12/12/2024
மழை வெள்ளத்தைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் நாடெங்கும் பரவிவருகிறது. யாழில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன, எலிக்காய்ச்சலில் இருந்து எப்படி நம்மைக் காத்துக்கொள்வது
எலிக்காய்ச்சல் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய ஐந்து விடயங்கள்
1)எலிக்காய்ச்சல் என்றால் என்ன?
லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் இந்த நோய், பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீரில் பரவும் பாக்டீரியாவின் காரணமாக உருவாகிறது.
இது மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுவதில்லை
2)எலிக்காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?
வெள்ள நீர், ஆறுகள் அல்லது ஓடைகள் போன்ற நன்னீர்களில் புழங்குவதால் காயங்கள் அல்லது கீறல்கள் ஊடாக அல்லது கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக பக்டீரியா உடலினுள் செல்வதால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பற்ற குழாய் நீர் அல்லது வெள்ள நீர் கலந்த பாதுகாப்பற்ற கிணற்று நீரைப் பருகுவதால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட உணவினை உண்பதால் அதில் காணப்படும் பாக்டீரியா வாய் வழியாகச் சென்று நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
3)எலிக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்
• விலங்கு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் அல்லது பண்ணைகளை அண்டி வாழ்பவர்கள்
• வயல், தோட்ட வேலை செய்பவர்கள்
• ஏற்கனவே உடலில் குறிப்பாக கால்களில் காயங்கள் உள்ளவர்கள்
• வெள்ள நீரில் விளையாடும் சிறுவர்கள்
4)எலிக்காய்ச்சல் வந்துள்ளதா என்று எப்படித் தெரிந்து கொள்வது?
கடும் காய்ச்சல்
கடுமையான தசை வலி
கண் சிவந்து காணப்படுதல்
கூடவே
வாந்தி
தலையிடி
மனச் சோர்வு
சிறு நீர் வெளியேறும் அளவு குறைதல்
சிறு நீரோடு இரத்தம் வெளியேறல்
மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலை செல்லுங்கள்.
5)எலிக்காய்ச்சல் வராமல் தப்பிப்பது எப்படி
கால்களில் காயங்கள் இருப்பவர்கள் கூடுமானவரை வெள்ள நீர்படுவதைத் தவிர்க்கவும்
விலங்கு வளர்ப்பில் ஈடுபடுபவர்களும் விவவசாயிகளும் பாதுகாப்புக் காலணிகளை அணியுங்கள்
குளங்கள் ஆறுகள் வாய்க்கால்களில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
விலங்குகள் அணில்கள் எலிகள் கடித்ததாகச் சந்தேகிக்கும் பழங்கள் உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம்.
சுத்தமான கொதித்து ஆறிய நீரைப் பருகுங்கள்
#எலிக்காய்ச்சல் Care care
https://www.amigocompanioncare.com/
077 367 0206
+44 7944 969540