Arunpriyanursinghome

Arunpriyanursinghome *

13/06/2025
30/10/2024

Let’s Celebrate Eco Friendly Green Diwali

04/08/2024

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம் !!!

என்று நமது மரபான பழக்கம் என்றாலும் ஒரு சிலர் அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்வார்கள். அதனால் பெற்றோர்களுக்கு என்ன செய்வது எனக் குழப்பம் ஏற்படுவது இயல்புதான். குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் சரிதானா.... அதனால் என்ன பலன்... எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாமா... உள்ளிட்ட
சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடு குறையும் எனப் பலரும் சொல்வதுண்டு. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடு குறையும், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தவித சாதக, பாதக பதில்களும் இல்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் குழந்தைகளின் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோடு நிற்காமல், அவர்களின் கண், காது, மூக்கு ஆகியவற்றிலும் எண்ணெய் விடுவார்கள். இது முற்றிலும் தவறானதும், ஆபத்தானதும்கூட.

குழந்தைகளின் கண்ணில் எண்ணெய் விடுவதால் கண் சிவந்து போகுதல், கண்ணில் அலர்ஜி ஏற்படுதல், கண் எரிச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் கண் எரிச்சல் தாங்காமல் குழந்தைகள் கண்ணைத் தேய்த்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய கண் வெளிப்படலம்( CORNEA) பாதிக்கப்படலாம். மூக்கில் எண்ணெய் விடுவதால் புரை ஏற்படுவது, ஜலதோஷம் ஏற்படலாம். காதுகளில் எண்ணெய் விடுவதால் காது வலி, காது எரிச்சல் ஏற்படலாம்.

இதுபோன்ற காரணங்களுக்காகவும், ஜலதோஷமும் புரையேறவும் வாய்ப்பிருப்பதால் ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட வேண்டாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர் ,சிறுமிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம். அதுவும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றினை அப்படியோ அல்லது லேசாக சூடுபடுத்தியோ பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் போன்ற அதிக அடர்த்தியுடைய எண்ணெய்கள் பயன்படுத்தும்போது அவற்றின் எண்ணெய் பசை போக அதிக நேரமாகும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட்ட 15-20 நிமிடங்களுக்குள் குளிக்க அழைத்துச் சென்றுவிட வேண்டும். எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டும் சமயத்தில் அதிக சூடான, அதிக குளிர்ச்சியான நீரினைத் தவிர்த்து மிதமான சூடுள்ள நீரைக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். குறிப்பாக எண்ணெய் பசை நன்றாக போகும் அளவிற்கு சிகைக்காய், அரப்பு, மைல்டு ஷாம்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி 10-15 நிமிடங்களுக்குள் குளிப்பாட்டிவிட வேண்டும். பின்னர் தலைமுடியில் ஈரப்பதம் போகும் வரை நன்றாகத் துடைத்துவிட்டு சராசரியாக ஐந்து நிமிடங்கள் மிதமான வெயிலில் தலைமுடியை உலர்த்தச் செய்யலாம். இதனால் தலையில் நீர் தங்காது. குழந்தைகளின் தலைமுடியை உலர்த்த டிரையரைப் பயன்படுத்தக்கூடாது.

மசாஜ் செய்வதைப் பொறுத்தவரையில் 1-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித மசாஜ் முறைகளையும் செய்யாமல் குழந்தையின் உடலில் எண்ணெய் தடவி பெரியவர்கள் தங்கள் கைகளால் மட்டும் லேசாக தேய்த்துவிட்டாலே போதும். 5 - 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு லேசாக மசாஜ் செய்யலாம்.

**பகிர்ந்தது**

30/07/2024

அன்பர்களுக்கு வணக்கம்
நிறைய நண்பர்கள் , பெற்றோர்கள்
எனது முகநூல் பக்கத்தில் Friend request கொடுத்து உள்ளீர்கள்
எனது profile- ல் Facebook friends maximum number 5000 நண்பர்கள் என்ற கணக்கு முடிந்தது..
நமது நட்பில் இணைக்க
என்னுடைய தனிப்பட்ட முகநூல் profile (JEYAKUMAR SETTU)ஐ - page (ஜெயக்குமார் குழந்தைகள் நல மருத்துவர்)
ஆக மாற்றி உள்ளேன் .
நட்பு அழைப்புகளை
கொடுத்து நண்பர்களாக இருப்பதை விட
என்னுடைய page ஐ ஃபாலோ செய்யலாம் .
புதிய நண்பர்களும் Request கொடுப்பதற்கு பதிலாக, எனது page ஐ பாலோ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

