ஸ்ரீ மகரிஷி சித்த மருத்துவம்

  • Home
  • India
  • Chennai
  • ஸ்ரீ மகரிஷி சித்த மருத்துவம்

ஸ்ரீ மகரிஷி சித்த மருத்துவம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ மகரிஷி சித்த மருத்துவம், Medical Service, Chennai.

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 1.தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்...
23/07/2024

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1.தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2.திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
இன்னும் கல்யாணம் ஆகலயா?
குழந்தைகள் இல்லையா?
இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?
ஏன் இன்னும் Car வாங்கவில்லை?
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5.தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7.மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்னையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

 #கர்ப்பம்_தரிக்க_விரும்புவோர்  #என்ன_செய்யவேண்டும்...❓ 👉 குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்❓👉 கர்ப்பம் தரிக்க  ஏ...
23/07/2024

#கர்ப்பம்_தரிக்க_விரும்புவோர்
#என்ன_செய்யவேண்டும்...❓

👉 குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்❓

👉 கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எது❓

⭕ பெண்கள் பிறக்கும் போதே அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும்.

ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக ஆக குறையும்.

பெண் வயதுக்கு வந்த பின் சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் அதாவது வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (ஓவுலஷன்) என்று பெயர்.


❤ #கர்ப்பம்தரிக்க_ஏதுவான_நாட்கள்❓

கருமுட்டை கருப்பையில் இருந்து வெளிவந்து 18 முதல் 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேரவேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் விந்து இருக்க வேண்டும். #ஆணின்_விந்து சராசரியாக ாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

பொதுவாக உடலுறவின் போது எண்ணெய், ஜெல் போன்றவை பயன்படுத்தினால் அவற்றை நிறுத்தி கொள்வது நல்லது. ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். முடிந்தவரை எந்த விதமான எண்ணெய் பொருட்களையும் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும், பல திரவங்களையும், தண்ணீரையும் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதாவது நீங்கள் கர்ப்பம் அடைய நினைக்கும் நேரத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன் பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

👫👉 #குழந்தை_பெற_உடலுறவுகொள்ள #வேண்டிய_நாள்கள்❓

மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.

இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது.

👇 பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, இரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

▶ ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

▶ சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும்.

இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டையானது 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.

👉 பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும்.

👉 சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம்.

➡ பெண்களின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.

➡ #உதாரணமாக………

உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.

கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பாக கருமுட்டை வெளிவரும்.

👉 உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.

➡ 28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் தான் கருமுட்டை வரும்

➡ 30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் தான் கருமுட்டை வரும்

➡ 34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் தான் கருமுட்டை வரும்

இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.

💢➡ #குழந்தை_வேண்டிய_தம்பதிகள்
#கடைபிடிக்க_வேண்டியவை……❗

💚 ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது குளித்துவிட்டு உடல் தூய்மையுடன் உடலுறவு கொள்ளுங்கள்

💚 ஆண் பெண் உறவு கொள்ளும் போது உடைகள் அற்ற நிலைல உறவு கொள்ளுங்க....

💚அதிகாலை வேலைல உறவு கொள்ளும் போது வெகுவிரைவாக பெண் கற்பமடைவாள்.

💚ஆண் பெண் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது,இருவரும் ஒருமித்து ஒரே எண்ணத்தோடு இருக்க வேண்டும்.....

💚துணைக்கு நாட்டம் இல்லாத போது வற்புருத்தி புணர வேண்டாம்.

💚இரவு உணவு உண்டு மூன்று மணி நேரம் கழித்த பிறகே உறவில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்

❌ வயிற்றில் மலம் மற்றும் சிறுநீரை அடக்கி வைத்து கொண்டு உடலுறவில் ஈடுபடாதீர்கள்……❗

⏩ அப்படி செய்தால் பிறக்கும் குழந்தைகள்………

👉 மந்தபுத்தி,

👉உடல்ஊனம்,

👉மூளைவளர்ச்சி குன்றி

பிறப்பார்கள்....ஆகையால் மலம்,சிறுநீர் கழித்த பிறகு உடலுறவில் ஈடுபடுங்கள்.

⭕ எடுத்த உடனேயே புணர்ச்சியில் ஈடுபடாதீர்கள்……

👉முதலில் ஒருவரை ஒருவர் அதற்காக தயார்படுத்தி கொள்ளுங்கள்

👉முத்தமிடல்,

👉தழுவுதல்,

👉தீண்டுதல்,

👉தூண்டுதல்,

👉தேடுதல்

என உங்கள் துணையின் மேனியை பரவசப்படுத்துங்கள்,

உணர்ச்சி பொங்கிவரும் வேலையில் தாம்பத்தியம் சுகம் காணுங்கள் புணர்ச்சியில் ஈடுபடுங்கள்.

💚 சில நேரங்களில் பெண் உறுப்பில் செலுத்தப்பட்ட விந்தணுக்கள் உள்ளே செல்லாமல் வெளியே வந்துவிடும் இதன் காரணமாகவும் பெண் கர்பமடைவது தடைப்படும்.....

👉 ஆகையால் பெண்ணின் பின் புறம் ஒரு *தலையணையை* வைத்துவிட்டு ஈடுபடுங்கள் இதன் மூலமாக விந்தணு வெளியில் வராமல் உள்ளே முழுமையாக செல்லும்....

⭕💚 எண்னெய் தேய்த்து குளியுங்கள்,இதன் மூலமாக உடல்சூடு குறையும்.உடல்சூட்டின் காரணமாக கூட பெண்களுக்கு கர்பம்கலைய நேரிடும் ஆகையால்.....

⭐ ஆணாக இருந்தால் புதன் மற்று சனிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

⭐ பெண்ணாக இருந்தால் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்னெய் தேய்த்து குளியுங்கள்.

⭐ எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மிதமான சூட்டில் குளிக்க வேண்டும் பச்சை தண்ணீர் பயன்படுத்த கூடாது.

⭐ எண்னெய் தேய்த்து குளித்த அன்று உடலுறவில் ஈடுபட கூடாது.

உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள்,

உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் *அன்பின் மொழி பேசுங்கள்* அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.

*மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே,ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அது அன்பின் மொழி உணர்வுகளில் பறிமாற்றம் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம்.

*கடைசியாக உடலுறவு செய்து முடித்த பிறகு ஆணும் பெண்ணும் கட்டாயம்
60 நிமிடங்களுக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வருவது நன்று,சிறுநீர் கழிப்பதால் பிறப்புறுப்பில் தேங்கி இருக்கும் விந்து மற்றும் அதை உண்ண வந்த கிருமிகள் வெளியேறிவிடும்.....

இதனால் பிறப்புறுப்பு சார்ந்த பிரச்சனைகள் வராது.

⭕ #பெண்கள்_உடலுறவின்_பின்…

1. உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்று விடலாமா❓

2. 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா❓

3 . உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே❓

4. ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே❓

❓மேற்கண்ட சந்தேகங்கள் திருமணமாகி குழந்தை தள்ளி போகிறவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். அத்தனைக்கும் பதில் கீழே…

இது நிறையப் பேருக்கு ஏற்படும் சந்தேகமே. உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் *(நீந்துவதன் மூலம்)*
பெண்ணின் முட்டையைச்
சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இருந்தாலும் கர்ப்பத்திற்காக எதிர்பார்த்திருக்கும் பெண்கள் உடலுறவின் பின் 60 நிமிடங்களுக்கு படுக்கையிலே இருப்பது நல்லது.

அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து உங்கள் இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும்
கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்.

அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு அதாவது கத்தரிகோள் போன்று படுத்திருப்பதும் உகந்தது.

🌟வாரத்துக்கு இரு முறை முருங்கைகீரையை உணவில் சேர்த்துகங்க.....

🌟வாரம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்துகங்க....

🌟நல்ல சுத்தமான தயிரில் உயிர் சத்துக்கள் அதிகம் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.

🌟தாதுபலப்படும்,கற்பபைபலப்படும், விந்துஎண்ணிக்கை கூடும் நல்ல தாம்பத்தியம் நிலைபெரும்.

🔴 ஆண் & பெண்…❓❓❓

உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும்.

எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும்.

அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும்.

இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல *புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி* *எல்லாத் தம்பதிகளுக்குமே* *பொருந்தும்.*

*பிராய்லர் சிக்கனை தவிர்க்கவும்,

*நொருக்கு தீணியை தவிர்க்கவும்,

*வெளிநாட்டு உணவு முறையை தவிர்க்கவும்.....

மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு..மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு..பொது வேலையில் ஈடுபட சொல்லிக் கொடு..பொது சேவை செய்பவரு...
05/01/2024

மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு..

மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு..

பொது வேலையில் ஈடுபட சொல்லிக் கொடு..

பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு..

தண்ணீரை சேமிக்க சொல்லிக் கொடு..

தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லி விடு..

