Orien's

Orien's BUSINESS

வடை, பஜ்ஜியில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாளை பயன்படுத்துகிறீர்களா?செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வா...
11/10/2015

வடை, பஜ்ஜியில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாளை பயன்படுத்துகிறீர்களா?

செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே!

ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது.

எப்படி என்கிறீர்களா? செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது.

அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். .

காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.

இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும்.

நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு, இவை வேறு. ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள்.

எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல்.

முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது.

இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான். அதனால்தான் மேகி நூடுல்சுக்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்து, தடை செய்யப்பட்டது.

11/10/2015

காலையில் கறிவேப்பிலை சாப்பிட்டால் பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும், காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?

▪ கறிவேப்பிலையில் வைட்டமின் "ஏ', வைட்டமின் "பி', வைட்டமின் "பி2', வைட்டமின் "சி', கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.

▪ கறிவேப்பிலை, முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும், காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன. அதிலும் இதனை தொடர்ந்து, 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகளெல்லாம் பெறலாம் என்பதற்கான பட்டியல் இதோ:

⭕ கொழுப்பு கரையும். காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

⭕ ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு
பேரிச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

⭕ சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

⭕ கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

⭕ நீண்ட நாட்கள் செரிமான பிரச்னையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

⭕ அதேபோல் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வர, முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

⭕ ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி முறிந்து வெளியேறிவிடும்.

⭕ கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் "ஏ' மற்றும் "சி' கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

இனி, சாம்பாரில் கறிவேப்பிலை இருந்தால் தூக்கி வீச மாட்டீர்களே...!

"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும...
11/10/2015

"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது. இதற்கு, பெரிய மெனக்கெடுதல்கள் தேவை இல்லை. நம் அன்றாட உணவில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும். சில உணவுப் பொருட்களின் தோற்றம், குறிப்பிட்ட உறுப்புகளின் தோற்றத்துடன் பொருந்தியிருப்பதோடு, அவற்றைச் சாப்பிடும்போது, அந்தந்த உறுப்புகளுக்கு பலத்தையும் கூட்டுகின்றன” என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ருதிலயா எந்தெந்த உணவுகள், எந்தெந்த உறுப்புகளோடு பொருந்துகின்றன என்பதையும், அவை என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதையும் விளக்குகிறார்.

கண்ணீர் 😭 அஞ்சலி..... பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 மாரடைப்பால் காலமானார்.அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை ந...
11/10/2015

கண்ணீர் 😭 அஞ்சலி.....
பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 மாரடைப்பால் காலமானார்.

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.

11/10/2015

:: வயிற்றின் நண்பன் தேன் ::

“எண்சான் உடம்புக்கு தலையே பிரதானம்” என்பது முன்னோர் வாக்கு ஆனால் இதை “எண்சான் உடம்புக்கு வயிறே பிரதானம்” என கேளி செய் வோரும் உண்டு. “எண்சான் உடம்புக்கு வயிறே பிரதானம்” என்றே நாம் எடுத்துகொள்வோம். ஏனெனில், நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்க்கும் நம் உண்ணும் உணவிலிருந்தே தோன்றுகிறது.

பொதுவாக, நாம் உண்ணும் உணவு 70 விழுக்காடு காரத்தன்மை உடையதாகவும், 30 விழுக்காடு அமிலத் தன்மை உடையதாகவுமிருந்தால் பெரும்பாலும் குடல் நோய்கள் ஏற்படாது. ஆனால் நாம் உண்ணும் உணவு 70 விழுக்காடு அமிலத் தன்மையுடையதாகவும், 30 விழுக்காடு காரத் தன்மையுடையதாகவுமுள்ளது. எனவே நம்மில் பலருக்குச் செரியாமை, குடற்புண், புளியேப்பம், மற்றும் பல குடல் நோய்கள் ஏற்படுகின்றன.

இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள் உடலில் உள்ள ஜீரண பாதையில் சுலபமாக கிரகிக்கும். தேன் ஏழு வகைப்படும். ஆனால் ஒரு தேனீ எந்த செடியில் இருந்து தேனை சேகரிக்கிறதோ, அதன் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது. கொம்பு தேன், மலைத்தேன், மரப்பொந்து தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழு வகை உள்ளன.
ஆனால், இவற்றில் மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.
மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும்.தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்ட்ருடன் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதர்க்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து கொண்டு ஆறிய சுடுதண்ணியுடன் அதை கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும். தேன் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது , இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிர் வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது
தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.
தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

11/10/2015

ஆரோக்கியம் தரும் யோகா - ஒவ்வொரு நாளும் [பவன முக்தா ஆசனம்]
முதலில் தரையில் கா
ல்களை நீட்டிய நிலையில் படுக்க வேண்டும். பின்னர் கால்களை சேர்த்து படத்தில் உள்ளது போன்று மடக்கிக் கொள்ள வேண்டும். மடக்கிய 2 கால்களையும் கைகளால் பிடித்துக் கொண்டு மெதுவாக தலையை தூக்கி முகத்தை 2 முட்டுகளுக்கு இடையே தொடுமாறு கொண்டு வர வேண்டும்.

உடம்பில் பின்பகுதி முழுவதையும் நன்றாக அழுத்தி 2 கால்களின் பாதங்களையும் தரையில் தொட முயற்சிக்க வேண்டும். பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வரலாம். இப்படியாக உடம்பை முன்னம் பின்னுமாக அசைத்து பவன முக்தா ஆசனத்தை தொட வேண்டும். இவ்வாறு செய்யும் போது கைகளின் பிடியை விட்டு விடக் கூடாது.

கைகளை விட்டு விட்டால் உடலை முறையாக அசைப்பது கடினமாகி விடும. 5 முதல் 10 முறை இந்த ஆசனத்தை செய்யலாம். சுவாசம் சாதாரண நிலையில் இருப்பது முக்கியம். முகுதுத் தண்டு வடம் வலிமை அடைய பவள முக்தா ஆசனம் உதவி செய்கிறது.
மூட்டு வலி, கால் பாதத்தில் ஏற்படும வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. தைராய்டு தொந்தரவை சரி செய்யவும் இந்த ஆசனம் பயன்தருகிறது.

07/06/2014

BUSINESS

07/04/2014
Fir Men'S SocksFir Men'S SocksMassages acupoints of the foot and regulates the various organs with the effects of FIR
13/02/2014

Fir Men'S Socks
Fir Men'S Socks

Massages acupoints of the foot and regulates the various organs with the effects of FIR

Green Apple ShampooGreen Apple ShampooA delightful true apple aroma. This aroma is uplifting, spicy, sweet with a high f...
13/02/2014

Green Apple Shampoo
Green Apple Shampoo

A delightful true apple aroma. This aroma is uplifting, spicy, sweet with a high floral note. Inhaled, it relaxes the nervous system and acts as a digestive.
Oriens glitter shampoo, enriched with pure essences, is so gentle that you can wash your hair everyday without stripping it of its natural oils. Maintain the ph balance & leaves hair soft & deliciously fragrant, working its aromatic magic on your senses. Directions for use: wet hair. Take a small amount of shampoo and gently massage your hair & roots. Wash off thoroughly with water. Repeat if necessary.

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when Orien's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Orien's:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram