Dr.Ahamed Mufeek

  • Home
  • Dr.Ahamed Mufeek

Dr.Ahamed Mufeek Let’s make everything easier to understand,Joint with this page.

Why are strokes usually more in bathrooms?Strokes are usually high in bathrooms because when we enter the bathroom we so...
18/04/2022

Why are strokes usually more in bathrooms?

Strokes are usually high in bathrooms because when we enter the bathroom we soak our head and hair first which is not supposed to be. This is a wrong approach.

In this way, if you water the head at first, the blood rises to the head quickly and the arteries can be torn together. As a result, stroke happens and then falling to the ground.

A report published in the Journal of Canada's Medical Association said the risks that were previously predicted due to stroke or mini stroke, in fact the risk is longer lasting and even more dangerous.

According to multiple studies around the world, the cases of death or paralysis due to stroke during bath is increasing day by day. According to doctors, one should take a bath by following some rules while bathing.

If you don't take bath following the right rules, you can die too. Shouldn't soak your head and hair first while bathing. Because blood circulation in human body is at a certain temperature. Body temperature takes a while to adjust to outside temperature. According to doctors, water on the head first increases the speed of blood circulation. The risk of stroke may also increase at that time.

Excessive blood pressure can tear the brain arteries.

The right rule of bathing :

Got to soak the feet first. Then slowly soak up shoulder upwards. Mouth will be watering then. At the end of everyone should water their head.

This method must be followed by those with high blood pressure, high cholesterol and migraine.

Must inform this information to elderly parents and relatives.

COVID-19 தடுப்பூசிகள் பற்றிய சிறு விளக்கம்... நாம் இதுவரை பல்வேறுபட்ட தடுப்பூசிகள் தாயரிக்கபட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந...
03/02/2021

COVID-19 தடுப்பூசிகள் பற்றிய சிறு விளக்கம்...

நாம் இதுவரை பல்வேறுபட்ட தடுப்பூசிகள் தாயரிக்கபட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் முதலில் பைசர்(pizer)நிறுவனதினர் உடன் Biotec நிறுவனதினர் இணைத்து கண்டுபிடிக்கப்பட்ட vaccine களே அதிகம் பயன்படுத்த பட்ட அதன் பிறகு வெவ்வேறு நிறுவனங்களால் பல vaccineகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 6க்கு மேற்பட்ட vaccines(Pfizer,modena,covishield,covaxin,coronavac...)கண்டுபிடிக்கப்படுள்ளன.

இந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனீசியா (Astrazenecea ) நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது உலகெங்கிலும் எட்டு நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

இலங்கையில் வழங்கப்படவுள்ளதும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனீசியா நிறுவனமும் சேர்ந்து இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்ட் CoviShield எனும் பெயரில் சந்தைக்கு வழங்கப்படும் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா Oxford - Astrazeneca தடுப்பூசியாகும்.

இந்த தடுப்பூசியின் குணாம்சங்கள் யாவை?.

இந்த தடுப்பூசி பெறுவதன் மூலம்,கோவிட் தொற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைக்கப்படுகிறது. (இந்த அளவு 62% முதல் 90% வரை என்பதை ஆராய்ச்சி அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன)

மேலும், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவும் அபாயம் வெகுவாகக் குறைக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியைப் பெற்ற பிறகும் நோய் பரவுகின்றது எனினும், நோயின் சிக்கல்கள் மற்றும் கடுமையான அபாயத்தை கணிசமாகக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. (ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, ஆய்விற்குற்படுத்தப்பட்ட 10,000 க்கும் மேற்பட்டவர்களில் எவரும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க தேவையானளவு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படவில்லை என அறியக் கிடைக்கின்றது)

இந்த அனைத்து நன்மைகள் இருந்தபோதிலும், இந்த தடுப்பூசி மற்றும் உலக சந்தையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாங்கள் தற்போது எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேலதிகமாகமான பாதுகாப்புக்காகவே பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதே தவிர,
அந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு தடுப்பூசியை மட்டுமே ஊக்குவிக்கவல்ல.

இந்த தடுப்பூசிகள் யாருக்கு வழங்கப் படுகின்றன?

இந்த தடுப்பூசிகள் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் படி வழங்கப்படுகின்றன.

முதலி்ல் தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொற்றாளருடன் நேரடித் தொடர்பாளர்களான சுகாதார, பாதுகாப்பு துறையினருக்கும் மற்றும் இனங் காணப்பட்ட பிற தொகுதியிருக்கும் வழங்கப்படுகின்றன.

இரண்டாவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்
அதன்பிறகு மூன்றாவதாக
ஆபத்து காரணிகளைக் கருத்தில் கொண்டு, வயது குறைந்தவர்களுக்கும் கட்டங்கட்டமாக தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி தற்போது எந்த வயதியினருக்கு அனுமதிக்கப்படவில்லை?

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு
கர்ப்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குகமற்றும்
தடுப்பூசிகளுக்கு கடுமையான ஒவ்வாமை உள்ளவர்கள்.

இந்த காரணிகளுக்கும் மேலதிகமாக, தடுப்பூசி வழங்க தனிப்பட்ட ஒவ்வொரு நபரின் பொருத்தத்தையும் கருத்தில் கொண்ட பின்னரே சுகாதார ஊழியர்கள் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வர்.

கொரோனா தொற்று உள்ள ஒருவர் இந்த தடுப்பூசியை பெற முடியுமா?

இதற்கு முன்னர் உங்களுக்கு நோய் இருந்ததா இல்லையா என்பது தடுப்பூசி பெறலுக்கு ஒரு தடையல்ல. எனவே, மேற்கண்ட அனைவரும் தவிர ஏனையவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் COVID-19 பாதிப்புக்குள்ளாகி காணப்படுகின்ற நபர் 14நாட்கள் தனிமைபடுத்தபட்ட பின்னர் அவருனுடைய நோயறிகுறிகள்(symptoms)குறைவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.

கொரோனா தடுப்பூசி எத்தனை does எடுக்க வேண்டும்?

COVID-19 தடுப்பூசிகள் இரண்டு கட்டமாக வழங்கப்படும். முதல் Does எடுக்கப்பட்டு 2-3months(max) உள்ள 2nd Does வழங்கப்படும். இவை பொதுவாக கைகளிளே போடப்படும்.

தடுப்பூசிகள் போடப்பட்டபின் பொதுவாக ஏற்பட கூடிய side effect கள்?
பொதுவாக மற்றைய vaccine கள் மூலம் ஏற்பட கூடியவைகளே ஏற்படும், (காய்ச்சல்,cough, rash..)

Vaccines பெற்றுக்கொள்ளபட்ட பின்னர் RT-PCR செய்துகொள்ள முடியும், results எவ்வாறு அமையும்?
தடுப்பூசி பெற்றுக்கொள்ள பட்ட பின்னர் RT-PCR செய்துகொள்ள முடியும் results ஆனது negative என்றே காணப்படுகின்றன. அப்படி positive என்று காணப்படும் சந்தர்ப்பத்தில் நீங்கள் currently கொரோனோ தொற்றுகுள்ளாகி காணப்படுவிர்கள்.

Vaccines உடலில் செலுத்தப்பட்ட பின் எவ்வாறன மாற்றங்களை செய்கிறது?

பொதுவாக இவ் vaccines களில் virus தொழில்நுட்பம் முறைமையே பயன்படுத்த படுகின்றது.அதாவது virus ல் காணப்படும் அடிநொ வைரஸ் எடுத்து ஜெனடிகளி மொடிபி பண்ணி அதனை உடலில் செலுத்தப்படுகின்றது. இதன் மூலம் உடலின் நிர்பீடணம் actived ஆகி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்து உடலினை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

நன்றி!!!

ASA.MUFEEK
3RD YEAR STUDENT
INDIGENOUS MEDICAL COLLEGE
UNIVERSITY OF COLOMBO

ஹிஜாமா சிகிச்சையும் சிறு விளக்கமும்!!         மனித உடலில் நோயின் குணப்படுத்தும் பல்வேறுபட்ட சிகிச்சை முறைமைகளில் ஹிஜாமா ...
02/02/2021

ஹிஜாமா சிகிச்சையும் சிறு விளக்கமும்!!

மனித உடலில் நோயின் குணப்படுத்தும் பல்வேறுபட்ட சிகிச்சை முறைமைகளில் ஹிஜாமா சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய காலங்களில் இருந்து இம்முறைமை சிகிச்சை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது யுனானி மருத்துவத்துறையில் நோயினை குணப்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. இச் சிகிச்சை முறையில் நாம் மூட்டுவலி,கை கால் வலி,தலைவலி,பல்வேறுபட்ட குருதி நோய், தோல் நோய், உயர் குருதி அமுக்கம்,vericose vein மற்றும் fertility and Genogoloical disorders போன்ற பல்வேறுபட்ட நோயின் குணப்படுத்தி கொள்ள முடியும்.
ஒரு ஆரோக்கியமான மனிதனில் உணவு உட்கொண்டு, தேவையான சத்துக்கள் உடலில் அகத்துறிஞ்சபட்டு தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து அகற்றபடுவதன் மூலம் சரியான நோயற்ற நிலை பேணபடுகின்றது. இவ்வாறு சில கழிவுகள் உடலின் குருதியில் இணைவதன் மூலம் அவை உடலில் இருந்து அகற்றபடுவது கடினமாக உள்ளது.
இவ்வாறான உடலில் காணப்படுகின்ற மந்தமான அசைவற்ற ( stagnant) குருதியினை வெளியேற்றுவதன் அல்லது தோலில் கீழாக படிய செய்வதன் மூலம் குருதியில் காணப்படுகின்ற கழிவுகள் அகற்றபடுவதன் மூலம் நோய் குணப்படுத்தபடுகின்றது.
பொதுவாக ஹிஜாமா சிகிச்சை முறையானது இரு வழிகளில் மேற்கொள்ளபடும். அவை Dry Cupping and Wet Cupping இதற்காக ஆரம்ப காலங்களில் கண்ணாடி குமிழ்கள் பயன்படுத்தப்பட்டன, தற்போது rupper pump பயன்படுத்த படுகின்றது.

Wet Cupping முறையின் போது the mild amount of blood அகற்றபடுகின்றன.
இவை இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ஒரு சுன்னாவாக கருதபடுகின்றது.

The Prophet (PBUH) explained that Hijama is one of the best medicines: “The best medicine with which you treat yourselves is Hijama, or it is one of the best of your medicines,” or “The best treatment you can use is Hijama.” [Sahih Bukhari Hadith-No: 5371]

“The best treatment is cupping, it removes blood, lightens the back and sharpen the eyesight”. [Al–Hakim 4/212, At-Tirmidhi Hadith No: 3053

ASA.MUFEEK
3RD YEAR STUDENT
INDIGENOUS MEDICAL COLLEGE
UNIVERSITY OF COLOMBO

கருச்சிரகமும் பயன்ளும்!!!       கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டத...
17/01/2021

கருச்சிரகமும் பயன்ளும்!!!

கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.

`இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட்(anti oxtien)ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.

பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.

பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.
இது COVID-19 போன்ற தற்போது பாரிய பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்ற பல தொற்று நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

Asbab Sitta Zaruriya:According to Unani system of medicine, the role of the Asbab Sitta Zaruriya (six essential factors)...
16/01/2021

Asbab Sitta Zaruriya:
According to Unani system of medicine, the role of the Asbab Sitta Zaruriya (six essential factors) is crucial in maintaining health and preventing diseases. Abiding by them through dietotherapy, regimenal therapy and pharmacotherapy helps preserve and restore the health.
These factors are:
1.Air (Hawa): Air should be free from physical, chemical
and biological pollutants / contaminants. Purify the air by Fumigation (Bakhur) of the house at frequent intervals with combination of Sandal (Santalum album) and Kafur (Cinnamomum camphora). Avoid staying in air conditioner for long and maintain room temperature.

2.Food and Drink (Makul-o-Mashrub): Nutritive and easily digestible food should be taken. Use of seasonal fruits and vegetables should be preferred.

3.Bodily Movement and Repose (Harkat-o-Sukun Badani):
Perform adequate physical exercises as per age, s*x and individual condition.

4.Psychic Movement and Repose (Harkat-o-Sukun Nafsani):
Maintain a balance in emotional state. Take care of mental health by avoiding emotions like anger, grief and stress. Practice stress relieving techniques, meditation, etc.

5.Sleep and Wakefulness (Nawm-o-Yaqza): Maintain a
balance between sleep and wakefulness by taking adequate sleep.

6.Evacuation and Retention (Istifragh-o-Ihtibas): Maintain good bowel habits and take care of digestive health.

மருத்துவதுறை!! காலம் மாறி கொண்டிருக்கும் வேகத்தில் மருத்துவத்துறையும் வளர்ச்சி அடைந்தது கொண்டிருப்பது நாம் அறிந்தவையே!!!...
14/01/2021

மருத்துவதுறை!!

காலம் மாறி கொண்டிருக்கும் வேகத்தில் மருத்துவத்துறையும் வளர்ச்சி அடைந்தது கொண்டிருப்பது நாம் அறிந்தவையே!!!

ஒரு நோய் ஏற்படும் போது அதற்கான சிறந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் அந்நோயினை குணப்படுத்துவதே மருத்துவத்துறையின் பிரதான நோக்கமாகும்.

இந்நோயினை குணப்படுத்தும் முறைமை,மருந்துடள் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் பல்வேறு வகையில் காட்டுகின்றன

அவற்றுள்
*ஆங்கில மருத்துவம்,யுனானி மருத்துவம்,ஆயுர்வேத மருத்துவம்,சித்த மருத்துவம்,ஹோமியோபதி மருத்துவம் போன்றன எமது நாட்டில் காணப்படுகின்றன.
இவற்றுள் ஒவ்வொரு நோய்க்கும் சிறந்த மருத்துவ முறைமையை பினபற்றுவதன் மூலம் எமது நோயினை குணப்படுத்திகொள்ள முடியும்.

Address


Telephone

0752292368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ahamed Mufeek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram