Nelliady.Com

Nelliady.Com Nelliady is the largest city in the Northern Province of Sri Lanka. Nelliady is a centre for learning. Secondary schools were one of the best in the country.

It has a population of doctors, engineers and professors working all over the world. Nelliady Madhya Maha Vidyalayam, Sacred Heart College, Vigneswara College, Uduppiddy American Mission College, Gnanasariyar College and Hartley College are schools of the region.

தாய்( தமிழ் )  -  தாயி( கன்னடம் )தந்தை ( த )  -  தந்தே ( க )சகோதரன் - சகோதரதங்கை  - தங்கி பால்  - ஆலு கண்  - கண்ணு பிரிய...
01/06/2025

தாய்( தமிழ் ) - தாயி( கன்னடம் )
தந்தை ( த ) - தந்தே ( க )
சகோதரன் - சகோதர
தங்கை - தங்கி
பால் - ஆலு
கண் - கண்ணு
பிரியம் - ப்ரிதி
பசு - அசு
சித்தப்பா - சித்தப்பா
அத்தை - அத்தே
எருது - எத்து
புருசன் - புருச
குயில் - குவில்
ஆரண்யம் - ஆரண்ய
பர்வதம் - பர்வத
மழை - மழே
மாதிரி - மாதிரி
மூக்கு - முகு
முகம் - முக்க
பல் - அல்லு
கால் - காலு
விரல் - பெரலு
கழுதை - கத்தே
இருதயம் - இருதய
சுவாசகோசம் ( நுரையீரல் ) - சுவாச கோகலு
இரத்தம் - ரத்த
நரம்பு - நர
குடல் - கருலு
சுன்னி - சுன்னி
மூத்திரம் - மூத்திர
தேகம் - தேக
நோக்கு - நோடி
பீ - பீ
வாந்தி - வாந்தியகுட்டிடே
நாங்கள் - நாவு
நீங்கள் - நீவு
நான் - நானு
கதை - கதே
மத்தியானம் - மத்தியான
இராத்திரி - ராதிரி
சூரியன் - சூர்யா
சந்திரன் - கேன்திரா
ஆகாசம் - ஆகாச
சிவன் - சிவா
பார்வதி - பார்வதி
உப்பு - உப்பு
காரணம் - காரண
கிரகம் - கிரக
கோல் - கோல்
இது - இது
ஆனந்தம் - ஆனந்த
ஆகாய விமானம் - விமானம்
மரம் - மரா
சிங்கம் - சின்க
புலி - உலி
யானை - ஆனே
கரடி - கரடி
மந்தி குரங்கு - மன்கி
ஒட்டகம் - ஒண்டி
மீன் - மினு
புல் - உல்லு
அடியில் - அடியல்லி
மேல் பாகம் - மேல் பாக
எட்டம் ( உயரம்) - எட்டர
காசு - அணா
ரூபாய் - ரூ
தேசம் - தேச
ஒன்று - ஒன்டு
இரண்டு - இரடு
மூன்று - முரு
நான்கு - நால்கு
ஐந்து - ஐது
ஆறு - ஆறு
ஏழு - ஏழு
எட்டு - என்டு
ஒன்பது - ஒம்பட்டு
பத்து - அத்து
நூறு - நுறு
இலட்சம் - லக்ச
கோடி - கோடி
மாடி - மாஅடி
வீணை - வீணா
புல்லாங்குழல் - குழலு
தவில் - தெவில்
நாதசுரம் - நாதஸ்வரம்
சுரம் ( காய்ச்சல்) - சுர
மற்ற - மற்ற
வாசனை - வாசனே
நாய் - நாயி
வாய் வாயி

கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இருந்தன அவை யாவும் சிதைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் விட்டது.
தமிழில் இருந்து தான் உலக மொழிகள் யாவும் தோன்றின என மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர் கூறியுள்ளார்.

ஹீப்ரு மொழியின் தாய்மொழி தமிழ்தான் என சொல்லாய்வு அரிமாம. சோ. விக்டர் நிறுவியுள்ளார்.

இலத்தின் உள்ளிட்ட உலக பழமையான மொழிகள் யாவும் தமிழில் இருந்தே உருவானது.
சிங்களம், மலாய், ஆங்கிலம் ஆகியவை தமிழில் இருந்து தோன்றியவை என தனித்தனியாக
விளக்கமாக நான் முக நூலில் பதிவிட்டு உள்ளேன்.

சமஸ்கிருத எழுத்துக்கள், சொற்கள் யாவும் தமிழ் தான் என முக்கியமான தரவுகளோடு விரைவில் பதிவிட உள்ளேன்.
கன்னட மொழி கி. பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் தனி மொழியாக பரிணமித்தது என மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எழுத்து வடிவம் மற்றும் மொழி வளமை பெற மேலும் இரண்டு நூற்றாண்டுகள் ஆனது என்பது திண்ணம்.

அம் மொழியின் வார்த்தைகள் வாக்கியங்கள் யாவும் நேரடி தமிழ் மற்றும் தமிழின் திரிபாக உள்ளதை மேலும் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் மூலம் என்னால் விளக்க முடியும்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் தமிழ்தான் உலக மொழிகளின் தாய் என்பதை யாராலும் மறைக்க முடியாது.

காலம் தமிழின் பெருமையை கட்டாயம் நிலை நிறுத்தும்.

26/05/2025

பஸ் சாரதிகள் ஆபத்தான முறையில் Driving செய்யும் விடியோக்களை மேற்குறிப்பிட்ட இலக்கங்களுக்கு அனுப்பும்படி பொதுமக்களிடம் கோரப்படுகின்றனர்.

மாத்தறை - 0718591433
காலி - 0718591452
எல்பிட்டி - 0718591472
தங்கானை - 0718591488
புத்தளம் - 0718591289
குளியாபிட்டி - 0718591304
நிகவெரட்டி - 0718591274
குருநாகல் - 0718591244
கண்டி - 0718591042
தெல்தெனிய - 0718592274
மாத்தளை - 0718591079
கம்பளை - 0718591070
நுவரெலியா - 0718591094
ஹட்டன் - 0718591114
இரத்தினபுரி - 0718591382
கேகாலை - 0718591410
சீதாவகபுர - 0718591423
கம்பிளிப்பிட்டி - 0718591392
கந்தளாய் - 0718591187
அம்பாறை - 0718591145
மட்டக்களப்பு - 0718591127
திருகோணமலை - 0718591170
காரைதீவு - 0718591315
யாழ்ப்பாணம் - 0718591327
வவுனியா - 0718591340
மன்னார் - 0718591363
கிளிநொச்சி - 0718591347
முல்லைத்தீவு - 0718591374
மொனராகலை - 0718591533
பண்டாரவளை - 0718591520
பதுளை - 0718591508
கெகிரகொல்லேவ - 0718592902

RiP💐
17/05/2025

RiP💐

(Primary school Teacher) Theivam passed away 17/5/2025 🙏

அமரர். பாலகிருஷ்ணன் தணிகைவேள் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை 11.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் உடுப்பிட்ட...
10/03/2025

அமரர். பாலகிருஷ்ணன் தணிகைவேள் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை 11.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் உடுப்பிட்டி வீதி, வதிரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் திக்கம் மத்திய சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திக்கம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்..

தகவல்
குடும்பத்தினர்

09/03/2025

திக்கத்தினைப் பிறப்பிடமாகவும், திககம் மற்றும் வதிரி ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட திரு.பாலகிருஷ்ணன் தணிகைவேள் இன்று 09.03.2025 ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி...

இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத் தரப்படும்..

யாழ்ப்பாணம் பலாலிக்கும் - தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இடையே வரும் 30 ஆம் திகதியன்று விமான சேவை ஆரம்பம்History is back. ...
08/03/2025

யாழ்ப்பாணம் பலாலிக்கும் - தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இடையே வரும் 30 ஆம் திகதியன்று விமான சேவை ஆரம்பம்

History is back. Trichys 12th international destination is Jaffna, Sri Lanka. After about a half century, after Air Ceylon, now Indigo is going to restore the historical, cultural, ethnic tie-up between Trichy and Yaalpaanam. It will fly daily between and and Vice-versa from this Summer which will start on 30th March. This is the shortest international air route in South India, 2nd in India.









IndiGo Tiruchirappalli International Airport - AAI Airports Authority of India

நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெறுகிறார்..நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான்...
19/01/2025

நீதிபதி இளம்செழியன் அவர்கள் நீதித்துறை யில் இருந்து ஓய்வுபெறுகிறார்..

நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சேர் அவர்கள் 🖤 அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர் நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான் ❤️

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.

05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2024 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி என்ற சிறப்பிற்குரியவராகிறார்.

இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1999 இல் யாழ். செம்மணி புதைகுழி வழக்கு.

1999 இல் மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு.

2000 - 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை.

ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றினார்.

2006 இல் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு.

2008 இல் மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை.

2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை.

2014 இல் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்.

2015 இல் கணவர் கொலை கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை.

2015 இல் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை.

2018இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை.

2022 இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

27 வருட காலப் பகுதியில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்குறித்த முக்கிய வழக்குகளுக்கான தீர்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதியின் காவலனுக்கு வாழ்த்துக்கள்

07/01/2025
https://www.facebook.com/share/1BRLgrZ1kJ/?mibextid=wwXIfr
03/01/2025

https://www.facebook.com/share/1BRLgrZ1kJ/?mibextid=wwXIfr

வதிரி கல்வத்தையைப் பிறப்பிடமாகவும் கல்வத்தை, கொழும்பு மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி துரைராஜா ( முன்னாள் துணைவேந்தர்மாமனிதர் அ.துரைராஜா அவர்களின் துணைவியார் ) அவர்கள் அமெரிக்காவில் காலமானார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்...

1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சரசாலையில்  நிறுவப்பட்ட பனை சீனி உற்பத்தி நிலையம் ❤️
30/11/2024

1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சரசாலையில் நிறுவப்பட்ட பனை சீனி உற்பத்தி நிலையம் ❤️

பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள், கரையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள் கப்பலில் இருந்து பறக்கவிட்டால் காகங்கள...
27/11/2024

பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள், கரையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள்

கப்பலில் இருந்து பறக்கவிட்டால் காகங்கள்
கரை இருக்கும்
திசை நோக்கி பறக்கும் பழக்கம் கொண்டவை.

கிட்டத்தட்ட
ஒரே நேர்கோட்டில் திரும்பி வரக்கூடியவை.

பாய்மரக் கப்பல்களின் உச்சியில் காக்கைக் கூடு (Crow’s nest) என்று ஒரு பகுதி உண்டு. நான்(எழுத்தாளர் மோகன ரூபன் ) மொழிபெயர்த்த திமிங்கில வேட்டை புதினத்தில் கூட
இந்த காக்கைக்கூடு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.

சங்க இலக்கியமான நற்றிணையில்
ஒரு பாடல்,

மருங்கூர் துறைமுகத்தில் பச்சை இறாலைக் கவர்ந்து கப்பலின் பாய்மர உச்சியில் போய் உட்கார்ந்த காக்கையைப் பற்றி குறிப்பிடுகிறது.

‘பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேர்க்கும்
மருங்கூர்ப் பட்டினத்து...’

இது ஒருபுறம் இருக்கட்டும்.

கப்பலுக்கும் காக்கைக்கும் தொடர்பு ஏற்படுத்துவது போன்ற ஒரு தகவல், நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் காணப்படுகிறது.

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில், ‘கூம்பேறும் பறவை அதுவே போன்றிருந்தேனே’ என்று ஒரு வரி வருகிறது.

கடல்நடுவே
(ஆழக் கடலில்) மிதக்கும் கப்பலின் கூம்பில் (பாய்மர உச்சியில்) இருந்து பறக்கும் பறவை கடலில் எங்கு சுற்றினாலும் மீண்டும் கப்பலுக்குத்தான் திரும்பி வர வேண்டியிருக்கும்.

அதுபோல எங்கு சுற்றினாலும் இறைவா உன்னைத் தேடித்தான் நான் வந்தாக வேண்டும் என்பதுதான்,

‘கூம்பேறும் பறவை அதுவே போன்றிருந்தேனே’ என்று நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில்,

‘கப்பலேறி விட்ட காகம் கலங்குமா?’ என்று
ஒரு பழமொழி உள்ளது.

பறக்கும் திசைக்காட்டி கருவியாக
(அந்தக் காலத்து ட்ரோனாக!) பயன்படும் காகத்துக்கு
அது வளர்ப்புப் பறவை என்பதால் கப்பலிலும் உணவு கிடைக்கும். கடலிலும் உணவு கிடைக்கும்.

இதைத்தான் ‘கப்பலேறி விட்ட காகம் கலங்குமா?’ என்ற தமிழ்ப்பழமொழி சுட்டிக்காட்டுகிறது.

🔴முக்கிய அறிவித்தல் அதிகம் பகிரவும்🔴👉வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் ...
27/11/2024

🔴முக்கிய அறிவித்தல் அதிகம் பகிரவும்🔴

👉வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬

அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
Point Pedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 0212211525.

Address

Nelliady

Alerts

Be the first to know and let us send you an email when Nelliady.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nelliady.Com:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram