சமையல்காரன்

சமையல்காரன் சமையல்காரன்- தமிழர் பாரம்பரிய உணவின் கலைக்கூடம். பெண்களுக்கு தேவையான சமையல் குறிப்புக்கள், அழகு குறிப்புகள், வீடு பராமரிப்பு

செட்டிநாடு வத்த குழம்புதேவையான பொருட்கள்: சுண்டைக்காய் வத்தல் - 5 டீஸ்பூன் வெங்காயம் - 3 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள்...
20/05/2015

செட்டிநாடு வத்த குழம்பு

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1 (நறுக்கியது)
சாம்பார் தூள் - 3 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

செய்முறை: முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பின்பு அதில் சுண்டைக்காய் வத்தல், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது ஓரளவு கெட்டியாக, எண்ணெய் பிரியும் நிலையில் வரும் போது, அதனை இறக்கினால், செட்டிநாடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!

டயட்டில் இருப்போருக்கான... ஓட்ஸ் உப்புமாதேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப்தண்ணீர் - 3-4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (பொடிய...
20/05/2015

டயட்டில் இருப்போருக்கான... ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் - 3-4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, அத்துடன் ஓட்ஸையும் சேர்த்து கிளறி, 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். ஓட்ஸானது மென்மையாகும் வரை, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கிளறி விட்டு மூடி வைத்து வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஓட்ஸ் உப்புமா ரெடி!!!

மாங்காய் புலாவ்தேவையான பொருட்கள்: அரிசி - 1 1/2 கப் (குக்கரில் போட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்) பச்சை மாங்காய் - 1 (...
20/05/2015

மாங்காய் புலாவ்

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 1/2 கப் (குக்கரில் போட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்)
பச்சை மாங்காய் - 1 (துருவியது)
வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கடுகு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் துருவிய மாங்காயை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 7 நிமிடம் பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர கொதிக்க விடவும். பிறகு அதில் சாதத்தை போட்டு, நன்கு சாதத்துடன் மசாலாக்கள் ஒன்று சேர பிரட்டி, பின் எலுமிச்சை சாற்றை அதன் மேல் பிழிந்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், மாங்காய் புலாவ் ரெடி!!!

சிக்கன் சால்னா: பேச்சுலர் ரெசிபிதேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியத...
20/05/2015

சிக்கன் சால்னா: பேச்சுலர் ரெசிபி

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது வறுத்து அரைப்பதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 5
கிராம்பு - 5
தேங்காய் - 1 கப் (துருவியது)
கசகசா - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10-15 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி!!!

20/05/2015
TOP STREET FOODS IN CHENNAI(List is endless and needs update)SOWCARPET AREA IS THE KING OF CHAAT ITEMS IN CHENNAI.Sowcar...
13/04/2015

TOP STREET FOODS IN CHENNAI
(List is endless and needs update)

SOWCARPET AREA IS THE KING OF CHAAT ITEMS IN CHENNAI.

Sowcarpet Area: (most of these shops in Sowcarpet Area is for Evening Snacks)

1) Samosa - Ritchie St. of Mt. Road Behind Indiab. Silk House ( Rs.10/- for 2 samosas)
Ritchie Street - One more shop near Subway (near old Vasantha Bhavan) (Evening Snacks)

2) Kachodi/ Kachori: After noon & Evening time at Kasi Chetty St and Patni Plaza on NSC Bose rd. Amazing Kachodi with corn flakes and chutney.
One more Kachori shop in middle of Govinda naicken street next to Hongkong Plaza. (Evening Snacks)

3) A HOST OF CHAT - Jelabe, Aloo tikki chat, Badaam Milk: Kakada Ramprasad at Mint St. Sowcarpet

4) Bread Bajji: Govindapanaickan St (Near Transformer) Sowcarpet. (Evening snacks)

5) Aatho Bejo - Aatho Shop, second line beach, Parallel to Beach station, Behind SBI LHO.

7) Podi Uthappam, mini idlys - Seena Bhai tiffin Centre - Opp Kazhanchi Jewellery - Map - http://bit.ly/1PxIixv

8)Pandey Pan house - 131, NSC Bose Road.

9) Badam Milk, Lassi & Samosa - Agarwal Bhavan, starting of Govindappa Naicken street

10) Kichas corner - kacha and banza (you will never get this anywere else apart from that particular shop)
Kichar corner - Tattamutiappan st. next to select theatre

11) Paav Bhaji : Novelty - Mint St. Sowcarpet

12) Mehta Brothers: Vada pavs. It’s around 50 years old. Their signature vada pav is all feisty with red powdery garlic chutney and their mirchi bhajji is quite a hit too.

13) Anmol Lassiwalla: Sharing is the best option. Cost: Rs. 70 for kesar lassi and Rs. 30 for chaas.

14) Sugarcane juice man: Outside Chotu Motu Sweets and Savouries. He fills endless glasses of juice that’s infused with ginger and is sweet and refreshing.

15) Ajab’s Ajnabi Mithai Ghar: 60 years old Gujarathi - Gathiyas, fafda, dhokla, thepla, gajar halwa, dudhi halwa… and all things Gujarati.

16) Maya Chat: kachoris which in no time get sold out like hot cakes.

17) Cheese Muruku sandwich: Sarvana sandwich in mint street near to naturals saloon

PURASAIWALKAM:

1. Links - Murukku Sandwich and Cheese Corn Canape
2. Mehta's Vada Pav - Cheese Vada Pav and Cheese Murukku Sandwich
3. Ashok Paan House - Cheese Bhujia Sandwich and Masala Thums up
4. Kings Vada Paav - Jalebi
5. Vaishnava Tiffin Centre - Thattu Idly, Mysore masala dosa and Cheese Capsicum Dosa.
6. Sambar idly : Hotel krishnaprasad & welcome hotel purasaiwalkkam

OTHER AREAS:

7) Idly : Rathna cafe triplicane

8) Paya Appam: National Darbar Periamet near Ribbon building

9) Butter Chicken : Hotel Runs - kasthuriba ngr Adyar

10) Biriyani: Periamet BC

11) Chola Battura: Loiee - Tambaram

12) Bun Butter Jam : Mount Road Buharis

13) Bhel Puri : Ajnabi's Egmore Fountain Plaza

14) Dal Pakwan : Sidhi Vinayak Sweets Kilpauk

15) Molaga Bajji - Marina beach

16) Fish Fry: Tawa Fish Fry at Moonrakers - Mahabalipuram, Fisherman's fare Egmore

17) Veg Upma : Woodlands canteen - Nardagana Sabha - TTK Rd.

18) Veg Meals ; Madras Hotel Ashoka - Egmore

19) Beeda/Paan : mahahi sait KC sterling rd Nungambakkam

20) Aloo Paratha: Pait pooja - Thoraipakkam

21) Pizza: Superstar Pizza Perungudi

22) Andra meals : National at govindapanaicken st & metha nagar choolaimedu

23) Chat items : near Vepery signal

24) Kerala food at kalpaga mylapore & cresent in nungambakkam

25) Dosa items Brilliant tutorial and kalingambal mess mylapore

26) Arabian dish at Sea shell & zaitoon

27) Kalathi Shop - Rose Milk, Mylapore.

28) Bread Omlette: Outside Alsa Mall Egmore.

Must Try in Chennai if you are a Food lover: (Pocket Friendly)1) Samosa - Ritchie St. of Mt. Road Behind India Silk Hous...
09/04/2015

Must Try in Chennai if you are a Food lover: (Pocket Friendly)
1) Samosa - Ritchie St. of Mt. Road Behind India Silk House ( Rs.10/- for 2 samosas)
2) Kachodi/ Kachori: After noon & Evening time at Kasi Chetty St and Patni Plaza on NSC Bose rd. Amazing Kachodi with corn flakes and chutney.
3) Idly : Thattu idly at Vaishnava Idly kadai - Ormes road kilpauk
4) Badaam Milk: Kakda Ramprasad at Mint St. Sowcarpet
5) Bread Omlette : Outside Alsa Mall Egmore.
6) Bread Bajji: Govindapanaickan St (Near Transformer) Sowcarpet
7) Paya Appam: Golden cafe early morning at 4 AM at Waltax Road.
8) Butter Chicken : Hotel Paramount - Ormes Rd. Kilpauk
9) Biriyani: Kalyana Bhavan Biriyani
10) Chola Battura: Loiee - Tambaram
11) Bun Butter Jam : Mount Road Buharis
12) Bhel Puri : Ajnabi's Egmore Fountain Plaza
13) Set Dosa Vada Curry: Dasa Dosa counter - Express Avenue
14) Dal Pakwan : Sidhi Vinayak Sweets Kilpauk
15) South Indian Non Veg Meals (Chettinadu): Hotel Guru - Mahabalipuram
16) Molaga Bajji (Chilly Bajji - North Indian Style) : Ajab Mithai Ghar - Alagappa Road
17) Fish Fry: Tawa Fish Fry at Moonrakers - Mahabalipuram
18) Veg Upma : Woodlands canteen - Nardagana Sabha - TTK Rd.
19) Veg Meals ; Madras Hotel Ashoka - Egmore
20) Beeda/Paan : Nitya tambool - Besant Nagar - Near eden Restaurant
21) Aloo Paratha: Pait pooja - Thoraipakkam
22) Pizza: Superstar Pizza Perungudi
23) Paav Bhaji : Novelty - Mint St. Sowcarpet

