27/04/2024
இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ்பவானி பாசன சபை இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் 5வது பாசனத்திற்க்கான நீரை திறந்துவிடக்கோரி மனுகொடுக்க சென்ற விவசாயிகளை எதிர்தரப்பினர் கொடுத்த ஆதாரமற்ற புகாரை வைத்துக்கொண்டு எண்ணற்ற விவசாயிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இருந்தபோதும் அவர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி அமைதியான முறையில் காத்திருந்து மாலை 6 மணிக்கு மேல் காவல்துறை விடுவித்த பிறகு வீடு திரும்பினர்.