26/01/2025
#ஜோதிட தகவல்..
#கேள்வி
ஒரு கிரகம் நீச்சமாகி வக்கிரமாகும் பொழுது உச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
#பதில்
முடியாது முதலில் நீச்சம் என்பதை இரண்டு வகைகளாக பிரிக்க வேண்டும் சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் நீச்சம் அடையும் பொழுது கிடைக்கின்ற ஒரு வித நன்மை சுப கிரகங்களான குரு சுக்கிரன் நீச்சம் அடையும் பொழுது கிடைப்பதில்லை .,
பாவ கிரகங்களான சனி செவ்வாய் நீச்சமடைந்து சுப கிரகங்களால் சுபத்துவ படுத்தப்படும் பொழுது இந்தப் பாவ கிரகங்கள் தனது முழுமையான கொடூர குணத்தை மாற்றி சுப கிரகங்களுக்கு இணையாக நல்ல பலனை வழங்குகின்றது.,
அடுத்தபடியாக சுப கிரகங்களான குரு சுக்கிரன் நீச்சமடைந்து பாவ கிரகங்களால் மேலும் பாவத்துவப்படுத்தப்படும் பொழுது அசுப கிரகங்களுக்கு நிகரான கெடுபயன்களை கொடுப்பதற்கு தயங்குவது இல்லை.,
அடுத்தபடியாக #வக்ரம் கிரகங்களின் ஒட்டுமொத்த கதிர்வீச்சுகள் ஒரு மனிதனை ஆட்கொள்கின்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கிரகங்கள் வக்கிரமே அடைய கூடாது என்பதுதான் உண்மையும் கூட
'ஆனால் மிகப் பெரிய ஆளுமையும் மிகப்பெரிய அபரிவிதமான ஈர்ப்பு சக்தியை கொண்ட சூரியன் தன்னை சுற்றும் மிதவை கிரகங்களை தனது சுற்றுப்பாதைக்குள் நுழையும் பொழுது மிகவும் ஆக்ரோஷமாக இழுக்க தொடங்குகிறது இதனாலே மற்ற கிரகங்கள் ஸ்தம்பித்து போய் வக்ர நிலைக்கு தள்ளப்படுகின்றது வக்கிரத்தை பற்றி மேலும் சுவாஸ் சுவாரஸ்யமான சில புரிதல்கள் என்னிடம் இருக்கின்றது அதை வீடியோ வழியாக கண்டிப்பாக வழங்க இருக்கின்றேன் .!
கிரகங்கள் வக்ரம் என்றால் வக்கிரம் தான் வக்ரம் போன்று மாயத் தோற்றம் இன்று சிலர் சொல்கிறார்கள் அது முற்றிலும் அவர்களுக்கு வக்கிரத்தை பற்றி புரிதல்கள் வரவில்லை என்று தான் அர்த்தம்.
வக்ரம் என்பது கிரகங்களின் ஒருவித பலவீனம் வக்கிரம் பெற்ற கிரகம் எப்படி செயல்படுகின்றது என்றால் ஒரு மனிதன் தனது ஒரு நாள் இயல்பு வாழ்க்கையையே போராடி வாழ்கிறான் என்பதற்கு சமம்.
நீச்சம் 25 சதவீதம் பலவீனம் வக்கிரம் 25 சதவீதம் பலவீனம்
ஏன் நீச்சத்திற்கும் 25 சதவீதம் கொடுத்து இருக்கின்றேன் என்றால் நீச்சமான கிரகம் ஒன்றும் செத்துப் போய் விடுவதில்லை.
Sivakrthik-Astrology
077087 84497