Viyasar Astrology Research Centre

Viyasar Astrology Research Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Viyasar Astrology Research Centre, Astrologist & Psychic, 182 Kaliyamman Koil Street Virugambakkam, Chennai.

Viyasar Astrology Research Centre founded in the year 2007 by Vedic Astrologer Sravan.He is a life Changer & spealises in prediecting and telling about your Personality, Career, Growth, Success,Luck,Present,Past & Future in your Life -8531903131

சென்னையில் உள்ள அனைவருக்கும் நமஸ்காரம்! திருமண பொருத்தம் பார்ப்பதற்கு சிறந்த ஜோதிடரை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? செவ்வாய...
25/08/2025

சென்னையில் உள்ள அனைவருக்கும் நமஸ்காரம்!

திருமண பொருத்தம் பார்ப்பதற்கு சிறந்த ஜோதிடரை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

செவ்வாய் தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம் & திருமண தோஷம் என்று உங்களை பயமுறுத்துகிறார்களா?

காரணமே இல்லாமல் உங்கள் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதா?

திருமணப் பொருத்தம் மற்றும் ஆலோசனைகளுக்கு சென்னையின் நம்பகமான வேத ஜோதிட நிபுணர் ஸ்ரவனை இன்றே சந்திக்கவும்!

கடந்த 16 வருடங்களாக 10,000 மேற்பட்ட ஜோதிட அன்பர்களுக்கு ஜோதிட வழிகாட்டுதலை வழங்கி வரும் இவர் இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்.

ஜோதிடத்தை காட்டி பயமுறுத்துபவர்களுக்கு மத்தியில் இவர் ஒரு தனித்துவமாக விளங்குகிறார். எவ்வளவு பெரிய பிரச்சனைகளுக்கும் மிக எளிய பரிகார பூஜைகள் மூலம் தீர்வுகள் வழங்கி வருகிறார்.

தவறான ஜோதிடகளிடம் சென்று உங்கள் மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள்.

இன்றே எங்களைத் தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் பெற்று ஜாதக ஆலோசனை பெற்று உங்கள் வாழ்க்கை தெளிவாக அமைத்துக் கொள்ளுங்கள்.

📍 சென்னை மக்களுக்காக கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் எங்கள் ஜோதிட ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.
* நங்கநல்லூர்
* விருகம்பாக்கம்

"அப்பாயின்மென்டுக்கு இன்றே @8531903131 என்ற எண்ணில் முன் பதிவு செய்யவும்"

  Astrologer in Chennai | Sravan | 16+ Years Experience | 5-Star Reviewsஜாதகம் பார்க்க 750 ரூபாய் மட்டுமே.! #உங்களுக்கு ...
18/08/2025

Astrologer in Chennai | Sravan | 16+ Years Experience | 5-Star Reviews

ஜாதகம் பார்க்க 750 ரூபாய் மட்டுமே.!

#உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து மிகத் துல்லியமான பலன்களையும் மற்றும் பிரச்சனைகளிலிருந்து வெளிவருவதற்கு மிக எளிதான வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பரிகாரங்களையும் வழங்கி வருகிறோம்.

#கடந்த 16 வருடங்களில் 10000-க்கும் மேற்பட்டவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, ஜோதிட ஆலோசனைகள் மூலம் தீர்வுகள் வழங்கி அவர்கள் பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவியிருக்கிறோம்

#கிரக தோஷங்களால் திருமணம் தடைபட்டுக் கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் நடைபெறுவதற்கு உதவி இருக்கிறோம்.

#ஜோதிட கவுன்சிலிங் எங்களிடம் பெற்று பயனடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து கூகுள் பைவ் ஸ்டார் (5****) ரேட்டிங் வழங்கி வருவதை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்வையிடலாம்.
https://maps.app.goo.gl/wPsmtikj8wjiHydr7
_
ஜோதிட கவுன்சிலிங் வழங்குவதில் 16 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்ட..
வேத ஜோதிடர் ஸ்ரவன்
58/7,Plot No : 23,4th மெயின் ரோடு நங்கநல்லூர் சென்னை

கிளை : 182/19, காளியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம் சென்னை

Web Site : www.viyasarastrology.in
8531903131

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரும், குடும்பத்தினரும் ...
07/08/2025

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரும், குடும்பத்தினரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக வரலட்சுமி நோன்பு இருந்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், பெளர்ணமியுடன் இணைந்து வருகிறது. இந்த நாளில் அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். இதனால் வீட்டில் எப்போதும் சுபிட்சம், செல்வம், மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

சென்னை: வரலட்சுமி விரதம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விரதம் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையில் வருகிறது மற்றும் பௌர்ணமி நாளுடன் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். வரலட்சுமி பூஜை செய்ய பல நல்ல நேரங்கள் உண்டு (Varalakshmi Pooja Timings 2025). காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் இந்த நல்ல நேரத்தில் (Nalla Neram) நீங்கள் பூஜை செய்து பலன் பெறலாம்.
திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், கணவன் இல்லாத பெண்கள், ஆண்கள் என யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்து வழிபட்டு, பலவிதமான வரங்களை பெறுவதற்குரிய நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது

ஜோதிடப் பணியில்..
வேத ஜோதிடர் ஸ்ரவன்
நங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம்
8531903131
www.viyasarastrology.in

Viyasar Astrology Research Centre

https://share.google/fQdFosr2pm7P24Cro

#ஜாதகம் பார்க்க ரூபாய் 750 மட்டுமே

 #ஆடிப்பூரம் நாளின் சிறப்புகள் மற்றும் வழிபாடுகள் பற்றியவிசேஷ பதிவு ஆடிப்பூரம் லட்சுமியின் அம்சமான ஆண்டாளுக்கும் பார்வதி...
27/07/2025

#ஆடிப்பூரம் நாளின் சிறப்புகள் மற்றும் வழிபாடுகள் பற்றியவிசேஷ பதிவு

ஆடிப்பூரம் லட்சுமியின் அம்சமான ஆண்டாளுக்கும் பார்வதியின் அம்சமான அம்பாளுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

ஆடிப்பூரத் திருநாள் இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாகும். மகாலட்சுமியின் மறுஅம்சமாகவும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த தினமாகவும், பார்வதி தேவியின் வளைகாப்பு தினமாகவும் ஆடிப்பூரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்த நாள் இந்த ஆண்டு ஜூலை 28 தேதி திங்கட்கிழமை வருகிறது.

ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நட்சத்திரம் பூரம். அதுவும் ஆடிமாதத்தின் அன்னை அவதரித்ததால் இது திருவாடிப்பூரம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் அன்னை ஆண்டாள் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வது விசேஷம்.குறிப்பாக திருப்பாவை 30 பாடல்களையும் இந்த நாளில் பாடி வழிபட்டால் அனைத்து நன்மைகளும் சூழும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பூரத்தின் போது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அவர் அரங்கனோடு ஐக்கியமான ஸ்ரீரங்கத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழாவின் கடைசி நாளான ஆடிப்பூரத்தன்று, ஆண்டாள்- ரங்கநாதருடன் ஐக்கியமானதை குறிப்பிடும் வகையில் தெய்வீக திருமண வைபவம் நடைபெறும். இதை குறிப்பிடும் வகையிலேயே திருக்கல்யாணம் என்ற சொல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆண்டாளின் திருக்கல்யாணத்தை காண்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்

வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள்.

ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.

அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது. மனிதர்களை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு, உலகத்தை காக்கும் அன்னை தோன்றிய நாளே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுவதுண்டு

இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் என்பது ஐதீகம். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

எனவே இந்த நல்ல நாளில் ஆண்டாள் வழிபாடு அம்பாள் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.

மிக குறிப்பாக பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று ஆண்டாள் வழிபாடு செய்வதும் அம்பாள் வழிபாடு செய்வதும் மிகுந்த நல்ல பலன்களை கொடுக்கும்.

ஜோதிட பணியில்...
வேத ஜோதிடர் ஸ்ரவன்,
வியாசர் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
நங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம் சென்னை
8531903131/9600130489
www.viyasarastrology.in
You can find google reviews of our service by clicking on the following link... https://g.page/r/CXTIs9Fs27ndEBM/review


இந்து மதத்தில் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும் சித்திரை ம...
11/05/2025

இந்து மதத்தில் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாக பௌர்ணமி கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வந்தாலும் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பௌர்ணமி தினம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. மற்ற பௌர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பௌர்ணமியன்று, பூரண நிலவாக பூமிக்கு மிக அருகில் காட்சியளிக்கும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று (12.5.2025) கொண்டாடப்படுகிறது.

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப, அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மரின் உதவியாளரான சித்திரகுப்தரை வழிபடுவதற்கு உகந்த நாளாக சித்ரா பௌர்ணமி கருதப்படுகிறது. சித்ரா பௌர்ணமியில் சித்ரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளாக ஆலயங்கள்தோறும் பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபிட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ரா தேவிக்கு (அம்பிகை) உகந்த
ஓம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் என்ற சித்ரா காயத்ரி மந்திரத்தை 11 முறை பாராயணம் செய்து பின்பு
தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

-
ஜோதிட ஆராய்ச்சி மூலம் பல்வேறு தரவுகளில் இருந்து விவரங்களைப் பெற்று அன்பர்களின் பார்வைக்காக தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

பயன் பெற்று பலன் பெற வாழ்த்துக்களுடன்...
16+ வருடங்கள் வேத ஜோதிடத்தில் அனுபவமிக்க வேத ஜோதிட ஸ்ரவன் நங்கநல்லூர் மற்றும் விருகம்பாக்கம்
8531903131
www.viyasarastrology.in

#சித்ராபௌர்ணமி #கிரிவலம் #கள்ளழகர் #மதுரை #வைகை

Address

182 Kaliyamman Koil Street Virugambakkam
Chennai

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+918531903131

Alerts

Be the first to know and let us send you an email when Viyasar Astrology Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Viyasar Astrology Research Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram