04/10/2025
குலதெய்வ சாபத்தால், குலதெய்வ தோஷத்தால் பிரச்சனைகள்
ஜாதகத்தில்
"(1,7,9)" இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் "சுக்கிரன்" இருப்பவர்களுக்கு குலதெய்வ சாபத்தால், குலதெய்வ தோஷத்தால் எந்த மாதிரி பிரச்சனைகள் ஏமாற்றங்கள் கஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படும் என்பது இந்த பதிவில் மிக தெளிவாக.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋சுக்கிரன் ஜாதகத்தில் எந்த எந்த பாவத்தில் இருந்தால் குலதெய்வ சாபம்,குலதெய்வ தோஷம் இருக்கும்.
♦கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் 7ம் பாவம் தான் குலதெய்வ சாபம் குலதெய்வ தோஷத்தை கொடுக்கக்கூடிய பாவமாகும்.அதன் அடிப்படையில் கால புருஷனுக்கு துலாம் என்ற பாவம் ஏழாம் பாவமாக வரும்.
♦துலாம் என்ற பாவத்திற்கு அதிபதி சுக்கிர பகவான் ஆவார் எனவே சுக்கிரன் தான் குலதெய்வ தோஷத்தை குலதெய்வ சாபத்தை கொடுக்கக்கூடிய கிரகமாகும்.
எனவே யாருடைய ஜாதகத்தில்
லக்னத்தில் சுக்கிரன் இருந்தாலும் சரி அல்லது லக்னாதிபதியுடன் சுக்கிரன் பகவான் சேர்ந்திருந்தாலும் சரி,அதேபோன்று லக்கனத்தில் இருந்து 7ம் பாவம் அல்லது 9ம் பாவம் இந்த இரண்டு பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் சுக்கிரன் இருந்தாலும் சரி அவர்களுக்கு இது பொருந்தும்.
♦கண்டிப்பாக இவர்கள் பிறப்பதற்கு முன்பு இவர்களின் தந்தை அல்லது இவர்கள் பரம்பரையில் இருந்தவர்கள் உண்மையான குல தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை விட்டிருப்பார்கள்.அல்லது சில காலங்கள் குலதெய்வ கோயிலுக்கு போகாமல் இருந்திருப்பார்கள்
♦இவர்கள் குலதெய்வம் என்று நினைத்துக் கொண்டு ஏற்றுக்கொண்டு ஒரு தெய்வத்தை வணங்கி கொண்டிருப்பார்கள்.
ஆனால் அது இவர்களின் உண்மையான குலதெய்வமாக இருக்காது இவர்கள் முன்னோர்களின் உண்மையான பூர்வீகம் வேறு ஒரு ஊராக இருக்கலாம்.இவர்கள் பூர்வீகத்தை விட்டு விட்டு வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம்.
இல்லையென்றால் இவர்கள் கடந்த காலங்களில் உண்மையான குலதெய்வத்தை தேடி கண்டுபிடித்து வழிபாடு செய்து கொண்டிருக்கலாம்.
♦இல்லையென்றால் இவர்கள் வெறும் 2,3,4 தலைமுறைகள் மட்டுமே ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி கொண்டிருப்பார்கள் ஆனால் அது இவர்களுக்கு குலதெய்வமாக வராது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋குலதெய்வ ஆசீர்வாதம் இல்லாதவர்களின் வாழ்க்கையில் எந்த மாதிரி பிரச்சினைகள் ஏமாற்றங்கள் ஏற்படும்.
♦யாருக்கெல்லாம் குலதெய்வ ஆசீர்வாதம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை உறவினர்கள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் சமூகத்தின் மூலமாகவும் எந்த ஒரு உதவிகளும் பயன்களும் அனுசரிப்பும் நன்மைகளும் ஆதாயங்களும் பயன்களும் இவர்களுக்கு இருக்காது.
♦உறவினர்களால் சொந்தங்களால் இவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது.
இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் என்று வந்தால் இவர்களுக்கு உதவி செய்ய உறவுகள் சொந்தங்கள் யாருமே முன்வர மாட்டார்கள்
எல்லா உறவினர்கள் சொந்தங்கள் இருந்தும் இவர்கள் இல்லாதது போன்று இருப்பார்கள்.உறவினர்கள் சொந்தங்களுடன் இவர்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள்.
பேச்சுவார்த்தை இல்லாமல் தனித் தனியாகத்தான் இருப்பார்கள்.
♦அதேபோன்று குலதெய்வ ஆசிர்வாதம் விட்டுப்போனவர்களுக்கு மன உளைச்சல்கள் மன வேதனைகள் மன குழப்பங்கள் மனஸ்தாபங்கள் இதுபோன்ற பிரச்சனைகள் மிக மிக அதிகமாக இருக்கும்.இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வளர்ச்சி என்பது இவர்களுக்கு அவ்வளவாக இருக்காது தொழில் சார்ந்த பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும் தொழிலில் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் இவர்களுக்கு வரும்.
♦சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்கள் அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது இவர்கள் கையில் பணம் தங்காது நிற்காது.குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு சந்தோசம் நிம்மதி அவ்வளவாக இருக்காது.
♦அதேபோன்று குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அதனால் இவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது.இவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது இவர்களுக்கு பலிக்காது.
உண்மையான குலதெய்வத்தை வணங்கினால் மட்டும் தான் இவர்களுக்கு மற்ற கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋குலதெய்வத்திற்கு தகுந்தவாறு ஏதாவது பரிகாரங்கள் இருக்கின்றதா
பரிகாரத்தை பொறுத்தவரைக்கும்
♦இரண்டு விதமான பரிகாரங்கள் இருக்கின்றன ஒன்று ஆண்மிக பரிகாரம் மற்றொன்று வாழ்வியல் பரிகாரம்.ஆனால் குல தெய்வ சாபத்திற்கு வாழ்வில் பரிகாரங்கள் தான் வேலை செய்யும் ஆண்மிக பரிகாரம் அவ்வளவாக வேலை செய்யாது.
♦வாழ்வியல் பரிகாரங்கள் என்பது நம்முடைய ஜாதகப்படி எந்த மாதிரி செயல்கள் நாம் செய்கின்றோமோ அதன் மூலம் வரக்கூடிய நன்மைகளால் வரக்கூடிய பரிகாரமாகும்.அது தொழில் பரிகாரமாக இருக்கலாம் அல்லது நாம் செய்யக்கூடிய செயல் மூலம் வரக்கூடிய பரிகாரமாக இருக்கலாம்.
♦நம்முடைய ஜாதகப்படி நாம் எந்த மாதிரி நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமோ அதனை செய்து அதன் மூலம் வரக்கூடிய நன்மைகள் தான் வாழ்வில் பரிகாரமாகும்.
எல்லோருக்கும் ஒரே விதமான வாழ்வியல் பரிகாரங்கள் வராது ஒவ்வொரு ஜாதகத்துக்கு தகுந்தவாறு அவர்களுக்கு இந்த பரிகாரங்கள் மாறுபடும் வேறுபடும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாருடைய ஜாதகத்தில் எல்லாம் "(1,7,9)" இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் சுக்கிர பகவான் இருக்கின்றதோ அவர்கள் இந்த பதிவில் நான் சொல்லியிருப்பதை உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கும்.
🌹ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை நீங்கள் பொருத்திப் பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்.
இந்த சூட்சமத்தை லக்னத்தில் இருந்து தான் பொருத்திப் பார்க்க வேண்டும் ராசியிலிருந்து பொருத்திப் பார்க்கக் கூடாது.
whatsapp number தொடர்பு 7904452427.
ஜோதிட ஆச்சாரியா சூரியகுமார்(BA,MA,MPhil, PhD in astrology )