12/10/2017
----படித்ததில் பிடித்தது----
ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ?
சில சித்தர்கள் , சாய்ராம் போன்றோர் இதை கட்டாயமாக்கவிலையே ? ஏன் ?
செடி கொடிகள் மட்டும் உயிர் இல்லையா ?
* மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது. அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அமில தன்மை ஆகிய அனைத்தும் காய், கனி, கிழங்குகளை உட்கொள்ளும் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் மூலம் இறைவன் நமக்கு விதித்த உணவு சைவ உணவே என்று அறிதல் வேண்டும்.என்ன உணவு உண்கிறோமோ அதுவே நாம். மாடு, ஆடு இவற்றை உண்ணும் போது, அதனுடைய ஆன்ம பதிவு நம்மை அடைகிறது. ஒரு மாடு தான் கொல்ல படப்போகிறோம் என்பதை இறப்புக்கு முன் கண்டிப்பாக அறியும். அதன் பய உணர்ச்சி போன்றவை, அதனுடைய உடம்பில் பதிந்திருக்கும் . அதனால் அதனை தவிர்ப்பது நல்லது. இவற்றை உண்ணும்போது நமக்கு குறைந்த அளவே பலமும் கிடைக்கின்றது.மற்றுமொரு முக்கிய காரணம் . விலங்குகளுக்கு பிரிவு, ஆற்றாமை போன்ற உணர்ச்சிகள் உண்டு. ஒரு குடும்பத்தை சிதைப்பது நல்லது அல்ல.
* சில சித்தர்கள் சைவத்தை கடைபிடித்தாக வேண்டும் என்று அறிவுறுத்த வில்லை. ஏன் எனில் சாய்ராம் போன்றோர் ஒற்றுமைக்காக அவதாரம் எடுத்தவர். அவரின் நோக்கம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொல்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்திருப்பார். சித்தர்கள் சொல்லும் எல்லா அறிவுரையும் நடைமுறை படுத்தியவன் ஆட்டையும் செடியையும் ஒன்றாகவே காண்பான். அனால் சித்தரின் எந்த அறிவுரையும் நடைமுறை படுத்தாமல், அசைவம் மட்டும் சாப்பிடுவது உசிதம் அல்ல
* செடி கொடிகளுக்கு உயிர் இல்லையா ? கண்டிப்பாக உண்டு. அவற்றிற்கு ஆன்ம பதிவு குறைவு. விலங்குகளை விட சில உணர்ச்சிகள் குறைவு. அன்னமய கோசமான நம் உடம்பிற்கு கண்டிப்பாக அதை கொல்லும் கர்மா உண்டு. ஆனால் குறைவானது. தன்னுடைய சஹஸ்ராரத்தில் உள்ள அமுதை உண்ண தெரிந்தவருக்கு இந்த கர்மா இல்லை.
உணவும் , சித்த மருத்துவமும் வேறு வேறு அல்ல
https://www.facebook.com/sivasidhamaruthuvam/