Lalpet HealthCare Center - லால்பேட்டை சுகாதார மையம்

  • Home
  • India
  • Cuddalore
  • Lalpet HealthCare Center - லால்பேட்டை சுகாதார மையம்

Lalpet HealthCare Center - லால்பேட்டை சுகாதார மையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lalpet HealthCare Center - லால்பேட்டை சுகாதார மையம், Medical and health, 34A/31, SCHOOL Street, LALPET, KATTUMANNAR KOIL TALUK, Cuddalore.

பிஸ்மில்லாஹ் ஹி்ர்ரஹ்மான் நிர்ரஹீம் லால்பேட்டை ஹெல்த்கேர் வளாகத்தின் முன்பு இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தினத்தை ம...
26/01/2024

பிஸ்மில்லாஹ் ஹி்ர்ரஹ்மான் நிர்ரஹீம்

லால்பேட்டை ஹெல்த்கேர் வளாகத்தின் முன்பு இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியேற்று நிகழ்வு நடைபெற்று

அதுசமயம் ,லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் உறுப்பினர்
M_உஜைர்_அஹ்மது தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில், மருத்துவ அறக்கட்டளையின் உறுப்பினர்கள், ஜமாத் உறுப்பினர்கள், மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

அழைப்பினை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் நிர்வாகிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

-தலைவர் மற்றும் நிர்வாகிகள்

காய்ச்சால் தானே…? என்ற அலட்சியம் எப்போதும் வேண்டாம்..! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு பரவல் இருப்பதாக செய்திகள் வ...
21/09/2023

காய்ச்சால் தானே…? என்ற அலட்சியம் எப்போதும் வேண்டாம்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு பரவல் இருப்பதாக செய்திகள் வாயிலாக தினம்தோறும் பார்த்து வருகிறோம். அதனால் அரசின் அறிவுறுத்தல்களின் படி எச்சரிக்கையாகவும்…பாதுக்காப்பாவும் இருந்திடுவோம்.

என்றும் உங்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்களாக..
#லால்பேட்டை_சுகாதார_மையம்

தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால் டெங்கு குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.என்றும் உங்கள் நல...
17/09/2023

தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால் டெங்கு குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

என்றும் உங்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்களாக
#லால்பேட்டை_சுகாதார_மையம்

படம் மற்றும் தகவல்: BBC News தமிழ்

அன்புக்குறியவர்களே….!! நோயின் தன்மைகேற்ப உங்களின் சிகிச்சையையும்…மருந்துகளையும் அலட்சியமில்லாமல் மருத்துவர் பரிந்துரைத்த...
15/09/2023

அன்புக்குறியவர்களே….!!

நோயின் தன்மைகேற்ப உங்களின் சிகிச்சையையும்…மருந்துகளையும் அலட்சியமில்லாமல் மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முழுவதும் எடுத்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக..
#லால்பேட்டை_சுகாதார_மையம்

அன்புக்குறியவர்களே….!! ஒரிரு நாட்களுக்கு மேல்…காய்ச்சல் இருந்தால்…உங்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று தக...
14/09/2023

அன்புக்குறியவர்களே….!!

ஒரிரு நாட்களுக்கு மேல்…காய்ச்சல் இருந்தால்…உங்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று தகுந்த பரிசோதனைகளையும் சிகிச்சையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாய் இருக்க முயற்சிப்போம்.

என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக..
லால்பேட்டை சுகாதார மையம்

அன்புக்குறியவர்களே…!! நமது  #லால்பேட்டை_சுகாதார_மைய மருத்துவமனைக்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை, 25 வருட அ...
12/09/2023

அன்புக்குறியவர்களே…!!

நமது #லால்பேட்டை_சுகாதார_மைய மருத்துவமனைக்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை, 25 வருட அனுபவமிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் Dr. S. ஜீவரத்தினம் MBBS., DA., அவர்கள் வருகை தந்து சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறார்.

என்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக…
லால்பேட்டை சுகாதார மையம்
Lalpet HealthCare Centre

76 வது சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் சிறப்புடன் நடைபெற்றது..! நமது லால்பேட்டை சுகாதார மைய வளாகத்தில் 76வது சுதந்திர...
15/08/2023

76 வது சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் சிறப்புடன் நடைபெற்றது..!

நமது லால்பேட்டை சுகாதார மைய வளாகத்தில் 76வது சுதந்திர தின விழாவில், லால்பேட்டை மருத்தவ அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் முஹம்மது பஷீர் பாய் அவர்கள் கொடியேற்ற அறக்கட்டளையின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் , ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குடியரசு தின விழா:-லால்பேட்டை ஹெல்த்கேர்  வளாகத்தில், இந்திய திருநாட்டின் 74 ஆவது குடியரசு தின கொடியேற்று நிகழ்வு சிறப்ப...
26/01/2023

குடியரசு தின விழா:-

லால்பேட்டை ஹெல்த்கேர் வளாகத்தில், இந்திய திருநாட்டின் 74 ஆவது குடியரசு தின கொடியேற்று நிகழ்வு சிறப்புற நடைபெற்றது

நிகழ்வில், லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக உறுப்பினர் அப்துல் ஹாதி பாய் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்கள். உடன், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஜமாத் நிர்வாகிகள், மருத்துவமனை மருத்தவர்கள் & ஊழியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 #ஜகாத்_பெற_தகுதியுடைய_எளிய_மக்களின்_குழந்தைகளுக்கான_இலவச_கத்னா_முகாம்.ஜகாத் பெற தகுதியுடைய எளிய மக்களின் குழந்தைகளுக்கு...
09/01/2023

#ஜகாத்_பெற_தகுதியுடைய_எளிய_மக்களின்_குழந்தைகளுக்கான_இலவச_கத்னா_முகாம்.

ஜகாத் பெற தகுதியுடைய எளிய மக்களின் குழந்தைகளுக்கு கத்னா முகாம் நமது லால்பேட்டை ஹெல்த்கேர் சென்டரில் நடைபெற இருக்கிறது. தகுதிடைய நபர்கள் நமது மருத்துவமனை வளாகத்தில் 10,11,12- 01-2023 ஆகிய தேதிகளில் பதிவிட்டு பயன்பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

குறிப்பு: இலவச கத்னா முகாமிற்கான தேதி பின்னர் அறிவிக்கபடும்

 #லால்பேட்டை_மருத்துவ_அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் ( )  இணைந்து நடத்திய  இலவச எலும்பு  மூட்...
23/11/2022

#லால்பேட்டை_மருத்துவ_அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் ( ) இணைந்து நடத்திய இலவச எலும்பு மூட்டு நோய் பரிசோதனை முகாமில் சுமார் 230 க்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்!!

புகழ் அனைத்தும் இறைவனுக்கே..!!

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாம் வல்ல ரஹ்மானின் நாட்டத்தால், இன்று 23-11-2022 காலை 9:00 முதல் மதியம் 2:00 மணிவரை, லால்பேட்டை சுகாதார மையம் (LALPET HEALTHCARE CENTRE) வளாகத்தில் இலவச எலும்பு மூட்டு நோய் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது,

இதில் எலும்பு மூட்டு நோய் சம்பந்தமான மூட்டு வியாதிகள், எலும்பு கட்டிகள்,இடுப்பு தேய்மானம், எலும்பு முறிவுகள், கை கால் ஊனம்,மூட்டு தேய்மானம் ஆகிய பரிசோதனைகளை பொதுமக்களுக்காக இலவசமாக மேற்கொண்டார்கள்.

இதில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து 230 க்கும் அதிகமான பயனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். இதில் 62 பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்,அனைவருக்கும் கட்டணம் இல்லா மருத்துவ பரிசோதனையும், கட்டணம் இல்லா ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட சிறப்பு மருத்துவர்கள், லால்பேட்டை சுகாதார மையம் (LHC) மருத்துவர்கள்,ஊழியர்கள் மற்றும் இந்த ஏற்பாட்டை சிறப்பாக முன்னின்று நடத்திய லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் , அனைத்து வெளிநாடு வாழ் லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் அனைவருக்கும் மருத்துவ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

என்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக…
#லால்பேட்டை_மருத்துவ_அறக்கட்டளை

அன்புக்குறியவர்களே…!! லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி PIMS இணைந்து நடத்தும்  ும்பு_மூட்டு_நோய்_சிறப்...
22/11/2022

அன்புக்குறியவர்களே…!!

லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி PIMS இணைந்து நடத்தும் ும்பு_மூட்டு_நோய்_சிறப்பு_முகாம்.!

நாளை (புதன்கிழமை) 23-11-2022 காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை….நமது #லால்பேட்டை_சுகாதார_மைய வளாகத்தில்..

#பாண்டிச்சேரி_PIMS சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து எலும்பு மூட்டு நோய் சம்பந்தமான நோய்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் வழங்குகிறார்கள்.

Address

34A/31, SCHOOL Street, LALPET, KATTUMANNAR KOIL TALUK
Cuddalore
608303

Telephone

04144 - 268006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalpet HealthCare Center - லால்பேட்டை சுகாதார மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram