12/05/2018
எனது இனிய நண்பர்களே , வணக்கம் !!!
யாம் இன்று மரசெக்கு தேங்காய் எண்ணெய் பற்றி ஒரு சிறப்பு சிறிய பார்வை !!!
1) யாம் கொங்கு பகுதிகளான கோவை , ஈரோடு, பெருந்துறை , உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் மற்றும் கொடுமூடி பகுதிகளில் மரசெக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் வெள்ளையாக அதாவது இளநீர் தண்ணீர் போல் இருக்கும்
இது நல்லதா ???? இது உடலுக்கு உகந்ததா ??? இது தான் சரியான பக்குவமா ????
என்ற பல கேள்விகளோடு எங்கள் மரசெக்கு எண்ணெய் தொழிலை எங்களை போல் தெய்வமாக நினைத்து செய்து கொண்டிருக்கும் சில அனுபவமிக்க பெரியோர்களை சந்தித்தேன்...
அவர்களுடைய பேச்சின் தொகுப்பே இது !!!
1. தென்னை மரங்களில் நன்றாக திரண்டு, மரத்திலே நன்றாக முற்றி, முழுமையாக காய்ந்து, கீழே விழும் காய்களை சேகரித்து , அந்த வகையான தேங்காயையும் மற்றும் வாங்கி நார்களை நீக்கி பருப்பை தனியாக பிரித்து சில நாட்கள் நன்றாக வெயிலில் மறுபடியும் காயவைத்து அதன் பிறகு மரச்செக்குகளில் ஆட்டி எண்ணெய் பிழிய வேண்டும். இது தான் எமது பழங்கால கொங்கு தமிழர்களின் வழக்கம் !!!
2. ஆனால் இன்று முழுவதும் முற்றாத காய்கள், கோவிலில் கிடைக்கும் சிதறு காய்கள், தேங்காய் மண்டிகளில் கழித்த காய் ( அதாவது பிஞ்சு பருப்புகளுடைய தேங்காய்) , கூங்கா ( அதாவது அது இளநீர் அல்லாமல் தேங்காய் நிலையும் அல்லாமல் ) , கோவில் ஐயர் கொடுக்கும் தேங்காய் , இவ் வகைகளின் பருப்பை மட்டும் பிரித்து எடுத்து 40 - 50 நாட்கள் மட்டும் வெயிலில் காய வைக்க வேண்டும்.
3. இதற்கு மேல் காயவைப்பதில்லை காரணம் அப்பொழுது தான் பளிச்சென்று வெள்ளை நிறத்தில் தேங்காய் எண்ணெய் கிட்டும்.
4. அதற்கு பிறகு அதில் தண்ணீர் தெளித்து ஆட்டப்படும் அப்பொழுது கிடைக்கும் எண்ணெய் பால் பாயசம் போன்ற நிறத்தில் இருக்கும் , நல்ல நிறைந்த மணத்துடன், சிறிது கெட்டியாக இருக்கும் ஆனால் எண்ணெய் ஆட்டும் தொழிலை 40 வருட தொழில் அனுபவத்தில் சொல்கிறேன் இது கண் காட்டும் வித்தை செய்யும் வித்தை !!!
5. அப்படியென்றால் இது தேங்காய் எண்ணெய் ஆட்ட ஏற்ற பதம் அடையும் முன்பே அதில் உள்ள தேங்காய் பால் மூலக்கூறுகள் கலந்து எண்ணெய் உடன் வெளியேற்றபடுகிறது இந்த அரைகுறை எண்ணெய் அதிக நாட்கள் தாங்காது, வெகுவிரைவில் சிக்குவாடை வந்து விடும்.
6. இதில் தேங்காய் சிறிது பச்சையாக இருப்பதால் தேங்காய் மணம் அல்லும்!!! அதாவது நமது மக்களுக்கு ஆரோக்கியம் பெரிதல்ல !!! சரியான பதமும் பெரிதல்ல !!! சரியான திடமும் முக்கியம் இல்லை !!
நமது மக்களுக்கு மணமும் நிறமும் தான் முக்கியம் !!! ஆதலால் தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் தரமற்ற பொருட்களுக்கு விலை போய் விட்டோங்க !!
கார்பரேட் நிறுவனங்கள் ஒரு படி மேலே சென்று நவீன இராசயானம் பயன்படுத்தி நிறத்தை வெளியேற்றி கண்ணாடி போல் எண்ணெய் நமக்கு விற்பனை செய்கிறார்கள் !!!
இதன் விளைவுகள் ::
1. நமது மூதாதையர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களுக்கும் ஒரு பின்னோட்டம் உண்டு.
2. தேங்காய் எண்ணெயின் பின்னோட்டம் சிலோத்துமம் அதாவது சளி பிடிப்பை தன்மையை கட்படுத்துதல் இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமெனில் நமது தலையில் உள்ள மண்டை சளியோடு ஒத்து போகும்.
3. இந்த அறைகுறை தேங்காய் எண்ணெய்வகைகள் சிலோத்துமத்தை அதிகபடுத்தும் ஒரு கப்பில் 100 மில்லி தான் இருக்க வேண்டுமென்றால் அதை அதிகமானால் நிரம்பி வழியும் அப்போது தான் மண்டை குத்தல், ஒற்றை தலைவலி , தலை பாரம், மூக்கில் சளி வழியல், மூக்கு அடைப்பு, தும்மல், இருமல், நெஞ்சு சளி இந்த உபாதைகள் ஏற்படும்.
4. இந்த எண்ணெய் மிக சுலபமாக சிக்கு வாடை வந்துவிடும். அதிக நாட்களுக்கு தேக்கம் ஏற்படுத்த முடியாது !!!
தரமான தேங்காய் கொப்பரை எண்ணெய்:::
1. இந்த தேங்காய் எண்ணெய் வெளீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. தேங்காய் எண்ணெய் மணம் மிதமானதகவே இருக்கும்.
3. கொஞ்சம் எண்ணெய்ல நன்றாக காய்ந்த மணம் வீசும்.
இது தாங்க நமது மூதாதையர்கள் பயன்படுத்திய பாரம்பரிய தேங்காய் எண்ணெய் தேவையென்றால் இதில் ஏலக்காய் சேர்த்து ஆட்டிகொள்ளலாம் !!!
இதுவும் மணத்தை அதிகபடுத்த நமது முன்னோர்களின் ஒரு சிறிய சூட்சுமம்.
உங்களுக்கு தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் உத்தியை சொல்லி கொடுக்கிறேன் !!
கடைகளில் நன்றாக முற்றிய தேங்காயை வாங்கி துருவி கொள்ளவும். அந்த தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.
ஒரு நாள் இரவு முழுவதும் தட்டுகள் மூடி வெளியில் வைத்து புளிக்க வைக்கவும்.
பிறகு அதை நன்றாக காயும் வெயிலில் மூன்று நாட்களுக்கு வைக்கவும்.
இப்பொழுது வெளீர் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் மிதக்கும் இதை மேலாக மற்றுமொரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
சத்தான , ஆரோக்கியமுடைய, இரசாயனமற்ற தேங்காய் எண்ணெய் தயார் !!!
சமையல் நிறுவனமும் தேங்காய் கொப்பரையில் இருந்து மட்டுமே எண்ணெய் எடுத்து தருகிறது !!!
உங்கள் ஆரோகியத்தை என்றுமே பேணி பாதுகாப்போம்!!
வாழ்க வளமுடன் !! வாழ்க வளமுடன்!!
எங்கள் மரசெக்கு தேங்காய் எண்ணெய் ரூ. 290
மேலும் விவரங்களுக்கு & டோர் ஸ்டெப் டெலிவரி அணுகவும் 9994468376
மொத்தமான ஓல்சேல் விற்பனையும் உண்டு அணுகவும் 9994468376