தாய் தந்தைக்கு நல்லதைச் செய்..

அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய்..

உனக்காக ஒர் மரம் வை..

உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை..

இதை சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை..

பிள்ளை பிறந்தாலும் மரம் வை..

பேர் வைத்தாலும் மரம் வை..

மகள் பெரியவள் ஆனாலும்
மரம் வை..

நாட்டுக்காக நாளும்
நூறு மரம் வை..

இச்செயலை நண்பர்களையும் செய்ய வை..

இதை ஊராரிடமும் சொல்லி வை..

பசுமையைப் பற்றி சொல்லிக் கொடு..

அதை உருவாக்க இப்பவே முயற்சியை எடு..

பணம்..வாழத் தேவை..

காற்று..வாழவே தேவை.

மரம் அதற்குத் தேவை..

நமக்கு இதுவே தேவை..

மறந்தால் நாம் தான் பேதை..

குளத்தை வெட்டி வை..

மரத்தை நட்டு வை..

நிலத்தை உழுது வை..

தண்ணீரை சேமித்து வை..

பல்லுயிரும் செழிக்க
பசுமை வேண்டும் என்று சொல்லி வை..

பூமித்தாயை குளிர்விக்க
நாம் விதைப்போம் ஒரு செடியை..

நம்மை குளிர்விக்க அந்த செடி மரமாக வளர்ந்து நமக்கு ஆயுளைத் தரும்!!!

20/09/2023

New channel for Sri maharishi pharma

இந்தப் படத்தை புரிந்து கொண்டால் வானம் வசப்படும்.பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள (360 திகிரியையும்) 24 மணி நேரம் ஆகும். ...
09/12/2022

இந்தப் படத்தை புரிந்து கொண்டால் வானம் வசப்படும்.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள (360 திகிரியையும்) 24 மணி நேரம் ஆகும். அது போக , பூமியில் இருந்து தான் நாம் அனைத்தையும் பார்க்கிறோம்.

இரவு 12 மணிக்கு கிழக்கு தொடு வானத்தில் எந்த ராசி தெரிகிறதோ அதுதான் பூமியின் இருப்பிடம்.

காலை - 6 மணிக்கு , சூரியன் எந்த ராசியில் தெரியும் என்றால்,march - 22 -ல் பூமியின் இருப்பிடத்தில் இருந்து 90 திகிரி விலகவில் காலை சூரியன் மீனராசியில் தெரியும்.

நாம் தான் சூரியனை சுற்றி வருகிறோம் . சூரியன் இப்பொழுது தென் செலவு முடித்து வடசெலவு ஆரம்பித்து விட்டது. அது விருச்சிக ராசிக்கும் , தனுசு ராசிக்கும் இடையில் தெரிகிறது. சோதி இருக்கும் இடம் அறிந்தவர்கள் தான் சோதிடர்கள்...

சூரியன் தான் நம் பூமியை இயக்கி அது எங்கே செல்கிறதோ? அங்கே கூட்டிச் செல்லும். இந்தப் படம் புரிந்தால்தான், சூரியனின் ஓட்டப்பாதையை மார்கழி- 14 - ல் பூமி ஒரு தடவை வெட்டுவதையும், ஆடி - 18 -ல் ஒரு தடவையும் பூமி வெட்டிக் செல்லும். அது தான் கர்ப்போட்ட காலம்.

சக்தி மையத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது 3 இணை சூரியன்களின், காந்த விசையின் Average அந்த புள்ளியில் சக்தி மையமாக இருக்கும். அது வடக்கு நோக்கிய பயணமாக, Galaxy Centre (சிவத்தை) நோக்கி பயணிக்கும்.

சூரியன்கள், கிழக்கு மேற்காக அந்த சக்தி மையத்தை மையமாகக் கொண்டு , 24 திகிரி வடக்கு தெற்கான சாய்வு வட்டப்பாதையில் 26,000 வருடங்களுக்கு ஒரு சுற்றாக சக்தி மையத்தை சுற்றி வரும்.

நம் புவனத்தில் நம் கண்களுக்குத் தெரியும் தனித்தனி விண்மீன் களும், அதனதன் சக்தி மையத்தால் இழக்கப்பட்டு நம்மோடு அதே வேகத்தில் பயணிப்பதால் தான், விண்மீண்கள் நகராதது போல் தெரிவது.

ராகு, கேதுவும் நிலா , பூமியின் சுற்றுப்பாதையில் இரு இடங்களில் வெட்டிச் செல்லும். அது போல பூமி சூரிய சுற்றுப் பாதையை மார்கழி- 14-லும் ஆடிப் 18 -லும் வெட்டிச் செல்லும்.

வணக்கம் நண்பர்களே உங்கள் மகரிஷி பர்மாவில் சுத்தமான பசு நெய் கிடைக்கும்.. உங்கள் அருகாமையில் உள்ள கிளைகளில் பெற்றுக்கொள்ள...
27/04/2022

வணக்கம் நண்பர்களே
உங்கள் மகரிஷி பர்மாவில் சுத்தமான பசு நெய் கிடைக்கும்.. உங்கள் அருகாமையில் உள்ள கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம்..For courier please contact 9965547136

இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் ...
12/03/2022

இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.
இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில தாய் கரையான் அந்த இடத்தில இருந்து புற்று மீண்டும் உடனே கட்ட தொடங்கி விடும்.

இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து விடும்.

சரி நாம விடயத்திற்கு வருவோம்.

ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு . இரண்டு பல்லு பூண்டு.

அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைகிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும்.

நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார்.

நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும்.

மூன்று நாள் போதும்.
மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம்.
வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும்.

தாங்கமுடியாத வலி உள்ளவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும்.

குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில பத்து போடவும்.

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்.(1) வெட்கம் :- (Shyness )ஒரு தொழிலை செய்யும்பொழுதோ, அல்லது ஒரு செயலை செய்யும்பொழ...
09/03/2022

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்.

(1) வெட்கம் :- (Shyness )

ஒரு தொழிலை செய்யும்பொழுதோ, அல்லது ஒரு செயலை செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா, அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப்பட்டால்
முன்னேற முடியாது.

(2) பயம் :- (Fear)

இதனை நம்மால் செய்ய முடியுமா, அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது.

(3) தாழ்வுமனப்பான்மை :- (Poorself-image)

அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை, அவர்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே
தாழ்த்திக் கொள்ளல்.

(4) நாளையவாதி :- (Procrastination)

எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப்போட்டுக்கொண்டே செல்லுதல்.

(5) சோம்பல் :- (Lazyness)

சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது.

(6)பிற்போக்கு பழக்க வழக்கம் :- (Negative Habits)

பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்.

(7) எதிர்மறை எண்ணம்:- (negative thoughts)

எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்.
எதிர்மறை எண்ணம், எதிர்மறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தூக்கி எறிய வேண்டும்.

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.ஒருவ...
05/03/2022

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.

பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.

குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.

சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்...

 #அறியாமை...   ஆன்மீகத்தில் நடைபோட ஆரம்பிக்கும்போது,  பலப்படிகளை கடந்தாகவேண்டியுள்ளது.,1 , தான் நல்லவன் என்ற கர்வமும் ஏற...
03/03/2022

#அறியாமை...
ஆன்மீகத்தில் நடைபோட ஆரம்பிக்கும்போது, பலப்படிகளை கடந்தாகவேண்டியுள்ளது.,
1 , தான் நல்லவன் என்ற கர்வமும் ஏற்ப்படும்.
2, தன் வழிபாடு மட்டுமே உயர்ந்தது என்ற கர்வம்.
3, தன் அனுபவம் மட்டுமே உண்மை என்ற கர்வம்.
இப்படிப்பலப்பல,
ஆன்மீக வழிபாடு உள்ளதால் தான்மட்டும் நல்லவர் என்ற இறுமாப்பை த்தாண்டி வரவேண்டும்.
பிற உயிர்கள் துயரடையாதவழியில் வாழ்வதும், உயிர்கள் துயர்துடைத்து வாழ்வதும் ஆறு கால வழிபாட்டைவிடவும் ஆழ்நிலை தியானத்தைவிடவும் உயர்ந்த இறைநிலையாகும்.
உயர்ந்தவழிபாடு என்பது கடவுளை உணந்தநிலையாகும் வழிபாடேயாகும். இங்கு சிலர் உயர்ந்தவழிபாடு செய்கிறேன் என்று பிற உயிர்களை காயப்படுத்துகின்றனர்.
வள்ளலார் மாமிச உணவு உண்பவரை கண்டால் அவசரமாக விலகிவிடு என்றார்.
உங்களிடம் அப்புறமாக பேசுகிறேன் என்று லாவகமாக விலகாமல் சிலபேர், மாமிசம் உண்பேன் என்றவுடன் உரையை நிறுத்திவிட்டு விலகுவார்.
உரையாடிக்கொண்டிருந்தவர் துயறுரும்வண்ணம். அவருள் இருப்பதும் இறைதானே...
இறைத்தேடலில் வாய்க்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் வாய்க்கும். இதில் வீணராவர் பலர்.
ஆத்மசாதனைகள், வழிபாடுகள் பயில்கையில், அருகிலுள்ள தெய்வங்களோ, துஷ்ட ஆத்மாவோ, தேவர்களோ, ருஷிகளோ, முனிவர்களோ, பக்த ஆத்மாவோ இதுபோன்ற கண்காணா சக்திகள் நம்மிடம் இணைந்துகொள்ளும்.
இந்த துணையே நம் ஆத்மீக வாழ்வின் வளர்ச்சிக்கு முக்கியகாரணம். இதில்தான் பலர் ஏமாந்து மத தீவிரவாதியாகின்றனர், போலிமதவாதியாகவும் வாழ்கின்றனர்.
தீய சக்திகள் தன்னிடம் கனவிலோ, தியானத்திலோ, மனதிலோ சொல்லுவதை கடவுள் சொல்லுவதாக நம்பி, அறியாமல் அழிகின்றனர்..
ஆரம்பத்தில் எனது துணையாக வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தின் துஷ்ட சக்தியொன்று புகுந்துவிட்டது.
அனுபவமும், குருவுமின்மையால் இதையறியாமல் ,
என்னை தொந்தரவு செய்தவர் அழிவடைவதைப்பார்த்து சிவவழிபாட்டால், அந்த சிவனாலயே அது நிகழ்வதாக எண்ணி காலங்கடத்தினேன்.
ஆனால்
இடியாப்ப சிக்கலில் மாட்டி பலப்பல இன்னலடைந்தேன்
அந்த சிக்கல்களுக்கு தீர்வைத்தேடுகையில் கண்டுகொண்டேன் உண்மையை.
ஆனால் அதற்க்கு பெரும் பொருளும், காலமும் வாழ்வும் வீணாக்கப்பட்டது.
பின்னாளில்,
அவினாசி லிங்கேஷ்வரர் ஆலய தரிசனம் ஞாயிறுதோறும் நடந்தது.
(திருப்பூரில் பணி செய்ததால்.,)
அதனால்,
அவ்வாலயத்தில் தொடர்புடைய முருகரை வழிபட்டு முக்தியடையாது தவறிய , யோகசாதகரின் துணைக்கிட்டியது.
அதற்க்குபிறகே உண்மை ஆன்மீக அறிவு விளங்கியது.
ஏன் , சிவவழிபாடு இலிங்கபூஜையைச்செய்த உயர்ந்த வழிபாடு உண்மையில் நலம்பயக்கவில்லை.
இதற்க்கு சிவனை இகழ்வதே அறியாமை.
உண்மை யில் அறியாமை என்னுடையதே.
நல்வழிபாடு செய்தாலும் , துர்குணத்தால், அத்துர்குணமுள்ள துர்சக்தி துணையானது.
பின்
பட்ட துயரத்தால் நன்மையைநாடியதால் நல் ஆத்மா துணையானது.
நல் தெய்வத்தையோ, உண்மையில் உண்மையான கடவுளைவணங்கினாலும் நல்ல பக்குவமின்மையால் கடவுளே வந்தாலும் முக்தியில்லை துர் நடத்தையாளர்க்கும், துர்மனத்தார்க்கும்.
சாதாரண பேய்களை வழிபடினும் முக்தியடைவர் பண்பட்ட அறிவுடன் வாழும் நன்மனத்தர்.

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்துவந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தைய...
03/03/2022

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து
வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே
சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை
மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று
வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்
மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின
உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.
உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்
மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.
இல்லாவிடில் நான் நீண்ட காலம்
ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது
துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்
சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு
இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்
தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √

படித்ததில் மனதே கலங்கிய பதிவு

 #நம்_உடலைப்_பற்றி_அறிவோம்...பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்க...
23/02/2022

#நம்_உடலைப்_பற்றி_அறிவோம்...

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள் :-

1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.

3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

5. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.

6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.

தசை :-

1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கால்கள் :-

1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.

2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள் :-

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தியுண்டு.

மூளை :-

1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

இறப்பு :-

மனிதன் உயிரிழந்தப் பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்
மூளை- 10 நிமிடங்கள்
கால்கள்- 4 மணிநேரம்
தசைகள்- 5 நாட்கள்
இதயம்- சில நிமிடங்கள் √

Address

Chennai
613714

Telephone

+919842447528

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மகரிஷி சித்த மருத்துவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram