27/03/2026
உணவு ஒவ்வாமை (Food Allergy) — ஒரு சவால்
உணவு ஒவ்வாமை உலகளவில் அதிகரித்து வரும் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாகும். ஆஸ்திரேலியா இந்த பிரச்சினையில் உலகில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். கடந்த சில தசாப்தங்களில் Anaphylaxis (கடுமையான ஒவ்வாமை வினை) காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது சுமார் 10% குழந்தைகள், 4–8% சிறுவர்கள், மற்றும் 2% பெரியவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்புகள் அரிதாகவே நடந்தாலும், அவற்றின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருவதால், உணவு வணிகங்களில் ஒவ்வாமை மேலாண்மை ஒரு மிக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
உலகளவில் 240 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவு ஒவ்வாமையுடன் வாழ்ந்து வருகின்றனர், மேலும் வெளியில் உணவருந்துவது (dining out) கடுமையான ஒவ்வாமை வினைகளுக்கான முக்கிய அபாயக் காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது
உணவு ஒவ்வாமைகளை கட்டுப்படுத்துவது ஒரு சிக்கலான செயலாகும், ஏனெனில் மிகச் சிறிய அளவு ஒவ்வாமை உண்டாக்கும் புரதங்களும் கூட கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான வினைகளை ஏற்படுத்தக்கூடும்.
உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற சிறு அளவிலான உணவு வணிகங்கள், உணவு சேவை வழங்கலில் முக்கிய பங்காற்றுகின்றன; எனினும், இவ்வணிகங்கள் செயல்திறனுள்ள ஒவ்வாமை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றன
ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாவது, உணவகங்களில் பணிபுரியும் பலருக்கு உணவு ஒவ்வாமை பற்றிய அறிவு இன்னும் குறைவாகவே உள்ளது. சிலர், “சமையல் செய்தால் ஒவ்வாமை பொருட்கள் அழிந்து விடும்” என்ற தவறான நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய அளவில்கூட உள்ள ஒவ்வாமை பொருட்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
அதுமட்டுமல்லாமல், அவசரநிலைகளில் எப்படி உடனடியாக செயல்பட வேண்டும் என்பதிலும் பலர் தெளிவான அறிவின்றி உள்ளனர்.
இது ஒரு சாதாரண குறைபாடு அல்ல — ஒரு உயிரைக் கூட ஆபத்துக்கு உள்ளாக்கக்கூடிய நிலைமையாகும்
உணவு ஒவ்வாமை என்றால் என்ன?
உணவில் உள்ள சில புரதங்கள் மீது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறாக செயல்பட்டு உடல் வினை காட்டுவது தான் “உணவு ஒவ்வாமை”.
அதிகமாக ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகள்:
• வேர்க்கடலை மற்றும் முந்திரி வகைகள்
• பால் மற்றும் முட்டை
• கடல் உணவுகள் (இறால், நண்டு)
• கோதுமை (குளூட்டன்)
• சோயா மற்றும் எள்ளு
அறிகுறிகள்
ஒவ்வாமை உடனடியாக அல்லது சில மணி நேரத்தில் ஏற்படலாம்:
வாய்வாய், முகம், கழுத்து வீக்கம்
தோல் சிரங்கு, அரிப்பு
சுவாசக்கேடு, இருமல்
கடுமையான நிலை Anaphylaxis , உடனடி மருத்துவ அவசரநிலை
தொடரும்…