Community Action for Health

Community Action for Health A Process of Monitoring and Planning of Health Services at village level by a committee "VHWSNC" in Tamilnadu. Implemeted by NRHM-TN, NGOs and DPH-TN.

[12/14, 8:14 AM] Suresh D SOCHARA-MNI: பொது நலம் அல்லது பொதுச் சுகாதாரம் (Public Health) என்பது ஒரு சமூகத்தின் நலத்தையும...
14/12/2021

[12/14, 8:14 AM] Suresh D SOCHARA-MNI: பொது நலம் அல்லது பொதுச் சுகாதாரம் (Public Health) என்பது ஒரு சமூகத்தின் நலத்தையும், அதை ஏற்படுத்தி தரும் நல முறைமையும் குறிக்கிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்தல், மருத்துவ சேவை, உணவு, நீர் தரக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலைப் பேணல், அரசியல் பண்பாட்டு பொருளாதார நலத்தைப் பேணல் என பல பொது நலக் கூறுகள் ஒரு தனிநபரின் உடல் உள நலத்தை தீர்மானிக்கிறது.

பொது நலத்தை பேண வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளை கையாளுகின்றன. அவற்றின் தரமும் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. கனடா, சுவீடன் போன்ற நாடுகளில் அரசு பொது நலம் தொடர்பான முழுமையான பொறுப்பையும் செலவையும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. பிற பல மேற்குநாடுகளிலும், சீனா, கியூபா ஆகிய நாடுகளிலும் பொது நலத்தைப் பேணுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா, மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றில் தனியாரே மருத்துவ சேவைகளை பெரிதும் வழங்குகின்றனர். இங்கே தனிப்பட்ட நபரின் பொருளாதார வலிமைக்கு ஏற்ப மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன.
[12/14, 8:22 AM] Suresh D SOCHARA-MNI: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் (அடிப்படை உரிமைகள்) பகுதி III இன் கீழ் நலவாழ்வு/ஆரோக்கியத்திற்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. மாறாக வாழ்வதற்கான உரிமையானது வாழ்வாதாரத்திற்கான உரிமை, சிறந்த வாழ்க்கைத் தரம், பணியிடத்தில் சுகாதாரமான நிலைமைகள் மற்றும் ஓய்வுக்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த நோக்கத்தைக் மட்டுமே கொண்டுள்ளது. இதுவே நம்மைப்போன்ற நலவாழ்வு இயக்கங்களின் போரட்டத்திற்கு காரணம்.

[12/14, 8:32 AM] Suresh D SOCHARA-MNI: இந்தியா நலவாழ்வு உரிமையை அடிப்படை உரிமையாக அறிவிக்கும் நேரம் இது. வலுவில்லாத நலவாழ்வு சட்டங்கள் எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகளுக்கு சமூக பின்னடைவை உருவாக்க உதவும். மனித உரிமைக் கடமைகளை புறக்கணிப்பதன் விலையில் அவசரகால நடவடிக்கைகள் வர முடியாது. வெளிப்படைத்தன்மை, விகிதாசாரம், மக்கள் பங்கேற்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகிய கொள்கைகளைப் பயன்படுத்தி, நலவாழ்வுக்கான உரிமையை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. கோவிட்19 அனுபவம் பரவலாக்கப்பட்ட, பண்முகப்படுத்தப்பட்ட, பதிலுரைக்கும் கடமையின் முக்கியத்துவத்தையும் நிரூபித்துள்ளது - இந்தியாவின் கூட்டுறவு கூட்டாட்சி, அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

Join MNI Post card campaign on demanding Clinical Establishment Act for Tamil Nadu only after public dialogue . Buy a po...
27/11/2017

Join MNI Post card campaign on demanding Clinical Establishment Act for Tamil Nadu only after public dialogue . Buy a post cards and address to CM cell and write following sentences and post it.

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
தபால் அட்டை வாசகம்

பெறுனர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
முதலமை‌ச்சர் தனிப்பிரிவு
தமிழக அரசு தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை -600009.

கோரிக்கை

ஐயா, வணக்கம்.

மருத்துவமனைகள் மற்றும் சார்பு நிறுவனங்களை ஒழுங்குமுறைப் படுத்துதல் மசோதாவை அமுல்படுத்துவதாக தமிழக அரசு கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த மசோதாவை பொது விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கு பின் உடனடியாக நிறைவேற்ற மக்கள் நலவாழ்வு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

இப்படிக்கு
பெயர்
ஊர் /ஊராட்சி
மாவட்டம்
தேதி

22/04/2016

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016-க்கான மக்கள் நலவாழ்வு கோரிக்கைகள்

மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் [Peoples Health Movement - India] தமிழ் மாநில அமைப்பின் சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016 மக்கள் நலவாழ்வு கோரிக்கைகள் வெளியிடப்படுகிறது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமான அடிப்படை உரிமைகளில் ஒன்றான நலவாழ்வு உரிமைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் நலவாழ்வு நிலை குறியீடுகள் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் பாலின, வர்க்க, சாதி ரீதியாக நிகழும் ஏற்றத்தாழ்வுகளை பல வருடங்களாக நம்மால் குறைக்க இயலவில்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான நிதியும், மனிதவளமும் வழங்குவதற்கான அரசியல் உறுதியில்லாத நிலை ஒருபுறம், எந்தவித கட்டுப்பாடும் இன்றி இலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சி மறுபுறம் என்பதே தமிழகத்தின் தற்போதைய நிலைமை. உணவு, குடிநீர், இருப்பிடம், வாழ்வாதார உரிமைகளோடு தரமான, முழுமையான, இலவச நலவாழ்வு சேவைகளை வழங்குவதன் மூலமாகவே நலமான தமிழகத்தை கட்ட இயலும். பல்வேறு தரப்பு மக்கள், வல்லுநர்கள், சமூக குழுக்கள் ஆகியோரின் கருத்தறிந்து கீழ்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலவாழ்வு இயக்கம் முன்வைக்கிறது.

கோரிக்கைகள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நலவாழ்விற்கான நிதி ஒதுகீட்டை 5%மாக உயர்த்தவும், நலவாழ்வு உரிமைக்கான தேசிய சட்டத்தை நிறைவேற்றவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக வழங்கு.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் (ஆசு. நிலையங்கள்) 24மணி நேரமும் மருத்துவரை பணியமர்த்து. மேலும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கு.

ஆசு. நிலையங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணி முதல் 8 மணி வரை இயங்கும் மாலை நேர புறநோயாளிகள் சிகிச்சையை உத்திரவாதப்படுத்து.

ஆசு. நிலையங்களில் பல்வேறு சிறப்பு பிரிவு மருத்துவ குழுவை பணி அமர்த்து.

பொது சுகாதார துறையில் தாய்-சேய் நலசேவைகளை தாண்டி அனைத்து நோய்தடுப்பு மற்றும் நலமேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பாடுகள் சீரமைக்கப்பட வேண்டும்.

துணை சுகாதார நிலையங்களையும், சேவைகளையும் முழுவதுமாக செயல்படுத்து.

மருத்துவ துறையில் உள்ள அனைத்து காலிபணியிடங்களையும் தாமதமின்றி வெளிப்படை தன்மையுடன் நிரப்பவேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனை கல்லூரிகளை தரம் உயர்த்தி அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகளை உருவாக்கவேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ கல்வியின் தரம் சீரமைக்கப்படுவதற்காக கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து தரமான கல்வி அளிக்கவேண்டும்.

பகுதி சார்ந்த, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளை அந்தந்த பகுதிகளில் அமைத்திடு. (உம்: கடலூர் ரசாயன ஆலைகள், சிவகாசி – தீக்காயம், தருமபுரி – தலசீமியா, சிக்கல் செல் அனீமியா போன்றவை).

அரசு மருத்துவ துறையில் அனைத்து மட்டங்களிலும் நிலவும் இலஞ்சத்தை அறவே ஒழித்திட நடவடிக்கை எடு.

தனியாருக்கு மக்கள் பணத்தை கொண்டு சேர்க்கும் காப்பீட்டு திட்டம் உட்பட அரசு துறையில் அனைத்து தனியார் மயமாக்கலையும் நிறுத்து.

அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்.

மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பொதுபெயரில் மட்டுமே பரிந்துரையில் குறிப்பிடுவதை உறுதி செய்யவேண்டும்.

மத்திய மருத்துவமனைகளை சீரமைக்கும் சட்டம் 2010த்தை (CEA Act 2010) மாநில அளவில் தமிழகத்திற்கேற்ப மாற்றி உடனடியாக நிறைவேற்று.

தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் சுதந்திரமான, முழுமையான அமைப்பை ஏற்படுத்து.

தமிழகம் முமுமைக்குமான ஒரே சேவை கட்டணத்தை நிர்ண்யம் செய்து அமல்படுத்து.

மருத்துவ அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலும் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேலாண்மையை உறுதிசெய்.

கிராம நலவாழ்வு குழுக்கள், ஆஷா போன்ற திட்டங்களை முழுமையாக, வெளிப்படையாக செயல்படுத்தி, மருத்துவமனைகளை மக்கள் கண்காணிப்பதை உறுதிசெய்.

கிராம நலவாழ்வு குழுக்கள் (VHWSNC), பயனாளிகள் நலச்சங்கங்கள் (PWS) திறம்பட செயல்படவும், அவற்றிற்கு வழங்கப்படும் நிதியை வெளிப்படையாக நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருடாவருடம் அதிகரித்து கொண்டுவரும் கொசுவினால் பரவும் நோய்களை தடுக்கும் விதத்தில் மாவட்ட அளவில் சிறப்பு அலுவலரை பணியமர்த்தி மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு கட்டுபாடு மேற்கொள்ளவேண்டும்.

இந்திய மருத்துவ முறைக்கு (AYUSH) போதுமான தனி கவனமும், நிதியும் அளித்து வலுப்படுத்தி அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும்.

இரண்டாம் கட்ட சிகிச்சை பெறும் எச்.ஐ.வி (HIV) நோயாளிகளுக்கு போதுமான மருந்து உட்பட முழுமையான வசதிகளை உறுதிப்படுத்தவேண்டும்.

மனநல மருத்துவதுக்கு தேவையான வளங்களை அதிகரித்து, ஒருங்கிணைந்த மனநல மருத்துவ திட்டதின் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநல சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மருத்துவ திட்டத்தின் கீழ் அனைத்து முறைசார தொழிலாளரும் பயன்பெற வழிவகை செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவரும் சேவைகள் தரமானதாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கி முழுமையான மக்கள் பங்கேற்புடன் அம்மையங்களை செயல்படுத்தவேண்டும்.

மது இல்லா தமிழகத்தை உருவாக்கவேண்டும். மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய, உயரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.

மக்கள் நலவாழ்வு இயக்கத்திற்காக வெளியீடு செயற்குழு குழு உறுப்பினர்கள்
அமீர்கான்
முனைவர். குழந்தைவேல் பாண்டியன்

தமிழகத்தின் முதல் பொதுப்படையான மருந்து கடை (Generic Medical Shop ) சென்னை மந்தைவெளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மர...
02/09/2015

தமிழகத்தின் முதல் பொதுப்படையான மருந்து கடை (Generic Medical Shop ) சென்னை மந்தைவெளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மருந்துகளின் விலை அதன் MRP விலையில் பாதிக்கும் குறைவாக இருக்கும். மருத்துவரிடம் நாம் மருந்து சீட்டு வாங்கும் மருந்துகளின் பொது மருத்துவ பெயரை குறிப்பிட்டு வங்கி வருவது எளிமையாக இருக்கும். இவர்களும் மருந்துகளுக்கு இணையான பொது மருத்துவ பெயரை கணினி வழியாக இனம்கண்டும் மருந்துகளை தருகின்றனர். அனால் மருந்துகள் சில்லரையாக (1 அல்லது 2, 3) கிடைக்காது. ஒவ்வொரு மருந்தும் முழு அட்டையாகவே அளிக்கப்படும். இவர்களின் முயற்சி வெற்றிபெற நாம் வாழ்த்துவோம்.
தகவலை அனைவருக்கும் பரப்பவும்.
இடம் : 224/2 A , R K Mutt Road (ஆர் கே மேடம் சாலை ), மந்தைவெளி. தொ லைபேசி 24950825
---
நேற்று மக்கள் நலவாழ்வு இயக்க உறுப்பினர்கள் திரு.சுரேஷ், பேரா. சண்முகவேலாயுதம் , மரு . நரேஷ்குமார் , திருமதி. ஜெயலட்சுமி ஆகியோர் கடை நடத்தும் மேலாளர் திரு சங்கர் அவர்களிடம் வாழ்த்து தெரிவித்து முயற்சி பற்றி கேட்டறிந்தனர்.

30% லாபத்துடன் பராத் விகாஸ் அறகட்டளை இம்முயற்சியை சென்னையில் துவக்கியுள்ளது. இதன் லாபத்தின் ஒரு பகுதி நலவாழ்வு அற செயல்பாடுகளுக்கு செலவிடப்படுகிறது.

State level workshop towards the preparation for "National Public Hearing on Health" by NHRC and PHM(JSA/MNI) will be he...
01/08/2015

State level workshop towards the preparation for "National Public Hearing on Health" by NHRC and PHM(JSA/MNI) will be held on 7 & 8th August 2015 @ Udhayam Centre, Trichy (Williams road, Contonment, Land mark is near to Dinamalar paper office,R.C school Bus stop)

These hearings will focus on reviewing human rights violations in context of the public and private health care services in India, with a view to drawing attention to key systemic and policy related issues, along with issuing a range of related recommendations comprehensively. Series of public hearings on Health rights would be organised in various regions, followed by a National public hearing. This would provide a much-needed platform to share and discuss key issues today related to violation of Health rights of people in various parts of India, and would lead to issuing of a series of recommendations, would result in certain serious violations being taken up as human rights violations by NHRC, and would help build a climate for adoption of various measures required to ensure protection of health rights.

ALL ARE WELCOME. Lets join Hands towards HEALTH FOR ALL!

AN Mothers meet @ Nagadasampatti PHC
10/07/2015

AN Mothers meet @ Nagadasampatti PHC

06/01/2014

Process is reworked in 2000+ panchayats in 6 districts across Tamilnadu. MoU between the stake holders going to be signed shortly.

Visit http://cahtn.in for reference.

20/07/2012

Two years of community action ends up by July 2012 with lots of opportunities and learning, challenges etc., Now the major one is, Tamil Nadu Government turns towards us; looking us with their tightened eyebrow seems to take over the process at least at the district level where we are working now with some interest off officers and supported staffs.

The community is with full of enthusiasm and putting lot of exceptions with us and government. Panchayat presidents, lower level staffs, politicians and the system staffs starts looking the process and hearing the people and supporting the process in such a way that towards ensuring the democratic people policy entitled health grantees.

Congratulation and thanks to the ground level workers and volunteers who did their job and gave the valuable contribution towards this process. Who are became the social marks in the global world now.

02/03/2012

We back from two day intensive workshop on reflection and planning for coordinators held at TNVHA resource center, Potheri. We used new methodology called "world cafe" for group discussion which was interesting and time saving, complete participatory and clear outputs.
Totally saying, it was power packed two moon days.

04/01/2012
19/08/2011

Micro Level Health Planning at Primary Health Center (PHC) Level by Community, Civil Society and Health System is happening at 54 PHC of Tamilnadu under National Rural Health Mission. Objective of his planning is to make a space to discuss and come out with a action plan to address the gaps founded in the Community Based Monitoring happened in last February 2011 at 446 panchayaths. The process is facilitated by the Community Action for Health project staffs and NGOs

Address

Chennai
600107

Alerts

Be the first to know and let us send you an email when Community Action for Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Community Action for Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram