அறம்

அறம் Respect and honour all human beings irrespective of their religion,colour,race,sex,language,status,property birth,professional/job & soon. Quran (17:70)

ஆட்டு மந்தை கோட்பாடு  🐑🐑🐑🐑🐑🐐🐐🐐🐐🐐2005 ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள ஒரு கிராமப்புறத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததுள்ளது. மலைப...
29/03/2023

ஆட்டு மந்தை கோட்பாடு
🐑🐑🐑🐑🐑🐐🐐🐐🐐🐐

2005 ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள ஒரு கிராமப்புறத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததுள்ளது.

மலைப்பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று மலை உச்சியில் ஏறி அருகாமையில் உள்ள மலைப் பாறை மீது குதித்துப் பார்த்துள்ளது. இரு மலைகளுக்கும் இடைப்பட்ட தூரம் அதிகம் என்பதால் அந்த ஆடு கீழே உருண்டு மாய்ந்து போயுள்ளது. அங்கே அதிசயம் என்னவென்றால், அதனை பின்தொடர்ந்து வந்த சுமார் 1500 ஆடுகளும் ஒன்றின் பின் ஒன்றாக அப்படியே, அதேபோல் துள்ளிப் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளன!

பிற்காலத்தில் "ஆட்டு மந்தைக் கோட்பாடு"(herd behaviour) பற்றிய ஆய்வுகள் மேற்கோள்ளப்பட இச்சம்பவம் பிரதான காரணமாக மாறியது.

நவீன வாழ்வியல் முறைகளில், எமது உணவு, உடை, நடை பாவனைகளை நாம் உன்னிப்பாக அவதானித்தால், ஆட்டு மந்தைக் கோட்பாட்டை அணுவளவும் பிசகாது நாம் கடைப்பிடிப்பதை கண்டுகொள்ளலாம்.

தப்பென்று தெரிந்து கொண்டும் குறித்த ஒரு சடங்கு சம்பிரதாயத்தை, அல்லது கலாச்சாரம் சார்ந்த திணிப்புக்களை நாம் தழுவித்தான் ஆகவேண்டும் என்பதே "ஆட்டு மந்தைப் போக்கு" மனப்பாங்காகும்.

ஆட்டங்கள் கொண்டாட்டங்களை எல்லோரும் ஆடுகிறார்கள் கொண்டாடுகின்றனர் என்பதற்கே நாமும் ஆடுகிறோம், கொண்டாடுகின்றோம்.

திருமண விழாக்களை, குடும்ப நிகழ்வுகளை எல்லோரும் ஆடம்பரமாக ஆரவாரமாக எடுப்பதற்காகவே நாமும் ஆடம்பரமான, அனாவசியமான செலவுகளை செய்கிறோம்.

வீடுகளை கட்டும் போது, வாகனங்கள் வாங்கும் போது எல்லோரும் செய்வது போன்றே நாமும் செய்கிறோம்.

கிழிந்த, அசிங்கமான ஆடை மாடல்களை எல்லோரும் அணிகிறார்கள் என்பதற்கே நாமும் அணிகின்றோம்.

அருவருப்பான சிகை அலங்காரங்களை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்கிறோம்.

இங்கு நாம் சுயபுத்தி பறிக்கப்பட்டவர்கள் போல, முடிவெடுக்க மறுக்கப்பட்டவர்கள் போல, சமூக, பொருளாதார, கலை, கலாச்சாரம் என வாழ்வின் பன்முகப்பட்ட போக்குகளிலும் ஆட்டு மந்தைக் கூட்டத்தை பின்தொடர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

நிச்சயிக்கப்பட்ட அழிவின் பாலும், கண் காணும் அதல பாதாளத்திற்கும் நம்மை தள்ளி விடும் என்று தெரிந்து கொண்டே நாமும் பின்தொடர்வதே இங்கு வேதனைக்குறியதாகும்.

09/03/2023

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

ஓர்  இளைஞன் தன் தந்தையைபார்த்து கேட்டான் .....⚘செல்போன்⚘டி வி⚘கம்ப்யூட்டர்⚘இண்டர்னெட்⚘ஏ சி⚘வாஷிங் மெஷின்⚘கேஸ் கனெக்‌ஷன்⚘...
02/08/2022

ஓர் இளைஞன் தன் தந்தையை
பார்த்து கேட்டான் .....

⚘செல்போன்
⚘டி வி
⚘கம்ப்யூட்டர்
⚘இண்டர்னெட்
⚘ஏ சி
⚘வாஷிங் மெஷின்
⚘கேஸ் கனெக்‌ஷன்
⚘மிக்ஸி

இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?

தந்தை பதில் கூறினார்

⚘மரியாதை
⚘மானம்
⚘மதிப்பு
⚘வெட்கம்
⚘உண்மை
⚘நற்குணம்
⚘நன்னடத்தை
⚘நேர்மை
⚘தெய்வ பக்தி
⚘தர்மம்
⚘கற்பு

இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி..

ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்

⚘நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை

⚘பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை
விளையாடினோம்.

⚘டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை

⚘உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்.

⚘இண்டெர் நெட்டில் அல்ல

⚘தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் .

⚘மினரல் வாட்டர் அல்ல

⚘ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை...

⚘தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை

⚘எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்.

⚘எந்த பாதிப்பும் வந்ததில்லை

⚘எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்

⚘எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல...

⚘ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை.

⚘ பெற்றோர்களோடே படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல...

⚘உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை

⚘எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்

⚘எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல

⚘எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

⚘பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்..

⚘சுருக்கமாக சொன்னால்
⚘WE ARE THE LIMITED EDITIONS⚘

⚘ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

⚘அன்பாக இருங்கள்
⚘கற்றுக் கொள்ளுங்கள்

⚘நாங்கள் இம்மண்ணிலிருந்து மறையும் வரை ...

*படித்ததில் பிடித்தது*.... 💐🌹👌

வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள  #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள  #மலேசியா மு...
13/03/2022

வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...

வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள #மலேசியா முன்னேறிவிட்டது...

வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள
#டென்மார்க் முன்னேறிவிட்டது...

வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள
#சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது...

வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள #அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது...

வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறிவிட்டது...

வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள
#அமெரிக்கா முன்னேறிவிட்டது...

வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம்
நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறிவிட்டது...

இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்
தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,,

நீர்வளம்,
நிலவளம்,
மலைவளம்,
வனவளம்,
விவசாயவளம்,
உற்பத்திவளம்,
இரத்தினக்கல் வளம்,
தேயிலை,
தென்னை,
நெல்,
அரிசி,
இரப்பர்,
கோப்பி,
கொக்கோ,
கிராம்பு,
மிளகு,
ஏலம்,
போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம்,
வாழை,
பலா,
தூரியன்,
ராம்புட்டான்,
மெங்கூஷ் ,
அன்னாசி போன்ற கனிவளம்,
மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை?

சிந்தனைக்கு...

40 வருடங்களுக்கு முன்80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..2. காதலித்து திருமணம் ...
05/03/2022

40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..

2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.

3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.

4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.

6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.

8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.

9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

10. பாடல்களின் வரிகள் புரிந்தன.

11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.

14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.

15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.

17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.

18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.

23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.

அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது

இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.

படித்ததில் பிடித்தது.

19/12/2021

நடப்பது என்ன?
நடக்கப் போவது என்ன?

விழிம்பின் உச்சத்தில் இலங்கை

இலங்கையின் பொருளாதார நிலை குறித்தான் சமூகப்பார்வை

கடன் சுமை ஒரு பக்கம்
பொருளாதார நெருக்கடி ஒருபக்கம்

விழிம்பின் உச்சத்தில் இலங்கை

25/11/2021

You are the Best forever
உன்னை நீ நம்பு & உலகம் உன்னை நம்பும்

*என்னை இளவரசியாக வளர்த்து*ஈமானிய மகுடம் சூட இளமையை இழந்து , ~நரையிலும்~ எனக்கு முன்மாதிரியாய் திகழும் , ~கஷ்டத்திலும்~ எ...
01/11/2021

*என்னை இளவரசியாக வளர்த்து*

ஈமானிய மகுடம் சூட இளமையை இழந்து ,

~நரையிலும்~ எனக்கு முன்மாதிரியாய் திகழும் ,

~கஷ்டத்திலும்~ என்னை பார்த்து சிரிக்கும் , உள்ளம்

*_தந்தையல்லவா_*

என்னோட பதினைந்தாவது வயதில்.. நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …ஆனா நான் அமெரிக்கால குடி...
06/10/2021

என்னோட பதினைந்தாவது வயதில்.. நான் அமெரிக்காவில் குடியேற போகிறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …

ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்..!

என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதாக சொன்னேன்... எல்லோரும் சிரிச்சாங்க …

நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்..!

அதன்பிறகு நான் சினிமாவில் பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.. எல்லாரும் சிரிச்சாங்க …

நான் ஹாலிவுட்ல ஹீரோவாக ஆனேன்..!!

சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்..!!

என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன்..

எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …

நான் கவர்னர் ஆனேன்.!!
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் …

அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க…

தன்னம்பிக்கையாலும்.. என்னோட கடின உழைப்பாலும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது...!!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது...!

அது அவர்களின் வியாதி..!
நம்மை பற்றியும், தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது...!!

- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு...!!!

----படித்ததில் பிடித்தது----

*நின்று கொண்டு தண்ணீர் அருந்தாதீர்கள்..!!**அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக...
28/08/2021

*நின்று கொண்டு தண்ணீர் அருந்தாதீர்கள்..!!**

அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக இனி நின்றவாறு தண்ணீர் பருக மாட்டீர்கள்.

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றில் விழும். இப்படி வேகமாக விழும் நீரானது உடல் உறுப்புகள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை பாதிப்படைய செய்கிறது. மேலும் உடலின் சமநிலையை பாதிக்கிறது. இதனால் மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரக்கூடும். அதுமட்டுமின்றி, செரிமான சிக்கலை ஏற்படுத்தி, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஏற்படவும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது.

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் இந்த தாக்கங்கள் உடனடியாக நமக்கு தெரியாத காரணத்தால் நாமும் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை.

இப்படி இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் எழுந்தாலும் நின்று கொண்டு அல்லது அண்ணாந்து தண்ணீர் குடிப்பதால் தான் இந்த பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்பதை கூட சிந்திக்க மாட்டோம்.

ஆயுர்வேத முறைப்படி நீரை வாயில் வைத்து மெல்ல மெல்ல விழுங்க வேண்டும் என்கிறார்கள். அவசர அவசரமாக அருந்துவதையும் தவிர்க்க சொல்கிறார்கள்.

அண்ணாந்து தண்ணீர் பருகுகையில், நீரானது நுரையிரலுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைகளை, எச்சில் பட்டுவிடும் அண்ணாந்து குடி என்பார்கள். சிறுவயது முதலே இப்படி பழக்கப்படுத்துவார்கள்.

இந்த முறை நாகரீகமாக பார்க்கப்பட்டாலும் இது ஆரோக்கியமான முறையாக பார்க்கப்படுவதில்லை.

14/08/2021

Address

Kalmunai

Telephone

+94772185845

Website

Alerts

Be the first to know and let us send you an email when அறம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to அறம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram