Vadamalayan Hospitals, Madurai

Vadamalayan Hospitals, Madurai Vadamalayan Hospitals – Serving South Tamil Nadu since the 1930s. Ethical, compassionate, patient-first care.

A trusted super speciality hospital with an integrated cancer center, advanced cardiac care, and 24/7 emergency services in Madurai & Dindigul.

Nalam Magazine - April 2026
01/04/2026

Nalam Magazine - April 2026

31/03/2026

🌸 பெண்களின் ஆரோக்கியம் – நம்முடைய பொறுப்பு

செர்வைக்கல் கேன்சர் (Cervical Cancer) என்பது பெண்களுக்கு அதிகமாக பாதிக்கும் நோய்களில் ஒன்று.

ஆனால் நல்ல செய்தி என்ன தெரியுமா? 👇
👉 இது முன்கூட்டியே தடுப்பதற்கான வாய்ப்பு உள்ள நோய்!

👩‍⚕️ டாக்டர் கார்த்திகா T
DGO., DNB (O&G)
Consultant Obstetrician & Gynaecologist
Vadamalayan Hospital, Madurai

அவர்கள் கூறுவது:
👉 Cervical Cancer ஏற்படுவதற்கு முக்கிய காரணம் HPV (Human Papillomavirus) வைரஸ்
👉 இதைத் தடுக்க சிறந்த வழி – HPV Vaccine
💉 ஏன் HPV Vaccine முக்கியம்?
✔ இளம் வயதிலேயே எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு அதிகம்
✔ பெண்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
✔ Cervical Cancer ஆபத்தை பெரிதும் குறைக்கும்

👩‍👧 யாரெல்லாம் எடுக்கலாம்?
🔹 10 வயது முதல் பெண்கள்
🔹 திருமணம் ஆகாதவர்கள் / ஆனவர்கள்
🔹 40 வயது வரை உள்ள பெண்கள் (Doctor ஆலோசனை அவசியம்)

⚠️ நினைவில் கொள்ளுங்கள்:
👉 “Prevention is better than cure”
👉 சரியான விழிப்புணர்வு + தடுப்பு = பாதுகாப்பான வாழ்க்கை
📞 மேலும் தகவல்களுக்கு:
Vadamalayan Hospital
📍 Madurai – 04523545400
📍 Dindigul – 04513561000
📲 Women Master Check �

பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று (UTI) ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பெண்களில் சிறுநீர்ப்பாதை கு...
28/03/2026

பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று (UTI) ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பெண்களில் சிறுநீர்ப்பாதை குறுகலாக இருப்பதும், அது ஆசனவாயிற்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதும் முக்கிய காரணங்களாகும். இதனால் பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்ப்பாதையில் நுழைந்து தொற்றை ஏற்படுத்த முடிகிறது.

இந்தத் தொற்றைத் தவிர்க்க, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். அதனால் சிறுநீர் அடிக்கடி வெளியேறி, பாக்டீரியாக்கள் உடலில் தங்காமல் வெளியேற உதவும். மேலும், நீரிழிவு நோய் உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையெனில், அது பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கி, தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

ஒவ்வொரு முறை மலம் கழித்த பிறகும் சரியான சுத்தம் பேணுவது மிகவும் முக்கியம். பெண்களின் உடலமைப்பில் ஆசனவாயும், யோனியும் (va**na), சிறுநீர்ப்பாதையும் அருகருகே இருப்பதால், சுத்தம் இல்லையெனில் தொற்று எளிதில் பரவலாம். மேலும், சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு வந்தவுடன் அதை தாமதிக்காமல் கழிப்பது நல்லது. அதை அடக்கி வைத்தால், சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்கி, தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றிய பின்னரும், தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றது என்றால், சிறுநீரக நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். தேவையானபட்சத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

நறுமணப் பொருள்களால் ஏற்படும் மயக்கம்: நார்மல் தானா?
28/03/2026

நறுமணப் பொருள்களால் ஏற்படும் மயக்கம்: நார்மல் தானா?

'இம்யூன் த்ராம்போசைட்டோபீனியா' என்றால் என்ன?
28/03/2026

'இம்யூன் த்ராம்போசைட்டோபீனியா' என்றால் என்ன?

மக்கள் பலரும் தினமும் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது அவர்களது தினசரி ஒமேகா ...
28/03/2026

மக்கள் பலரும் தினமும் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது அவர்களது தினசரி ஒமேகா 3 கொழுப்பு அமிலத் தேவையை நிறைவேற்றலாம். அது உங்கள் மூளை, கண்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ட்ரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிமங்கள் சேர்வதைத் தடுக்கும். முறைதவறிய இதயத்துடிப்பை சீராக்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்பு அபாயத்தைக் குறைக்கும். இதயநோய் உள்ளவர்களுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணம் நிகழ்வதைத் தடுக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது ஆழ்கடலில் காணப்படும் மீன்களில் இருப்பது. இந்த வகை கொழுப்பு அமிலம் நம் உடலுக்கு நல்லது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். ஆனால் இதை யார், எவ்வளவு எடுக்க வேண்டும் என்ற அளவு தெரியாமல் எடுப்பது ஆபத்தானது. மருத்துவப் பரிந்துரை மிக முக்கியம்.

மீன் எண்ணெய் மாத்திரைகள் பற்றி பேசும்போது, அவை Omega-3 fatty acids (ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்) நிறைந்தவை என்பதால் பல ஆர...
28/03/2026

மீன் எண்ணெய் மாத்திரைகள் பற்றி பேசும்போது, அவை Omega-3 fatty acids (ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்) நிறைந்தவை என்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உண்மை. ஆனால், அதற்காக அளவுக்கு மீறி எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை அளிப்பதற்குப் பதிலாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அதிக அளவில் மீன் எண்ணெய் எடுத்தால் ரத்தச் சர்க்கரை அளவு உயர்வது, ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, இதை யார் எடுத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது. மருத்துவ நிபுணரின் ஆலோசனை அவசியம். மேலும், இயல்பாகவே மீன் உண்பவர்களுக்கு இந்த மாத்திரைகள் பெரும்பாலும் தேவையில்லை. குறிப்பாக கடல் மீன்களில் இயற்கையாகவே ஒமேகா-3 கிடைக்கிறது. ஆனால், அந்த மீன்களை எண்ணெயில் வறுத்தோ, பொரித்தோ சாப்பிடாமல், வேகவைத்து அல்லது ஆவியில் சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியமான தேர்வாகும்.

நல்ல தூக்கம் - மூளை தகவல்களை சேமிக்க ஓய்வு மிகவும் அவசியமாகும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கும் பழக்கத்தை கடைப்பிடி...
27/03/2026

நல்ல தூக்கம் - மூளை தகவல்களை சேமிக்க ஓய்வு மிகவும் அவசியமாகும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கவும்.
உடற்பயிற்சி - தினசரி உடற்பயிற்சி மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்த உதவும்.
மன அழுத்தம் நிர்வகித்தல் - தியானம், மூச்சுப்பயிற்சி மூலம் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்
சத்தான உணவு - ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கற்கும் திறன் அதிகரித்தல் - புத்தகம் வாசித்தல், புதிய விஷயங்கள் கற்பது போன்றவை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
திரை நேரத்தை குறைத்தல் - நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் பார்ப்பது மற்றும் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதை தவிர்ப்பது கவனிக்கும் திறனை அதிகரிக்கவும், விஷயங்களை ஞாபகப்படுத்தவும் உதவும்.

மறதி: அறிகுறிகள்
27/03/2026

மறதி: அறிகுறிகள்

இதைய நோய்: எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
27/03/2026

இதைய நோய்: எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்இது இதயத் தசைகளை வலுப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் மீது ...
27/03/2026

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்

இது இதயத் தசைகளை வலுப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் மீது இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவும்.

உப்பின் அளவை கட்டுப்படுத்துங்கள்

அதிக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தத்தை உயர்த்தி இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். குறிப்பாக பேக்கேஜ்டு மற்றும் ஹோட்டல் உணவுகளில் உப்பு அதிகமாக இருப்பதால், அவற்றை எடுத்துக்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொடர்ந்த பரிசோதனைகளை புறக்கணிக்காதீர்கள்

எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், ஆண்டிற்கு குறைந்தது ஒருமுறை ரத்த அழுத்தம் (BP) மற்றும் சர்க்கரை (Sugar) அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்குங்கள்

நீண்டகால மன அழுத்தம் இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தியானம், மூச்சுப்பயிற்சி, மற்றும் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் மூலம் மனநிலையை சமநிலைப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பேணலாம்.

இதய நோய் அறிகுறிகள்
27/03/2026

இதய நோய் அறிகுறிகள்

Address

15/1, Jawahar Road, Chokkikulam
Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when Vadamalayan Hospitals, Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vadamalayan Hospitals, Madurai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

VADAMALAYAN - CELEBRATING THE VIVACITY OF LIFE!

Vadamalayan Hospitals Pvt Ltd is the No.1 Multi-Specialty Hospital in Madurai today. It was founded by Dr.P.Vadamalayan – the visionary medical professional - who practiced ‘evidence-based medicine’ to provide ethical, timely and effective treatment to the ailing population. His indomitable spirit, indefatigable industry and child-like enthusiasm coupled with the burning desire to be of service to the people, rooted firmly on the pristine foundation of selflessness, saw him establishing Vadamalayan Hospitals in the early 1950s, initially in the form of a 10-bedded clinic, yet with modern equipment like 300 MA-Xray machine which were totally unknown then to the people of Madurai – the temple town. The seed that Dr.Vadamalayan had sown today has grown into a matchless 265-bedded multi-specialty hospital in terms of infrastructure, facilities, medical expertise and healthcare services. The hospital is manned by about 100 doctors drawn from varied medical streams and in their tasks they’re assisted by over 1000 support staff, including paramedic and administrative personnel. The hospital believes in CME initiatives to keep abreast of the revolutionary changes sweeping across the medical world. It’s the aspiration of Vadamalayan to emerge as the Hospital of Choice by providing high quality healthcare services to all sections of the society. In sync with its vision, Vadamalayan is also committed to the mission of delivering compassionate and patient-centered care consistent with the outlook and philosophy of ‘evidence-based medicine.’