செட்டிநாடு பால் பணியாரம்பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. அதிலும் செட்டிநாடு ஸ்டைல் பால்...
02/02/2015

செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. அதிலும் செட்டிநாடு ஸ்டைல் பால் பணியாரத்தை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு, அவர்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களுக்கு பால் பணியாரம் செய்யத் தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படித்து வாருங்கள். இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
காய்ச்சிய பால் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பௌலில் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதில் பொரித்து வைத்துள்ளதை சேர்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து பின் பரிமாறினால், சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!

அவதி சிக்கன் ரெசிபிஇதுவரை நீங்கள் எத்தனையோ சிக்கன் ரெசிபிக்களை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் அவதி ஸ்டைல் சிக்கன் ரெசிபிய...
02/02/2015

அவதி சிக்கன் ரெசிபி

இதுவரை நீங்கள் எத்தனையோ சிக்கன் ரெசிபிக்களை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் அவதி ஸ்டைல் சிக்கன் ரெசிபியை சமைத்துள்ளீர்களா? அவதியில் இந்த சிக்கன் ரெசிபியானது மிகவும் பிரபலமானது. மேலும் இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
இங்கு அந்த அவதி ஸ்டைல் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 3/4 கப்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 1/4 கப்
முந்திரி - 5-6
வதக்கிய வெங்காய பேஸ்ட் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
எண்ணெய்/நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், மல்லித் தூள், சீரகப் பொடி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் முந்திரி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை அதிகரித்து 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
அடுத்து மிளகாய் தூள், அரைத்த தக்காளி சேர்த்து கிளறி, பின் வதக்கிய வெங்காய பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட், ஏலக்காய் பொடி, ஜாதிக்காய் பொடி, கரம் மசாலா சேர்த்து 5-6 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அதில் உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், அவதி சிக்கன் ரெடி!!!

காளான் பொரியல்பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டா...
02/02/2015

காளான் பொரியல்

பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் காளானை பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும்.
இங்கு காளானை எப்படி பொரியல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
காளான் - 1 பாக்கெட்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காளானை நறுக்கி, சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, காளான் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, மசாலா அனைத்தும் காளானுடன் ஒன்று சேர வாணலியை மூடி, வேக வைத்து இறக்கினால், காளான் பொரியல் ரெடி!!!

சைனீஸ் ஸ்பெஷல்: சீசுவான் சில்லி பன்னீர்சைனீஸ் ரெசிபிக்கள் அனைத்துமே வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமின்றி அந்த...
02/02/2015

சைனீஸ் ஸ்பெஷல்: சீசுவான் சில்லி பன்னீர்

சைனீஸ் ரெசிபிக்கள் அனைத்துமே வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமின்றி அந்த ரெசிபிக்களின் பெயர்கள் அனைத்தும் வாயில் நுழையாததாகவே இருக்கும். அப்படிப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு சைனீஸ் ரெசிபி தான் சீசுவான சில்லி பன்னீர்.
இந்த சில்லி பன்னீர் ரெசிபியானது மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் சீசுவான் சில்லி பன்னீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1/4 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சீசுவான் சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சீசுவான் சாஸ் செய்வதற்கு...
வரமிளகாய் - 30
பூண்டு - 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சீசுவான் சாஸ் செய்யும் முறை:
முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சீசுவான் சில்லி பன்னீர் செய்யும் முறை:
முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின், அதில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பன்னீர் ரெடி!!!

Address

தமிழ்நாடு
Chennai
600007

Telephone

9944019017

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமையல்காரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram