Sakthi

Sakthi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakthi, Chennai.

 #முகப்புத்தகத்தில்இருந்து ...சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம் இப்போது போரடிக்கிறது..திருவிழாக்கள்,புதுத்துணிகள்...
02/11/2023

#முகப்புத்தகத்தில்இருந்து ...

சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம்
இப்போது போரடிக்கிறது..

திருவிழாக்கள்,
புதுத்துணிகள்,
பண்டிகைகள்,
சில நேரங்களில் சினிமா கூட..

ஏன் இந்த மாற்றம் ??

கடந்து வந்த கடினமான தருணங்களா,

நிராசையாகிப் போன பேராசைகளா,

நிறைவேறாமல் போன சிறு சிறு கனவுகளா,

வேலை இல்லாமல் பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா,

அவமானங்களின் போது அழுகையை அடக்கியதன் விளைவுகளா,

செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்வா?!

Maturity aa,

எதுவென சரியாய் சொல்லி விட முடியவில்லை..

மாறாக,

தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது..

தலைகோதி தேற்றுகிறது,

இசை கொஞ்சம் இளைப்பாறுதல் தருகிறது..

பயணங்கள் உயிரோடிருப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறது..

சினிமா எப்போதும் கட்டி அணைத்துக் கொள்கிறது..

ஆனால்,

ஏன்??இந்த இனம் புரியாத வெறுமை

நடுக்கடலில் தனித்து விடப் பட்டதை போன்ற தனிமை??

காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..

ஆனால்,இப்போதெல்லாம் ஏதும் பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை..

எதன் மீதும் தீராத காதல் தோன்றுவதில்லை..

25/07/2021

மூவா முதலா உலகம் ஒரு முன்றும் ஏத்தத்

தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி

ஒவாது நின்ற குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப

தேவாதி தேவன் அவன் சேவடி சேர்து மன்றே -

- திருத்தக்கதேவர்

(மூன்று உலகமும் ஏத்தும் தன்மையன்; பேரின்ப வடிவினன்; உயர் குணங்கள் அனைத்தும் தாங்கியவன்; தேவர்களுக்கு எல்லாம் முதன்மையானவன்; அவன் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக)

 #யார்_இந்த_ஜாதவ்பயேங்????◆ தனியொருவராக உருவாக்கிய 550 ஹெக்டேர் அடர்த்தியான காடு.. ◆  #அமெரிக்கபள்ளிகளில் பாடத்திட்டமானத...
04/11/2020

#யார்_இந்த_ஜாதவ்பயேங்????

◆ தனியொருவராக உருவாக்கிய 550 ஹெக்டேர் அடர்த்தியான காடு..

◆ #அமெரிக்கபள்ளிகளில் பாடத்திட்டமானது இந்திய வன மனிதனின் வரலாறு..!!!

■ ’Forest man of India' என்று அழைக்கப்படும், அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

◆ 550 ஹெக்டேர் காட்டை உருவாக்கியிருக்கிறார் பேயங். தரிசு மணல் பகுதியில், அடர்த்தியான ஒரு காட்டையே உருவாக்கிய ’Forest man of India' என்று அழைக்கப்படும், அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

◆ அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் இருக்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

◆ அங்குள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என அங்கு பணிபுரியும், இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்திருக்கிறார்.

◆ கிழக்கு அசாமில் உள்ள மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுதலைக் குறித்து சிறுவயதிலேயே கவலைகொள்ளத் தொடங்கிய ஜாதவ் பயேங், மரங்களை நடத்தொடங்கி காடுகளாக வளரும் வகையில் தன் ஈடு இணையற்ற உழைப்பைச் செலுத்தி காட்டை உருவாக்கியுள்ளார்.

◆ யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் அக்காட்டுப் பகுதிக்குள் வாழத்தொடங்கிவிட்டன.

◆ பத்மஸ்ரீ பட்டத்துடன், கர்மயோகி விருது வென்றவர் ஜாதவ் பயேங் என்பது குறிப்பிடத்தக்கது.

#வயலோடும்வரப்போடும்..

03/11/2020

ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாட்கள்
தொண்ணூறு நாட்கள் வரை புது பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்.

உலக அழகியே #மனைவி என்றாலும்
உலகத்தின் ஆணழகனே #புருஷன் என்றாலும் பார்க்க பார்க்க காதல் மட்டுமே என்றால் ஒரு நேரத்திற்கு பிறகு
தெவட்ட தான் செய்யும்.

ஏனெனில் பழக பழக
பாலும் புளித்து தயிர் ஆக தான் செய்யும்.

புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால் தயிர் வெண்ணெய் ஆகி இறுதியாக மணக்கும் நெய் ஆகும்.

இதுதான் காதலில் வாழ்க்கையை கரைத்து விடாமல் பொத்தி பொத்தி பொறுத்து போய்
காதலை விட
அன்பு மட்டுமே வலுவானால்
நெய் போல தாம்பத்யம் மணக்கும்.

புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும்.
சண்டை வரும்..

அதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டு போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே.

புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்..

அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு.

அத விட்டுட்டு ஐயோ என் பொண்ணு எப்பேர்பட்ட குணவதி அவளுக்கு போயி இப்படில்லாம் ஆகணுமா..

போயும் போயும் அவனுக்கு போயி கட்டிவச்சுட்டனேன்னு இவங்க அனத்தும் போது..

இதெல்லாம் அந்த பெண்ணுக்கு ''ஹப்பாடி நம்ம சைட் தப்பில்லன்னு நம்பிட்டாங்க''ன்ற மாதிரியான மனநிலை கொடுக்கும்.

அதே போலதான் பையன் வீட்டிலும்.. ரெண்டு பேர் வீட்லயும் ரெண்டு பேரையும் உயர்த்தி உயர்த்தி பேசி ஏதோ தனக்கு பொருத்தமில்லாதவங்கள கட்டி வச்சுட்டதாகவும் இத்தனை நாள் சகித்து தியாக வாழ்வு வாழ்ந்ததாகவும் நம்ப வச்சிடுவாங்க.

அந்த உயர்ந்த பிம்பத்திற்கும். ஒரு பாவப்பட்ட ஆள் என்ற கழிவிரக்கதிற்கும் ஆசைப்பட்டு இவங்களும் நம்ப ஆரம்பிச்சிடுவாங்க.. டைவர்ஸ் ஆகிடும்..

ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த புத்தி வேலை செஞ்சு யோசிக்கும். அதான் நரகம்.

பொதுவா டைவர்ஸ் என்பதை எல்லாம் ரெண்டு பேரும் உக்காந்து பேசி செட்டே ஆகாதுன்னு தெரிஞ்ச அப்பறம் எடுக்க வேண்டிய முடிவு..

அதல்லாம மற்றவர்களும் பெற்றவர்களும் உங்கள் இணை குறித்து சொல்லும் குறைகளையும் உங்களை குறித்து சொல்லும் நிறைகளையும் மனதில் போட்டு ஒப்பிட்டு பிரியும் முடிவு எடுப்பதெல்லாம் மடத்தனம்.

நம்ம இணையும் பெர்பெக்ட் கிடையாது நாமளும் பெர்பெக்ட் கிடையாதுன்ற புரிதல் முதல்ல வேண்டும்.

அதற்கு அப்பறம்தான் ஒரு பிரச்சினைய அணுகனும்.

இந்த டைவர்ஸ் எண்ணங்களை கடந்துதான் எல்லாருமே இப்போது குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று அவரகள் ஆதர்ச தம்பதிகள்.

இந்த நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் காரணம்.

அட்ஜஸ்ட்மென்ட்.
அப்படி என்னத்துக்கு அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்தனும்ன்னு திமிராக கேள்வி வருதா?

#கல்யாணம் என்பதே அட்ஜஸ்ட்மென்ட்களால் ஆனதுதான். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வக்கில்லன்னா என்னத்துக்கு கல்யாணம் முடிச்ச என்ற பதில் கிடைக்கும்.

உங்களால் யாரையும் அட்ஜஸ்ட் செஞ்சு போக முடியாது. சுயகவுரவம் அதிகமா இருக்கு அப்படில்லாம் நினைச்சிங்கன்னா.. very sorry அட்ஜஸ்ட் செய்யாம வெறும் சுயத்தை வச்சிக்கிட்டு இங்கு யாராலும் வாழவே முடியாது.

ஏதாவது ஒரு வகையில் யாருக்காவது வளைந்துகொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றிர்கள்..

அதே வளைவை கல்யாணத்துக்கும் செய்யமுடியும் என்றால் மட்டுமே கல்யாணம் என்ற அமைப்பிற்குள் செல்லுங்கள்..

இல்லியா தனியா கெத்தா வாழ்ந்து பாருங்கள் அந்த வாழ்க்கை நரகம் என்பது போக போக புரியும்.

கேட்பார் பேச்சு கேட்காமல் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து பாருங்கள் அதுதான் சொர்க்கம்.

இதை
நீட்டி யோசித்து
நீடுழி வாழ்க

#படித்ததில்_பிடித்தது.

17/10/2020

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு

ஆனால்.....

*வண்டிக்காரன்*

உயிரில்லாத
வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல
வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை
செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற
ஜட வண்டியை

ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉 *எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது இறைவனே*

இதுதான்

நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு
தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..!

பயணம் முடிந்ததும் உடம்பு என்ற ஜட வண்டியிலிருந்து ஆத்மா, உயிர் என்ற மாட்டை பிரித்து விடுவார் இறைவன்!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*
*உணராதவனுக்கு*
*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே*!.

17/09/2020
புவி இயங்கியல் சார்ந்து சிந்திக்கும் போது இயற்கை தன் சமநிலையை தக்கவைத்துக்கொள்ள காடுகள் இன்றியமையாததாகிறது.நாம் காடு வளர...
03/09/2020

புவி இயங்கியல் சார்ந்து சிந்திக்கும் போது இயற்கை தன் சமநிலையை தக்கவைத்துக்கொள்ள காடுகள் இன்றியமையாததாகிறது.

நாம் காடு வளர்போம் என்று பலர் கிளம்புகின்றனர் ஆனால் அது காடு போன்றதது தான் என்றுமே காடாகாது. விதைத்தால் முளைக்கப் போகிறது என ஆணவம் கொள்ளும் சிற்றறிவு கொண்ட மனிதனினை சம்மட்டியால் அடித்து சொல்கிறது எல்லா விதைகளும் அவ்வாறு முளைக்காது என.

பல்லுயிர் வாழும் பிரமாண்ட மரங்கள் பல பறவைகள் விலங்குகளுக்கு உணவாகி அதன் வயிற்றில் செரிக்கப்பட்டு கழிவாக வெளியேறினால் மட்டுமே முளைக்கும் என சூட்சமம் வைத்துள்ளது இயற்கை. அப்படி பெருந்தீணி தின்று பல தொலைவு நடந்து கழிவின் மூலம் விதைப்பதை முதன்மை பணியாக செய்பவை யானைகள்.

மனிதனுக்காக படைக்கப்பட்டதே இவ்வியற்கை அவனே மேலான உயிரினம் என்ற கற்பிதங்களினால் ஆணவம் வளர்ந்து அவற்றை அழிப்பதன் விளைவு அவன் தனக்குத்தானே சவக்குழி வெட்டிக்கொள்கிறான். நாமும் இவ்வியற்கையின் அங்கம் என்று தேவைக்காக எடுத்துக் கொடுத்து வாழ்ந்தாதான் வையம் வாழும் என எண்ணவேண்டும் என்பதை எடுத்துறைக்கவே மேன்மையான தத்துவங்கள் பிறந்த இம்மண்ணில் சக உயிர்களையும் #வணங்கிவாழ வழி சொல்கிறது.

20/08/2020

பயணி ஒருவர் #ஆட்டோக்காரரிடம்.
எவ்வளவு?.
என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ?

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

ஆட்டோ பறந்தது...

அண்ணே இந்த வழியா போனா
#நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...?

#ரோட்டுக்கடைதான் சார்

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா...
அவரது நெற்றிமற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது

வாங்க

இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும்
பண்ணாது என்றார்,
ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை, புரோட்டா
என கட்டினோம்...

எவ்ளோம்மா ?.

60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...

இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்...
அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட
விட்டுட்டு வர்ரீங்க?.

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ்,
வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்...
இல்லையா ?.

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ணா

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே
இப்படியும் தேடலாம்

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...

இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

200-ரூபாய் போதும்''

என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கனம் மூச்சு நின்றது

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.

உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து விடுங்கள்....

நம் உயிரின் பயணம் பலன் பெரும் 🖤♥️.
படித்ததில் மிகவும் பிடித்தது.

19/08/2020

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .

11/08/2020

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை..

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்..
நம் சந்ததிக்கு.... ....

அனைவரும் படிப்போம் பிறருக்கு தெரியப்படுத்துவோம்

09/08/2020

வெப்பம்+இல்லை
வேப்பிலை!
உடல் வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
வேப்பிலை!

கரு+வெப்பம்+இல்லை
கருவேப்பிலை!
கருப்பை வெப்பத்தை
இல்லையென்றாக்கும்
கருவேப்பிலை!

அகம்+தீ−அகத்தீ
உடலின் உள்ளே
அகத்தின் தீயைக் குறைக்கும்
அகத்தி!

சீர்+அகம்−சீரகம்
அகத்தின் சூட்டைச்
சீராக்கும்
சீரகம்!

காயமே இது பொய்யடா−வெறும்
காற்றடைத்த பையடா!
காயத்தின் காற்றை
வெளியேற்றும்
பெருங்காயம்!

வெம்மை+காயம்−வெங்காயம்
உடலின் வெம்மையைப்
போக்கும் வெங்காயம்!

பொன்+ஆம்+காண்+நீ
பொன்னாங்கண்ணி!
உண்டால்
உடல் பொன் ஆகும்
காண்நீ!

கரிசல்+ஆம்+காண்+நீ
கரிசலாங்கண்ணி
காய்ச்சிய எண்ணெய்
கூந்தலைக் கரிசலாக்கும்
காண் நீ!

சொற்களுக்குள்ளே
மருத்துவம் வைத்தான்!
நம் மகத்தான பாட்டன்!

தமிழ்ச் சொற்களை
மறந்தோம்!
நம் மருத்துவம்
மறந்தோம்!
சொன்ன பாட்டியை
மறந்தோம்!
பாட்டனை மறந்தோம்!

மனிதக் கிருமி மறந்த மருத்துவம்!
மனிதக் கிருமி மறுத்த மருத்துவம்!
மனிதக் கிருமி அழித்த மருத்துவம்!

மனிதனை அழிக்கும்
கிருமியால் உயிர்த்தது...
இது இயற்கையின் வெற்றி...!
நம இயற்கை மருத்துவத்தின் வெற்றி...!

22/07/2020

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram