06/07/2022
ஏழாம் நாள் உணவு
காலை
இரண்டு வேகவைத்த முட்டைகள்
அரை ஆரஞ்சு பழம்
காலை இடைவேளை பாணம்
புதினா தேநீர்
ஒரு டம்ளர் சுடும்நீரில் நான்கு புதினா இலைகளை போட்டு மூடி வைக்கவும்.
ஜந்து நிமிடம் கழித்து அந்த நீரை பருகவும்.
மடமடவென குடிக்க கூடாது.
மதியம்
ஏதேனும் ஒரு கீரை பொரியல்,
ஒரு பிரட் சிலைஸ் (எண்ணையில்லாமல் தோசை சட்டியில் பிரட்டி எடுத்தது)
பீன்ஸ், பட்டாணி, கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், ஆகியவைகள் வேகவைத்தது.
(இதில் பச்சமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவைகளை சிறிதாகவெட்டி மேலே தூவிக் கொள்ளலாம் மிளகு, இந்துப்பு தேவைக்கு சேர்க்கவும்.)
இதற்கான அளவு ஏதுமில்லை. உங்களால் முடிந்த அளவு சாப்பிடலாம். சுவையூட்டிகள் கண்டிப்பாக சேர்க்க கூடாது.
மாலை இடைவேளை பாணம்
முருங்கை தேநீர்
அடுப்பில் சட்டியில் கொதிக்கும் நீரில் பதினைந்து கிராம் அளவில் முருங்கை இலைகளை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். வடித்த நீரில் எழுமிச்சை சாறு இந்துப்பு கலந்து சுவைக்கவும்..
மடமடவென குடிக்க கூடாது
இரவு
ஒரு பிரட் சிலைஸ் (எண்ணையில்லாமல் தோசை சட்டியில் பிரட்டி எடுத்தது)
பீன்ஸ், பட்டாணி, கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், ஆகியவைகள் வேகவைத்தது.
(இதில் பச்சமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவைகளை சிறிதாகவெட்டி மேலே தூவிக் கொள்ளலாம் மிளகு, இந்துப்பு தேவைக்கு சேர்க்கவும்.)
இதற்கான அளவு ஏதுமில்லை. உங்களால் முடிந்த அளவு சாப்பிடலாம். சுவையூட்டிகள் கண்டிப்பாக சேர்க்க கூடாது.
கீரை பொரியலுக்கு மிக மிக குறைந்த அளவு எண்ணைய் சேர்க்கவும். சேர்க்காமல் சமைக்க முடியுமானால் அப்படியே சமைக்கவும்.