27/02/2021
Resellers are welcome
ரீடெய்லர் ஆக எவ்வளவு முதலீடு தேவை ?
2000 ருபாய் முதலீடு போதும். எனினும் 5000 ருபாய் முதல் 10,000 ருபாய்கள் வரை முதலீடு செய்தால் கூடுதலாக லாபம் பெறலாம்.
யார் ஆர்டர் செய்யலாம் ?
கடைக்காரர்கள், ரீட்டெய்லர்கள் உட்பட சிறு தொழில் செய்து லாபம் ஈட்ட நினைக்கும் யார் வேண்டுமானாலும் எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் Wholesale Price ல் ஆஸ்க் ஜான்சி பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி விற்கலாம்.
எப்படி ஆர்டர் செய்வது ?
குறைந்தபட்சமாக 2000 ருபாய்க்கு ஆர்டர் செய்ய வேண்டும். ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் பேக் என்றால் 5ன் மடங்குகளிலும் 200 மிலி பேக் 10ன் மடங்குகளிலும் 5 லிட்டர் பேக் 2ன் மடங்குகளிலும் விலை குறிப்பிடப்பட்டிருக்கும்.
எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும் ?
ஆர்டர் செய்த அனைத்துப் பொருட்களின் மொத்த தொகைக்கு ஏற்ப செக்கவுட் செய்யும் போது கீழ்கண்டவாறு டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
2000 முதல் 5000 வரை – 12 %
5000 முதல் 8000 வரை – 15 %
8000 க்கும் மேல் – 18%
உதாரணமாக துணி துவைக்கும் உயர்தரமான ஆஸ்க் ஜான்சி ஃபேப்ரிக் வாஷ் பயோ லிக்விட் ஒரு லிட்டர் 196 ருபாய் என்றால் 5000 ருபாய்க்கும் மேல் ஆர்டர் செய்யும் பட்சத்தில் 15 சதவீதம் தள்ளுபடி போக 166 ருபாய்க்கு உங்களுக்குக் கிடைக்கும். இவ்விதத்தில் ஒரு பாட்டிலுக்கு உங்களுக்கு 30 ருபாய் லாபம் கிடைக்கும். இதுவே மொத்தமாக எல்லா பொருட்களும் சேர்த்து 8000 ருபாய்க்கு வாங்கும் போது லாபத்தின் அளவு இன்னும் கூடுதலாக 18 சதவீதம் கிடைக்கும்.
முதலில் குறைவான லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று சிறிய முதலீட்டில் துவங்கி படிப்படியாக விரிவுபடுத்த ஏதுவாக இருக்கட்டும் என்று தான் மினிமம் 2000 ருபாய்க்கு ஆர்டர் செய்தால் போதும் என்று நாங்கள் வைத்துள்ளோம். நமது பொருள் உங்களுக்கும் உங்கள் கஸ்டமருக்கும் திருப்தியளிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து அதிக தொகைக்கு ஆர்டர் செய்து அதிக லாபம் ஈட்டலாம். இதனால் இது ஒரு ரிஸ்க் இல்லாத தொழிலாகும்.
எப்படி பொருள் வந்து சேரும் ?
லாரி மூலம் அல்லது டீலர் மூலம் அனுப்பி வைப்போம். அனுப்பிய தகவலை வாட்ஸ் ஆப் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிப்போம். உங்கள் ஏரியாவுக்கு அருகில் இருக்கும் லாரி ஆஃபீஸில் அல்லது டீலர் ஆஃபீஸில் இருந்து நீங்கள் டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
லாரி வாடகை எவ்வளவு ஆகும் ?
லாரி வாடகை நீங்கள் செலுத்தத் தேவையில்லை. லாரி வாடகையை நாங்களே இங்கேயே செலுத்தி விடுவோம். இறக்கு கூலி மற்றும் உங்கள் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான செலவுகள் உங்களைச் சேர்ந்தது.
உங்களுக்கு பக்கமாக இருக்கும் ரெகுலர் லாரி சர்வீஸில் அனுப்பி வைப்போம். அருகில் லாரி சர்வீஸ் எதுவும் இல்லையெனில் உங்களுக்கு போன் செய்து கேட்டு நீங்கள் சொல்லும் லாரியில் அனுப்புவோம். எனினும் ரெகுலர் லாரி சர்வீஸில் மட்டுமே அனுப்ப இயலும். கூரியரில் அனுப்ப இயலாது.
டீலர் இடத்தில் இருந்து எடுத்தால் வாடகை செலுத்த வேண்டுமா ?
வாடகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. எனினும் டீலர் அலுவலகம் உங்கள் இடத்தில் இருந்து 5 கிமீக்குள் இருந்தால் நீங்கள் அங்கே சென்று டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட அதிக தூரம் என்றால் அவர்களே தொலைபேசி மூலம் தகவல் சொல்லி விட்டுக் கொண்டு வந்து கொடுப்பார்கள். இதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உங்கள் முழு முகவரி மற்றும் ஆர்டர் ஐடியுடன் chanakiyan.jhansi@gmail.com என்ற ஈமெயிலில் புகார் செய்யலாம்.
எவ்வளவு நாட்களில் பொருள் வந்து சேரும் ?
இங்கிருந்து நேரடியாக அனுப்பும் பட்சத்தில் பணம் கட்டியதில் இருந்து அதிகப்பட்சமாக ஒரு வாரத்துக்குள் அனுப்பி விட்டு லாரி ரசீதை உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி விடுவோம். நீங்கள் லாரி ஆஃபீஸ் எண்ணுக்குக் கால் செய்து கேட்டு பிக்கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்த சந்தேகங்களுக்கு 0424-2292575 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
டீலர் மூலம் அனுப்பும் பட்சத்தில் ஆர்டர் செய்த அடுத்த மூன்று நாட்களுக்குள் டீலர் உங்களுக்கு போன் செய்வார். பின்னர் அதிகப்பட்சமாக ஒரு வாரத்துக்குள் பொருளை டெலிவரி செய்து விடுவார்.
பணம் எப்போது எப்படி செலுத்த வேண்டும் ?
ஒரு சில ஏரியாக்களுக்கு மட்டும் தற்சமயம் Cash On Delivery வசதி இருக்கிறது. அவ்வசதி இல்லாத ஏரியாவைச் சேர்ந்தவர்கள் ஆர்டர் செய்து செக் அவுட் செய்யும் போது Net Banking மூலம் அல்லது UPI மூலம் பணம் செலுத்த வேண்டும்.
எவ்வாறு ஆர்டர் செய்வது ?
1 லிட்டர் பேக் ஒரு பெட்டிக்கு 20 பீஸ்
500 மிலி பேக் ஒரு பெட்டிக்கு 30 பீஸ்
200 மிலி பேக் ஒரு பெட்டிக்கு 80 பீஸ்
5 லிட்டர் பேக் ஒரு பெட்டிக்கு 4 பீஸ்
எங்கள் அட்டைப்பெட்டிகளின் அளவு மேற்கண்டவாறு உள்ளதால் எல்லா ரகங்களும் கலந்து சரியாக இந்த அளவு அல்லது இதன் மடங்குகளில் வருவதைப் போல ஆர்டர் செய்தால் போக்குவரத்தில் டேமேஜ் இல்லாமல் வந்து சேரும்.
ஹோல்சேல் விலையில் ஆர்டர் செய்ய இங்கே க்ளிக் செய்யவும் >>>