22/09/2014
கண்ணில் வெள்ளை படர்தல் நோயயைக் (Cataract) கண்டறிவதற்காக Caring Needs பகுதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம்
கண்ணில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பரீட்சித்து சிகிச்சை செய்யும் நோக்கில் ஒரு விசேட வைத்திய முகாம் இன்று 2014-09-21 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் முற்பகல் 12.00 மணி வரை வலவ்வத்தை ஜமாஅத் காரியாளயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம், முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் இந்த வைத்திய முகாம் முற்பகல் 12:00 மணிக்கு முடிவடைவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இப்பிரதேச மக்களின் தேவையைக் கருத்திற் கொண்டு மாலை 3.00 மணி வரை நீடிக்கப்பட்டது. வைத்திய முகாமிற்கு நோயாளிகளை பரீட்சிப்பதற்காக வந்திருந்த வைத்தியர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவூம் சிறப்பாக நோயாளிகளைப் பரீட்சித்து நோயாளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையூம் வழிங்கியமை இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.
மேலும் இந்த வைத்திய முகாமில் கலந்து கொண்டவர்களில் சுமார் 65 பேர் கண்ணில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது வைத்தியர்களினால் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை புத்தளத்தில் ஜமாஅதே இஸ்லாமியின் அணுசரனையோடு இயங்கி வருகின்ற குவைத் வைத்தியசாலையில் எதிர்வரும் சில வாரங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைத்திய முகாமில் கலந்து கொண்டு தமது வைத்திய சேவையை வழங்கிய முஸ்லிம், முஸ்லிமல்லாத வைத்தியர்களுக்கும் பல வகையிலும் உதவி செய்த தொண்டர்களுக்கும் ஜமாஅதே இஸ்லாமியின் சமூகசேவைப் பிரிவான Caring Needs for Humanity ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.