-ஜெயக்குமார் குழந்தைகள் நல மருத்துவர்
என்ற பேஜை
உங்களுக்கு விருப்பம் இருந்தால் பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்

"""பிஸ்கட் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அது நல்லதா"""அன்றாடம் நான் தாய்மார்களிடம் ஆறு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு வீட்டு ...
23/07/2024

"""பிஸ்கட் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அது நல்லதா"""

அன்றாடம் நான் தாய்மார்களிடம் ஆறு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு வீட்டு உணவுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களா என்று கேட்கும் போது அவர்கள் வாயிலிருந்து வருவது

பிஸ்கட் கொடுக்கிறோம்

பிஸ்கட் கொடுக்குறோம்

பிஸ்கட் கொடுக்கிறோம்

என்ன பெருமையாக சொல்கிறார்கள்

அந்த அளவுக்கு பெருமைப்படுவதற்கு அதில் ஒன்றுமே இல்லை

பிஸ்கட் எதனால் ஆனது
மைதா
LARD - என்கிற பன்றி கொழுப்பு
MARGARINE- விலை கம்மியான மலிவான ஒரு கொழுப்பு (TRANS FAT
)சோடியம்
பொட்டாசியம்
நீர்ம சக்கரை ( liquid sugar/ glucose)
பதப்படுத்தக் கூடிய பொருட்கள்( preservatives)
Baking soda- பேக்கிங் சோடா
இன்னும் பல

இவை அனைத்தும்
பிஸ்கட்டை சுவையாகவும் நல்ல வடிவமாகவும் குழந்தைகள் கண் கவரும் விதமாகவும் மாற்றுவதற்காக சேர்த்து தயாரிக்கிறார்கள்

குழந்தைகள் பிஸ்கட்டை எடுத்துக் கொண்டால் அது வயிற்றில் நிரம்ப ஆரம்பித்து பசியை போக்கிவிடும்
எனில் சுவையாகவும் மிருதுவாகவும் எளிதான உணவாகவும் இருக்கிறது
ஒரு குழந்தை இரண்டு மூன்று பிஸ்கட்டை எடுத்துக் கொண்டால் ஆக்டிவாகி (INSTANT ENERGY கிடைத்து )நன்றாக விளையாடுவார்கள் ஆனால் அது நல்லது இல்லை

குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜி என பார்த்தால் அதில் சுத்தமாக எதுமே இல்லை
(Zero calori value)

எனில் அதில் இருப்பது மாவு சத்தும் கொழுப்பு சத்தும்தான் புரதச்சத்து சுத்தமாக கிடையாது
மற்றும் தாது உப்புக்கள் விட்டமின்ஸ் மினரல்ஸ் எதுவுமே கிடையாது

பிஸ்கட்டினால் ஏற்படும் தீங்குகள் என்னென்னவெனில்

உடம்பில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் உடல் எடையை அதிகப்படுத்தும்
குழந்தைகள் மற்ற உணவுகள் வீட்டு உணவுகள் எடுத்துக் கொள்வதில் நாட்டத்தை குறைக்கும்
குழந்தைகளின் செரிமான தன்மையை குறைக்கும்
மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு ,வயிறு வலி, மலத்தில் ரத்தம் வருதல், ஆசனவாய் வெடிப்பு, அலர்ஜி ,போன்ற விளைவுகள் வரும்
பிற்காலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கு வாய்ப்பு அதிகம்
நீண்ட நாட்கள் பிஸ்கட்டை எடுத்துக் கொண்டால் நரம்பு மண்டலம் கண் பார்வை குறைவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது
புற்றுநோயை கூட உண்டாக்கலாம்

பிஸ்கட்டின் சுவைக்கு ஈடாக நாம் வீட்டில் எந்த உணவும் சமைக்க முடியாததால் குழந்தைகள் பிஸ்கட்டின் மேல் நாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்

குழந்தைகள் வளரும் பருவத்தில் இதை கொடுக்க வேண்டாமே.

ஜெயக்குமார் குழந்தைகள் நல மருத்துவர். அருண்பிரியா மருத்துவமனை மயிலாடுதுறை

Address

3 & 4 Pattamangala Street
Mayiladuthurai
609001

Alerts

Be the first to know and let us send you an email when Arunpriyanursinghome posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category