12/10/2020
தேனின் மருத்துவ குணங்கள்
குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.
தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.
தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.
ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.
நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.
தேன் சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது
கொலஸ்ட்ரால், இதயநோய், மூட்டுவலி, ஜலதோஷம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.