மூன்றாயிரம் ஆண்டு பழமையான "வேலந்தாவளம்"
கோவை-வேளந்தாவளம் (வேளம் - யானை, தவளம் - விற்பனை இடம்) யானை சந்தைகளை குறிப்பதாகும் மாவூதம்பதி ( மாவூத் - யானை பாகன் , பதி - வசிப்பிடம் ) யானை வளர்ப்பவர்கள் வசிப்பிடமாக இருந்திருக்கிறது.
அங்குள்ள கொப்பம் எனும் குழிகளை வெட்டி யானைகளை பிடித்திருகின்றனர் என்பதற்கு சான்றுகளும் உள்ளன. டாப்ஸ்லிப்பிலும் கொப்பங்கள் உள்ளன. சாதாரணமாக சுற்றித்திரியும் யானைகளை மனிதர்கள
் கட்டுப்படுத்தி வாழ்ந்திருக்கின்றனர் என்பற்கு சான்றாகவே குமிட்டிபதி பாறை ஓவியங்கள் உள்ளன.
தெற்கே உள்ள ஆனைமலைக்கு வடக்கே உள்ள கோவை வடக்கு பகுதிகளுக்கு இடையேயான பாலக்காடு கணவாய் என்பது தமிழக-கேரள யானைகள் வழித்தடமாக இருந்திருக்கிறது. யானைகளை விற்கும் இடமாகவும் பழக்கப்படுத்தும் இடமாகவும் இந்த இடம் இருந்திருக்கிறது.அந்த வரலாற்று தொடர்பே இன்று வரை யானைகள் ஊடுருவவும் பகுதியாகவும். யானைகளின் அந்த வழித்தடங்கள் தான் இப்போது விளை நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாறியுள்ளது.
வன ஆக்ரமிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் தான் தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் ஊடுருவுவது அதிகரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை உருவாக்கிய யானை ஒன்றை பிடித்து கும்கியாக மாற்றும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது.
யானைகளால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படும் பகுதிகளான கோவையின் தென்மேற்கு பகுதிகள் ஒரு காலத்தில் யானைகளின் வழித்தடமாக இருந்தது என்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஓவியம் ஒன்று தற்போதும் கோவையில் காணக்கிடைக்கிறது.
கோவை தென்மேற்கு பகுதியில் வேளந்தாவளம் அருகில் குமிட்டிபதி கிராம பகுதியில் உள்ள பதிமலை என்னும் பாறைக்குன்று உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலை ஒட்டி அமைந்துள்ள இந்த குன்று பல குகைகளை கொண்டது. அதில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.