20/06/2025
இந்தியாவிலிருந்து வந்த ஒரு பண்டைய நடைமுறையான யோகா, இப்போது சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. இது உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் உதவுகிறது, இது ஒரு முழுமையான உடற்பயிற்சி வடிவமாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள மக்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் நன்மைகளை அங்கீகரிக்க சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த உலகில் உள்ள ஒரு செல் உயிரினம் முதல், ஆறறிவு படைத்த மனித இனம் வரை, அனைவரின் வாழ்க்கைக்கும், தேவையானது காற்று! உயிரினங்கள் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜன் காற்று நிரம்பிய ஒரே கோளாக பூமி உள்ளது. அதன் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் போனதால்தான் பலரும் இயற்கையாக கிடைக்கும் ஆக்சிஜனை உதாசீனம் செய்கிறோம்.
யோகா என்பது உங்கள் உடல் மற்றும் உங்கள் சுவாசம் இரண்டிலும் கவனம் செலுத்தும் ஒரு வகையான உடற்பயிற்சி. யோகா அமர்வு முடிந்ததும் பயன்படுத்த ஒரு கருவியாக இதை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றுவது சுவாசக் கூறுதான்.
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!" என்று மனித உடலைப்பற்றி பாடினார், பட்டினத்தார். அது தத்துவம்! ஆயினும், உண்மையும் அதுதானே! "உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" என்றார், திருமூலர். உள்ளத்தில் உள்ள உற்சாகம், முகத்தில் உள்ள பொலிவு, உடலில் உள்ள வலிமை, இவை அனைத்துக்கும் காரணம், நாம் சுவாசிக்கும் காற்றுதான்.
தினமும் நாம் சாப்பிட்டாலும், இல்லையென்றாலும், தண்ணீர்தாகம் எடுத்து நீர் பருக முடியாமல் இருந்தாலும், நாம் மூச்சுவிடுவதையும், சுவாசிப்பதையும், செய்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனால் அந்த சுவாசத்தை நாம் சரியாக விடுகிறோமோ என்று நிறைய பேருக்கு தெரியாது. நம்முடைய சுவாசம் சரியாக இருந்தால் வாழ்க்கையில் சகலமும் சரியாக இருக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.
நம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டுதான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின்வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டைவழியே, நுரையீரலை சென்றடைகிறது. நுரையீரலே, உள்ளேவரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப்பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்தபின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே, வெளியேற்றும்!. நுரையீரலின் பைகளில் உள்ள காற்று, இரத்தக்குழாய்களின் வழியே, உடலில் பரவும், இதன்மூலம் காற்றிலுள்ள பிராணவாயு எனும் ஆக்சிஜன், செல்களில் சேமிக்கப்பட்டு, உடலின் இயக்கத்தில் வெளியாகும் கார்பன், மூச்சுக்காற்றின் வழியே, வெளியேற்றப்படுகிறது. நாம் மூச்சு விடுவதன் அர்த்தம் செயல்பாடு இதுதான்.
மூச்சு எண்ணிக்கை குறையக்குறைய, ஆரோக்கியம் கூடும் என்பது சித்தர்கள் வாக்கும். நாம் எதையும் நிதானமாக யோசித்து செய்தால் செயல்கள் வெற்றியடையும். அதை போலத்தான் நம்முடைய சுவாசமும் இருக்க வேண்டும். மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கை, ஒரு நிமிடத்துக்கு சராசரியாக பதினைந்து என்ற அளவில் இருந்தால், நூறு ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர். நிமிடத்திற்கு பதினெட்டு முதல் இருபது என்ற அளவில் சுவாசித்தால், எழுபது ஆண்டுகள் முதல் எண்பது ஆண்டுகள் வரை உயிர்வாழலாம். இதுவே இன்றைய மனிதர்களின் சராசரி மூச்சின் அளவாகும்.
மனிதர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 21600 முறை சுவாசிக்கின்றனர் என்பது கணக்கு, அந்த சுவாசத்தில் அதில் கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் சுவாசங்கள் மட்டுமே, உடலில் பரவி, வெளியேறும், மீதம் உள்ள சுவாசங்களால் பலன்கள் ஏதுமில்லை!. நாம் சுவாசிக்கும் போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, அதில் மூன்று மடங்கு நேரம் உள்ளே அடக்கி, பின்னர், ஒரு மடங்கு நேரத்தில் மூச்சை மெதுவாக வெளியேவிட வேண்டும்!, இதுதான் மூச்சுக்கணக்கு! மூச்சை, கணக்குபோட்டு சுவாசிக்கும் முறையே, பிரணாயாமம் என்று பண்டை மருத்துவம் அழைக்கிறது. பிரணாயாமம் என சித்தர்கள் கூறிய, இந்த அரியகலையை, முறையாகச்செய்து, மூச்சையடக்கி வாழப்பழகுவது, இன்று அனைவருக்கும் அத்தியாவசியமானது.
முறையான சுவாசத்தினால், மூச்சு உள்ளே நிற்கும் அளவுக்கு, உடலின் நன்மைகளை அதிகரிக்கும். மூச்சை உடனே வெளியிடாமல், சற்றுநேரம் அடக்கி வைக்கும்போது, காற்றில் உள்ள சக்தி அதிக அளவில் உடலில் சேகரிக்கப்படுகிறது, உடலில் தேங்கும் பிராண சக்தியே, மனதின் ஆற்றலை அதிகரிக்கிறது
இதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். முகத்தின் பொலிவும் அதிகரிக்கும்.
சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது
உடலிலே பிராண சக்தியை அதிகரித்து உடலின் உள் உறுப்புகளை சரியான முறையில் இயக்கி, உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி, வாழும் காலம் முழுவதும் இன்பமாக வாழ்வதற்கு இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம்.
இந்த கலையைதான் சித்தர்கள் சரகலை என்று அழைத்தார்கள். சரம் என்றால், நீண்ட அல்லது தொடர்ச்சி என்று பொருள். அதாவது நமது ஆயுளை நீண்ட காலம் மாற்றுவதற்கு சரகலை என்று பெயர். இதை திருமூலர் தனது பாடலிலே
ஏற்றி இறக்கி இருகாலும் பூறிக்கும்
காற்றை அளக்கும் கணக்கறிவாரில்லை
காற்றை அளக்கும் கணக்கறி வார்க்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே
என்று கூறுகிறார். இந்த பாடலின் பொருள் என்னவென்றால் நம் மூச்சை உள்முச்சு, வெளிமூச்சாக விடும்போது, இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் ஓட்டத்தை சமன் செய்யும்போது, உயிரின் நேரடி தொடர்பான சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்துவிடும். அந்த சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்து விட்டால் அல்லது நாம் இயக்கி விட்டால் நம் மூச்சுனுடைய எண்ணிக்கை, ஒரு நிமிடத்திற்கு 15க்கும் கீழ் இறங்கி விடும். இதை தான் கணக்கை அறிவிப்பவர்கள் இல்லை என்றும், எல்லோரும் எப்போழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த பிராணாயாமம் பயிற்சியை அந்த சுமுமுனை நாடியை இயக்கும் கணக்குடன் செய்தால் எமனையும் நாம் வெல்லாம் என்று இந்த சரகலையின் ரகசியத்தை குறிப்பிடுகிறார்.
இந்த நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியை முறைப்படுத்தி இந்த உலகில் வாழும் மக்களுக்கு ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கொடுத்தவர் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் ஆவார். அவர் தான் இந்த யோகத்தை முறைப்படுத்தி அதை எட்டு அங்கங்களாக பிரித்து அதற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயர் சூட்டினார். அந்த அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
1. இயமம், 2. நியமம் 3. ஆசனம் 4.பிராணாயாமம் 5. பிராத்தியாகாரா 6. தாரணா 7. நியானம் 8. சமாதி என்ற எட்டு நிலைகள் ஆகும்.
நமது மூச்சினை, வலது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சுக்கு பிங்கலை அல்லது சூரியநாடி அல்லது தந்தை நாடி அல்லது பித்ரு நாடி என்று கூறுவர்.
இடது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சினை இடகலை அல்லது சந்திர நாடி அல்லது தாய் நாடி அல்லது மாத்ரு நாடி என்று கூறுவர்.
இந்த இடகலையும், பிங்கலையும் சமன்பட்டு சுழுமுனை நாடி வழியாக செல்லும் மூச்சுக்கு அருள் நாடி அல்லது குரு நாடி என்று கூறுவர்.
இந்த பிராணாயாமம் பயிற்சியில் நாம் குரு நாடியை இயக்கும்போது நமக்கு மூச்சின் எண்ணிக்கை குறைந்து நமது ஆயுள் கூடுகிறது.
சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.
எனவே ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தனது ஆயுள் காலத்தை நீட்டிக்க செய்வதற்கு அவர்களுடைய உடலில் உள்ள தத்துவங்களை ஆராய்ந்து அதில் அளவு முறை மீறாமலும், சிலவற்றை தவிர்த்தும், வந்தால் நமது ஆயுள் வரிவடையும் என்பதை சித்தர்கள் கண்டு பிடித்தார்கள்.
இதனை நீங்கள் முயன்றுதான் பாருங்களேன்.. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்க நாம் சரியாக நிதானமாக சுவாசிப்போம்.