14/02/2023
*உணவே மருந்து மருந்தே உணவு*
சுக்கு க்கு மிஞ்சிய மருத்துவமில்லை சுப்ரமண்ய ரை விஞ்சிய கடவுள் இல்லை என்பது ஒரு பழமொழி
சுக்கின் மகிமை
இஞ்சியை ஒரு பக்குவத்தில் சுண்ணாம்பு கலந்து ஊற வைத்து பிறகு நன்கு காய வைத்தால், கிடைப்பதே சுக்கு.
காரச் சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சுண்டி எனப்படும் இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது
சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.
சுக்கும், வெல்லமும், எள்ளும் இடித்துச் சாப்பிட மாதவிடாய் வலி மாறும்
குழந்தைகளுக்கும் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.
பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
*`சுக்குக்குப் புறமே நஞ்சு, கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு'* என்பது பழமொழி.
அதனால் *சுக்கை மேல் தோல் முழுவதும் நீக்கியே, மருந்து தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும்.*
பல் வலிக்கு - சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.
இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்
சுக்கு, சீரகம், கொத்தமல்லி விதை மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து, இரண்டு ஸ்பூன் தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்துத் தாகம் எடுக்கும் போதெல்லாம் அருந்தலாம். இது ஒரு சிறந்த குடிநீர்.
For a drugless treatment choose Acupuncture
Vj acupuncture and Varma therapy kk nagar west Chennai 78 ( search in Google for exact location)