Astro mani

Astro mani community service

01/12/2020

சனி பகவான் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர். மெள்ள நகர்பவர் ஆதலால் அவருக்குச் `சனைச்சரன்’ என்று பெயர்.

வீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்கனுமா?இந்த 15 விஷத்தை பின்பற்றுங்கள்!!வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என...
25/11/2020

வீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்கனுமா?இந்த 15 விஷத்தை பின்பற்றுங்கள்!!

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
என்ன தான் கடினமாக உழைத்தாலும் கையில் ஒரு பைசா நிக்கமாட்டீங்குது தொடர்ந்து எதாவது செலவு வந்துட்டேயிருக்கு என்று சொல்பவர்கள் இதனை முயற்சித்துப் பாருங்கள்….. நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.

வண்ணம் : பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.

தூக்கம் : எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல் குடிகொள்ளும்.

பூஜையறை : நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும். அதே போல உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது.

கடிகாரம் : கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது.ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

தரித்திரம் : தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, துணியை அலசிய பின்னர் உதிரும் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முற்றத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும்.

குபேரன் ஊறுகாய் பிரியர் : செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.

குப்பை : மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.

கண் திருஷ்டி : வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.

கண்ணாடி : வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.

லட்சுமி கடாட்சம்: பால்,தேன், தாமரை, தானியக்கதிர்,நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். இதனை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்திருந்தால் தொழிலுள்ள தடை நீங்க லாபம் கிடைக்கும்.

ஐந்து முக விளக்கு : வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

செடிகள் : வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும். வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர் சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். அதே போல வீட்டிற்குள் முட் செடிகளும் இருக்க கூடாது.

பணப்பெட்டி : பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய் ,பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்

முன் வாசல் : வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் அதிர்ஷ்டத்தையும் தடுத்திடும்.

சுடுகாடு : சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.


விளக்கு : வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.


சுத்தம்: வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

புதுப்பணக்காரன் : இதையெல்லாம் கடைபிடித்து செல்வ வளம் பெருகியதும், புதுப் பணக்காரன் திமிரைக் காட்டிடக் கூடாது. கிடைத்த செல்வங்கள் நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடலாம்!

25/11/2020

#ஆலங்குடி_குருபகவான்_கோவில் #வரலாறு

*** #மூலவர்_ஆபத்சகாயேஸ்வரர்,
***காசி ஆரண்யேஸ்வரர்
***தாயார் ஏலவார் குழலி
***உற்சவ மூர்த்தி #தட்சிணாமூர்த்தி
***தல விருச்சம் பூளை எனும் செடி
***தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்,
ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
புராண பெயர் திருவிரும்பூளை, இரும்பூளை
இடம் ஆலங்குடி, திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது.

குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

ிறப்புகள்

இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டார். விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய தலமாகும்.

இந்த திருக்கோவில் குறித்து சிவனின் தேவாரப்பாடல் பாடப்பெற்றுள்ளது. இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம். இந்த திருத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது.

சிறப்பு வழிபாடு
நாக தோஷம் நீங்க, மனக் குழப்பம், பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும், திருமணம் தடை, கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம்.

நேர்த்திக் கடன்
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு வந்து அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுவது வழக்கம்.

கோவில் பெருமைகள்
இந்த திருக்கோவில் குரு பகவானின் சிறப்பு தலமாகப் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த கோவிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும் தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

குரு பெயர்ச்சி தினத்தை விட இந்த மாசி மாத வியாழக்கிழை வழிபாடு மிகவும் விஷேசமாக இந்த திருத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது.

தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

இங்குள்ள தலவிருட்சம் கருமை நிற பூக்கள் கொண்ட பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளது இந்த ஆலயம். விஷத்தின் தன்மையால் இந்த கருமை இருக்கலாம் என கூறப்படுகிறது.

தட்சன் சிலை
பார்வதி தேவியின் தந்தையான தட்சன், சாபம் நீங்கி ஆட்டுத் தலையுடன் காட்சி அளிக்கின்றார். இவர் உற்சவர் சிலைகள் இருக்கும் இடத்தில் காட்சி அளிக்கின்றார்.

அம்மையுடன் சுந்தர் சிலை
இங்குள்ள சுந்தரர் சிலை திருவாரூரிலிருந்து அர்ச்சகர்களால் ஒளித்து எடுத்துவரப்பட்டதாகவும், அப்போது காவலர்களிடமிருந்து தப்பிக்க, தங்களின் பிள்ளைக்கு அம்மை நோய் உள்ளதால் மறைத்து கொண்டு செல்கிறோம் என கூறினர்.

தொடர்ந்து ஆலங்குடி வந்து பார்த்த போது சுந்தரருக்கு அம்மை போடப்பட்டிருந்தது. இப்போதும் கூட சுந்தரர் சிலைக்கு அம்மை தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

மாதா, பிதா, குரு
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், அந்த வகையில் இந்த கோவிலில் நுழைந்ததும் அம்மன் சன்னதி, பின்னர் சுவாமி சன்னதி, பின்னர் குருவின் சன்னதி அமையப்பெற்றுள்ளது.

திருவிழாக்கள்
சுயம்பு லிங்கமாக தோன்றிய இவர் குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சி, தை பூசம், பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர் திருவிழா, சித்திரை பௌர்ணமி விழா ஆகியவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

Alangudi Guru Temple Address
Sivan S St, Alangudi, Tamil Nadu 612801

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,
ஆலங்குடி, கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

Unga kita palaya old 70s model vintage radio eruka I'm ready to buy for good price
29/09/2020

Unga kita palaya old 70s model vintage radio eruka I'm ready to buy for good price

9791244194 for appointment
23/09/2020

9791244194 for appointment

23/09/2020

Thiruvalluvar jothida nilayam
R S MANIMEGALAI
9791244194 FOR APPOINTMENT

26/09/2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டடைக்காடு என்ற இடத்தில் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது.

26/09/2017

Daily Horoscope for September - 26 for 12 Raasis from Mesham to Meenam with Panchangam details

Address

Erode
638102

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 12pm

Telephone

9791244194

Alerts

Be the first to know and let us send you an email when Astro mani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astro mani:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram