SLS Medicals

SLS Medicals A Leading Drug Store Estd - in1993. We sell all kind of human & Veterinary medicines, beauty & cosmetics, health & wellness products & baby foods.

12/11/2024
20/10/2019
“Before you treat a man with a condition, know that not all cures can heal all people. For the chemistry that works on o...
25/09/2019

“Before you treat a man with a condition, know that not all cures can heal all people. For the chemistry that works on one patient may not work for the next, because even medicine has its own conditions.”
HAPPY PHARMACIST DAY-25th SEP.

Happy Doctors Day
01/07/2019

Happy Doctors Day

06/11/2018

May the Divine Light of Diwali spread Peace, Prosperity, Happiness & Good Health.
Happy Deepawali!

World Pharmacist Day-25TH Sep.
25/09/2018

World Pharmacist Day-25TH Sep.

21/09/2018

சர்வதேச மருந்தாளுநர் தினம் - செப்டம்பர் 25

பல ஆண்டுகளுக்கு முன் துருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்புப் பேரவையானது, செப்டம்பர் 25-ம் நாளை சர்வதேச மருந்தாளுநர் தினமாக (World Pharmacist Day) அறிவித்தது. உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களுக்குரிய பங்கினை ஊக்கப்படுத்தி, எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பது, மக்கள் ஆரோக்கியத்திற்கு மருந்தாளுநர்கள் வழங்கும் பல நன்மைகளை பிரதிபலிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சமுதாயத்தில் மருந்தாளுநர் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவே மருந்தாளுநர் தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மருந்தாக்கியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட செப்டம்பர் 25 ம் தேதியே மருந்தாளுநர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள செப்டம்பர் 25 ம் தேதியை அங்கிகரித்து இந்திய மருந்தியல் கழகம் கொண்டாடுகிறது
மருத்துவத்தில் மருத்துவருக்கும் , மருந்தாளுநர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு ஏனெனில் மருந்தாளுநர் இல்லையேல் மருந்தியல் இல்லை, மருந்தியல் இல்லையேல் மருத்துவம் இல்லை.

மக்கள் நல வாழ்வில் மருந்தாளுநர்களின் பங்கும் மிக முக்கியமானது. மருத்துவம், மருந்து மற்றும் மருந்தாளுநர் மக்களுக்கு அளித்துவரும் சேவைகள் மிக முக்கியமானது.

இன்றயகாலகட்டத்தில் உணவுக்கு இனையான பங்கு மருந்துக்கும் உள்ளது எனில் மருந்தும் மருந்தாளுநர்களும் பிரிக்கமுடியாத சக்திகளாகவே உணரமுடிகிறது. மருந்தாளுநர்கள் தங்களின் வாழ்வாதாரமே மக்களுக்கு மருந்து அளிப்பதை சேவையாக கொண்டுள்ளதால் எவ்விதத்திலும் புறக்கணிக்கமுடியாத அத்தியாவசியமான பொறுப்பு மருந்தாளுநர்களுடையது.

மருந்தாளுநர்கள் மட்டுமே இருவேறு மருந்து சேர்மானத்தினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ( contra indication ) துல்லியமாக அறிந்து மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துரைக்க முடியும்.

மருந்துகளின் தன்மை, உட்கொள்ளும் விதம், குறிப்பிட்ட மருந்துகளுடன் எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள், மற்றும் மருந்துகள் போன்ற மக்கள் உயிர்காக்ககூடிய தகவல்களை அளிப்பவர்கள் மருந்தாளுநர்கள் மட்டுமே.

மருந்தாளுநர் அல்லாதோர் மருந்து விநியோகம் செய்யும் இடங்களில் கிடைக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்வது தற்கொலைக்கு சமமானது.

மருந்தாளுநர் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பாளராக அமைந்து மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான சேவைசெய்பவர்.

இன்று உலக அளவில் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கயில் மருந்து எடுத்துக்கொள்ளாமல் இறப்போரின் எண்ணிக்கையைவிட தவறான மருந்துசேர்க்கையின் பக்கவிளைவுகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையே அதிகம். அமெரிக்காவில் நடைபெற்ற புள்ளிவிவர ஆய்வின் படி மேற்கணடமுறையில் மருந்துகளை எடுத்துக்கொணட்தால் 4,40000 பேர் இறந்ததாக கணக்கிடப்பட்டது டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2011 ன் ஆய்வின் படி இந்தியாவில் மேற்கண்ட முறையில் 300 க்கு ஒருவர் எனற இறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது.

எனவே மருந்தாளுநர்கள் மட்டுமே மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சரியான மருந்தினை தேவைப்படும் நபருக்கு தேவையான காலத்தில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கும் ஒரே நபர் என்பதை மக்கள் புரிந்துகொண்டு மருந்தாளுநர்களை அணுகி ஆலோசனை பெறுமாறு இந்திய மருந்தாளுநர் சங்கம் வேண்டிக்கொள்கிறது.

Address

25, NORTH MAIN Road, SETHIYATHOPE
Chidambaram
608702

Opening Hours

Monday 8:30am - 9:45pm
Tuesday 8:30am - 9:45pm
Wednesday 8:30am - 9:45pm
Thursday 8:30am - 9:45pm
Friday 8:30am - 9:45pm
Saturday 8:30am - 9:45pm
Sunday 8:30am - 9:45pm

Telephone

04144244222

Website

Alerts

Be the first to know and let us send you an email when SLS Medicals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram