26/11/2020
அஸ்ஸலாமு அலைக்கும்.
கொரொனா தொற்று எமது பகுதியிலும் தீவிர தொற்று நிலையை நோக்கி நகர்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனை கட்டுப்படுத்தி நாமும் எமது குடும்பமும் தப்பித்துக் கொள்ள வழக்கமான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் தவறாது பின்பற்றவும்.
கொரொனா தொற்றுக்குள்ளான ஒரு நோயாளி அவர் அறியாமலோ அல்லது அறிந்தும் வேண்டுமென்று மறைத்தோ ஒரு வைத்தியரை சந்திக்கின்ற போது வைத்தியருக்கும் தொற்று உண்டாகலாம். அதனை தொடர்ந்து குறித்த வைத்தியரிடமிருந்து அவரை சந்திக்கும் நோயாளிகளுக்கு தொற்றலாம்.
இவ்வாறான தொற்று ஏற்படும் நிலைமையை தவிர்க்க என்னிடம் மருந்து எடுக்கும் உங்களுக்கு விசேடமாக இந்த அறிவித்தலை விடுக்கிறேன்.
இயலுமானவரை வைத்தியசாலைக்கு வருவதையோ அல்லது வைத்தியரை நேரடியாக சந்திப்பதையோ இயலுமானவரை தவிர்ப்போம்.
உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ நோய் ஏற்படுமானால் 0754291522 எனும் இலக்கத்தின் ஊடாக என்னுடன் பேசவும். நோய் நிலைமைகளுக்கு ஏற்ப உங்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். அத்தோடு உங்களுக்கான மருந்துகளும் எமது பார்மசியில் தயார்படுத்தப்பட்டு இருக்கும். உங்கள் வீட்டிலிருந்து ஒரு நபர் எமது பார்மசிக்கு வருகை தந்து மருந்தை பெற்று செல்லலாம்.
எமது நிலையம் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையும் மாத்திரமே திறந்திருக்கும் என்பதால் குறித்த நேரத்தில் மாத்திரமே எனது தொலைபேசிக்கு அழைக்கவும். தயவு செய்து மற்றைய நேரத்தில் எனக்கு கோல் செய்து என்னை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம். அத்தோடு குறித்த நேரத்தில் (மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும்) நீங்கள் கோல் செய்யும் சந்தர்ப்பத்தில் நான் உங்கள் கோலுக்கு ஆன்ஸர் பண்ணவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். நீங்கள் அழைக்கின்ற நேரம் வேறொரு அழைப்பிலோ அல்லது வேறொரு தவிர்க்க முடியாத வேலையில் இருக்கலாம். எனது வேலை முடிந்த பின்னர் இன்ஷா அல்லாஹ் நானே உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவேன்.
ஜஸாக்கல்லாஹு கைரன்.
Dr. S. M. RIFASDEEN