது. இன்றைய பதிவில் அடுத்த ஏழு மருந்து வகைகளைப் பற்றி பார்ப்போம்.

9. வடகம் - தேவையான மருந்துச் சரக்குகளின் பொடியுடன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து பிட்டு செய்து கொள்ளவும். அந்த பிட்டை உரலில் இடித்து வேண்டிய அளவு சிறிதாக உருட்டி உலர்ததி எடுப்பது.

10. கிருதம் அல்லது வெண்ணெய் - தேவையான சரக்குகளை பொடி செய்து கொள்ளவேண்டும். பொடியின் எடைக்கு இரண்டு மடங்குபசுவின் நெய் சேர்தது அடுப்பில் வைத்து கிண்டவேண்டும். நெய் நன்றாக உருகிக் கலந்தவுடன் தண்ணீர் உள்ள மண் சட்டியில் ஊற்றவும். அதை தயிர் கடைவது போல் மத்தால் கடைந்தால் திரண்டு வருவதே வெண்ணெய் ஆகும்.

11. மணப்பாகு - தேவையான சரக்குகளை எடுத்து சாறு அல்லது குடிநீர் செய்து கொள்ளவும். அளவுக்கு ஏற்றபடி சர்க்கரை அல்லது கற்கண்டை பாத்திரத்தலிட்டுக் காய்ச்சவும். மணம் வரும் பக்குவத்தில் இறக்கிக் கொண்டு சரக்குப் பொடியை அல்லது சாற்றை கலந்து எடுத்துக் கொள்வது.

12. நெய் - சாறு, கற்கம், குடிநீர் முதலியவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது சிலவகைகளில் சேர்த்தோ பசுவின் நெய்யுடன் சேர்த்து, அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி பக்குவத்தில் இறக்கிக் கொள்வது.

13. இரசாயனம் - சரக்குகளைப் பொடியாக்கி சர்க்கரையும் நெய்யும் அளவுப்படி சேர்த்து இளகலாகப் பிசைந்து எடுத்துக் கொள்வது.

14. இளகம் அல்லது இலேகியம் - இது இருவகையில் தயாரிக்கப்படுகிறது.

(1) தேவையான குடிநீர் வகை, சாறு முதலியவைகளில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஏற்றவும் சாறு சுருங்கி மணம் வரும் நேரத்தில் சரக்குப் பொடியைத் தூவி, தேன் விடவும்.பின்னர் நெய் விட்டுக் கிளறிப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

(2) சர்க்கரையைப் பாத்திரத்தில் இட்டு, வேண்டிய அளவு பசும்பால் அல்லது நீர் விட்டு அடுப்பேற்றி மணம் வரும் பக்குவத்தில் தேனை விட்டுப் பொங்கி வரும் போது சரக்குப் பொடியைத் தூவி, பிறகு தேனையும் நெய்யையும் விட்டுக் கிளறி எடுத்துக் கொள்வது.

சமஸ்கிருத மொழியில் அவலேஹம் என்பது மருவி 'லேகியம்' என்ற பெயரே இளகத்திற்கு வழக்கில் சொல்லப் படுகிறது.

15. எண்ணெய் அல்லது தைலம் - எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும் எண்ணெய் என்றே குறிப்பிடுகின்றனர்.

தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் ஆகும். இவை தயார் செய்யும் முறையைக் கொண்டு பன்னிரெண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.. அவை..

கொதிநெய் - ஆமணக்குமுத்து முதலியவற்றை வறுத்து, இடித்து நீரில் கலக்கி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைப்பதால் உண்டாவது.

உருக்கு - வெண்ணெய், கோழிமுட்டைக்கரு முதலியவைகளை உருக்குவதால் உண்டாவது.

புடநெய் அல்லது குழிப்புட நெய் - அடியில் துளையிட்ட பானையில் சேங்கொட்டை, சிவனார்வேம்பு முதலியவற்றை பக்குவப்படி செயது நிரப்பி, மேலே மூடி மண்சீலை செய்து ஒரு குழி தோண்டி அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து மேலே சரக்குள்ள பானையை வைத்து புடம் போடுவதால் அடியில் இருக்கும் சட்டியில் இறங்கி இருப்பது.

சூரிய புட நெய் - எள்ளுடன் சேர்த்து அரைத்த கல்க மரந்தை (சூரிய) வெய்யிலில் வைத்து அந்த வெப்பத்தின் மூலம் உண்டாக்குவது.

தீ நீர் நெய் - சந்தனக்கட்டை முதலியவைகளைத் தூளாக்கிப் பட்டி கட்டித் தண்ணீரில் இட்டு இறக்குகின்ற தீ நீரினால் உண்டாவது.

மண் நெய் - சேறில்லாத நிலத்தில் இருந்து தானாகவே கொப்பளித்து உண்டாவது.

மர நெய் - மரத்தில் வெட்டப்படும் இடத்தில் உண்டாவது.

சிலை நெய் - உயர்ந்த மலைகளிலிருந்து வழிந்து வருவது.

நீர் நெய் - புழுகுச் சட்டம் முதலியவைகளை இடித்து, நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைப்பதனால் உண்டாவது.

ஆவிநெய் - மட்டிப்பால், சாம்பிராணி முதலிய சரக்குகளை நெருப்பில் காயந்த மண் சட்டியில் போட்டு அதன் மேல் தண்ணீர் நிறைந்த தட்டு ஒன்றை வைக்க அந்தப் புகையால் தட்டின் அடிப்பாகத்தில் உண்டாவது.

சுடர் நெய் - கெந்தகம் முதலிய சரக்குகளை அரைத்துப் புதுத்துணியில் தடவி இரும்புக் கதிரி சுற்றிக் கட்டி அதை ஒரு முனையில் கொளுத்தி பெறப்படுவது.

பொறிநெய் - எள், கடலை முதலிய விதைகளிலிருந்து செக்கு போன்ற பொறி (இயந்திர) கருவிகளால் எடுக்கப்படுவது.

இந்தப் பன்னிரண்டு வகை நெய்களும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப்படும்.

முடி நெய் - தலைக்கு இடுகின்ற நெய்.

குடி நெய் - உள்ளுக்குக் குடிக்கும் நெய்.

பிடி நெய் - தோல் மீது தடவிப் பிடிக்கும் நெய்.

தொளை நெய் - உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் இடுகின்ற நெய்.

சிலை நெய் - புரைகளின் வழியாக ரத்தம், சீழ் முதலியவைகளை ஒழுகச் செய்யும் கெட்ட ரணங்களுக்கு இடுகின்ற நெய்.

16. மாத்திரை - மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர்.

சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.

17. கடுகு - மருந்துச் சரக்குகளை நெய் முதலியவைகளுடன் சேர்த்துக் காய்ச்சவும். அச்சரக்குகள் திரண்டு வரும்போது (கடுகு பதத்தில்) அதை உண்டு விடுவது. வடியும் நெய்யை மேல் பூச்சாகப் பூசுவது.

18. பக்குவம் - பாடம் செய்வது, பாவனம் செய்வது எனவும் அழைப்பர். கடுக்காய்போன்ற சில சரக்குகளை அரிசி கழுவிய நீரில் ஊறப்போட்டு மென்மையான பிறகு மோர், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பக்குவம் செய்து கொள்வது.

19. தேனூறல் - இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய் முதலியவற்றை நீரில் ஊறவைத்து எடுத்து நன்றாக உலர்த்திக் கொண்டு சர்க்கரைப் பாகு அல்லது தேனில் ஊற வைத்துத் தயாரிப்பது.

20. தீநீர் - சரக்குகளைச் சேர்த்து வாலையிலிட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து எரித்து இறக்குவது தீநீர் ஆகும்

நாம் கட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ....... !!!வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ள...
24/05/2013

நாம் கட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ....... !!!


வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘B’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

1.)சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.
குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.
தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

2.)இரத்த மூலம்
மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

3.)உடல் சூடு
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

4.)வயிற்றுக் கடுப்பு நீங்க
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

5.)பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

6.)கைகால் எரிச்சல் நீங்க
கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

7.)இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

8.)தாது விருத்திக்கு
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

9.)மலட்டுத்தன்மை நீங்க
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

Address

Pootharmadam Junction, Point Pedro Road, Kopay North, Kopay

40000

Telephone

+94714778827

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharan AYUSH Herbal Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram