Muslim Nikah Service

Muslim Nikah Service This is a free service We Are Like To Help People Its My side Help For Find The Right Person In your Life

வெள்ளிக்கிழமை_நினைவூட்டல்நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் த...
22/05/2025

வெள்ளிக்கிழமை_நினைவூட்டல்
நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான். Muslim 687
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.
பொருள் :
இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.
இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்...
12/02/2025

உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள்,

”உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.” (ஆதாரம்: அபூதாவூத்)

ஒரு ஹதீஸ்…

அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ”நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.

ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்.. ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.

மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு துஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம்.

மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள்…

”உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.”

ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் ‘துஆ’ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

அந்த மய்யித்தை விசாரணை செய்யப்படும் நேரத்தில் ‘துஆ’ செய்யும் அந்த மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!

மேலும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு பதிவிடுகிறேன்…

ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ர் தொழுகைக்காக தயராகி கொண்டிருந்தார்கள் அப்போது வானவத்தூதர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து,

“தோழரே நபியே வானத்தில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் துக்கப்பட கூடிய ஓர் ஆட்டு இடையார் இன்று மரணித்து விட்டார்” என்று கூறினார்கள்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு இறந்து விட்டார்கள் எனக் கருத்தி பார்க்க விரைந்தார்கள் அதை தொடர்ந்து ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,

“தோழரே இவரது மரணத்திற்க்காக அல்லாஹ்வின் அர்ஷே குலுங்கியது” என்றார்கள.

ஸஃது இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை நல்லடக்கம் செய்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்! என்று கூறினார்கள்

சற்று நேரம் சென்றதும் அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! என்று கூறினார்கள்.

அடக்கம் செய்து விட்டு சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே வழக்கத்திற்கு மாறக மூன்று முறை சுப்ஹானல்லாஹ்! என்றும்; மூன்று முறை அல்லாஹு அக்பர்! என்றும் கூறினீர்களே என்று கேட்டதற்கு;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

“ஸஃதுடைய உடலை கப்ரில் வைத்த உடன் அவரை கப்ர் நெருக்கத் துடங்கியது அப்போது சுப்ஹானல்லாஹ்! என்றேன்

பின்பு அவரின் கப்ர் வாழ்க்கைக்காக பூமி விசாலமாகியது; அப்போது அல்லாஹு அக்பர் என்றேன்” என்று கூறிவிட்டுக் கூறினார்கள்;

“மனிதனுக்கும் மண்ணுக்கும் ஒரு நெருக்கம் உண்டு, கப்ருடைய நெருக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பார் என்றால் அது ஸஃதுதான்” என்றார்கள்! (நூல்: அஹமது)

எந்த ஒரு ஸஹாபியின் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷே குலுங்கியதோ அந்த உத்தம ஸஹாபியை அடக்கம் செய்தவுடன் நடைபேற்ற நிகழ்வை எண்ணிப்பார்ப்போம். அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘துஆச்’செய்ததையும் நினைவில் கொள்வோம்.

எனவே அந்த நேரத்தில் துஆ கேட்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இந்த அழகிய சுன்னத்தை பேணுவோம்.

நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

12/02/2025

தொழுகை எவ்வளவு முக்கியம்...

#தொழுகை #உதவுங்கள்

09/02/2025

-"வசதி, கஷ்டம் இரண்டுக்கும் இடையில் தான் எப்போதும் வாழ்கிறோம்.

- இவ்விரண்டும் அருள்களே.

- நன்றி செலுத்துதல் வசதியாக இருக்கும் போது நிகழ்கிறது. 'இறைவன் நன்றி செலுத்துபவர்களுக்கு நற்கூலியை வழங்குவான்' என்கிறது அல்குர்ஆன்.

- கஷ்டத்தின் போது பொறுமை கையாளப்படுகிறது. 'நிச்சயம் பொறுமையாளர்களுக்கு அவர்களுக்குரிய கூலி கணக்கின்றி நிறைவாக வழங்கப்படும்' என்கிறது அல்குர்ஆன்".

நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்;யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள்.அதற்கு நப...
22/01/2025

நபி (ஸல்) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டார்கள்;

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

اللهم اني اسالك العافية

"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"

(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)

ஆஃபியா என்றால் என்ன என வினவினார்கள்

ஆஃபியாவின் பொருளானது,
யா அல்லாஹ் எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று"

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும்.

வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்" இருக்கிறீர்கள்

உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்
மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்

*ஆஃபியாவின்* பொருள்*

யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆஃகிராவையும் சேர்த்தே குறிக்கும்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:

"யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.

இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது

யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழ்ந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே!

இதெல்லாம் "அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் - ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும். எனக் கூறினார்கள்.

Muslim Nikah Service

ஜனாசா அறிவித்தல், அடையாளம் காண உதவுங்கள்.இந்த புகைப்படத்தில் உள்ளவர் கட‌ந்த 16/01/2025 கொழும்பு பெரிய வைத்தியசாலையில் WA...
22/01/2025

ஜனாசா அறிவித்தல், அடையாளம் காண உதவுங்கள்.

இந்த புகைப்படத்தில் உள்ளவர் கட‌ந்த 16/01/2025 கொழும்பு பெரிய வைத்தியசாலையில் WARD இலக்கம் 23 யில் இரவு 9.50 ம‌ணியள‌வி‌ல் மரணித்து உள்ளார்.

இந்த ஜனாசாவை யாராவது தெரிந்தால் குடும்பத்தினருக்கு அறிவிக்கவும்.

மேலதிக தகவல்களை பெற்று கொள்ள இந்த தொலைபேசி இயக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

FAWMI HAJI : 0779312475 /0777946253

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.

#ஜனாசா #அறிவித்தல், #அடையாளம்காண #உதவுங்கள் Muslim Nikah Service

ஹராமான சந்தோசத்தை விட ஹலாலான கவலை சிறந்தது,ஹராம் என்றும் ஹலால் ஆகாது.       #ஹதீஸ்  #ஹலால்      #அமல்
22/01/2025

ஹராமான சந்தோசத்தை விட ஹலாலான கவலை சிறந்தது,
ஹராம் என்றும் ஹலால் ஆகாது.

#ஹதீஸ் #ஹலால் #அமல்

18/01/2025

அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள். உங்களுடைய அன்றைய நாளை நல்ல பிரார்த்தனைகள் மூலம் துவங்குங்கள்.

ஏன் கவலை படுகிரீர்கள்,கவலை எதையும் மாற்றாது அனால் அல்லாஹ்வின் மீது தவக்குல் வையுங்கள் அது எல்லாவற்றையும் மாற்றும்.      ...
18/01/2025

ஏன் கவலை படுகிரீர்கள்,
கவலை எதையும் மாற்றாது
அனால் அல்லாஹ்வின் மீது தவக்குல் வையுங்கள் அது எல்லாவற்றையும் மாற்றும்.

சுப்ஹானல்லாஹ் வபி  ஹம்திஹி நூறு முறை கூறுபவர்களின் தவறுகள் கடலின் நுரை போன்று இருந்தாலும் அளிக்கப்பட்டுவிடும்.ஆதாரம்: பு...
17/01/2025

சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி

நூறு முறை கூறுபவர்களின் தவறுகள் கடலின் நுரை போன்று இருந்தாலும் அளிக்கப்பட்டுவிடும்.
ஆதாரம்: புகாரி 6405

#சொர்க்கம் #அமல்

🔵 மிம்பரில் வந்த மரணம்தெஹியங்கையைச் சேர்ந்த அல்-ஆலிம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் மரணித்த விட்டார்கள் என்ற செய்தி வந்து கொண்...
17/01/2025

🔵 மிம்பரில் வந்த மரணம்

தெஹியங்கையைச் சேர்ந்த அல்-ஆலிம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் மரணித்த விட்டார்கள் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது.

இன்று வெள்ளிக் கிழமை ஜுமுஆ குத்பா செய்து முடிக்கும் நேரத்திலே அவர் மரணித்திருக்கிறார். அதுவே அவரது இறுதி நேரம்.

பலவருடங்கள் இமாமாக கடமை புரிந்த, அன்னாரது உயிர் மிம்பரிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

மென்மையான சுபாவம் கொண்ட மெளலவி பாயிஸ் முர்ஸி அவர்களது பாவங்களை மன்னித்து, அல்லாஹ் அன்னாருக்கு மேலான சுவர்க்கத்தின் உயர் பதவிகளை வழங்குவானாக!

அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் கூறினார்கள்:   #ஹதீஸ்
15/01/2025

அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள் கூறினார்கள்:
#ஹதீஸ்

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Nikah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Muslim Nikah Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram