Natural green Saloon at pallikaranai

Natural green Saloon at pallikaranai Think Beauty

07/03/2024
🥳 Natural green salon Summer Offer 🥳 DM for enquiries...
07/03/2024

🥳 Natural green salon Summer Offer 🥳 DM for enquiries...

We are hiring beautician at Natural green salon - dial - 9092157122
29/01/2024

We are hiring beautician at Natural green salon - dial - 9092157122

04/02/2022

என் கையில் இருப்பது சமத்துவமற்ற சமூகத்தை செருப்பால் அடிக்கும் நெருப்பு கவிதை தொகுப்பு..

ஆமா அப்படிதான் சொல்லணும்.. ஒவ்வொரு பக்கமும் நெருப்புதான்..

புத்தகத்தின் பெயர் ``ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...” எழுதியவர் கவிஞர் நடராஜன் பாரதிதாஸ்.

என்னதான் எழுதியிருக்கார் என்று சும்மா புரட்டிப் பார்க்கலாம் என்றுதான் சில கவிதைகளை வாசித்தேன்..

ஒன்றிரண்டு கவிதைகளிலே கவிதை சரக்குள்ளது என்பது புரிந்துபோனதால் புத்தகத்தை வாங்கினேன்..

வீட்டுக்கு வந்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..

ஒவ்வொரு பக்கத்திலிருந்த கவிதை வரிகள் அத்தனையும் ரௌத்திரம் கொண்டதாக இருந்தது.

சில கவிதைகளில் இருந்த வலியும் கேள்வியும் என் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்கி செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.

``இவ்வளவு நேரம் என்ன செரச்சுட்டு இருந்தியா.. ’’

``மயிரப்புடுங்கிட்டு இருந்தியா..”

என்றெல்லாம் நாம் சாதாரணமாக சொல்லிச் செல்லும் வார்த்தைகள் எப்படி ஒரு பிரிவினரை இழிவு படுத்துகிறது என்ற புரிதல் இல்லாமலயே காலம் காலமாக நாம் பயன்படுத்தி வந்திருப்போம்..

அது அத்தனையையும் இந்த புத்தகத்தில் கவிதைகளாக கோபமாக சில இடங்களில் எள்ளலாக.. சில இடங்களில் இரஞ்சலாக என்று அத்தனை உணர்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

``காந்தி அம்பேத்கர் பெரியார் வரிசையில்
எங்கப்பா படத்தை வைத்தேன் கடையில்
உங்கப்பனென்ன
அவ்வளவு பெரிய அப்பாடக்கராயென்று
வந்தவர் கேட்டார்

அவர்கள்
எல்லா உயிரும் சமமென்று
சொல்லிச் சென்றவர்கள்
இவர்
எல்லா மயிரும் சமமென்று
செய்து காட்டியவர் என்றேன். ”

என்ற கவிதையில் ஆரம்பித்து பல கவிதைகள் என்னை ரசிக்க வைத்தது.

அவர்களின் வலி பலருக்கும் புரியாததால்தான் மண்டேலா என்ற படமும் அவர்களை இழிவு படுத்திவிட்டு கடந்து போனது.

பொதுவெளியில் விவாதத்திற்குள்ளாகாத சமூகத்தின் குரல்கள் என பட்டியல் போட்டால் அதில் மருத்துவர் சமூகமும், வண்ணார் சமூகமும் முதன்மையானது.

தொழில் வழி சமூகங்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

ஊருக்கு ஒரு குடும்பம் இருப்பதால் அனைத்துப்பிரிவினராலும் இழிவு படுத்தப்பட்டு வந்தாலும் அவர்கள் அனைவரையும் மன்னித்து
அழகு படுத்தி விடுகிறார்கள் மருத்துவர்கள்.

தமிழ் இனக்குழுக்களில் மருத்துவர் சமூகம் மிக முக்கியமானது..போற்றுதலுக்குரியது.

மருத்துவர் சமூகத்தவர்கள் கை படாமல் முந்தைய தலைமுறை குழந்தைகள் வெளியே வந்ததில்லை.. தமிழர்களின் சித்த மருத்துவத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள்.. சாங்கியம் செய்பவர்கள்..

மருத்துவர் சமூக பெண்கள் பிரசவம் பார்த்தபோது எளிதாக இருந்த சுகப்பிரசவம் இன்று நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளில் அரிதாகிப்போனது..

தினத்தந்தி தினகரன் உட்பட நாளிதழ்கள் வளர்ந்தது மட்டுமல்ல திராவிடம் வளர்ந்ததும் அதிகாரத்தைப் பிடிக்கவும் காரணமானவை சலூன்கடைகள்தான்.

இரண்டு லட்சம் சலூன்கள்.. நாளிதழ்கள் மட்டும் தினமும் ஆறு லட்சம் ரூபாய் அவர்களை வைத்து வருமானம் பார்க்கின்றன.. ஆனால் அவர்களின் உரிமைக்குரல் எங்கும் ஒலிப்பதில்லை.

சலூன் கடைகளில்தான் திராவிட கட்சிகள் வளர்ந்தன..
கூடவே ஒரு தலைமுறைக்கு எழுத்துக் கூட்டி படிக்கும் படிப்பறிவும் வளர்ந்தது..

ஆனால் அவர்கள் அதிகாரம் பெற்றார்களா என்றால்.. பதில் இல்லை என்பதே..
ஊரில் பெரும்பான்மை இல்லாததால் ஒரு வார்டு மெம்பராக கூட முடிவதில்லை.

அதுபோல் இன்று எங்கிருந்தோ யாரோ முதல்போட்டு பார்லர்கள் என்ற பெயரில் காசு பார்க்கும் கார்ப்பரேட் தொழிலாக மாறி வருவது ஒரு புறம் எனில் காலம் காலமாக இதை தொழிலாக செய்து வருபவர்கள் தண்டல்காரனுக்கு வட்டிக் கட்டியே ஓய்ந்து போயிருக்கிறார்கள்..

தங்கள் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய மருத்துவர் சமூகத்தை கவிட்ட திராவிடத்தைப்போல் அல்லாமல் தமிழர் அரசியலை முன்னெடுப்பவர்கள் இந்த சமூகத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கும் முன்னெடுப்பை செய்ய வேண்டும்.. தமிழர்குடிகளின் ஒற்றுமைக்கான முயற்சிகளில் அதுவும் ஒன்றாகும்.

மருத்துவர் சமூகத்துக்கு அரசு துணை நின்றால் அடுத்த தலைமுறையாவது நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள்..

அதற்கான ஒரு கோரிக்கை மனுவாக நடராஜன் பாரதிதாஸ் அவர்களின் கவிதைகளைப் பார்க்கிறேன்..

நிச்சயமாக இந்த கவிதை தொகுப்பு
இலக்கிய உலகில் கவனம் ஈர்க்கும்..
பல விருதுகளை பெறும்..

வாழ்த்துகள் நடராஜன்..
வாழ்க வளமுடன்.

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
3-2-22

(புத்தகம் வாங்கவும் கவிஞர் நடராஜனிடம் பேச விரும்புபவர்களுக்காகவும் அவரது தொடர்பு எண்
+91 89391 88703 )

We are happy to announce, now we have higenic professional home service for all types of Facial, hair cuts, all brand co...
27/04/2021

We are happy to announce, now we have higenic professional home service for all types of Facial, hair cuts, all brand coloring, head massage and detan for male, Female and kids as well., Highly trained profession.,. For booking and queries dial 8124815255 / 9884757938. Thank you for your support.👍

Men's hair style specialist
25/11/2017

Men's hair style specialist

Recently started​ new saloon at pallikaranai
15/07/2017

Recently started​ new saloon at pallikaranai

Natural green Saloon at pallikaranai
15/07/2017

Natural green Saloon at pallikaranai

👨 New Generation like this style 👨
05/08/2016

👨 New Generation like this style 👨

Address

Chennai
600100

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 10pm
Thursday 6am - 10pm
Friday 6am - 10pm
Saturday 6am - 10pm
Sunday 6am - 10pm

Telephone

+919043378752

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural green Saloon at pallikaranai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Natural green Saloon at pallikaranai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram