07/11/2025
#செவ்வாய்_அஸ்தங்க_நிலை (140- நாட்கள்) - #தனுசு ராசி/லக்னம் எவ்வாறு இருக்கும் என்பதை காண்போம்.
கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு தனுசு ♐ (வீட்டின் அதிபதி #குரு)
தனுசு ராசி மற்றும் லக்னத்திற்கு 12-5 அதிபதியாக வரக்கூடியவர் செவ்வாய், பாக்யாதிபதி 🌞 #சூரியன் உடன் நெருங்கி செல்வதால் அஸ்தங்க நிலையை அடைகிறார்.
செவ்வாய்க்கு அஸ்தங்க நிலை என்பது, 2 ஆண்டிற்கு 1 முறை நிகழும் சுழற்சி நிகழ்வு
செவ்வாய், விருச்சகத்தில் இருந்து, கும்பம் வரை. அஸ்தங்கம் முறையில் பயணம் செய்கிறார்.
✍🏻 06-11-2025 முதல் 07-12-2025 வரை.
விருச்சிக பாவகத்தில் 31 நாட்கள் ( #ஆட்சி_அஸ்தங்கம்) நிலையில் பயணிப்பார்.
இந்த காலகட்டம் தனுசு ராசி மற்றும் லக்னத்திற்கு சாதகமற்ற காலகட்டம். மன அழுத்தம், மன பதற்றம் அதிகம் தரும். சிறிய விஷயத்திற்கு கூட கவலைப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கோபமும், தலை பாரமும் தரக்கூடும். யாரிடமும் தங்களது விரக்தியை வெளிப்படுத்தாமல் இருப்பதன் நல்லது. தனிமையில் நேரம் செலவிடாமல் குடும்பத்தோடு ஆலய பயணங்கள் செய்வது மனதிற்கு நல்ல மாற்றங்கள் தரக்கூடியது. இக்காலகட்டம் கடன் சார்ந்த விஷயங்களில் நெருக்கடிகள் தரக்கூடும்.
✍🏻 07-12-2025 முதல் 15-01-2026 வரை.
தனுசு பாவத்தில் 39 நாட்கள் ( #நட்பு_வீட்டில்_அஸ்தங்கம்) நிலையில் பயணிப்பார்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடலில் குளிர்ச்சியும், அதிக உஷ்ணமும் வெளிப்படும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது, உணவு கட்டுப்பாடு இக்காலகட்டம் தேவை. மனதளவில் சற்று மந்தமிருக்கும். இக்காலகட்டத்தில் புதிய முயற்சிகளை செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது. நட்பு வட்டாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதேபோல, அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.
✍🏻 15-01-2026 முதல் 23-02-2026 வரை.
மகரம் பாவகத்தில் 39 நாட்கள் ( #உச்ச_அஸ்தங்கம்) நிலையில் பயணிப்பார்.
பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். சொல்லாத விஷயத்திற்கு கூட பிரச்சினைகள் வரக்கூடும். இக்காலகட்டம் பொய் உரைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் தங்களால் ஏற்படக்கூடிய சூழல் நிலவும். வாகனங்களை இயக்கும் பொழுது அதிகம் கவனம் தேவை. எந்த ஒரு காரியத்தையும் செய்த பின்பு அதை சரி பார்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் பணிபுவர்கள் சற்று பணிச்சுமைகளை சந்திக்க கூடும். எல்லாருக்கும் பணி மாற்றங்களும் அமையும்.
✍🏻 23-02-2026 முதல் 26-03-2026 வரை.
கும்பம் பாவகத்தில் 31 நாட்கள் ( #நடுநிலை_அஸ்தங்கம்) நிலையில் பயணிப்பார்.
இளைய சகோதரரால் சற்று விரையச் செலவுகள் தரும். கடன் சார்ந்த விஷயங்களில் யாருக்காகவும் ஜாமீன் போன்ற வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம். அதேபோல, தமக்கு பாத்தியம் இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. களத்திரத்தோடு இக்காலகட்டம் அடிபணிந்து செல்வது நல்லது. வாகனங்களால் விரைய செலவுகள் ஏற்படும். அலைச்சலுடன் ஆதாயம் பெறக்கூடிய காலகட்டம். அதேபோல, கைப் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. ஞாபக மறதி அதிகம் தரும்.
ஆகவே செவ்வாய் அஸ்தங்க நிலையில் 140 நாட்கள் (4 மாதம், 20 நாள்.) வரை பயணிப்பார்.
இதில் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் அஸ்தங்கமாக உள்ளவர்களுக்கு அதிக நற்பலன்களை கிடைக்க பெறுவார்கள். தடைபட்ட அனைத்து சுப காரியங்களும் இக்காலகட்டத்திற்குள் இவர்களுக்கு கிடைக்கக்கூடும்.
#ஶ்ரீ_குமராயி_ஆன்லைன்_ஜோதிடம் - காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம்.
#ஜோதிடர் : Dr.B.சதாசிவன் SMP B.COM D.A
Contact Number : +916381453432
மேலும், ஜோதிட கருத்துக்களை விரும்பக் கூடியவர்கள் எனது "Whatsapp Group" ல் இணைந்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து "Arattai" மற்றும் "Telegram" - Channel இணைந்து கொள்ளலாம்.
Whatsapp Group's
✴️ Group - 1 : https://chat.whatsapp.com/ISjtxicB8b51tn4Af4wJtn?mode=ems_copy_t
✴️ Group - 2 : https://chat.whatsapp.com/IxKFbfbfIFi0jNfiM3nRHX?mode=ems_copy_t
✴️ Group - 3 : https://chat.whatsapp.com/EQktWZYX9zaAUzpGnG5pTT?mode=ems_copy_t
_________________________________________
✴️ Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va6WSOtC1Fu8gjHLfA0J
✴️ Arattai App (அரட்டை) Channel : https://aratt.ai/
✴️ Telegram Channel : https://t.me/srikumarayionlinejothidam
நன்றி !
வாழ்க வளமுடன் ‼️