நாம வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துகுவா

  • Home
  • India
  • Erode
  • நாம வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துகுவா

நாம வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துகுவா My India My Creation.Organization. Started by Mr. Chakravarthy Karthikeyan in India, mainly for abolish Child labour and Child beggars. Since : 2011 Feb 20

Traveling and Dreaming towards Developed Nation

13/09/2022
14/09/2018
16/11/2017

15/06/2017

Sunil Bist, a classmate of mine has met with an accident and lost complete motor function in his lower body. An amount of Rs15 lakh is needed for his surgery. Donors are requested to help at the maximum.

29/10/2016
25/09/2016



இன்றய நீயா நானா விவாதம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று......

இந்த நிகழ்ச்சியை பற்றி பல விமரிசனங்கள் இருந்தாலும்.......... இன்றய விவாதம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இன்றய விவாதம் விளையாட்டு துறையை மற்றும் அதை சார்ந்த துறைகளை பற்றி விவாதம் மேற்கொள்ள பட்டது.

ஒலிம்பிக் போட்டியின் போது நாம் முகநூலில் பல பதிவுகளை பரிமாறினோம். அதன் பின் அதை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. இதை பார்க்கும் பொழுது ஒரு திரைப்பட வசனம் நியாபகம் வருகிறது. "இன்றய இளைஞர்களுக்கு புரட்சி எல்லாம் முகநூலில் மட்டும் தான்" ( பிரகாஷ்ராஜ் வசனம் படம் பெயர் தெரியவில்லை).

பல கருத்துக்கள் பல பதிவுகளை உண்மையாக உறக்க கூறிய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்.

இந்த நிகழ்வு என்னை கவர்ந்ததன காரணம்......... கலைக்கூத்தாடி இன குழந்தைகளை கடந்த 6 ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில்..... விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உருவாக்க வேண்டும் என நானும் என் குழுவை சார்ந்த சகாக்களும் பல முயற்சிகள் மேற்கொண்டோம். அதன் பயன் தேசிய அளவில் வெற்றிகளை காண முடிந்தது.

ஆனால் என் எதிர் பார்ப்பும் , கனவும் அதுவல்ல........ சாதாரணமாகவே கனவுகளை பெரியதாக கட்டமைக்கும் இயல்பை கொண்டவன் நான்................ எங்கள் குழந்தைகளின் மீதும் என் கனவு அவ்வாரே இருந்தது (எங்கள் கவனிப்பில் உள்ள குழந்தைகள்).

அதற்கான முயச்சிகள் ஆயிரம்..... ஆயிரம்........ அரசு அதிகாரிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் வெறுப்பும் கோவமும்தான் ஏற்பட்டதே தவிர, என் கனவுகள் வெற்றி பெற வில்லை.

ஒரு குழந்தையையாவது ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் விளையாட்டில் பங்குகொண்டு வெற்றி அடைய பயிற்ச்சி அளிக்க ஆசைதான், அனால் அனைத்து முயற்சியும் தோல்வி.

இன்று பதிவு செய்ய பட்ட குரல்கள் என்னுடைய உள்ளத்தில் இருந்தவை என்று கூட கூறலாம்....

இறுதியாக வாசுதேவன் பாஸ்கரன் (https://en.wikipedia.org/wiki/Vasudevan_Baskaran) அவர்களின் பதிவு அருமையான ஒன்று.

விழி ஓரத்தில் இருந்த கண்ணீர் துளியும் பலரின் உணர்வுடைய வெளிப்பாடுதான் (என்னுடையதும் கூட).

ஆனாலும் நம்பிக்கை உள்ளது இனிவரும் காலங்களில் விளையாட்டு துறையில் சாதனைகளை காணமுடியும் என்று.

என் நட்பு வட்டாரத்தில் தன்னார்வ நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் நிருவாகிகள் அதிகம். அவர்களுக்கு நான் ஒரு அன்பு கோரிக்கையை முன் வைக்கிறேன் இந்த பதிவின் மூலம். உங்கள் திட்டங்கள் (Projects) ஏராளம் அதில் ஒன்று இனி விளையாட்டு துறைக்காக இருக்கட்டும் ஏன் என்றால் கிரிக்கெட் விளையாட்டை தாண்டி என்ன என்ன விளையாட்டுகள் உள்ளது என்பதைக்கூட நாம்(மக்கள்) தெரிந்து கொள்வதில்லை. எனவே பல விளையாட்டுகளில் ஒரு ஒரு தன்னார்வ நிறுவனங்களும் ஒரு விளையாட்டை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டால் கூட அடுத்த 10 ஆண்டுகளில் பல சாதனையாளர்களை காணலாம்.

நம்பிக்கையுடன் பயணிப்போம்....... நம் நாடு..... நம் மக்கள்...... நம் அரசியல்வாதிகள்........ நம் அரசு அதிகாரிகள்..... நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும். இங்கு நடக்கும் தவறுகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும்அரசு அதிகாரிகளை மட்டும் குறை கூற முடியாது மறைமுகமாகவும்...... நேரடியாகவும்...நாமும் துணை நிற்கிறோம் என்பதுதான் உண்மை ...

கண்டிப்பாக வரும் காலத்தில் எங்கள் குழந்தைகள்(எங்கள் கவனிப்பில் உள்ள குழந்தைகள்). ஒலிமிபிக்கில் பதக்கங்கள் பெறுவார்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி

இவண்

#சக்ரவர்த்தி_கார்த்திகேயன்.

23/09/2016

கோவையின் அமைதியை காப்போம் .

இதயங்கள் ஈரமாகட்டும் .ஒற்றுமையை உரமாக்குவோம் .அன்பை விதைப்போம் சட்டபூர்வமான நடவடிக்கைகளே இரு பிரிவு சமுதாயங்களுக்கும் நல்லது .வன்முறை துவங்க வெறியாய் ,அழகாய் இருக்கும் ,போக, போக ஏன், எதற்கு தவிர்த்துருக்கலாமோ என தோன்றும் .சமூகம் தன் இயல்பை ஒத்த குழுக்கள், நிலப்பரப்பின் இயல்புகள் என பிரிக்கப்பட்டு தோன்றியதே.மதம் ,சாதி,மாநிலம் ,நாடு .அமைதியாய் வாழவும்,அன்பாய் இருக்கவும் தோன்றியவை ..இந்த குழுக்களுக்கு இடையே மெல்லிய ஒரு வரம்பு கோடு உண்டு .இதை தாண்டாதவரை ஒரு பிரச்னையும் வராது.சமூகம் அன்பாய் அமைதியாய் தன் வழி செல்லும்.
1.புரிதலின் பிறழ்தல் பிறர் மேல் கோபப்பட வைக்கிறது .
2.அறியாமை காரணமாக வன்முறை மனதில் எளிதாய் விதைக்கப்படுகிறது
3.பொது நலம் என்ற பெயரில் தான் சுய லாபத்துக்கு யாரையும் ,எதற்கும் பயன்படுத்தும் ஒரு நிலை தற்போது வெகுவாக உள்ளது .

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மனிதன் முக்கியம். மதமும் முக்கியம் ஆனால் அது அன்பின் வழிச்சென்றால் மட்டுமே. இதையெல்லாம் தாண்டி நம் செயல்பாடுகள் ஒட்டு மொத்த சமூகத்திற்கு அமைதி வழியில் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம் . .

#பகிரப்பட்டது

 Welcome you all :)For   There is a small change in Debate event ...... children's age limit : 10 to 16 years
01/07/2016



Welcome you all :)

For





There is a small change in Debate event ...... children's age limit : 10 to 16 years

Address

Erode
638107

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாம வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துகுவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram