Annai Tamil Siddha Clinic1

Annai Tamil Siddha Clinic1 Annai Tamil Siddha Clinic

Pain Chalo Herbal Pain Killer oil
21/12/2022

Pain Chalo Herbal Pain Killer oil

பாதம் பற்றிய தகவல்
20/12/2022

பாதம் பற்றிய தகவல்

காலை உணவு
19/12/2022

காலை உணவு

ஏலக்காய் பயன்
02/12/2022

ஏலக்காய் பயன்

01/12/2022
26/11/2022

Found on Google from in.pinterest.com

Diabetes Products Contact:7358320303 / 9841466812
19/11/2022

Diabetes Products

Contact:
7358320303 / 9841466812

HERBAL TEA Contact:7358320303 / 9841466812
19/11/2022

HERBAL TEA

Contact:
7358320303 / 9841466812

7 Herbals Women's PackContact:Annai Tamil Siddha Clinic73583 20303 / 98414 66812
16/08/2022

7 Herbals Women's Pack

Contact:
Annai Tamil Siddha Clinic
73583 20303 / 98414 66812

16/07/2022
அன்பு நட்புகளே…. இனிய மாலை வணக்கம்.நான் கடந்த 8 ஆண்டுகளாக சித்த மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறேன். “...
13/06/2022

அன்பு நட்புகளே….

இனிய மாலை வணக்கம்.

நான் கடந்த 8 ஆண்டுகளாக சித்த மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறேன். “அன்னை தமிழ் சித்தா கிளினிக்” என்ற பெயரில் கிளினிக்கும் நடத்தி வருகிறேன்.

பல்வேறு மூலிகை பொருட்களை “combo” வாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழங்கி வருகிறேன். குறிப்பாக “சர்க்கரை நோய்” இன்று எங்கு பார்த்தாலும் பரந்து விரிந்து சமூகத்தை அச்சுறுத்தும் ஒரு நோயாக மாறி வருகிறது.

இதனை சரிசெய்ய கடந்த 8 வருடமாக பல்வேறு மூலிகை கலவைகளை மருந்தாக கொடுத்தும்.. வாழ்வில் முறைகள், உணவுப் பழக்கங்கள் சிலவற்றை கடைபிடிக்க சொல்லியும் ஆலோசனை வழங்குகிறோம். இதனால் பலர் பயனடைந்துள்ளனர்.

அதன் அடுத்த கட்டமாக எனது நண்பர் சதீஷ் அவர்கள் மூலிகை உணவு தயாரிப்பில் தேர்ச்சி பெற்றவர். அவர்களோடும் பல மருத்துவர்களோடும் கலந்து ஆலோசித்து ‘Dia Cure’ என்ற பெயரில் ‘சர்க்கரை நோயை’ கட்டுப்படுத்தி, நாளடைவில் குணமாக்கவும் செய்யும் ஓர் அருமையான மூலிகை உணவை முழுமைப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வருகிறோம். உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.. சிறந்த பலனைப் பெற்று உங்களை வாழ்த்தவும் செய்வார்கள்.

குறைந்த கட்டணம்தான் ஒரு மாதத்திற்கான பேக்கிங் விலை 700/- மட்டுமே…

Gpay அனுப்பி Screenshort அனுப்பினால் கொரியரில் அனுப்பி வைக்கப்படும். (Gpay No. 98414-66812.)

ஆலோசனைக்கும் அழைக்கவும்

நன்றி!

25/05/2022

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என்று கேட்டால், யாரும் அதற்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒரு வித சோர்வு, எதற்கு எடுத்தாலும் தலை வலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய்களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

முக்கியமாக இந்த நோய்கள் நமது உடலை விரைவில் தாக்குவதற்கு, உடலில் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் முக்கிய காரணங்களாகும். இவை ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்துள்ள, இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை, டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த காலத்தில் சாப்பிடுவதற்கே நேரம் இல்லாத போது எப்படி இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்று கேட்கலாம். ஆனால் அத்தகைய உணவுகள் அன்றாடம் எளிதில் கிடைக்கப்பெறும் வகையில் தான் இருக்கிறது. ஆகவே அவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உடலை எந்த நோயும் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

தயிர்
தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள்ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், குடல் பாதையை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலமும் நன்கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும்.

இனிப்பு உருளைக்கிழங்கு
இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிடுதால் முதுமை தோற்றம் எளிதில் ஏற்படாமல் இருப்பதோடு, சில ஆய்வுகளில், பெருங்குடல் மற்றும் மலக்குடல்களில் ஏற்படும் புற்றுநோய்களை வராமல் தடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காளான்
காளானில் செலீனியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் பி சத்துக்களான ரிபோஃப்ளாவின் மற்றும் நியாசின் போன்றவை உள்ளது. அதிலும் காளானில் லென்டினான் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது. இதனால் காளானை சாப்பிடுவதால், உடலில் பல புற்றுநோய்கள் வராமல் இருக்கும். சொல்லப்போனால், காளான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

பாதாம்
வைட்டமின் பி சத்துக்களான ரிபோப்ளேவின் மற்றும் நியாசின் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. அதேப்போல் இதில் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவு வைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கிரீன் டீ
தினமும் கிரீன் குடித்தால், உடல் எடை மட்டும் குறைவதில்லை. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான எஃபிகளோகாட்டிசின், வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. இதனால் உடலை எந்த ஒரு சளி, இருமல் போன்றவை எதுவும் அண்டாமல் இருக்கும். மேலும் இந்த கிரீன் டீ புற்றுநோய்கள், இதய நோய், ஹைப்பர் டென்சன் போன்ற எதுவும் வராமல் தடுக்கும்.

கீரைகள் மற்றும் பிராக்கோலி
கீரைகள் மற்றும் பிராக்கோலியில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் பொருளும் இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பெர்ரி
பெர்ரிப் பழங்களில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதய நோய், இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

பூண்டு
அதிக நறுமணம் உள்ள உணவுப் பொருளான பூண்டிலும் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. ஆகவே இத்தகைய பூண்டை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாக்கலாம்.

Contact
Annai Tamil Siddha Clinic
No. 21/21, ICL Home Town,
Chennai-77.
Phone: 044-26793826 / 98414 66812
E-mail: annaitamilsiddhaclinic@gmail.com
Website: www.annaitamilsiddhaclinic.com

பப்பாளி விதையின் மருத்துவக் குணங்கள்பப்பாளியின் விதையில் ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நிறைந்துள்ளது.பப்பாளி பழம்...
21/05/2022

பப்பாளி விதையின் மருத்துவக் குணங்கள்

பப்பாளியின் விதையில் ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் நிறைந்துள்ளது.

பப்பாளி பழம் நீரிழிவு பிரச்சினை முதல் ரத்த விருத்தி, ரத்தத்தை சுத்தம் செய்வது ஆகிய பல விஷயங்களுக்கு நல்ல மருந்து. பப்பாளியின் விதையை நாம் கண்டு கொள்வதே இல்லை. பழத்தில் இருப்பதைப் போலவே அதன் விதையிலும் நிறைய மருத்துவ குணமும் ஊட்டச்சத்துகளும் இருக்கிறது. இதை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

என்ன? கீழே தூக்கி எறியும் விதைகளில் இவ்வளவு நன்மைகளா? என்று ஆச்சரியமாக இருக்கிறதா! பப்பாளி விதைகளில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றது, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜீரண சக்தி பப்பாளி விதை உகந்தது:

பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமது செரிமாண மண்டலத்தைத் துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது:

நமது உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவோ அடிக்கடி பப்பாளி விதைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது:

பப்பாளி விதைகளில் மிக அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் மற்றும் பாிலபினைல்கள் இருக்கின்றன. அதனால் இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. குறிப்பாக, சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

அல்சர் பிரச்சனைக்கு தீர்வு:

குடல் புண்களை ஆற்றுகின்ற சக்தி பப்பாளி விதைக்கு உண்டு. உடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு மிக நல்ல தீர்வாக பப்பாளி விதையை நாம் சொல்லலாம். அதிலும் அல்சர் என்னும் வயிற்றுப்புண், உணவுக்குழாய் தொற்று இருப்பவர்கள் கட்டாயம் பப்பாளி விதைகளை பச்சையாகவோ அல்லது நன்கு உலர வைத்தோ சாப்பிட்டு வரலாம்.

மாதவிடாய் வயிற்று வலியை போக்கும்:

பெண்களுக்கு பப்பாளியை ஒரு அற்புதக் கனி என்று சொல்லலாம். அதுபோல, பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. உடலுக்குப் போதிய வலிமையைக் கொடுக்கிறது.

பப்பாளி விதையின் மற்ற பயன்கள்:

 பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் மிக அதிக அளவில் இருப்பதால், இதயக் குழாய், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கின்ற ஆற்றலைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக பப்பாளி விதைகளைச் சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.

 நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும். ஏனென்றால் தொடக்கத்தில் சிலருக்கு அது வயிற்றுப் போக்கை உண்டாக்குவதாக இருக்கலாம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை.

 ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.

 பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிங்கள். முடிந்தவரையில் வெ்ளளை சர்க்கரையை தவிர்க்கலாம்.

 பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.

 காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.

மேலும் விபரம் அறிய தொடர்புக்கு:
73583-20303 / 98414-66812.

Diabetes
18/05/2022

Diabetes

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்!எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித...
16/05/2022

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்!

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.

அப்படி என்ன இருக்கிறது?

இதில் பாலிபினால்கள் (Polyphenols) நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஈ.ஜி.சி.ஜி (Epigallocatechin gallate-EGCG) எனும் பாலிபினால் இதில் இருக்கிறது. இது ஓர் இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட். காற்று மாசுபாடு, புகைபிடித்தல் போன்றவற்றின் மூலம் நம் செல்களைச் சிதைக்கும் இதய நோய், புற்றுநோய், விரைவாக மூப்படைதல் போன்றவற்றுக்கு எதிராக இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் செயல்படுகிறது. கிரீன் டீயின் இலைகளிலும் இது இருக்கிறது.

முக்கியமாக, இது மிக ஆரோக்கியமானது. ஏனென்றால், சூடாக இந்த இலையில் உணவு பரிமாறப்படும்போது, இதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உணவோடு கலக்க வாய்ப்பு உள்ளது.

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

மேலும் சில பலன்கள்!

இந்த இலையைச் சாறாக அரைத்துப் பூசினால் சிறிய தோல் காயங்கள் நீங்கும். அரிப்பு, வேனல் கட்டி போன்ற தோல் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும். குளிர்ந்த நீரில் சிறிது வாழை இலையை ஊறவைத்து, அரைத்துப் பூசினால் வேனல் கட்டி சரியாகும்.

பூச்சிக்கடி, தேனீக்கடி, சிலந்திக்கடி போன்றவற்றுக்கு இதன் மருத்துவக் குணங்கள் உதவுகின்றன.

முடிந்த வரை வாழை இலையைப் பயன்படுத்துவோம்; வாழை இலை வாழவைக்கும்!

சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து
16/05/2022

சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து

Address

No. 21/21, ICL Hometown
Chennai
600077

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

9841466812

Alerts

Be the first to know and let us send you an email when Annai Tamil Siddha Clinic1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram