14/04/2022
பயணம் சென்றால் சிலருக்கு வாந்தி ஏற்படுவது ஏன்... தடுக்க என்ன வழி?
கேள்வி - எவ்வாறு தான் முன்னெச்சரிக்கையாக பயணம் மேற்கொண்டாலும் பஸ் கார் பிரயாணங்களில் வாந்தி வந்துவிடுகிறது. தடுக்க வழி சொல்லுங்கள்.
டாக்டர் சரவ் பதில் :
இது motion sickness அல்லது travel sickness.
நம் காதுக்குள் இருக்கும் incus ,stapes, malleus என்கிற மூன்று எலும்புகள் தான், நாம் நேராக நிற்பதற்கும் நமது உடம்பு தன்னை தானே பேலன்ஸ் செய்வதற்கு உதவுகின்றன. இந்த எலும்புகள் பரிணாம வளர்ச்சியில் தவழ்ந்து கொண்டிருந்த நம்மை நிற்க வைக்க, பல ஆயிரக்கணக்கான வருடங்கள் பேலன்ஸ் கற்று நம்ம ஜீனில் பதிந்து வைத்துள்ளன. அதற்கென ஒரு வேகமும் உள்ளது.
ஆனால் எஞ்சின் கண்டுபிடித்து கொஞ்ச நாள் தான் ஆகிறது என்பதால்... திடீரென உங்க உடம்பு வேகமா பயணிப்பதை பார்த்து இந்த எலும்புகள் குழம்பி, மூளையை குழம்புவதால் தலை சுற்றி வாந்தி ஏற்படுத்தி விடுகிறது. இது மாறுவதற்கு உடனடி தீர்வாக வாந்தியை நிறுத்தும் மருந்துகள் எடுக்கலாம். அல்லது நிறைய பயணித்து உடலை பழக்கலாம்.
இதே போல குழப்பம் விமான பயணத்திலும் (air sickness), கப்பல் பயணத்திலும் (sea sickness) சிலருக்கு ஏற்படுவது உண்டு. ரொம்ப வேடிக்கையான விஷயம் என்னன்னா.... கப்பலில் பணிபுரியும் மாலுமிகளுக்கு 6 மாதம் கப்பலில் இருந்து விட்டு நிலத்துக்கு வந்தவுடன் வாந்தி வருவதுண்டு... அது Land sickness...!!
Dr. M. Saravana Kumar, BHMS, MD (ped).,
Dr Sarav Ayush Vaidyasala,
Dhanvandhiri Theni
#பயணம்