13/11/2025
மக்காவில் சமீபத்தில் வீசிய காற்றின்போது எடுக்கப்பட்ட கஅபாவின் புகைப்படம் இது.
சாதாரண கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் கட்டுமானத்தையே இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.
தங்க இழைகளால் நெய்யப்பட்ட உயர்தர பட்டு ஆடைகளால் அதை மூட வேண்டும் என்றோ,
வைரத்தாலும் வைடூரியத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பிரசங்க மேடைதான் அமைக்கப்பட வேண்டும் என்றோ,
தூய தங்கத்தால் செய்யப்பட்ட மைக்கில்தான் பிரசங்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லாஹ் ஆணை பிறப்பிக்கவில்லை.
கஅபாவின் உண்மையான தோற்றத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தவும், அதன் மூலம் உண்மையில் யார் மீது ஈமான் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தவும் அன்று வீசிய அந்தக் காற்று விரும்பியிருக்கலாம்.
அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லாடும் ஓர் ஏழையின் மனதில்... ஒருமுறையேனும் அந்த புனித ஆலயத்தைக் கண்ணால் காணும் பாக்கியம் கிடைக்காத என்று ஏக்கம் இருக்கும்.
கடன் வாங்கியேனும் அங்கு சென்று அந்த கஅபாவை கண்குளிரக் காண மாட்டோமா என்ற தவிப்பு இருக்கும்.
கஅபாவை அலங்காரிக்கும் செல்வந்தர்களின் செயல்களை அந்தக் காற்றின் மூலம் அல்லாஹ் அம்பலப்படுத்த விரும்பியிருக்கலாம்.
சோர்வடைந்திருக்கும் ஏழைகளுக்கு அந்தக் கற்றின் மூலம் ஒரு செய்தியை அல்லாஹ் சொல்ல நாடியிருக்கலாம்.
"உங்கள் வீடுகளைப் போன்றே என் வீடும் சாதாரணக் கற்களால் ஆனதுதான். நீங்கள் இங்கு வரமுடியாவிட்டால் என்ன...
உங்கள் வீடுகளை என் நினைவாலும் உங்கள் இதயங்களை என் அன்பாலும் நிரப்புங்கள், நான் அங்கிருப்பேன்”
என்று அந்தக் காற்றின் மூலம் அல்லாஹ் ஒரு செய்தியை சொல்லி அனுப்பியிருக்கலாம்.
✍️ நூஹ் மஹ்ழரி
copied