நம்மாழ்வாரின் வழியில்

  • Home
  • India
  • Chennai
  • நம்மாழ்வாரின் வழியில்

நம்மாழ்வாரின் வழியில் நம்மாழ்வார் ஐயா கண்ட கனவின் ஒரு விதை
(440)

உழவர்களின் நெஞ்சில் என்றும் நிலைக்கும் பெயர் –நல்லகண்ணு ஐயா.நிலத்திற்காக, நீரிற்காக, நெல்வயல்களின் உரிமைக்காக,அரசின் கதவ...
25/02/2026

உழவர்களின் நெஞ்சில் என்றும் நிலைக்கும் பெயர் –
நல்லகண்ணு ஐயா.
நிலத்திற்காக, நீரிற்காக, நெல்வயல்களின் உரிமைக்காக,
அரசின் கதவுகள் முன் பலமுறை குரல் கொடுத்தவர்.
உழவர் வாழ வேண்டும் என்றால் நாடு வாழும் என்ற உண்மையை வாழ்நாளெல்லாம் போராட்டங்களால் நிரூபித்தவர்.
ஆற்றைக் காக்கவும், மணலை காக்கவும்,
விவசாயியின் வியர்வை மதிக்கவும்
தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் வழியாக தடம் மாறாமல் போராட்டம் ஒன்றே தீர்வு என்கிற மன உறுதியோடு உழவர்களுக்காக உண்மையாய் நின்று அறத்தின் வழியே அரசியல் செய்த பாமரர்

ஆனால் அவர் விதைத்த விதைகள்
ஒவ்வொரு உழவர் மனதிலும்
என்றும் முளைத்துக் கொண்டே இருக்கும்.
போராளி தோழருக்கு எங்கள் செம்மையான வீர வணக்கம்.
உழவர் விடுதலைக்கான உங்கள் பாதையை நாங்கள் தொடர்வோம்.
— நம்மாழ்வார் வழியில் 🌾

திராவிட தலைவன் எவ்வழியோ தளபதிகளும் அவ்வழி. திராவிட மாடல் அரசின் இதுவும் ஒரு சாதனை.அதிகார திமிரில் இயற்கையின் மீதும் மக்க...
31/01/2026

திராவிட தலைவன் எவ்வழியோ தளபதிகளும் அவ்வழி. திராவிட மாடல் அரசின் இதுவும் ஒரு சாதனை.அதிகார திமிரில் இயற்கையின் மீதும் மக்களின் மீதும் இவர்கள் நிகழ்த்தப்படும் அனைத்து அநீதிகளுக்கும் மிச்சம் இல்லாமல் இயற்கை திருப்பி பேரழிவை தரும்.

மண் • உழவன் • தமிழ்இதுவே நம் வாழ்வியல்
13/01/2026

மண் • உழவன் • தமிழ்
இதுவே நம் வாழ்வியல்

🌿 இந்திய சூழலியல் இயக்கம் இழந்த ஒரு நேர்மையான குரல்.பேராசிரியர் மாதவ் காட்கில் – நினைவஞ்சலிமேற்குத் தொடர்ச்சி மலைகளை வெற...
08/01/2026

🌿 இந்திய சூழலியல் இயக்கம் இழந்த ஒரு நேர்மையான குரல்.

பேராசிரியர் மாதவ் காட்கில் – நினைவஞ்சலி

மேற்குத் தொடர்ச்சி மலைகளை வெறும்
“வள ஆதாரம்” அல்ல, உயிர்களின் கூட்டுக் குடும்பம் எனப் பார்த்த ஒரு அறிவியலாளர் இன்று நம்மிடமிருந்து இயற்கையுடன் கலந்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையின்
🌱 அரிய தாவரங்கள்
🦋 அபாய நிலையில் உள்ள விலங்குகள்
💧 ஆறுகள், நீர்வளங்கள்
👨‍👩‍👧‍👦 அங்கு வாழும் பூர்வீக மக்கள்
— இவை அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதை அறிவியல் மொழியில் மட்டுமல்ல, மக்கள் மொழியிலும் விளக்கியவர் பேராசிரியர் மாதவ் காட்கில்.
வயது மூப்பு காரணமாக
புனேவில் நேற்று ( 07-01-2026)
இயற்கை எய்தினார்.

🌏 காட்கில் அறிக்கை – ஒரு துணிச்சலான அறிவியல் ஆவணம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை
சூழலியல் உணர்திறன் மண்டலங்களாக (Ecologically Sensitive Zones) பிரித்து பாதுகாக்க வேண்டும் என்ற அவரது பரிந்துரைகள், அரசியல் வசதிக்கும், கார்ப்பரேட் அழுத்தங்களுக்கும் வளைந்து கொடுக்காத
அறிவியல் நேர்மையின் சாட்சி ஆக இருந்தது.
அவரின் பணிகள்: இயற்கை பாதுகாப்பில் மக்கள் பங்கேற்பு அவசியம் என்பதை வலியுறுத்தல்
வளர்ச்சி ≠ அழிவு என்ற புரிதலை உருவாக்க முயற்சி
பூர்வீக மக்களின் அறிவையும் (Traditional Knowledge) அறிவியலுடன் இணைத்தல்
மலை, காடு, ஆறு – இவை பொருளல்ல, உயிர் என்ற நிலைப்பாடு

🌾 நம்மாழ்வார் வழியில்…
“இயற்கையை காப்பது என்பது மனிதனை காப்பதே”
என்ற நம்மாழ்வார் ஐயாவின் சிந்தனைக்கு
அறிவியல் அடித்தளம் அமைத்தவர்களில்
பேராசிரியர் காட்கில் முக்கியமானவர்.
அவரது மறைவு இந்திய சூழலியல் பாதுகாப்புக்கு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கும்,
சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மற்றும் அவரது நண்பர்கள். அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கு தொடர்ச்சி மலைகள் நினைவில் வைத்திருக்கும்…
ஆறுகள் பேசிக் கொண்டே இருக்கும்…
உங்கள் குரல் மௌனமாகாது, ஐயா. ✊🏽

இன்றைய நவீன அவசரகதியிலான வாழ்வில், இயற்கையோடான தொடர்பை நாம் முற்றிலும் துண்டித்து மரத்துப்போனவர்களாக மாறியிருக்கிறோம். ந...
31/12/2025

இன்றைய நவீன அவசரகதியிலான வாழ்வில், இயற்கையோடான தொடர்பை நாம் முற்றிலும் துண்டித்து மரத்துப்போனவர்களாக மாறியிருக்கிறோம். நம்முடைய ஓட்டத்தில், நின்று நிதானித்து இதமான தென்றல் காற்றின் தொடுதலை உணரவோ ஒரு பட்டாம்பூச்சியை இரசிக்கவோ நேரமற்றவர்களாக மாறியிருக்கிறோம். இயற்கையிடமிருந்து வேரறுக்கப்பட்ட இந்த அந்நியமான இந்த நிலையே நம் ஒரே வாழிடமான பூமியின் நலனைப் புறக்கணித்துக் கடப்பவர்களாக நம்மை மாற்றியிருக்கிறது. இந்த நச்சு சூழலிலிருந்து சில மணி நேர விடுபடுதலை அனுபவிக்க உங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு எங்களோடு இணையுங்கள்.

நீங்கள் ஒரு அனுபவமுள்ள பறவையாளராக இருந்தாலும் அல்லது இப்போதுதான் தொடங்கினாலும், இந்த பறவை அவதானித்தல் , உங்களை பறவைகளின் அற்புதமான உலகத்திற்கும் , நம்மைச் சுற்றியுள்ள இயற்கை உலகத்திற்கும் கூட்டிச்செல்ல வழிவகுக்கும். பறவைகளைக் கவனிக்கும் எளிய செயல் மகிழ்ச்சி, அறிவு மற்றும் புவியோடு பிணைக்கப்பட்ட நம் வாழ்வைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த பறவை அவதானித்தல்உங்களுக்கு நிச்சயம் உதவும்.

அறிவுறுத்தல்கள் / Instructions:

தண்ணீர் கொண்டு வரவும் / Bring your own water bottles

இருநோக்கிகள் மற்றும் பறவை காணலுக்கான கையேடுகள் வைத்திருப்பவர்கள் அவற்றைக் கொண்டு வரவும்

காலை உணவு வழங்கப்படும் / Breakfast will be provided

உணவு மற்றும் போக்குவரத்துக்கான செலவு பகிர்ந்துக்கொள்ளப்படும் (தோராயமாக Rs.500)

பிரகாசமான அல்லது வெளிர்நிற ஆடைகளை தவிர்க்கவும் / Avoid bright colour dresses

Upi Id: pysakthi@oksbi

எங்களுடைய வாகனத்தில் இன்றி நேரடியாகவும் இங்கு வந்து சேரலாம். ஆனால், முன்பதிவு அவசியம்.
இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் கீழே இணைப்பில் முன்பதிவு செய்யவும்.

Link:👇🏾
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScL8DSN158f_hd85CxkVGqCF9BwEpiXJ3h3eCrY6DbRG_9A7g/viewform?usp=header

(Link in bio)

23/12/2025

பாரம்பரிய விதை கொள்ளை.

நம்மாழ்வார் ஐயாவின் 12ம் ஆண்டு நினைவேந்தல் #வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் மக்...
22/12/2025

நம்மாழ்வார் ஐயாவின் 12ம் ஆண்டு நினைவேந்தல்
#வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் மக்கள் பங்கேற்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயற்கை வழி வேளாண்மை, விதைகள், மூலிகைகள், சூழலியல், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில் முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்வு நாள் : 01-01-2026
நேரம் : காலை 9.00 – மாலை 3.00
நிகழ்விடம் :
#வானகம் – #நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,
சுருமான்பட்டி, கடவூர், கரூர் – 621311
📍 https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19
சிறப்பு அழைப்பாளர்கள் :
• திரு. #அரியனூர் இரா. ஜெயச்சந்திரன் – “விதையும் வரலாறும்”
• திரு. #அரச்சலூர் செல்வம் – “விதைச் சட்டமும் விவசாயிகளும்”
நிகழ்வுகள் :
• நம்மாழ்வார் நினைவிடத்தில் நினைவஞ்சலி
• பண்ணை பார்வையிடல்
• மரபு கலை நிகழ்ச்சி
• விதை & பண்ணை விளைபொருட்கள் கண்காட்சி
• சிறுதானிய மதிய உணவு
• நம்மாழ்வாரின் புத்தகங்கள் & இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை
தொடர்புக்கு :
📞 86680 98495 | 93855 92292 | 86680 98492
📱 WhatsApp : 94458 79292
நன்கொடை விவரம் :
Ecological Foundation
A/C No : 137101000008277
IFSC : IOBA0001371
Bank : Indian Overseas Bank, Kadavoor Branch
நன்கொடை விவரம் தெரிவிக்க :
📱 WhatsApp : +91 94458 79292
📧 info@vanagam.org
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
🔗 https://vanagam.org
🔗 https://vanagam.page.link/app
நன்றி.

🌱  #வானகம் நடத்தும்ஒரு நாள் இயற்கை வழி காளான் வளர்ப்பு பயிற்சி📅 நாள்: 21-12-2025 (ஞாயிறு)⏰ நேரம்: காலை 10.00 – மாலை 5.00...
15/12/2025

🌱 #வானகம் நடத்தும்

ஒரு நாள் இயற்கை வழி காளான் வளர்ப்பு பயிற்சி

📅 நாள்: 21-12-2025 (ஞாயிறு)
⏰ நேரம்: காலை 10.00 – மாலை 5.00

👨‍🏫 பயிற்றுநர்:
திரு. வெ. லோகநாதன்
(SVK Organic Farm, நம்பியூர், ஈரோடு)

📍 இடம்:
#வானகம் – #நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்,
சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.

💰 பயிற்சி நன்கொடை: ரூ.750/- (திருப்பித் தரப்படாது)
(பணம் செலுத்திய பின் விவரங்களை WhatsApp: +91 94458 79292)

🍽️ மதியம் காளானுடன் கூடிய உணவு வழங்கப்படும்
🎒 பயிற்சி முடிவில் காளான் விதை & உபகரணங்கள் வழங்கப்படும்
👥 30 நபர்களுக்கு மட்டும்

📞 முன்பதிவுக்கு:
+91 8668098495
+91 9385592292
+91 8668098492
+91 9445879292

🔗 மேலும் விவரங்கள்:
vanagam.org | vanagam app

முன்பதிவு அவசியம்.

15/12/2025

கனிமொழி,ஸ்டாலின் சொத்துகள் காக்க… விவசாயம் காவு?

“குழந்தை பிறப்பே சிந்தனையாக மாறிய காலம் – காரணம் தனிநபரா, ஆட்சி அமைப்பா?” 🤔👶
14/12/2025

“குழந்தை பிறப்பே சிந்தனையாக மாறிய காலம் – காரணம் தனிநபரா, ஆட்சி அமைப்பா?” 🤔👶

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | யானை வழித்தடங்கள் :2026 பிப்ரவரிக்குள் அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் ...
13/12/2025

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | யானை வழித்தடங்கள் :
2026 பிப்ரவரிக்குள் அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு 🐘🌿⚖️

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள யானைகளின் பாரம்பரிய நகர்வு வழித்தடங்கள் தொடர்பான இறுதி வரைவை 2026 பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் மாநில அரசு யானை வழித்தடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தவறினால், நீதிமன்றமே அதனை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொகுப்பை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. ஏற்கெனவே அக்டோபர் மாதத்திற்குள் யானை வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை தயாராகி இருக்க வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அந்த காலவரம்பிற்குள் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிப்பதாக பெஞ்ச் குறிப்பிட்டது.

இதனுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில், கோயம்புத்தூரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஏரியில் வேகப் படகுகள் இயக்குதல் மற்றும் ஒலி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சமநிலைக்கும், உயிரினங்களின் இயல்பான வாழ்விடத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த கோயம்புத்தூர் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த ஏரி புத்துயிர் பெற்றதாகவும், மனிதர்களும் வனவிலங்குகளும் இணைந்து ஆரோக்கியமான, அமைதியான மற்றும் இனிமையான சூழலில் வாழும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஒலி மாசுபாடு அல்லது மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பறவைகள் அல்லது வனவிலங்குகளுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படவில்லை என்றும் மாநகராட்சி விளக்கம் அளித்தது.

மேலும், ஏரியின் மேம்பாட்டு பணிகள் மரங்கள் மற்றும் புதர்களால் சூழப்பட்ட தீவுகளை உருவாக்கி, பறவைகளுக்கான கூடு அமைக்கும் இடங்களை அதிகரித்துள்ளதாகவும், மனிதர்களின் இருப்பு பறவைகளின் இயற்கை வாழ்க்கைச் சுழற்சிகளில் தலையிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Address

சத்யா ஹாம்ஸ் எண் 32, G2 சிவாகாமி நகர் 2வது தெரு, சிவகாமி காலனி, அஸ்தினாபுரம், சிட்லபாக்கம்
Chennai
600064

Telephone

+918531848575

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வாரின் வழியில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நம்மாழ்வாரின் வழியில்:

Share