05/03/2026
இணைவோம் வெல்வோம்.
சூரிச் சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற நலவாழ்வின் இலவச மருத்துவ முகாம்.
சூரிச் சிவன் கோவிலில் 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நலவாழ்வு மருத்துவர்களின் ஒருங்கிணைப்பில் சூரிச் சிவன் கோவில் மற்றும் ஆரோக்கியம் இணைந்து Spitex Xundheit plus மருத்துவ பராமரிப்பு நிறுவனம் மற்றும் Fisp நிறுவனத்தின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது, ஆரோக்கியமான குழந்தைகள், ஆரோக்கியகமான சமூகம், தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாவதை தடுத்தல், தினசரி வாழ்க்கைக்கான எளிய யோகா பயிற்சிகள், வீட்டில் மருத்துவ பராமரிப்பு (Spitex), முதலுதவி தலைப்புகளில் மருத்துவ கருத்தரங்கும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சக்கரை அளவு நேரடியாக பரிசோதனை செய்யப்பட்டதுடன், பயனாளர்களுக்கு தமிழில் மருத்துவ ஆலோசனை வழக்கட்டதோடு மருத்துவ கேள்விகளுக்கான பதில்களும் தாய்மொழியில் வழக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து மருத்துவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நலவாழ்வு நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வார இறுதி மாலை நேரத்திலும் உங்கள் நேரத்தை ஒதுக்கி சுவிற்சர்லாந்து, யேர்மனி, டென்மார்க் நாடுகளிலிருந்து தமிழ் மருத்துவர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தது மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் சேவை மனப்பாங்கும் அர்ப்பணிப்பும் இந்த மருத்துவ முகாமை மிகவும் அர்த்தமுள்ளதாக்கியது.
இந்த முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த டாக்டர் சுகிகா, டாக்டர் சியாங்கா, டாக்டர் அருணி, டாக்டர் சோனியா, வைத்தியர் இளங்கோ, மற்றும் செவிலியர்களான திருதி விஜையா, திருமதி வேதிகா, திரு குரு மற்றும் திருமதி யானனி , செல்வி பிரியா, செல்வி ஆரபி, சமூக ஆர்வலர்கள் செல்வி வானதி, திருமதி மதிவதனி பள்ளி முதல்வர் செல்வி திவ்யா, ஆகியோருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
மேலும், இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து வழங்கிய ஆலய நிர்வாகத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடைபெற்ற கருத்தரங்கமும் ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பலரும் நல்ல வழிகாட்டுதல்களைப் பெற்று சென்றிருப்பார்கள் என்று நம்புகிறோம்.
இத்தகைய மனிதநேய சேவைகள் தொடர்ந்து நடைபெற இறைவன் அருள் புரியட்டும்.
✨ உங்கள் சேவை தொடரட்டும்
✨ ஒன்றுபட்டால் உயர்வு
✨ இணைவோம் – வெல்வோம் 🤝
அன்புடன்,
நலவாழ்வு நிர்வாகம்
.ch